Category: புஹாரி

Bukhari

Bukhari-6547

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6547. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் சொர்க்கத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும் பாலானோர் ஏழைகளாகவே இருந்தார்கள். தனவந்தர்கள் (கேள்வி கணக்கிற்காக சொர்க்கத்தில் நுழைந்துவிடாமல்) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர். ஆனால், நரகவாசிகளை நரகத்திற்குக் கொண்டு செல்லுமாறு ஆணையிடப்பட்டிருந்தது. நான் நரகத்தின் வாசலில் நின்றிருந்தேன். அதில் நுழைபவர்களில் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தார்கள்.

என உசாமா இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.

Book :83


«قُمْتُ عَلَى بَابِ الجَنَّةِ، فَكَانَ عَامَّةُ مَنْ دَخَلَهَا المَسَاكِينَ، وَأَصْحَابُ الجَدِّ مَحْبُوسُونَ، غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ، وَقُمْتُ عَلَى بَابِ النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ»


Bukhari-6546

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 51

சொர்க்கம், நரகம் ஆகியவற்றின் நிலை.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் உண்ணும் முதலாவது உணவு, மீன் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித் துண்டாகும். இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

125 (9:72ஆவது இறைவசனத்தின் மூலத் திலுள்ள) அத்ன்’ எனும் சொல்லுக்கு நிலையானது’ என்று பொருள். (அதன் வினைச் சொல்லான) அதன்த்து பி அர்ளின்’ எனும் வாக்கியத்திற்கு நான் ஒரு நாட்டில் நிலையாகத் தங்கினேன் என்று பொருள். இதிலிருந்தே மஅதின்’ (சுரங்கம்) எனும் சொல் பிறந்தது. மேலும், மஅதினி ஸித்க்’ என்றால் உண்மையின் பிறப்பிடம்’ என்று பொருள்.

6546. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நான் (விண்ணுலகப் பயணத்தின் போது) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களையே கண்டேன்.

«اطَّلَعْتُ فِي الجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الفُقَرَاءَ، وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ»