Category: புஹாரி

Bukhari

Bukhari-5965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 99

ஒரே வாகனப் பிராணியின் மீது மூன்று பேர் பயணம் செய்வது.

5965. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

(மக்கா வெற்றியின்போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவுக்கு வந்த சமயம் அவர்களை அப்துல் முத்தலிபின் குடும்பத்துச் சிறுவர்கள் வரவேற்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்தச் சிறுவர்களில்) ஒருவரைத் தமக்கு முன்னாலும் மற்றொருவரைத் தமக்குப் பின்னாலும் (தம் ஒட்டகத்தில்) அமர்த்திக் கொண்டார்கள்.

Book : 77


«لَمَّا قَدِمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ، اسْتَقْبَلَهُ أُغَيْلِمَةُ بَنِي عَبْدِ المُطَّلِبِ، فَحَمَلَ وَاحِدًا بَيْنَ يَدَيْهِ، وَالآخَرَ خَلْفَهُ»


Bukhari-5964

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 98

வாகனத்தில் ஒருவர் தமக்குப் பின்னால் மற்றொருவரை அமர்த்திக்கொள்வது.

5964. உஸாமா இப்னு ஸைத் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , கழுதை வாகனத்தில் சேணம் விரித்து, அதன் மீது ‘ஃபதக்’ நகர் முரட்டுத் துணி விரித்து அதன் மீது அமர்ந்து பயணம் செய்தார்கள். தமக்குப் பின்னால் என்னை அமர்த்திக் கொண்டார்கள்.140

Book : 77


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «رَكِبَ عَلَى حِمَارٍ، عَلَى إِكَافٍ عَلَيْهِ قَطِيفَةٌ فَدَكِيَّةٌ، وَأَرْدَفَ أُسَامَةَ وَرَاءَهُ»


Bukhari-5963

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97

உருவப் படம் வரைகின்றவன் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி கட்டளையிடப்படுவான். ஆனால், அவனால் அது முடியாது.

5963. நள்ர் பின் அனஸ் பின் மாலிக் (ரஹ்) அறிவித்தார்:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இருந்தேன். அவர்களிடம் மக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருந்தார்கள். (பொதுவாக) தம்மிடம் (விளக்க) கேட்கப்படாத வரை நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (எதையும்) கூற மாட்டார்கள்.

அப்போது (ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில்) இப்னு அப்பாஸ் (ரலி), ‘உலகில் ஓர் உருவப் படத்தை வரைகிறவர் மறுமை நாளில் அந்த உருவத்தினுள் உயிரை ஊதும்படி பணிக்கப்படுவார். ஆனால், அவரால் ஊத முடியாது’ என்று முஹம்மத் (ஸல்) அவர்கள் சொல்ல கேட்டேன்’ எனக் கூறினார்கள்.

அத்தியாயம்: 77


كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، وَهُمْ يَسْأَلُونَهُ، وَلاَ يَذْكُرُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى سُئِلَ، فَقَالَ: سَمِعْتُ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ صَوَّرَ صُورَةً فِي الدُّنْيَا كُلِّفَ يَوْمَ القِيَامَةِ أَنْ يَنْفُخَ فِيهَا الرُّوحَ، وَلَيْسَ بِنَافِخٍ»


Bukhari-5962

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96

உருவப் படம் வரைவோரைச் சபித்தல்.

5962. அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்:

நான் குருதி உறிஞ்சியெடுக்கும் அடிமை ஒருவரை (விலைக்கு) வாங்கினேன். (அவரின் குருதி உறிஞ்சி கருவிகளை உடைத்து விட்டேன். ஏனெனில்,) நபி (ஸல்) அவர்கள், இரத்தத்தின் விலையையும் நாய்விற்ற காசையும் விபசாரியின் சம்பாத்தியத்தையும் (ஏற்கக் கூடாதென்று) தடை செய்தார்கள்.

மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் பச்சை குத்திவிடுபவளையும் பச்சை குத்திக்கொள்பவளையும் உருவப் படங்களை வரைகிறவனையும் சபித்தார்கள்.139

Book : 77


أَنَّهُ اشْتَرَى غُلاَمًا حَجَّامًا، فَقَالَ: «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الدَّمِ، وَثَمَنِ الكَلْبِ، وَكَسْبِ البَغِيِّ، وَلَعَنَ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَالوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ وَالمُصَوِّرَ»


Bukhari-5961

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95

உருவப் படமுள்ள வீட்டுக்குள் செல்லாமலிருப்பது.

5961. நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா(ரலி) அறிவித்தார்:

நான் உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை விலைக்கு வாங்கினேன். அதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தபோது வீட்டுக்குள் நுழையாமல் வாசலிலேயே நின்றுவிட்டார்கள். அவர்களின் முகத்தில் வெறுப்புத் தெரிந்தது. நான், ‘இறைத்தூதர் அவர்களே! நான் அல்லாஹ்விடமும் அல்லாஹ்வின் தூதரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். நான் என்ன குற்றம் செய்தேன்?’ என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘என்ன திண்டு அது?’ என்று கேட்டார்கள். நான், ‘நீங்கள் அமர்ந்துகொள்வதற்காகவும் தலையணையாகப் பயன்படுத்திக்கொள்வதற்காகவும் தான் இதை வாங்கினேன்’ என்று சொன்னேன்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘இந்த உருவங்களை வரைந்தவர்கள் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று

أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَلَمَّا رَآهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ عَلَى البَابِ فَلَمْ يَدْخُلْ، فَعَرَفَتْ فِي وَجْهِهِ الكَرَاهِيَةَ، قَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، أَتُوبُ إِلَى اللَّهِ وَإِلَى رَسُولِهِ، مَاذَا أَذْنَبْتُ؟

قَالَ: «مَا بَالُ هَذِهِ النُّمْرُقَةِ» فَقَالَتْ: اشْتَرَيْتُهَا لِتَقْعُدَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، وَيُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ “

وَقَالَ: «إِنَّ البَيْتَ الَّذِي فِيهِ الصُّوَرُ لاَ تَدْخُلُهُ المَلاَئِكَةُ»


Bukhari-5960

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 94

உருவப் படம் உள்ள வீட்டில் வானவர்கள் நுழையமாட்டார்கள்.

5960. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் (ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வருவதாக) வாக்களித்திருந்தார்கள். ஆனால், அவரின் வருகை தாமதப்பட்டது. இதையடுத்து நபி (ஸல்) அவர்களுக்குத் கவலை உண்டானது. அப்போது, நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட ஜிப்ரீல் (அலை) அவர்களைச் சந்தித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தாம் அடைந்த கவலையை ஜிப்ரீல் (அலை) அவர்களிடம் (தெரிவித்து) முறையிட்டார்கள். அதற்கு அவர்கள், ‘(வானவர்களாகிய) நாங்கள் உருவப் படமும் நாயும் உள்ள வீட்டில் நுழையமாட்டோம்’ என்று கூறினார்கள்.137

Book : 77


وَعَدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ، فَرَاثَ عَلَيْهِ، حَتَّى اشْتَدَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَقِيَهُ، فَشَكَا إِلَيْهِ مَا وَجَدَ، فَقَالَ لَهُ: إِنَّا لاَ نَدْخُلُ بَيْتًا فِيهِ صُورَةٌ وَلاَ كَلْبٌ


Bukhari-5959

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 93

உருவப் படங்கள் உள்ள இடத்தில் தொழுவது வெறுக்கப்பட்டதாகும்.

5959. அனஸ் (ரலி) அறிவித்தார்:

ஆயிஷா (ரலி) அவர்களிடம் உருவச் சித்திரங்கள் பொறித்த திரைச் சீலை ஒன்று இருந்தது. அதனால் வீட்டின் ஒரு பகுதி(யிலிருந்த அலமாரி)யை அவர்கள் மறைத்திருந்தார்கள்.

(அதை நோக்கித் தொழுத) நபி (ஸல்) அவர்கள், ‘இதை அகற்றிவிடு. ஏனெனில், இதிலுள்ள உருவப்படங்கள் என் தொழுகையில் என்னிடம் குறுக்கிட்டுக் கொண்டேயிருக்கின்றன’ என்று கூறினார்கள்.136

Book : 77


كَانَ قِرَامٌ لِعَائِشَةَ، سَتَرَتْ بِهِ جَانِبَ بَيْتِهَا، فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَمِيطِي عَنِّي، فَإِنَّهُ لاَ تَزَالُ تَصَاوِيرُهُ تَعْرِضُ لِي فِي صَلاَتِي»


Bukhari-5958

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5958. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழையமாட்டார்கள்.

இதை இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தோழர் அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) புஸ்ர் இப்னு ஸயீத் (ரஹ்) கூறினார்:

(இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) ஸைத் இப்னு காலித் (ரலி), பின்னர் நோய்வாய்ப்பட்டபோது நாங்கள் அவர்களை உடல் நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது அவர்களின் வீட்டுக் கதவில் உருவப்படம் உள்ள திரையொன்று தொங்கிக் கொண்டிருந்தது. நான் (உடனிருந்த) நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான மைமூனா (ரலி) அவர்களின் வளர்ப்பு மகன் உபைதுல்லாஹ் இப்னு அஸ்வத் அல்கவ்லானீ (ரஹ்) அவர்களிடம், ‘உருவப் படங்களைப் பற்றி முன்பு ஒரு நாள் ஸைத் (ரலி) நமக்கு (ஒரு ஹதீஸ்) அறிவிக்கவில்லையா?’ என்று கேட்டேன். உடனே உபைதுல்லாஹ் (ரஹ்), ‘துணியில் வரையப்பட்ட (உயிரற்றவையின் படத்)தைத் தவிர’ என்று அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று கேட்டார்கள்.135

«إِنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ» قَالَ بُسْرٌ: ثُمَّ اشْتَكَى زَيْدٌ، فَعُدْنَاهُ، فَإِذَا عَلَى بَابِهِ سِتْرٌ فِيهِ صُورَةٌ، فَقُلْتُ لِعُبَيْدِ اللَّهِ، رَبِيبِ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَلَمْ يُخْبِرْنَا زَيْدٌ عَنِ الصُّوَرِ يَوْمَ الأَوَّلِ؟ فَقَالَ عُبَيْدُ اللَّهِ: أَلَمْ تَسْمَعْهُ حِينَ قَالَ: «إِلَّا رَقْمًا فِي ثَوْبٍ»

وَقَالَ ابْنُ وَهْبٍ: أَخْبَرَنَا عَمْرٌو هُوَ ابْنُ الحَارِثِ، حَدَّثَهُ بُكَيْرٌ، حَدَّثَهُ بُسْرٌ، حَدَّثَهُ زَيْدٌ، حَدَّثَهُ أَبُو طَلْحَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-5957

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 92

உருவப் படங்கள் மீது அமர்வதைக் கூட வெறுத்தவர்கள்.

5957. ஆயிஷா (ரலி) அறிவித்தார்:

நான் (உயிரினங்களின்) உருவப்படங்கள் உள்ள திண்டு ஒன்றை வாங்கினேன். நபி (ஸல்) அவர்கள் (வீட்டின்) கதவருகே வந்து நின்றார்கள். ஆனால், உள்ளே வரவில்லை. (இதைக் கண்டு திடுக்குற்ற) நான், ‘நான் செய்த பாவத்திற்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி மீளுகிறேன்’ என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், ‘இந்தத் திண்டு என்ன?’ என்று கேட்டார்கள். நான், ‘இதன் மீது நீங்கள் அமர்வதற்காகவும் இதைத் தலையணையாக நீங்கள் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் நான் வாங்கினேன்’ என்று சொன்னேன்.

நபி (ஸல்) அவர்கள், ‘இந்த உருவங்களைப் படைப்போர் மறுமை நாளில் வேதனை செய்யப்படுவார்கள். அவர்களிடம், ‘நீங்கள் படைத்தவற்றுக்கு உயிர் கொடுங்கள் (பார்க்கலாம்)’ என்று சொல்லப்படும். மேலும், (உயிரினங்களின்) உருவப் படம் உள்ள வீட்டில் (இறைக் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள்’ என்று கூறினார்கள்.134

أَنَّهَا اشْتَرَتْ نُمْرُقَةً فِيهَا تَصَاوِيرُ، فَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْبَابِ فَلَمْ يَدْخُلْ، فَقُلْتُ: أَتُوبُ إِلَى اللَّهِ مِمَّا أَذْنَبْتُ،

قَالَ: «مَا هَذِهِ النُّمْرُقَةُ» قُلْتُ: لِتَجْلِسَ عَلَيْهَا وَتَوَسَّدَهَا،

قَالَ: ” إِنَّ أَصْحَابَ هَذِهِ الصُّوَرِ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ، وَإِنَّ المَلاَئِكَةَ لاَ تَدْخُلُ بَيْتًا فِيهِ الصُّورَةُ