Category: புஹாரி

Bukhari

Bukhari-5945

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5945. அவ்ன் இப்னு அபீ ஜுஹைஃபா (ரஹ்) அறிவித்தார்:

என் தந்தை (அபூ ஜுஹைஃபா (ரலி) குருதி உறிஞ்சி எடுக்கும் அடிமை ஒருவரை விலைக்கு வாங்கி, அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்தபோது) அவர்களை நான் கண்டடேன்.

அப்போது அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் இரத்தத்தின் விலையையும், நாய் விற்ற காசையும் (பெறக் கூடாதெனத்) தடை செய்தார்கள். மேலும், வட்டி உண்பவனையும் அதை உண்ணக் கொடுப்பவனையும், பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் (சபித்தார்கள்.)130

Book :77


«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الكَلْبِ، وَآكِلِ الرِّبَا وَمُوكِلِهِ، وَالوَاشِمَةِ وَالمُسْتَوْشِمَةِ»


Bukhari-5944

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 86

பச்சை குத்திவிடும் பெண்.

5944. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கண்ணேறு (திருஷ்டிபடுவது) உண்மைதான்’ என்று கூறினார்கள். மேலும், பச்சை குத்துவதைத் தடை செய்தார்கள்.129

…இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«العَيْنُ حَقٌّ» وَنَهَى عَنِ الوَشْمِ

حَدَّثَنِي ابْنُ بَشَّارٍ: حَدَّثَنَا ابْنُ مَهْدِيٍّ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: ذَكَرْتُ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَابِسٍ، حَدِيثَ مَنْصُورٍ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، فَقَالَ: سَمِعْتُهُ مِنْ أُمِّ يَعْقُوبَ، عَنْ عَبْدِ اللَّهِ، مِثْلَ حَدِيثِ مَنْصُورٍ


Bukhari-5943

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5943. அல்கமா (ரஹ்) அறிவித்தார்:

‘பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயற்கையான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!’ என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூறிவிட்டு, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே’ என்று கூறினார்கள்.128

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ» مَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ


Bukhari-5942

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5942. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்துபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டு முடி வைத்துக் கொள்பவளையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

Book :77


«الوَاشِمَةُ وَالمُوتَشِمَةُ، وَالوَاصِلَةُ وَالمُسْتَوْصِلَةُ» يَعْنِي: لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-5941

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5941. அஸ்மா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி, ‘இறைத்தூதர் அவர்களே! என் மகளுக்குத் தட்டம்மை நோய் ஏற்பட்டு அதன் காரணத்தால் அவளுடைய தலைமுடி கொட்டிவிட்டது. அவளை நான் மணமுடித்துக் கொடுத்திருக்கிறேன்.

அவளுடைய தலை முடியுடன் ஒட்டுமுடி வைக்கலாமா?’ என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்)’ என்று கூறினார்கள்.127

Book :77


سَأَلَتِ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ ابْنَتِي أَصَابَتْهَا الحَصْبَةُ، فَامَّرَقَ شَعَرُهَا، وَإِنِّي زَوَّجْتُهَا، أَفَأَصِلُ فِيهِ؟ فَقَالَ: «لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمَوْصُولَةَ»


Bukhari-5940

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 85

ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்.126

5940. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக்கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக் கொள்பவளையும் சபித்தார்கள்.

Book : 77


«لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ»


Bukhari-5939

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 84

(அழகிற்காக) முகத்தின் முடியை நீக்கிக் கொள்ளும் பெண்கள்.124

5939. அல்கமா இப்னு கைஸ் (ரஹ்) அறிவித்தார்:

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) பச்சைகுத்திவிடும் பெண்களையும் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்கிக் கொள்ளும் பெண்களையும் அழகிற்காக பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்களையும் (மொத்தத்தில்) அல்லாஹ் படைத்த உருவ அமைப்பை மாற்றும் பெண்களை சபித்தார்கள்.

(இதைக் கேள்விப்பட்ட) உம்மு யஅகூப் என்ற பெண், ‘என்ன இது (இவ்வாறெல்லாம் சபித்தீர்களாமே)?’ என்று கேட்டதற்கு அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரை சபித்தார்களோ அவர்களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான்  ஏன் சபிக்கக் கூடாது?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அந்தப் பெண், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! (குர்ஆன் பிரதியில்) இரண்டு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். (நீங்கள்

«لَعَنَ عَبْدُ اللَّهِ، الوَاشِمَاتِ وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»

فَقَالَتْ أُمُّ يَعْقُوبَ: مَا هَذَا؟ قَالَ عَبْدُ اللَّهِ: «وَمَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ، وَفِي كِتَابِ اللَّهِ؟»

قَالَتْ: وَاللَّهِ لَقَدْ قَرَأْتُ مَا بَيْنَ اللَّوْحَيْنِ فَمَا وَجَدْتُهُ، قَالَ: ” وَاللَّهِ لَئِنْ قَرَأْتِيهِ لَقَدْ وَجَدْتِيهِ: {وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا} [الحشر: 7]


Bukhari-5938

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5938. ஸயீத் இப்னு முஸய்யப் (ரஹ்) கூறினார்:

முஆவியா (ரலி) மதீனாவுக்கு இறுதியாக வந்தார்கள். அப்போது எங்களுக்கு உரையாற்றினார்கள். மேலும், முடிக்கற்றை ஒன்றை (கையில்) எடுத்து, ‘இந்த ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் செயலை யூதர்களைத் தவிர வேறெவரும் செய்வதை நான் பார்த்ததில்லை.

நபி (ஸல்) அவர்கள் இதை போலி (‘ஸூர்’) என அழைத்தார்கள்’ என்று ஒட்டுமுடி வைப்பதைக் குறிப்பிட்டுச் சொன்னார்கள்.

Book :77


قَدِمَ مُعَاوِيَةُ المَدِينَةَ، آخِرَ قَدْمَةٍ قَدِمَهَا، فَخَطَبَنَا فَأَخْرَجَ كُبَّةً مِنْ شَعَرٍ، قَالَ: مَا كُنْتُ أَرَى أَحَدًا  يَفْعَلُ هَذَا غَيْرَ اليَهُودِ

«إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمَّاهُ الزُّورَ. يَعْنِي الوَاصِلَةَ فِي الشَّعَرِ»


Bukhari-5937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5937. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒட்டுமுடி வைத்துவிடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)

இதை இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இதன் அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்), ‘பல் ஈறுகளிலும் பச்சை குத்தப்படுவதுண்டு’ என்று கூறினார்கள்.

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ» وَقَالَ نَافِعٌ: «الوَشْمُ فِي اللِّثَةِ»


Bukhari-5936

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5936. அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும் (‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும்’ என்று) சபித்தார்கள்.

Book :77


«لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاصِلَةَ وَالمُسْتَوْصِلَةَ»


Next Page » « Previous Page