Category: புஹாரி

Bukhari

Bukhari-5585

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 தேனிலிருந்து தயாரிக்கப்படும் மதுவே பித்உ’ எனப்படும்.10 மஅன் பின் ஈசா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் மா-க் பின் அனஸ் (ரஹ்) அவர்களிடம், உலர்ந்த திராட்சையினால் தயாரிக்கப்படும் மது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், அது போதையூட்ட வில்லையென்றால் அதனால் குற்றமில்லை என்று பதிலளித்தார்கள். அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் அத் தராவர்தீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் (இந்த வகை மது குறித்து மதீனா அறிஞர்களிடம்) கேட்டோம். அதற்கு அவர்கள், அது போதை தராது என்றிருந்தால் அதனால் குற்றமில்லை என்று பதிலளித்தார்கள்.

5585. ஆயிஷா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் ‘பித்உ’ (தேனிலிருந்து தயாரிக்கப்படும் மது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘போதை தரும் பானம் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்’ என்று பதிலளித்தார்கள்.

Book : 74


سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ البِتْعِ، فَقَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


Bukhari-5584

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5584. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

அன்றைய தினம் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும், பேரீச்சம் பழத்திலிருந்தும் தயாரிக்கப்பட்டது தான் மதுபானமாகும். என்றிருந்த நிலையில் மது தடை செய்யப்பட்டது.

Book :74


«أَنَّ الخَمْرَ حُرِّمَتْ، وَالخَمْرُ يَوْمَئِذٍ البُسْرُ وَالتَّمْرُ»


Bukhari-5583

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5583. அனஸ்(ரலி) கூறினார்

நான் (எங்கள் உறவினர்) குடும்பத்தாரிடையே நின்று என் தந்தையின் சகோதரர்களுக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களால் ஆன மதுவை ஊற்றின் கொண்டிருந்தன். நான் அவர்களில் (வயதில்) சிறியவனாயிருந்தேன். அப்போது ‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’ என்று சொல்லப்பட்டது. உடனே (என் உறவினர்கள்) ‘அதைக் கவிழ்த்து (கொட்டி) விடு’ என்று கூறினார்கள். அவ்வாறே நான் கவிழ்த்து(க் கொட்டி)விட்டேன்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் இப்னு தர்கான் அல்பஸரீ(ரஹ்) கூறினார்:

நான் அனஸ்(ரலி) அவர்களிடம் ‘அவர்களின் மது எத்தயைது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘பேரீச்ச செங்காயிலிருந்தும் நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் தயாரிக்கப்பட்டதாகும்’ என்று கூறினார்கள். அப்போது அபூ பக்ர் இப்னு அனஸ்(ரஹ்), ‘(அதாவது) அதுவே அவர்களின் மதுபானமாக இருந்தது’ என்று கூறினார்கள். அனஸ்(ரலி) அதை மறுக்கவில்லை.

என் தோழர்களில் ஒருவர் கூறுகிறார்: அனஸ்(ரலி) ‘அதுதான் அவர்களின்

كُنْتُ قَائِمًا عَلَى الحَيِّ أَسْقِيهِمْ، عُمُومَتِي وَأَنَا أَصْغَرُهُمْ، الفَضِيخَ، فَقِيلَ: حُرِّمَتِ الخَمْرُ، فَقَالُوا: أَكْفِئْهَا، فَكَفَأْتُهَا ” قُلْتُ لِأَنَسٍ: مَا شَرَابُهُمْ؟ قَالَ: «رُطَبٌ وَبُسْرٌ» فَقَالَ أَبُو بَكْرِ بْنُ أَنَسٍ: وَكَانَتْ خَمْرَهُمْ، فَلَمْ يُنْكِرْ أَنَسٌ وَحَدَّثَنِي بَعْضُ أَصْحَابِي: أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ: «كَانَتْ خَمْرَهُمْ يَوْمَئِذٍ»


Bukhari-5582

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காயிலிருந்தும் பேரீச்சங் கனியிலிருந்தும் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மது விலக்கு வந்தது.

5582. அனஸ் இப்னு மாலிக்(ரலி) கூறினார்

அபூ உபைதா(ரலி), அபூ தல்ஹா(ரலி) மற்றும் உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருக்கு நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் தயாரித்த மதுவை நான் ஊற்றிக் கொடுத்துக்கொண்டிருந்தேன். அப்போது அவர்களிடம் ஒருவர் வந்து, ‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’ என்று கூறினார். உடனே அபூ தல்ஹா(ரலி), ‘எழுந்திரு, அனஸே! இவற்றைக் கொட்டிவிடு’ என்று கூறினார்கள். நான் அவற்றைக் கொட்டிவிட்டேன்.9

Book : 74


كُنْتُ أَسْقِي أَبَا عُبَيْدَةَ وَأَبَا طَلْحَةَ وَأُبَيَّ بْنَ كَعْبٍ، مِنْ فَضِيخِ زَهْوٍ وَتَمْرٍ، فَجَاءَهُمْ آتٍ فَقَالَ: إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ، فَقَالَ أَبُو طَلْحَةَ: قُمْ يَا أَنَسُ فَأَهْرِقْهَا، فَأَهْرَقْتُهَا


Bukhari-5581

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5581. இப்னு உமர்(ரலி) கூறினார்

(என் தந்தை) உமர்(ரலி) சொற்பொழிவு மேடையின் மீது நின்று (இறைவனைப் போற்றிப் புகழ்ந்து பின்) ‘ஐந்து வகைப் பொருட்களினால் மது தயாரிக்கப்பட்டுவந்த நிலையில் மதுவிலக்கு வந்தது. அவையாவன: திராட்சை, பேரீச்சம் பழம், தேன், கோதுமை, வாற்கோதுமை. ஆக, அறிவுக்குத் திரையிடுவதெல்லாம் மதுவேயாகும்’ என்று கூறினார்கள்.8

Book :74


قَامَ عُمَرُ عَلَى المِنْبَرِ، فَقَالَ: ” أَمَّا بَعْدُ، نَزَلَ تَحْرِيمُ الخَمْرِ وَهِيَ مِنْ خَمْسَةٍ: العِنَبِ وَالتَّمْرِ وَالعَسَلِ وَالحِنْطَةِ وَالشَّعِيرِ، وَالخَمْرُ مَا خَامَرَ العَقْلَ


Bukhari-5580

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5580. அனஸ்(ரலி) கூறினார்

மது எங்களுக்குத் தடை செய்யப்பட்டது. அது தடை செய்யப்பட்டபோது மதீனாவில் திராட்சையினால் தயாரிக்கப்படும் மது சிறிதளவே எங்களுக்குக் கிடைத்துவந்தது. எங்கள் மதுபானங்களில் பெரும்பலானவை நன்கு கனியாத நிறம் மாறிய பேரீச்சங் காய்களாலும் பேரீச்சங் கனிகளாலும் ஆனவையாகும்.

Book :74


«حُرِّمَتْ عَلَيْنَا الخَمْرُ حِينَ حُرِّمَتْ، وَمَا نَجِدُ – يَعْنِي بِالْمَدِينَةِ – خَمْرَ الأَعْنَابِ إِلَّا قَلِيلًا، وَعَامَّةُ خَمْرِنَا البُسْرُ وَالتَّمْرُ»


Bukhari-5579

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 திராட்சை முதலானவற்றிலிருந்து தயாரிக்கப் படும் மது.6

5579. இப்னு உமர்(ரலி) கூறினார்

(திராட்சையினால் தயாரிக்கப்படும்) மது மதீனாவில் சிறிதும் இல்லாதிருந்த நிலையில் அது தடைசெய்யப்பட்டது.7

இதை நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

Book : 74


«لَقَدْ حُرِّمَتِ الخَمْرُ وَمَا بِالْمَدِينَةِ مِنْهَا شَيْءٌ»


Bukhari-5578

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5578. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

விபசாரம் புரிகிறவன் விபசாரம் புரியும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி அதைச் செய்யமாட்டான். (அது அருந்துகிறவன்) மது அருந்தும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்தமாட்டான். திருடன் திருடும்போது இறைநம்பிக்யாளனாக இருந்தபடி திருட மாட்டான்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ(ரஹ்) கூறினார்.

அப்துல் மலிக் இப்னு அபீ பக்ர்(ரஹ்) இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து (தம் தந்தை) அபூ பக்ர் இப்னு அப்திர் ரஹ்மான்(ரஹ்) தமக்கு அறிவித்து வந்ததாகக் கூறினார்கள். மேலும், அப்துல் மலிக்(ரஹ்) ‘(என் தந்தை) அபூ பக்ர்(ரஹ்) இந்த (ஹதீஸில் இடம் பெற்றுள்ள மூன்று) விஷயங்களுடன் (நான்காவதாக), ‘(மக்களின்) மதிப்புமிக்க செல்வத்தை, மக்கள் தம் விழிகளை உயர்த்திப் பார்த்துக்கொண்டிருக்கக் கொள்ளைடியப்பவன் அதைக் கொள்ளையடிக்கும்போது இறைநம்பிக்கையாளனாக இருந்தபடி கொள்ளையடிக்க மாட்டான்’ என்பதையும்

«لاَ يَزْنِي الزَّانِي حِينَ يَزْنِي وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَشْرَبُ الخَمْرَ حِينَ يَشْرَبُهَا وَهُوَ مُؤْمِنٌ، وَلاَ يَسْرِقُ السَّارِقُ حِينَ يَسْرِقُ وَهُوَ مُؤْمِنٌ» قَالَ ابْنُ شِهَابٍ: وَأَخْبَرَنِي عَبْدُ المَلِكِ بْنُ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الحَارِثِ بْنِ هِشَامٍ: أَنَّ أَبَا بَكْرٍ، كَانَ يُحَدِّثُهُ عَنْ أَبِي هُرَيْرَةَ، ثُمَّ يَقُولُ: كَانَ أَبُو بَكْرٍ يُلْحِقُ مَعَهُنَّ: «وَلاَ يَنْتَهِبُ نُهْبَةً ذَاتَ شَرَفٍ، يَرْفَعُ النَّاسُ إِلَيْهِ أَبْصَارَهُمْ فِيهَا، حِينَ يَنْتَهِبُهَا وَهُوَ مُؤْمِنٌ»


Bukhari-5577

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5577. அனஸ்(ரலி) கூறினார்

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.4

Book :74


مِنْ أَشْرَاطِ السَّاعَةِ: أَنْ يَظْهَرَ الجَهْلُ، وَيَقِلَّ العِلْمُ، وَيَظْهَرَ الزِّنَا، وَتُشْرَبَ الخَمْرُ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ، حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً قَيِّمُهُنَّ رَجُلٌ وَاحِدٌ


Bukhari-5576

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5576. அபூ ஹுரைரா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஜெரூசலத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட (இஸ்ரா மற்றும் விண்ணுலகப் பயண) இரவில் அவர்களிடம் (ஒன்றில்) மதுவும் (மற்றொன்றில்) பாலும் இருந்த இரண்டு கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. அவர்கள் அவ்விரண்டையும் பார்த்துவிட்டுப் பால் கிண்ணத்தை எடுத்தார்கள். அப்போது (வானவர்) ஜிப்ரீல்(அலை) அவர்கள் ‘இயற்கை மரபில் உங்களைச் செலுத்திய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். நீங்கள் மதுக் கிண்ணத்தை எடுத்திருந்தால் உங்கள் சமுதாயமே வழி தவறிப் போயிருக்கும்’ என்று கூறினார்கள்.3

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :74


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ بِإِيلِيَاءَ بِقَدَحَيْنِ مِنْ خَمْرٍ وَلَبَنٍ، فَنَظَرَ إِلَيْهِمَا، ثُمَّ أَخَذَ اللَّبَنَ، فَقَالَ جِبْرِيلُ: الحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَاكَ لِلْفِطْرَةِ، وَلَوْ أَخَذْتَ الخَمْرَ غَوَتْ أُمَّتُكَ ” تَابَعَهُ مَعْمَرٌ، وَابْنُ الهَادِ، وَعُثْمَانُ بْنُ عُمَرَ، وَالزُّبَيْدِيُّ، عَنِ الزُّهْرِيِّ


Next Page » « Previous Page