Category: புஹாரி

Bukhari

Bukhari-5893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65

தாடிகளை அப்படியே வளரவிடுதல்.

(7:95 ஆவது இறைவசனத்தின் மூலத்திலுள்ள) ‘அஃபவ்’ எனும் சொல்லுக்கு ‘அவர்கள் பெருகினார்கள்; அவர்களுடய செல்வங்களும் பெருகின’ என்று பொருள்.98

5893. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள்.

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77


«انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى»


Bukhari-5892

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5892. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தம் தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள்) 

அத்தியாயம்: 77


خَالِفُوا المُشْرِكِينَ: وَفِّرُوا اللِّحَى، وَأَحْفُوا الشَّوَارِبَ “

وَكَانَ ابْنُ عُمَرَ: «إِذَا حَجَّ أَوِ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ، فَمَا فَضَلَ أَخَذَهُ»


Bukhari-5891

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5891. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இயற்கை மரபுகள் ஐந்தாகும். விருத்தசேதனம் செய்துகொள்வது, மர்ம உறுப்பின் முடிகளைக் களைந்து கொள்வதற்கக சவரக் கத்தியை உபயோகிப்பது, மீசையைக் கத்தரிப்பது, நகங்களை வெட்டுவது, அக்குள் முடிகளை அகற்றுவது ஆகியவை தாம் அவை.

என அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77


الفِطْرَةُ خَمْسٌ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَقَصُّ الشَّارِبِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَنَتْفُ الآبَاطِ


Bukhari-5890

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 64

நகங்களை வெட்டுதல்.

5890. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மர்ம உறுப்பின் முடிகளைக் களைவது, நகங்களை வெட்டுவது, மீசையைக் கத்தரிப்பது ஆகியன இயற்கை மரபுகளில் அடங்கும்.

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77


مِنَ الفِطْرَةِ: حَلْقُ العَانَةِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ


Bukhari-5889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5889. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விருத்தசேதனம் செய்வது, மர்ம உறுப்பின் முடியைக் களைந்திட சவரக் கத்தியை உபயோகிப்பது, அக்குள் முடிகளை அகற்றுவது, நகங்களை வெட்டிக் கொள்வது, மீசையைக் கத்தரித்துக் கொள்வது ஆகிய இந்த ஐந்து விஷயங்களும் இயற்கை மரபுகளில் அடங்கும்

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

Book :77


الفِطْرَةُ خَمْسٌ، أَوْ خَمْسٌ مِنَ الفِطْرَةِ: الخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الإِبْطِ، وَتَقْلِيمُ الأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ


Bukhari-5888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 63

மீசையைக் கத்தரிப்பது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது சருமத்தின் வெண்மை தெரிகின்ற அளவிற்குத் தமது மீசையை ஒட்ட நறுக்குவது வழக்கம். மீசைக்கும் தாடிக்கும் இடையிலுள்ள (குறுந்தாடி) முடிகளை அகற்றிவிடுவார்கள்.

5888. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்.97

என இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book : 77


«مِنَ الفِطْرَةِ قَصُّ الشَّارِبِ»


Bukhari-5887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5887. (நபியவர்களுடைய துணைவியார் உம்மு ஸலமா (ரலி) அறிவித்தார்:

என் வீட்டில் (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) ‘அலி’ ஒருவர் இருந்த போது நபி (ஸல்) அவர்களும் அங்கு இருந்தார்கள். அப்போது அந்த அலி, என் சகோதரர் அப்துல்லாஹ் இப்னு அபீ உமய்யாவிடம் ‘அப்துல்லாஹ்வே! நாளை உங்களுக்கு தாயிஃப் நகரத்தின் மீது அல்லாஹ் வெற்றியளித்தால் ஃகைலானின் மகளை உனக்கு நான் காட்டுகிறேன்.

(அவளை மணந்துகொள்.) ஏனெனில், அவள் முன்பக்கம் நாலு (சதைமடிப்புகளுட)னும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்’ என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘(அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரவேண்டாம்’ என்றார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்:

அவளுடைய வயிற்றுச் சதையின் நான்கு மடிப்புகளின் காரணத்தால் ‘முன்பக்கம் நான்கு மடிப்புகளுடன் காட்சி தருகிறாள்’ என்று அந்த அலி சொன்னார். அந்த நான்கு மடிப்புகளின் ஓரங்கள் இரண்டு புறங்களிலும் சேர்ந்து பின்புறம் எட்டு ஓரங்களாக காட்சி தருவதால் ‘பின்பக்கம்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا وَفِي البَيْتِ مُخَنَّثٌ، فَقَالَ لِعَبْدِ اللَّهِ أَخِي أُمِّ سَلَمَةَ: يَا عَبْدَ اللَّهِ، إِنْ فَتَحَ اللَّهُ لَكُمْ غَدًا الطَّائِفَ، فَإِنِّي أَدُلُّكَ عَلَى بِنْتِ غَيْلاَنَ، فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ،

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَدْخُلَنَّ هَؤُلاَءِ عَلَيْكُنَّ»

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: ” تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ، يَعْنِي أَرْبَعَ عُكَنِ بَطْنِهَا، فَهِيَ تُقْبِلُ بِهِنَّ، وَقَوْلُهُ: وَتُدْبِرُ بِثَمَانٍ، يَعْنِي أَطْرَافَ هَذِهِ العُكَنِ الأَرْبَعِ، لِأَنَّهَا مُحِيطَةٌ بِالْجَنْبَيْنِ حَتَّى لَحِقَتْ،

وَإِنَّمَا قَالَ بِثَمَانٍ، وَلَمْ يَقُلْ بِثَمَانِيَةٍ، وَوَاحِدُ الأَطْرَافِ، وَهُوَ ذَكَرٌ، لِأَنَّهُ لَمْ يَقُلْ ثَمَانِيَةَ أَطْرَافٍ


Bukhari-5886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 62

பெண்களைப் போன்று நடந்துகொள்பவர்(களான அலி)களை வீட்டிலிருந்து வெளியேற்றுதல்.

5886. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

நபி (ஸல்) அவர்கள் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்ளும் ஆண்களையும், ஆண்களைப் போன்று ஒப்பனை செய்து கொள்ளும் பெண்களையும் சபித்தார்கள்.

மேலும், ‘அவர்க(ளில் அலிக)ளை உங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள். உமர் (ரலி) அவர்கள் இன்னாரை வெளியேற்றினார்கள்.95

Book : 77


لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُخَنَّثِينَ مِنَ الرِّجَالِ، وَالمُتَرَجِّلاَتِ مِنَ النِّسَاءِ،

وَقَالَ: «أَخْرِجُوهُمْ مِنْ بُيُوتِكُمْ» قَالَ: فَأَخْرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فُلاَنًا، وَأَخْرَجَ عُمَرُ فُلاَنًا


Bukhari-5885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 61

பெண்களைப் போல ஒப்பனை செய்து கொள்ளும் ஆண்களும், ஆண்களைப் போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்களும்.

5885. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் சபித்தார்கள்.

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 77


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بِالنِّسَاءِ، وَالمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بِالرِّجَالِ»


Bukhari-5884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 60

குழந்தைகளுக்கான நறுமண மாலைகள்.

5884. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (‘பனூ கைனுகா’ கடைவீதியில்) இறைத்தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் (ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச்) செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) ‘பொடிப் பையன் எங்கே?’ என்று மும்முறை கேட்டார்கள். பிறகு ‘அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களின் புதல்வர் ஹஸன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தம் கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹஸன் (ரலி) அவர்களும் இவ்வாறு தம் கையை விரித்த படி (நபி (ஸல்) அவர்களை அணைத்திட) அவர்களை நோக்கி வந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் ஹஸன் (ரலி) அவர்களை அணைத்துக்கொண்டு, ‘இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும், இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக!’ என்று பிரார்த்தனை செய்தார்கள்.

كُنْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سُوقٍ مِنْ أَسْوَاقِ المَدِينَةِ، فَانْصَرَفَ فَانْصَرَفْتُ، فَقَالَ: «أَيْنَ لُكَعُ – ثَلاَثًا – ادْعُ الحَسَنَ بْنَ عَلِيٍّ».

فَقَامَ الحَسَنُ بْنُ عَلِيٍّ يَمْشِي وَفِي عُنُقِهِ السِّخَابُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ هَكَذَا، فَقَالَ الحَسَنُ بِيَدِهِ هَكَذَا، فَالْتَزَمَهُ

فَقَالَ: «اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ، وَأَحِبَّ مَنْ يُحِبُّهُ»

وَقَالَ أَبُو هُرَيْرَةَ: فَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنَ الحَسَنِ بْنِ عَلِيٍّ، بَعْدَ مَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قَالَ


Next Page » « Previous Page