Category: புஹாரி

Bukhari

Bukhari-5955

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5955. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து வந்தார்கள். நான் குஞ்சம் வைத்த கெட்டித் திரைச் சீலையொன்றை (வீட்டில்) தொங்க விட்டிருந்தேன். அதில் உருவச் சித்திரங்கள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அதைக் கழற்றி விடும்படி என்னைப் பணித்தார்கள். எனவே, நான் அதைக் கழற்றிவிட்டேன்.

Book :77


«قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ، وَعَلَّقْتُ دُرْنُوكًا فِيهِ تَمَاثِيلُ، فَأَمَرَنِي أَنْ أَنْزِعَهُ فَنَزَعْتُهُ»


Bukhari-5954

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 91

காலால் மிதிபடும் உருவப் படங்கள்.

5954. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து (தபூக் அல்லது கைபரிலிருந்து மதீனா) வந்தார்கள். அப்போது உருவச் சித்திரங்கள் பொறித்த என்னுடைய திரைச் சீலையொன்றால் நான் என்னுடைய அலமாரியை மறைத்திருந்தேன். அதை அல்லாஹவின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது அதைக் கிழித்துவிட்டு, ‘மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோர் அல்லாஹ்வின் படைப்புக்கு ஒப்பாகப் படை(க்க நினை)ப்பவர்கள்தாம்’ என்று கூறினார்கள்.

பிறகு நாங்கள் அந்தத் திரைச் சீலையை ஒரு தலையணை(இருக்கை)யாக, அல்லது இரண்டு தலையணை(இருக்கை)களாக ஆக்கிக் கொண்டோம். 133

Book : 77


قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ، وَقَدْ سَتَرْتُ بِقِرَامٍ لِي عَلَى سَهْوَةٍ لِي فِيهَا تَمَاثِيلُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ هَتَكَهُ

وَقَالَ: «أَشَدُّ النَّاسِ عَذَابًا يَوْمَ القِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ» قَالَتْ: فَجَعَلْنَاهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ


Bukhari-5953

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5953. அபூஸுர்ஆ பின் அம்ர் பின் ஜரீர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் மதீனாவில் ஒரு வீட்டினுள் நுழைந்தேன். அதன் மேல்தளத்தில் உருவப்படங்களை வரைபவர் ஒருவர் உருவங்களை வரைந்துகொண்டிருந்தார். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், ‘‘என் படைப்பைப் போன்று படைக்க எண்ணுபவனைவிட அக்கிரமக்காரன் வேறு யார் இருக்க முடியும்? அவர்கள் ஒரு தானிய விதையையாவது படைத்துக் காட்டட்டும். ஓர் அணுவையாவது படைத்துக் காட்டட்டும் என்று (அல்லாஹ் கூறுவதாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்” என்றார்கள்.

பிறகு (அங்கத் தூய்மை செய்வதற்காகத்) தண்ணீருள்ள பாத்திரம் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி தம் இரு கைகளையும் அக்குள்வரை கழுவினார்கள்.

நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது (அக்குள்வரை கையைக் கழுவுவது), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற விஷயமா?” எனக் கேட்க, அவர்கள், ‘‘(அங்கத் தூய்மை செய்யப்படும் உடலுறுப்புகள் மறுமையில் வெண்மையாகும்போது அக்குள்வரை) வெண்மை பரவும்” (என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்) என்றார்கள்.

அத்தியாயம்: 77


دَخَلْتُ مَعَ أَبِي هُرَيْرَةَ، دَارًا بِالْمَدِينَةِ، فَرَأَى أَعْلاَهَا مُصَوِّرًا يُصَوِّرُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «وَمَنْ أَظْلَمُ مِمَّنْ ذَهَبَ يَخْلُقُ كَخَلْقِي، فَلْيَخْلُقُوا حَبَّةً، وَلْيَخْلُقُوا ذَرَّةً»

ثُمَّ دَعَا بِتَوْرٍ مِنْ مَاءٍ، فَغَسَلَ يَدَيْهِ حَتَّى بَلَغَ إِبْطَهُ، فَقُلْتُ: يَا أَبَا هُرَيْرَةَ، أَشَيْءٌ سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: مُنْتَهَى الحِلْيَةِ


Bukhari-5952

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 90

உருவப் படங்களைச் சிதைத்தல்.

5952. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் தங்களின் வீட்டில் சிலுவை போன்ற உருவங்கள் உள்ள எந்தப் பொருளையும் சிதைக்காமல்விட்டு வைத்ததில்லை.

Book : 77


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَمْ يَكُنْ يَتْرُكُ فِي بَيْتِهِ شَيْئًا فِيهِ تَصَالِيبُ إِلَّا نَقَضَهُ»


Bukhari-5951

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5951. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என (இடித்து)க் கூறப்படும்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book :77


إِنَّ الَّذِينَ يَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ


Bukhari-5950

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 89

உருவங்களைப் படைப்போருக்கு மறுமை நாளில் கிடைக்கும் வேதனை.

5950. முஸ்லிம் இப்னு ஸுபைஹ் (ரஹ்) அறிவித்தார்:

நாங்கள் மஸ்ரூக் இப்னு அஜ்தஉ (ரஹ்) அவர்களுடன் யஸார் இப்னு நுமைர் (ரஹ்) அவர்களின் இல்லத்தில் இருந்தோம். அப்போது யஸார் (ரஹ்) அவர்களின் வீட்டுத் திண்ணையில் சில சிலைகள் இருப்பதை மஸ்ரூக் (ரஹ்) கண்டார்கள்.

உடனே ‘அல்லாஹ்விடம் மறுமை நாளில் மிகக் கடுமையான வேதனைக்கு உள்ளாவோர் உருவங்களைப் படைப்போர் தாம்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைத் தாம் செவியேற்றதாக அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) கூற கேட்டேன்’ என்று மஸ்ரூக் (ரஹ்) கூறினார்கள்.

Book : 77


كُنَّا مَعَ مَسْرُوقٍ، فِي دَارِ يَسَارِ بْنِ نُمَيْرٍ، فَرَأَى فِي صُفَّتِهِ تَمَاثِيلَ، فَقَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ أَشَدَّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ القِيَامَةِ المُصَوِّرُونَ»


Bukhari-5949

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 88

உருவப் படங்கள்.

5949. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாயும் (சிலைகள் முதலான) உருவப் படங்களும் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டுவரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.132

என அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«لاَ تَدْخُلُ المَلاَئِكَةُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلاَ تَصَاوِيرُ»

وَقَالَ اللَّيْثُ: حَدَّثَنِي يُونُسُ، عَنْ ابْنِ شِهَابٍ، أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ: سَمِعَ ابْنَ عَبَّاسٍ: سَمِعْتُ أَبَا طَلْحَةَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-5948

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5948. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்தின் முடியை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (மொத்தத்தில்) அல்லாஹ்வின் (இயல்பான) படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்களின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக்கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டுள்ளது.131

Book :77


«لَعَنَ اللَّهُ الوَاشِمَاتِ وَالمُسْتَوْشِمَاتِ، وَالمُتَنَمِّصَاتِ، وَالمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ، المُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ»

مَا لِي لاَ أَلْعَنُ مَنْ لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ فِي كِتَابِ اللَّهِ


Bukhari-5946

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 87

பச்சை குத்திக்கொள்ளும் பெண்.

5946. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

பச்சை குத்தும் பெண்ணொருத்தி உமர் (ரலி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டாள். அப்போது உமர் (ரலி), ‘அல்லாஹ்வின் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன்: பச்சை குத்துவதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடமிருந்து (ஏதேனும்) செவியுற்றவர் (எவரேனும் உங்களில்) இருக்கிறாரா?’ என்று (எங்களிடம்) கேட்டார்கள்.

நான் எழுந்து, ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! நான் செவியுற்றிருக்கிறேன்’ என்று சொன்னேன். அதற்கு அவர்கள், ‘என்ன செவியுற்றீர்கள்?’ என்று கேட்க, ‘(பெண்களே! பிறருக்குப்) பச்சை குத்திவிடாதீர்கள்; நீங்களும் பச்சை குத்திக்கொள்ளாதீர்கள்’ என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல செவியுற்றேன் எனக் கூறினேன்.

Book : 77


أُتِيَ عُمَرُ بِامْرَأَةٍ تَشِمُ، فَقَامَ فَقَالَ: أَنْشُدُكُمْ بِاللَّهِ، مَنْ سَمِعَ مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الوَشْمِ؟

فَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَقُمْتُ فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ أَنَا سَمِعْتُ، قَالَ: مَا سَمِعْتَ؟ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَشِمْنَ وَلاَ تَسْتَوْشِمْنَ»


Next Page » « Previous Page