Category: புஹாரி

Bukhari

Bukhari-6650

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

லாத், உஸ்ஸா உள்ளிட்ட (பொய்த் தெய்வச்) சிலைகள் பெயரால் சத்தியம் செய்யலாகாது.

6650. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

யார் சத்தியம் செய்யும்போது (அறியாமைக் கால தெய்வச் சிலைகளான) ‘லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ அவர் (இந்தப் பாவத்திற்குப் பரிகாரமாக) ‘லா இலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திற்குத் தகுதியானவர் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை) என்று சொல்லட்டும்! தம் நண்பரிடம், ‘வா சூதாடலாம்’ என்று கூறியவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.30

Book : 83


مَنْ حَلَفَ، فَقَالَ فِي حَلِفِهِ: بِاللَّاتِ وَالعُزَّى، فَلْيَقُلْ: لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَمَنْ قَالَ لِصَاحِبِهِ: تَعَالَ أُقَامِرْكَ، فَلْيَتَصَدَّقْ


Bukhari-6649

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6649. ஸஹ்தம் இப்னு முளர்ரிப் அல்ஜர்மீ(ரஹ்) அறிவித்தார்.

(குளாஆ குலத்தைச் சேர்ந்த) இந்த (எங்கள்) ஜர்ம் கோத்திரத்தாருக்கும் (யமன் நாட்டவர்களான) அஷ்அரீ குலத்தாருக்குமிடையே நட்புறவும் சகோதரத்துவமும் இருந்துவந்தது. (ஒரு முறை) நாங்கள் அபூ மூஸா அல்அஷ்அரீ(ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அபூ மூஸா(ரலி) அவர்களுக்கு அருகில் உணவு வைக்கப்பட்டது. அதில் கோழி இறைச்சி இருந்தது. அபூ மூஸா(ரலி) அவர்களுக்குப் பக்கத்தில் பனூ தைம்’ குலத்தைச் சேர்ந்த சிவப்பான மனிதர் ஒருவர் இருந்தார். அவர் அடிமைகளில் ஒருவரைப் போன்று காணப்பட்டார். அபூ மூஸா(ரலி) அவர்கள் அந்த மனிதரையும் உணவு உண்ண அழைத்தார்கள். அதற்கு அந்த மனிதர், ‘இந்தக் கோழி (இனம், அசுத்தம்) ஒன்றைத் தின்பதை கண்டேன். அது எனக்கு அருவருப்பை உண்டாக்கவே இதை இனிமேல் உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துவிட்டேன்’ என்றார். (இதைக் கேட்ட) அபூ மூஸா(ரலி) அவர்கள், ‘எழுந்து (இங்கே) வாருங்கள்! இதைப் பற்றி உங்களுக்கு நான் (நபிகளாரின் சமூகத்தில் நடந்த ஒரு சம்பவத்தை) அறிவிக்கிறேன்’ என்று சொல்லிவிட்டுக் கூறலானார்கள்.

நான் இறைத்தூதர்(ஸல்)

كَانَ بَيْنَ هَذَا الحَيِّ مِنْ جَرْمٍ وَبَيْنَ الأَشْعَرِيِّينَ وُدٌّ وَإِخَاءٌ، فَكُنَّا عِنْدَ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، فَقُرِّبَ إِلَيْهِ طَعَامٌ فِيهِ لَحْمُ دَجَاجٍ، وَعِنْدَهُ رَجُلٌ مِنْ بَنِي تَيْمِ اللَّهِ، أَحْمَرُ كَأَنَّهُ مِنَ المَوَالِي، فَدَعَاهُ إِلَى الطَّعَامِ، فَقَالَ: إِنِّي رَأَيْتُهُ يَأْكُلُ شَيْئًا فَقَذِرْتُهُ، فَحَلَفْتُ أَنْ لاَ آكُلَهُ، فَقَالَ: قُمْ فَلَأُحَدِّثَنَّكَ عَنْ ذَاكَ، إِنِّي أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنَ الأَشْعَرِيِّينَ نَسْتَحْمِلُهُ، فَقَالَ: «وَاللَّهِ لاَ أَحْمِلُكُمْ، وَمَا عِنْدِي مَا أَحْمِلُكُمْ عَلَيْهِ» فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِنَهْبِ إِبِلٍ فَسَأَلَ عَنَّا، فَقَالَ: «أَيْنَ النَّفَرُ الأَشْعَرِيُّونَ» فَأَمَرَ لَنَا بِخَمْسِ ذَوْدٍ غُرِّ الذُّرَى، فَلَمَّا انْطَلَقْنَا قُلْنَا: مَا صَنَعْنَا؟ حَلَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لاَ يَحْمِلُنَا وَمَا عِنْدَهُ مَا يَحْمِلُنَا، ثُمَّ حَمَلَنَا، تَغَفَّلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمِينَهُ، وَاللَّهِ لاَ نُفْلِحُ أَبَدًا، فَرَجَعْنَا إِلَيْهِ فَقُلْنَا لَهُ: إِنَّا أَتَيْنَاكَ لِتَحْمِلَنَا، فَحَلَفْتَ أَنْ لاَ تَحْمِلَنَا، وَمَا عِنْدَكَ مَا تَحْمِلُنَا، فَقَالَ: «إِنِّي لَسْتُ أَنَا حَمَلْتُكُمْ، وَلَكِنَّ اللَّهَ حَمَلَكُمْ، وَاللَّهِ لاَ أَحْلِفُ عَلَى يَمِينٍ، فَأَرَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا، إِلَّا أَتَيْتُ الَّذِي هُوَ خَيْرٌ وَتَحَلَّلْتُهَا»


Bukhari-6648

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6648. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உங்கள் தந்தையர் பெயரால் சத்தியம் செய்யாதீர்கள்.

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book :83


«لاَ تَحْلِفُوا بِآبَائِكُمْ»


Bukhari-6647

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6647. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

(என் தந்தை) உமர்(ரலி) கூறினார்: என்னிடம் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘உங்களின் தந்தையர் பெயரால் நீங்கள் சத்தியம் செய்ய வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதிக்கிறான்’ என்றார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறக் கேட்டது முதல் நானாகப் பேசும் போதும் சரி; பிறரின் பேச்சை எடுத்துரைக்கும்போதும் சரி; நான் தந்தை பெயரால் சத்தியம் செய்ததில்லை.

முஜாஹித்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (‘பிறரின் பேச்சை எடுத்துரைத்தல்; என்பதைக் குறிக்க மூலத்தில் இடம் பெற்றுள்ள ‘ஆஸிர்’ எனும் சொல்லின் இனத்திலுள்ளதும், 46:4 வது வசனத்தின் மூலத்தில் இடம் பெற்றுள்ளதுமான) ‘அஸாரதின் மின் இல்மின்’ எனும் சொற்றொருடருக்கு ‘ஞானத்தை அறிவித்தல்’ என்று பொருள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

இன்னோர் அறிவிப்பில், உமர்(ரலி) அவர்கள் (இவ்விதம்) சத்தியம் செய்வதை நபி(ஸல்) அவர்களே செவியுற்றார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ يَنْهَاكُمْ أَنْ تَحْلِفُوا بِآبَائِكُمْ» قَالَ عُمَرُ: فَوَاللَّهِ مَا حَلَفْتُ بِهَا مُنْذُ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ذَاكِرًا وَلاَ آثِرًا قَالَ مُجَاهِدٌ: {أَوْ أَثَارَةٍ مِنْ عِلْمٍ} [الأحقاف: 4]: يَأْثُرُ عِلْمًا


Bukhari-6645

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6645. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களிடம் தம் குழந்தைகளுடன் அன்சாரிப் பெண்மணி ஒருவர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘என்னுயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (அன்சாரிகளான) நீங்கள் மக்களிலேயே என் பேரன்பிற்குரியவர்கள்’ என்று மூன்று முறை கூறினார்கள். 27

Book :83


أَنَّ امْرَأَةً مِنَ الأَنْصَارِ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَهَا أَوْلاَدٌ لَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّكُمْ لَأَحَبُّ النَّاسِ إِلَيَّ» قَالَهَا ثَلاَثَ مِرَارٍ


Bukhari-6644

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6644. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(தொழுகையில்) ருகூவையும் (குனிதலையும்) சஜ்தாவையும் (சிரவணக்கத்தையும்) பரிபூரணமாகச் செய்யுங்கள். ஏனெனில், என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! நீங்கள் ருகூஉ செய்யும்போது சஜ்தா செய்யும் போதும் என் முதுகுக்குப் பின்னால் உங்களை நான் பார்க்கிறேன்.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

Book :83


«أَتِمُّوا الرُّكُوعَ وَالسُّجُودَ، فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنِّي لَأَرَاكُمْ مِنْ بَعْدِ ظَهْرِي إِذَا مَا رَكَعْتُمْ، وَإِذَا مَا سَجَدْتُمْ»


Bukhari-6643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6643. அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

ஒருவர் ‘குல் ஹுவல்லாஹு அஹத்’ எனும் (112 வது குர்ஆன்) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருப்பதை மற்றொரு மனிதர் செவியுற்றார். அந்த மனிதர் விடிந்ததும் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பச் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போன்றிருந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த குர்ஆனின் மூன்றில் ஒரு பங்கிற்கு நிகரானதாகும்’ என்றார்கள்.26

Book :83


أَنَّ رَجُلًا سَمِعَ رَجُلًا يَقْرَأُ: {قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ} [الإخلاص: 1] يُرَدِّدُهَا، فَلَمَّا أَصْبَحَ جَاءَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ ذَلِكَ لَهُ، وَكَأَنَّ الرَّجُلَ يَتَقَالُّهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، إِنَّهَا لَتَعْدِلُ ثُلُثَ القُرْآنِ»


Bukhari-6642

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6642. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

ஒரு முறை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் முதுகை யமன் நாட்டுத்தோல் கூடாரமொன்றில் சாய்த்தபடி இருந்தபோது தம் தோழர்களிடம், ‘சொர்க்க வாசிகளில் நான்கில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்பமாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘ஆம்’ என்று கூறினர். நபி(ஸல்) அவர்கள், ‘(இந்த) முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! சொர்க்கவாசிகளில் பாதிப்பேராக நீங்கள் இருப்பீர்கள் என்றே நான் எதிர்பார்க்கிறேன்’ என்றார்கள்.25

Book :83


بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُضِيفٌ ظَهْرَهُ إِلَى قُبَّةٍ مِنْ أَدَمٍ يَمَانٍ، إِذْ قَالَ لِأَصْحَابِهِ: «أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الجَنَّةِ» قَالُوا: بَلَى، قَالَ: «أَفَلَمْ تَرْضَوْا أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الجَنَّةِ» قَالُوا: بَلَى، قَالَ: «فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الجَنَّةِ»


Bukhari-6641

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6641. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(அபூ சுப்யான் (ரலி) அவர்களின் துணைவியார்) ‘ஹிந்த் பின்த் உத்பா இப்னு ரபீஆ'(ரலி) அவர்கள் ‘இறைத்தூதர் அவர்களே! இந்தப் பூமியின் மேலுள்ள (அரபு) வீட்டார்களிலேயே உங்களுடைய வீட்டார் இழிவடைவதே (இதற்கு முன்பு) எனக்கு விருப்பமானதாய் இருந்தது. பிறகு எல்லா வீட்டார்களிலும் உங்களுடைய வீட்டார் கண்ணியடைவதே இன்று எனக்கு விருப்பமானதாய் மாறிவிட்டது’ என்று கூறினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! (உன்னுடைய இந்த விருப்பம்) இன்னும் (அதிகமாகும்)’ என்று கூறினார்கள்.

அவர் ‘இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான மனிதராவார். அவருக்குரிய (செல்வத்)திலிருந்து (எங்கள் பிள்ளைகளுக்கு) நான் உணவளிப்பது என் மீது குற்றமாகுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் ‘நியாயமான அளவிற்கு எடுத்தால் குற்றமாகாது’ என்று பதிலளித்தார்கள்.24

‘வீட்டார்கள் என்பதைக் குறிக்கப் பன்மையை (அக்பாஉ) பயன்படுத்தினார்களா? ஒருமையை (ம்பாஉ) பயன்படுத்தினார்களா?

إِنَّ هِنْدَ بِنْتَ عُتْبَةَ بْنِ رَبِيعَةَ قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَا كَانَ مِمَّا عَلَى ظَهْرِ الأَرْضِ أَهْلُ أَخْبَاءٍ، أَوْ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ أَنْ يَذِلُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ، أَوْ خِبَائِكَ شَكَّ يَحْيَى، ثُمَّ مَا أَصْبَحَ اليَوْمَ أَهْلُ أَخْبَاءٍ، أَوْ خِبَاءٍ أَحَبَّ إِلَيَّ مِنْ أَنْ يَعِزُّوا مِنْ أَهْلِ أَخْبَائِكَ، أَوْ خِبَائِكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَيْضًا، وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ» قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَبَا سُفْيَانَ رَجُلٌ مِسِّيكٌ، فَهَلْ عَلَيَّ حَرَجٌ أَنْ أُطْعِمَ مِنَ الَّذِي لَهُ؟ قَالَ: «لَا إِلَّا بِالْمَعْرُوفِ»


Bukhari-6640

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6640.  பராஉ (ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களுக்கு பட்டு அங்கி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மக்கள் அதன் அழகையும் மிருதுவையும் கண்டு வியந்து ஒருவரிடமிருந்து ஒருவர் வாங்கிப் பார்க்கலாயினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இதன் மென்மையைக் கண்டு நீங்கள் வியக்கிறீர்களா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் அல்லாஹ்வின் தூதரே என்று கூறினர். நபி (ஸல்) அவர்கள் என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக (சொர்க்கத்தில்) ஸஅத் இப்னு முஆத் அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் கைக்குட்டைகள் இதை விட சிறந்தவையாகும் ’ என்று கூறினார்கள்.

அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்களிடமிருந்து ஷுஅபா (ரஹ்) மற்றும் இஸ்ராயீல் (ரஹ்) ஆகியோர் அறிவித்துள்ள ஹதீஸில் “என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக” என்பது இடம்பெறவில்லை.


أُهْدِيَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرَقَةٌ مِنْ حَرِيرٍ، فَجَعَلَ النَّاسُ يَتَدَاوَلُونَهَا بَيْنَهُمْ وَيَعْجَبُونَ مِنْ حُسْنِهَا وَلِينِهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَعْجَبُونَ مِنْهَا؟» قَالُوا: نَعَمْ يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَمَنَادِيلُ سَعْدٍ فِي الجَنَّةِ خَيْرٌ مِنْهَا» لَمْ يَقُلْ شُعْبَةُ، وَإِسْرَائِيلُ، عَنْ أَبِي إِسْحَاقَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ»


Next Page » « Previous Page