Category: புஹாரி

Bukhari

Bukhari-6537

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6537. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

(ஒரு முறை) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘மறுமை நாளில் விசாரணை செய்யப்படும் எவரும் அழிந்தேபோய் விடுவார்’ என்று கூறினார்கள். அப்போது நான் ‘இறைத்தூதர் அவர்களே! எவருடைய வினைப் பதிவுச் சீட்டு அவரின் வலக் கரத்தில் வழங்கப்படுமோ அவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ என்றல்லவா அல்லாஹ் கூறினான்?’ (திருக்குர்ஆன் 84:08) என்று கேட்டேன். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை தீமைகளின் பட்டியலை அவர்களுக்கு முன்) சமர்ப்பிக்கப்படுவது தான். மறுமையில் துருவித்துருவி விசாரணை செய்யப்படும் எவரும் வேதனை செய்யப்படாமலிருப்பதில்லை’ என்று கூறினார்கள்.

Book :83


«لَيْسَ أَحَدٌ يُحَاسَبُ يَوْمَ القِيَامَةِ إِلَّا هَلَكَ» فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَلَيْسَ قَدْ قَالَ اللَّهُ تَعَالَى: {فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا ذَلِكِ العَرْضُ، وَلَيْسَ أَحَدٌ يُنَاقَشُ الحِسَابَ يَوْمَ القِيَامَةِ إِلَّا عُذِّبَ»


Bukhari-6536

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49 துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனையில் அகப்படுவார்.

6536. (மறுமையில்) துருவித்துருவி விசாரிக்கப்படுபவர் வேதனை செய்யப்படுவார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். நான் ‘அல்லாஹ் (தன் வேதத்தில்) ‘வலக் கரத்தில் தம் வினைப் பதிவுச் சீட்டு வழங்கப்பட்டவரிடம் எளிய முறையில் கணக்கு வாங்கப்படும்’ (திருக்குர்ஆன் 84:08) என்றல்லவா கூறுகிறான்?’ எனக் கேட்டதற்கு, ‘இது (கேள்வி கணக்கு தொடர்பானது அன்று; மாறாக, மனிதர்களின் நன்மை, தீமை பட்டியலை அவர்களுக்கு முன்னால்) சமர்ப்பிக்கப்படுதலாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’118 என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

மேற்கண்ட ஹதீஸ் வேறு சில அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 83


«مَنْ نُوقِشَ الحِسَابَ عُذِّبَ» قَالَتْ: قُلْتُ: أَلَيْسَ يَقُولُ اللَّهُ تَعَالَى: {فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا} [الانشقاق: 8] قَالَ: «ذَلِكِ العَرْضُ»، حَدَّثَنِي عَمْرُو بْنُ عَلِيٍّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُثْمَانَ بْنِ الأَسْوَدِ، سَمِعْتُ ابْنَ أَبِي مُلَيْكَةَ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ. وَتَابَعَهُ ابْنُ جُرَيْجٍ، وَمُحَمَّدُ بْنُ سُلَيْمٍ، وَأَيُّوبُ، وَصَالِحُ بْنُ رُسْتُمَ، عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ عَائِشَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-6535

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6535. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைநம்பிக்கையாளர்கள் நரகத்தி(ன் பாலத்தி)லிருந்து தப்பி வரும்போது சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள். அங்கு உலகில் (வாழ்ந்த போது) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்காகச் சிலரிடமிருந்து சிலர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள். இறுதியில் அவர்கள் (மாசு) நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை, உலகத்திலிருந்த அவர்களின் இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டுகொள்வார்கள்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் அறிவித்தார்கள்.117

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் இப்னு ஸுரைஉ(ரஹ்) அவர்கள் ‘(இவ்வுலகில் ஒருவரின் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தை அவர்களின் இதயங்களிலிருந்து அகற்றிவிடுவோம்’ எனும் (திருக்குர்ஆன் 07:43 வது) வசனத்தை ஓதிவிட்டு, (அதற்கு விளக்கமாக) இந்த ஹதீஸை அறிவித்தார்கள்.

«يَخْلُصُ المُؤْمِنُونَ مِنَ النَّارِ، فَيُحْبَسُونَ عَلَى قَنْطَرَةٍ بَيْنَ الجَنَّةِ وَالنَّارِ، فَيُقَصُّ لِبَعْضِهِمْ مِنْ بَعْضٍ مَظَالِمُ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا، حَتَّى إِذَا هُذِّبُوا وَنُقُّوا أُذِنَ لَهُمْ فِي دُخُولِ الجَنَّةِ، فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَأَحَدُهُمْ أَهْدَى بِمَنْزِلِهِ فِي الجَنَّةِ مِنْهُ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا»


Bukhari-6534

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6534. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒருவர் தம் சகோதரருக்கு அநீதி ஏதேனும் இழைத்திருந்தால் (அவருடன் சமரசம் செய்து) அதிலிருந்து அவர் (இவ்வுலம்லேயே) தம்மை விடுவித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அங்கு (மறுமையில் ஈட்டுத் தொகை கொடுக்க) பொற்காசோ, வெள்ளிக்காசோ இருக்காது. இவர் தம் சகோதரருக்கு (இழைத்த அநீதிக்கு ஈடாக) இவருடைய நன்மைகளிலிருந்து (தேவையானவற்றை) எடு(த்துக் கொடு)க்கப்படும்; இவரிடம் நன்மைகளே இல்லை என்றால், (அநீதிக்குள்ளான) சகோதரனின் பாவங்களிலிருந்து (விம்தாசாரப்படி) எடுத்து இவர் மீது சுமத்தப்(படும். இந்நிலை ஏற்)படுவதற்கு முன்பே (இம்மையில் சமரசம் செய்து கொள்ளட்டும்).

என அபூ ஹுரைர(ரலி) அறிவித்தார்.116

Book :83


«مَنْ كَانَتْ عِنْدَهُ مَظْلِمَةٌ لِأَخِيهِ فَلْيَتَحَلَّلْهُ مِنْهَا، فَإِنَّهُ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ، مِنْ قَبْلِ أَنْ يُؤْخَذَ لِأَخِيهِ مِنْ حَسَنَاتِهِ، فَإِنْ لَمْ يَكُنْ لَهُ حَسَنَاتٌ أُخِذَ مِنْ سَيِّئَاتِ أَخِيهِ فَطُرِحَتْ عَلَيْهِ»


Bukhari-6533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48

மறுமைநாளில் பழிதீர்க்கப்படுதல்113

மறுமை நாளுக்கு அல்ஹாக்கா’ (நிச்சயமானது’) என்றொரு பெயருண்டு. ஏனெனில், அந்நாளில் பிரதிபலன் கிடைப்பதும், உண்மைகள் (வெளிச்சத்திற்கு) வருவதும் நிச்சயமாகும்.

அல்ஹாக்கா’ மற்றும் அல்ஹக்கா’ (உண்மையானது) ஆகிய இரண்டுக்கும் பொருள் ஒன்றே. (இதன்றி) அல்காரிஆ’ (திடுக்கிடச் செய்யக்கூடியது), அல்ஃகாஷியா’ (சூழ்ந்துகொள்ளக்கூடியது), அஸ்ஸாக்கா’ (பெருஞ்சப்தம்) ஆகிய பெயர்களும் அதற்கு உண்டு. அத்தஃகாபுன்’ (இழப்புக்குள்ளாக்குதல்) எனும் பெயரும் உண்டு. அன்று சொர்க்கவாசிகள், நரகவாசி களை இழப்புக்குள்ளாக்குவர்.114

6533. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாளில் மனிதர்களுக்கிடையே முதன் முதலில் தீர்ப்பளிக்கப்படுவது (உலகில் சிந்தப்பட்ட) இரத்தங்கள் (கொலைகள்) குறித்துதான். 115

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

«أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ بِالدِّمَاءِ»