Category: புஹாரி

Bukhari

Bukhari-6661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12

அல்லாஹ்வின் கண்ணியம், அவனுடைய பண்புகள் மற்றும் அவனுடைய உரைகள் பெயரால் சத்தியம் செய்வது (செல்லும்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறைவா!) உன் கண்ணியத்தின் மீது சத்தியமாக! நான் பாதுகாப்புக் கோருகிறேன் என்று கூறுவார்கள்.47

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மறுமையில் நரகத்திலிருந்து இறை நம்பிக்கை உள்ள அனைவரும் வெளியேற்றப் பட்ட பிறகு) சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே ஒருவர் மட்டும் (நரகத்தை முன்னோக்கியவராக) எஞ்சியிருப்பார். அவர் என் இறைவா! நரகத்தை விட்டு என் முகத்தை (வேறு பக்கம்) திருப்பிவிடுவாயாக! உன் கண்ணியத்தின் மீதாணையாக! வேறெதையும் உன்னிடம் நான் கேட்கமாட்டேன் என்று கூறுவார். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.48

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அந்த மனிதரைப் பார்த்து) அல்லாஹ், இதுவும் உனக்குக் கிடைக்கும்; இன்னும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் என்று கூறுவான். இதை அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.49

Read More »

Bukhari-6660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6660. சுலைமான் இப்னு மிஹ்ரான் (ரஹ்) அறிவித்தார்.

(மேற்கண்ட ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது) அஷ்அஸ் இப்னு கைஸ் (ரலி) அவர்கள் உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்?’ என்று கேட்டார்கள். மக்கள் அன்னாரிடம் (விஷயத்தைக்) கூறினார்கள். அப்போது அஷ்அஸ் (ரலி) அவர்கள், ‘எனக்கும் என் தோழர் ஒருவருக்குமிடையே இருந்த ஒரு கிணறு தொடர்பாக எங்களின் விஷயத்தில் அருளப்பெற்றதே இந்த வசனமாகும்’ என்றார்கள்.

Book :83


فَمَرَّ الأَشْعَثُ بْنُ قَيْسٍ، فَقَالَ: مَا يُحَدِّثُكُمْ عَبْدُ اللَّهِ؟ قَالُوا لَهُ، فَقَالَ الأَشْعَثُ: نَزَلَتْ فِيَّ وَفِي صَاحِبٍ لِي، فِي بِئْرٍ كَانَتْ بَيْنَنَا


Bukhari-6659

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

அல்லாஹ்விற்கு நான் அளித்த வாக்குறுதி யின் பெயரால்’ என்று கூறுவது.45

6659. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள், ‘ஒரு முஸ்லிமின் அல்லது ‘தம் சகோதரனின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக (ஒரு பிரமாண வாக்குமுலத்தின்போது துணிவுடன்) பொய்ச் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவரின் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில்தான் அவனை (மறுமையில்) சந்திப்பார்’ என்று கூறினார்கள். அப்போது அ(ந்தக் கருத்)தை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், ‘அல்லாஹ்வின் (‘அஹ்து’ எனும்) உடன் படிக்கைக்கும் தம் சத்தியங்களுக்கும் பதிலாக அற்ப விலையைப் பெறுகிறார்களே அத்தகையோருக்கு நிச்சயமாக மறுமையில் எந்த நற்பேறுமில்லை’ எனும் (திருக்குர்ஆன் 03:77 வது) வசனத்தை அருளினான்.

Book : 83


مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ كَاذِبَةٍ، يَقْتَطِعَ بِهَا مَالَ رَجُلٍ مُسْلِمٍ – أَوْ قَالَ: أَخِيهِ – لَقِيَ اللَّهَ وَهُوَ عَلَيْهِ غَضْبَانُ ” فَأَنْزَلَ اللَّهُ تَصْدِيقَهُ: {إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللَّهِ} [آل عمران: 77]،


Bukhari-6658

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 நான் அல்லாஹ்வை சாட்சியாக்குகிறேன்’ என்றோ, நான் அல்லாஹ்வை சாட்சியாக்கி னேன்’ என்றோ ஒருவர் கூறினால் (அது சத்தியமாகுமா)?43

6658. அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம், ‘மக்களில் சிறந்தவர் யார்?’ என்று வினவப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘(மக்களில் சிறந்தவர்கள்,) என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் பிறகு ஒரு கூட்டத்தார் வருவார்கள். அவர்களின் சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும் அவர்களின் சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்ராஹீம் அந்நகஈ(ரஹ்) அவர்கள் ‘சிறுவர்களான எங்களை எங்கள் சான்றோர்கள் (நபித்தோழர்கள்) ‘அஷ்ஹது பில்லாஹ்’ (அல்லாஹ்வின் பெயரால் நான் சாட்சியம் அளிக்கிறேன்) என்றோ ‘அல்லாஹ்வுடன் செய்த ஒப்பந்தப்படி’ என்றோ கூறுவதைத் தடுத்துவந்தார்கள்.

Book : 83


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ النَّاسِ خَيْرٌ؟ قَالَ: ” قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ يَجِيءُ قَوْمٌ: تَسْبِقُ شَهَادَةُ أَحَدِهِمْ يَمِينَهُ وَيَمِينُهُ شَهَادَتَهُ ” قَالَ إِبْرَاهِيمُ: «وَكَانَ أَصْحَابُنَا يَنْهَوْنَا – وَنَحْنُ غِلْمَانٌ – أَنْ نَحْلِفَ بِالشَّهَادَةِ وَالعَهْدِ»


Bukhari-6657

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6657. ஹாரிஸா இப்னு வஹ்ப் (ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஒரு முறை பின்வருமாறு) கூறக் கேட்டேன். சொர்க்கவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் (மக்களின் பார்வையில்) பலவீனமானவர்கள்; பணிவானவர்கள் (ஆனால்) அவர்கள் அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களானால், அல்லாஹ் அதை (அவ்வாறே) நிறைவேற்றிவைப்பான். (இதைப்போன்றே) நிறைவேற்றிவைப்பான். (இதைப் போன்றே) நரகவாசிகள் யார் என்று உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அவர்கள் உண்டு கொழுத்தவர்கள்; இரக்கமற்றவர்கள்; பெருமை அடிப்பவர்கள் ஆவர்.

Book :83


أَلاَ أَدُلُّكُمْ عَلَى أَهْلِ الجَنَّةِ؟ كُلُّ ضَعِيفٍ مُتَضَعَّفٍ، لَوْ أَقْسَمَ عَلَى اللَّهِ لَأَبَرَّهُ، وَأَهْلِ النَّارِ: كُلُّ جَوَّاظٍ عُتُلٍّ مُسْتَكْبِرٍ


Bukhari-6656

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6656. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒரு முஸ்லிமுடைய மக்களில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்தால், (தந்தையான) அவரை நரகம் தீண்டாது; (‘உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது’ என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :83


«لاَ يَمُوتُ لِأَحَدٍ مِنَ المُسْلِمِينَ ثَلاَثَةٌ مِنَ الوَلَدِ تَمَسُّهُ النَّارُ، إِلَّا تَحِلَّةَ القَسَمِ»


Bukhari-6655

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6655. உசாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் புதல்வியார் ஒருவர் (ஸைனப் (ரலி) தம் மகன் (அல்லது மகள்) இறக்கும் தருவாயில் இருப்பதாகவும், எனவே அங்கு வந்து சேர வேண்டும் என்றும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நானும், ஸஅத் இப்னு உபாதா(ரலி) அவர்களும், ‘என் தந்தை (ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்களும்’ அல்லது ‘உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும்’ இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (தம் புதல்வியாருக்கு) சலாம் கூறி அனுப்பியதோடு ‘அல்லாஹ் எடுத்துக்கொண்டதும் கொடுத்ததும் அவனுக்கே உரியது. ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையைக் கைக்கொண்டு நன்மையை எதிர்பார்ப்பீராக!’ என்றும் சொல்லியனுப்பினார்கள். அப்போது அவர்களின் புதல்வியார் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (கண்டிப்பாகத் தம்மிடம் வரவேண்டுமென)க் கூறியனுப்பினார். உடனே நபி(ஸல்) அவர்கள் எழுந்தார்கள். நாங்களும் அவர்களுடன் எழுந்தோம்.

(புதல்வியின் வீட்டுக்குள் நுழைந்த) நபியவர்கள் (அங்கு) அமர்ந்தார்கள். அப்போது

أَنَّ بِنْتًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَتْ إِلَيْهِ، وَمَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُسَامَةُ بْنُ زَيْدٍ، وَسَعْدٌ، وَأُبَيٌّ ، أَنَّ ابْنِي قَدْ احْتُضِرَ فَاشْهَدْنَا، فَأَرْسَلَ يَقْرَأُ السَّلاَمَ وَيَقُولُ: «إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَمَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَتَحْتَسِبْ» فَأَرْسَلَتْ إِلَيْهِ تُقْسِمُ عَلَيْهِ، فَقَامَ وَقُمْنَا مَعَهُ، فَلَمَّا قَعَدَ رُفِعَ إِلَيْهِ، فَأَقْعَدَهُ فِي حَجْرِهِ، وَنَفْسُ الصَّبِيِّ جُئِّثُ، فَفَاضَتْ عَيْنَا رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ سَعْدٌ: مَا هَذَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «هَذِهِ رَحْمَةٌ يَضَعُهَا اللَّهُ فِي قُلُوبِ مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ، وَإِنَّمَا يَرْحَمُ اللَّهُ مِنْ عِبَادِهِ الرُّحَمَاءَ»


Bukhari-6654

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

தங்களிடம் ஏதேனும் சான்று வருமாயின் அதை நிச்சயமாக நாங்கள் நம்புவோம் என்று அவர்கள் பலமாகச் சத்தியம் செய்தார்கள் எனும் (6:109ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இக்கனவுக்குச் (சொன்ன விளக்கத்தில் நான்) செய்த தவறென்ன என்பதைத் தாங்கள் எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் (இதற்காகவெல்லாம்) சத்தியம் செய்யாதீர்கள் என்றார்கள்.

6654. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) அறிவித்தார்:

சத்தியம் செய்தவர் (அதை) நிறைவேற்ற உதவும்படி நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாக வந்துள்ளது.

அத்தியாயம்: 83


«أَمَرَنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِبْرَارِ المُقْسِمِ»


Bukhari-6653

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

அல்லாஹ்வும் நீயும் நாடினால்’ என்று கூறலாகாது. அல்லாஹ்வால், பிறகு உன்னால்’ என்று கூறலாமா?36

6653. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

பனூ இஸ்ராயீல் மக்களில் (தொழு நோயாளி, வழுக்கைத் தலையர், குருடர் ஆகிய) மூவரைச் சோதிக்க அல்லாஹ் நாடினான். எனவே, அவன் வானவர் ஒருவரை அனுப்பினான். அவர் (அம்மூவரில் ஒருவரான) தொழுநோயாளியிடம் வந்து, ‘பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டுவிட்டது (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது) இன்று எனக்கு உதவிக்கான வழிவகை அல்லாஹ்வையும் பிறகு உம்மையும் தவிர வேறெவருமில்லை’ என்று கூறினார்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, இந்த ஹதீஸை முழுமையாகக் கூறினார்கள்.37

Book : 83


إِنَّ ثَلاَثَةً فِي بَنِي إِسْرَائِيلَ أَرَادَ اللَّهُ أَنْ يَبْتَلِيَهُمْ، فَبَعَثَ مَلَكًا، فَأَتَى الأَبْرَصَ، فَقَالَ: تَقَطَّعَتْ بِيَ الحِبَالُ، فَلاَ بَلاَغَ لِي إِلَّا بِاللَّهِ ثُمَّ بِكَ ” فَذَكَرَ الحَدِيثَ


Bukhari-6651

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

சத்தியம் செய்யும்படி கோரப்படாத போதும் சத்தியம் செய்தல்.31

6651. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து அணிந்து கொண்டிருந்தார்கள். அதன் குமிழைத் தம் உள்ளங்கை பக்கமாக அமையும்படி வைத்தார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்ற) மோதிரங்களைத் தயார் செய்தனர். பிறகு நபி(ஸல்) அவர்கள், சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) அமர்ந்து அந்த மோதிரத்தைக் கழறறிவிட்டு, ‘நான் இந்த மோதிரத்தை உள்ளங்கைப் பக்கமாக அதன் குமிழ் அமையும்படி அணிந்து கொண்டிருந்தேன்’ என்று வறி, அதை எறிந்துவிட்டார்கள். பிறகு, ‘அல்லாஹ்வின் மீதாணையாக! இதை ஒருபோதும் நான் அணியமாட்டேன்’ என்று கூறினார்கள். உடனே மக்களும் தங்களின் மோதிரங்களை(க் கழற்றி) எறிந்தனர்.32

Book : 83


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْطَنَعَ خَاتَمًا مِنْ ذَهَبٍ وَكَانَ يَلْبَسُهُ، فَيَجْعَلُ فَصَّهُ فِي بَاطِنِ كَفِّهِ، فَصَنَعَ النَّاسُ خَوَاتِيمَ، ثُمَّ إِنَّهُ جَلَسَ عَلَى المِنْبَرِ فَنَزَعَهُ، فَقَالَ: «إِنِّي كُنْتُ أَلْبَسُ هَذَا الخَاتِمَ، وَأَجْعَلُ فَصَّهُ مِنْ دَاخِلٍ» فَرَمَى بِهِ ثُمَّ قَالَ: «وَاللَّهِ لاَ أَلْبَسُهُ أَبَدًا» فَنَبَذَ النَّاسُ خَوَاتِيمَهُمْ


Next Page » « Previous Page