Category: புஹாரி

Bukhari

Bukhari-6557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6557. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் ‘பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர(வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும்) நீ முன்வருவாய் அல்லவா?’ என்று அல்லாஹ் கேட்பான். அதற்கு அவர் ‘ஆம்’ என்று பதிலளிப்பார்.

அப்போது அல்லாஹ் ‘நீ (மனிதர்களின் தந்தை) ஆதமின் முதுகந்தண்டில் (அணுவாக) இருந்தபோது இதை விட இலேசான ஒன்றை எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன். ஆனால் (பூமிக்கு உன்னை அனுப்பியபோது) எனக்கு இணை கற்பிப்பப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக் கொள்ளவில்லையே!’ என்று கூறுவான்.

என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார். 134

Book :81


يَقُولُ اللَّهُ تَعَالَى لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ: لَوْ أَنَّ لَكَ مَا فِي الأَرْضِ مِنْ شَيْءٍ أَكُنْتَ تَفْتَدِي بِهِ؟ فَيَقُولُ: نَعَمْ، فَيَقُولُ: أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا، وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ: أَنْ لاَ تُشْرِكَ بِي شَيْئًا، فَأَبَيْتَ إِلَّا أَنْ تُشْرِكَ بِي


Bukhari-6556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6556. அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் இந்த ஹதீஸை நுஅமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை அபூ ஸயீத் (ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு அதில் ‘கிழக்கு அடிவானில் (தோன்றி), மேற்கு அடிவானில் மறையும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று’ எனக் கூடுதலாக அறிவித்ததை நான் உறுதியாகக் கேட்டேன். 133

Book :81


أَشْهَدُ لَسَمِعْتُ أَبَا سَعِيدٍ، يُحَدِّثُ وَيَزِيدُ فِيهِ: ” كَمَا تَرَاءَوْنَ الكَوْكَبَ الغَارِبَ فِي الأُفُقِ: الشَّرْقِيِّ وَالغَرْبِيِّ


Bukhari-6555

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6555. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சொர்க்கவாசி(களில் கீழ்த்தட்டில் இருப்பவர்)கள் (மேல்) அறை(களில் உள்ளவர்)களை, வானில் நீங்கள் நட்சத்திரங்களைப் பார்ப்பதைப் போன்று (ஆர்வத்துடன்) பார்ப்பார்கள்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ أَهْلَ الجَنَّةِ لَيَتَرَاءَوْنَ الغُرَفَ فِي الجَنَّةِ، كَمَا تَتَرَاءَوْنَ الكَوْكَبَ فِي السَّمَاءِ»


Bukhari-6554

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6554. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நிச்சயமாக என் சமுதாயத்தாரில் ‘எழுபதாயிரம் பேர்’ அல்லது ‘ஏழு லட்சம் பேர்’ (விசாரணையின்றி) சொர்க்கத்தில் நுழைவார்கள்.

அறிவிப்பாளர் அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்களுக்கு இந்த இரண்டில் எது என்று (உறுதியாகத்) தெரியவில்லை.

அவர்களில் ஒருவரை ஒருவர் பற்றிக் கொண்டு ஒரே சீராக நுழைவார்கள். அவர்களில் கடைசி நபர் நுழையாத வரை முதல் நபர் நுழையமாட்டார். (அனைவரும் ஓரணியில் நுழைவர்.) அவர்களின் முகங்கள் பெளர்ணமி இரவில் (பிரகாசிக்கும்) முழு நிலவின் வடிவத்தில் இருக்கும்.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார். 132

Book :81


«لَيَدْخُلَنَّ الجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا، أَوْ سَبْعُ مِائَةِ أَلْفٍ – لاَ يَدْرِي أَبُو حَازِمٍ أَيُّهُمَا قَالَ – مُتَمَاسِكُونَ، آخِذٌ بَعْضُهُمْ بَعْضًا، لاَ يَدْخُلُ أَوَّلُهُمْ حَتَّى يَدْخُلَ آخِرُهُمْ، وُجُوهُهُمْ عَلَى صُورَةِ القَمَرِ لَيْلَةَ البَدْرِ»


Bukhari-6553

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6553. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. (அதன் நிழலில்) விரைந்து செல்லும் கட்டான உடலுள்ள உயர் ரகக் குதிரை நூறாண்டுகள் பயணித்தாலும் அதைக் கடக்க முடியாது. 131

என அபூ ஸயீத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً، يَسِيرُ الرَّاكِبُ الجَوَادَ المُضَمَّرَ السَّرِيعَ مِائَةَ عَامٍ مَا يَقْطَعُهَا»


Bukhari-6552

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6552. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது. அதன் நிழலில் பயணிப்பவர் நூறு ஆண்டுகள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது.

என ஸஹ்ல் இப்னு ஸஅத் (ரலி) அறிவித்தார்.

Book :81


«إِنَّ فِي الجَنَّةِ لَشَجَرَةً، يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لاَ يَقْطَعُهَا»


Bukhari-6551

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6551. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகத்தில்) இறைமறுப்பாளனின் இரண்டு தோள் புஜங்களுக்கிடையே உள்ள தூரம், துரிதமாகப் பயணிப்பவர் மூன்று நாள்கள் கடக்கும் தூரமாகும். 130

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :81


«مَا بَيْنَ مَنْكِبَيِ الكَافِرِ مَسِيرَةُ ثَلاَثَةِ أَيَّامٍ للرَّاكِبِ المُسْرِعِ»


Bukhari-6550

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6550. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது

இளைஞராயிருந்த ஹாரிஸா பின் சுராக்கா அல் அன்சாரி (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டார்கள். அப்பால் அவர்களின் தாயார் நபி (ஸலர்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே* (என் மகன்) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸாவுக்கு என்னிடமுள்ள அந்தஸ்தைத் தாங்கள் அறிந்துள்ளீர்கள். (இப்போது) ஹாரிஸா சொர்க்கத்தில் இருந்தால் நான் நன்மையை நாடி பொறுமை காப்பேன். இதுவன்றி நிலைமை வேறாக இருப்பின், நான் என்ன செய்வேன் என்பதைத் தாங்களே ஊகிக்கலாம் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அடப்பாவமே* இழப்பால் துடிக்கிறாயோ* அதுவென்ன, சொர்க்கம் ஒன்றுதான் உள்ளதா? சொர்க்கங்க(ளின் படித்தரங்க)ள் நிறைய உள்ளன. (உன் மகன்) ஹாரிஸா (உயர்ந்த சொர்க்கமான) ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தில் இருக்கிறார் என்று கூறினார்கள்.

Book :81


أُصِيبَ حَارِثَةُ يَوْمَ بَدْرٍ وَهُوَ غُلاَمٌ، فَجَاءَتْ أُمُّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَرَفْتَ مَنْزِلَةَ حَارِثَةَ مِنِّي، فَإِنْ يَكُ فِي الجَنَّةِ أَصْبِرْ وَأَحْتَسِبْ، وَإِنْ تَكُنِ الأُخْرَى تَرَى مَا أَصْنَعُ؟ فَقَالَ: «وَيْحَكِ، أَوَهَبِلْتِ، أَوَجَنَّةٌ وَاحِدَةٌ هِيَ؟ إِنَّهَا جِنَانٌ كَثِيرَةٌ، وَإِنَّهُ لَفِي جَنَّةِ الفِرْدَوْسِ»


Bukhari-6549

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6549. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அல்லாஹ் (மறுமையில்) சொர்க்கவாசிகளை நோக்கி, சொர்க்கவாசிகளே* என்று அழைப்பான். அதற்கு அவர்கள் எங்கள் அதிபதியே* இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் என்று பதிலளிப்பார்கள். அப்போது அல்லாஹ் திருப்தி அடைந்தீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள் உன் படைப்புகளில் யாருக்கும் நீ வழங்கியிராத (அருட்செல்வங்கள், இன்பங்கள் ஆகிய)வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா? என்று கூறுவார்கள். அப்போது அல்லாஹ் அதைவிடவும் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன் என்பான். அவர்கள் அதிபதியே* அதைவிடச் சிறந்தது எது? என்று கேட்பார்கள். அதற்கு அல்லாஹ் உங்கள் மீது என் திருப்தியை அருளுகிறேன். இனி ஒருபோதும் உங்கள் மீது கோபப்படமாட்டேன் என்று கூறுவான். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book :83


إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الجَنَّةِ: يَا أَهْلَ الجَنَّةِ؟ فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لاَ نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبِّ، وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ فَيَقُولُ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلاَ أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا


Bukhari-6548

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6548. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கும், நரகவாசிகள் நரகத்திற்கும் சென்று சேர்ந்த பிறகு ‘மரணம்’ (ஓர் ஆட்டின் உருவத்தில்) கொண்டு வரப்பட்டு, சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே நிறுத்தப்படும். பின்னர் அது அறுக்கப்படும். பிறகு அறிவிப்பாளர் ஒருவர் ‘சொர்க்கவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது; நரகவாசிகளே! (இனி) மரணம் என்பதே கிடையாது’ என அறிவிப்பார். அப்போது சொர்க்கவாசிகளுக்கு மகிழ்ச்சிக்கு மேல் மகிழ்ச்சி அதிகமாகும். நரகவாசிகளுக்குக் கவலைக்கு மேல் கவலை அதிகமாகும்.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :83


إِذَا صَارَ أَهْلُ الجَنَّةِ إِلَى الجَنَّةِ، وَأَهْلُ النَّارِ إِلَى النَّارِ، جِيءَ بِالْمَوْتِ حَتَّى يُجْعَلَ بَيْنَ الجَنَّةِ وَالنَّارِ، ثُمَّ يُذْبَحُ، ثُمَّ يُنَادِي مُنَادٍ: يَا أَهْلَ الجَنَّةِ لاَ مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ لاَ مَوْتَ، فَيَزْدَادُ أَهْلُ الجَنَّةِ فَرَحًا إِلَى فَرَحِهِمْ، وَيَزْدَادُ أَهْلُ النَّارِ حُزْنًا إِلَى حُزْنِهِمْ


Next Page » « Previous Page