Category: புஹாரி

Bukhari

Bukhari-5575

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


«مَنْ شَرِبَ الخَمْرَ فِي الدُّنْيَا، ثُمَّ لَمْ يَتُبْ مِنْهَا، حُرِمَهَا فِي الآخِرَةِ»


Bukhari-5574

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5574. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

குர்பானி இறைச்சிகளை மூன்று நாள்களுக்கு (மட்டும்) உண்ணுங்கள்.

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

(இந்த ஹதீஸின்படி செயல்படும் வகையில்) அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மினாவிலிருந்து புறப்படும்போது குர்பானிப் பிராணிகளின் இறைச்சி(யைத் தவிர்ப்பதற்)காக (ரொட்டியை) எண்ணெய் தொட்டு உண்டுவந்தார்கள்.

Book :73


«كُلُوا مِنَ الأَضَاحِيِّ ثَلاَثًا» وَكَانَ عَبْدُ اللَّهِ يَأْكُلُ بِالزَّيْتِ حِينَ يَنْفِرُ مِنْ مِنًى، مِنْ أَجْلِ لُحُومِ الهَدْيِ


Bukhari-5573

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5573. அபூ உபைத் (ரஹ்) (தொடர்ந்து) கூறினார்.

பிறகு நான் அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டேன். அவர்கள் குத்பா-உரை நிகழ்த்தும் முன்பே தொழுதார்கள். பிறகு மக்களுக்கு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மூன்று நாள்களுக்கு மேலாக உங்கள் குர்பானி இறைச்சிகளை நீங்கள் உண்பதற்குத் தடை விதித்துள்ளார்கள்’ என்று கூறினார்கள்.28

இதைப் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :73


ثُمَّ شَهِدْتُهُ مَعَ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، ثُمَّ  خَطَبَ النَّاسَ، فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَاكُمْ أَنْ تَأْكُلُوا لُحُومَ نُسُكِكُمْ فَوْقَ ثَلاَثٍ» وَعَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ أَبِي عُبَيْدٍ، نَحْوَهُ


Bukhari-5572

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5572. அபூ உபைத்(ரஹ்) (தொடர்ந்து) கூறினார்

பின்னர் நான் உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி) அவர்களுடன் ஒரு பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அன்று வெள்ளிக்கிழமையாக இருந்தது. அவர்கள் குத்பா – உரை நிகழ்த்தும் முன்பே தொழுதுவிட்டுப் பிறகு உரை (குத்பா) நிகழ்த்தினார்கள். அப்போது, ‘மக்களே! இது எத்தகைய நாளென்றால், இதில் உங்களுக்கு (ஈதுல் அள்ஹா, வெள்ளிக்கிழமை ஆகிய) இரண்டு பெருநாள்கள் ஒன்றுசேர்ந்து (ம்டைத்து) உள்ளன. எனவே, புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்களில் ஜுமுஆவை (வெள்ளிக் கிழமைத் தொழுகையை) எதிர்பார்த்துக் காத்திருக்க விரும்புகிறவர் எதிர்பார்த்துக் காத்திருக்கட்டும். (அவர்களில்) தம் இல்லத்துக்குத் திரும்பிச் செல்ல வேண்டுமென்று விரும்புகிறவருக்கு (அவ்வாறே திரும்பிச் சென்றுவிட) நான் அனுமதியளித்துவிட்டேன்’ என்று கூறினார்கள்.

Book :73


ثُمَّ شَهِدْتُ العِيدَ مَعَ عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَكَانَ ذَلِكَ يَوْمَ الجُمُعَةِ، فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، ثُمَّ خَطَبَ فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ هَذَا يَوْمٌ قَدِ اجْتَمَعَ لَكُمْ فِيهِ عِيدَانِ، فَمَنْ أَحَبَّ أَنْ يَنْتَظِرَ الجُمُعَةَ مِنْ أَهْلِ العَوَالِي فَلْيَنْتَظِرْ، وَمَنْ أَحَبَّ أَنْ يَرْجِعَ فَقَدْ أَذِنْتُ لَهُ»


Bukhari-5571

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5571. அபூ உபைத் ஸஅத் இப்னு உபைத்(ரஹ்) கூறினார்

நான் ஈதுல் அள்ஹா பெருநாள் தொழுகையில் உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்களுடன் கலந்து கொண்டேன். அவர்கள் குத்பா- உரை நிகழ்த்தினார்கள். அப்போது ‘மக்களே! இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்த இரண்டு பெருநாள்களிலும் நோன்பு நோற்கக் கூடாது என உங்களுக்குத் தடை விதித்துள்ளார்கள். இவ்விரண்டில் ஒன்று ‘உங்கள் நோன்பிலிருந்து நீங்கள் விடுபடும் நோன்புப் பெருநாள்’ ஆகும். மற்றொன்றோ ‘நீங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சியை உண்ணும் (ஈதுல் அள்ஹா) பெருநாள்’ ஆகும்’ என்று கூறினார்கள்.

Book :73


أَنَّهُ شَهِدَ العِيدَ يَوْمَ الأَضْحَى مَعَ عُمَرَ بْنِ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَصَلَّى قَبْلَ الخُطْبَةِ، ثُمَّ خَطَبَ النَّاسَ، فَقَالَ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ نَهَاكُمْ عَنْ صِيَامِ هَذَيْنِ العِيدَيْنِ، أَمَّا أَحَدُهُمَا فَيَوْمُ فِطْرِكُمْ مِنْ صِيَامِكُمْ، وَأَمَّا الآخَرُ فَيَوْمٌ تَأْكُلُونَ مِنْ نُسُكِكُمْ»


Bukhari-5570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5570. ஆயிஷா(ரலி) கூறினார்

நாங்கள் குர்பானி இறைச்சிக்கு உப்புத் தடவி அதை எடுத்துக்கொண்டு மதீனாவில் நபி(ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் ‘மூன்று நாள்களுக்கு மேல் (குர்பானி இறைச்சியை) உண்ணாதீர்கள்’ என்று கூறினார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது அதை உண்ணக் கூடாது எனக் கட்டாயப்படுத்துவதற்கல்ல் மாறாக, அவர்கள் (அவ்வாண்டு பஞ்சத்தில் பீடிக்கப்பட்டிருந்த ஏழைகளுக்கு வசதியுள்ளவர்கள்), அதிலிருந்து உணவளிக்க வேண்டுமென்று விரும்பினார்கள். (அவர்களின் எண்ணத்தை) அல்லாஹ்வே மிக அறிந்தவன்.27

Book :73


الضَّحِيَّةُ كُنَّا نُمَلِّحُ مِنْهُ، فَنَقْدَمُ بِهِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَقَالَ: «لاَ تَأْكُلُوا إِلَّا ثَلاَثَةَ أَيَّامٍ» وَلَيْسَتْ بِعَزِيمَةٍ، وَلَكِنْ أَرَادَ أَنْ يُطْعِمَ مِنْهُ، وَاللَّهُ أَعْلَمُ


Bukhari-5569

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5569. ஸலமா இப்னு அக்வஃ(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள், ‘உங்களில் குர்பானிப் பிராணியை அறுக்கிறவர் (அறுத்ததிலிருந்து) மூன்று நாள்களுக்குப் பின் (அதிலிருந்து எதுவும் அவரின் வீட்டில் எஞ்சியிருக்கும் நிலையில்) காலைப் பொழுதை அடைய வேண்டாம்’ என்று கூறினார்கள். அடுத்த ஆண்டு வந்தபோது, மக்கள் ‘இறைத்தூதர் அவர்களே! சென்ற ஆண்டு செய்ததைப் போன்றே (இந்த ஆண்டும்) நாங்கள் செய்ய வேண்டுமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் ‘நீங்களும் அதிலிருந்து உண்டு (மற்றவர்களுக்கும்) உண்ணக் கொடுங்கள். சேமித்து வைத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், கடந்த ஆண்டில் மக்களுக்கு (பஞ்சத்தால்) சிரமம் ஏற்பட்டிருந்தது. எனவே, நீங்கள் அந்தச் சிரமத்தைப் போக்க (அவர்களுக்கு) உதவ வேண்டும் என்று விரும்பினேன்’ என்று பதிலளித்தார்கள்.

Book :73


«مَنْ ضَحَّى مِنْكُمْ فَلاَ يُصْبِحَنَّ بَعْدَ ثَالِثَةٍ وَبَقِيَ فِي بَيْتِهِ مِنْهُ شَيْءٌ» فَلَمَّا كَانَ العَامُ المُقْبِلُ، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، نَفْعَلُ كَمَا فَعَلْنَا عَامَ المَاضِي؟ قَالَ: «كُلُوا وَأَطْعِمُوا وَادَّخِرُوا، فَإِنَّ ذَلِكَ العَامَ كَانَ بِالنَّاسِ جَهْدٌ، فَأَرَدْتُ أَنْ تُعِينُوا فِيهَا»


Bukhari-5568

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5568. அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) கூறினார்

நான் (ஒரு பயணத்தில் இருந்ததால் அப்போது நான்) ஊரில் இருக்கவில்லை. பிறகு (பயணத்திலிருந்து திரும்பி) வந்தேன். (சாப்பிடும்போது) என் முன்னே இறைச்சி வைக்கப்பட்டது. அதை வைத்தவர் ‘இது எங்கள் குர்பானிப் பிராணிகளின் இறைச்சி’ என்று கூறினார். நான், ‘இதை எடுத்து விடுங்கள். நான் இதை உண்ண மாட்டேன்’ என்று சொன்னேன். பிறகு எழுந்து புறப்பட்டு என் சகோதரர் அபூ கத்தாதா(ரலி) அவர்களிடம் சென்றேன். அபூ கத்தாதா(ரலி), அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்களின் தாய் வழிச் சகோதரராகவும் பத்ருப்போரில் பங்கெடுத்தவராகவும் இருந்தார்கள். நான் நடந்ததை அவர்களிடம் கூற, அவர்கள் ‘நீங்கள் பயணம் சென்ற பின் மறு உத்தரவு பிறந்தது’ என்று கூறினார்கள்.26

Book :73


أَنَّهُ كَانَ غَائِبًا فَقَدِمَ، فَقُدِّمَ إِلَيْهِ لَحْمٌ، قَالُوا: هَذَا مِنْ لَحْمِ ضَحَايَانَا، فَقَالَ: أَخِّرُوهُ لاَ أَذُوقُهُ “، قَالَ: ” ثُمَّ قُمْتُ فَخَرَجْتُ، حَتَّى آتِيَ أَخِي أَبَا قَتَادَةَ، وَكَانَ أَخَاهُ لِأُمِّهِ، وَكَانَ بَدْرِيًّا، فَذَكَرْتُ ذَلِكَ لَهُ، فَقَالَ: إِنَّهُ قَدْ حَدَثَ بَعْدَكَ أَمْرٌ


Bukhari-5567

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 குர்பானிப் பிராணிகளின் இறைச்சிகளில் உண்ணத் தக்கவையும், சேமிக்கத் தக்கவையும்.24

5567. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) கூறினார்

நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் தியாகப் பிராணிகளின் இறைச்சியை (குர்பானிக்கறியை) மதீனாவுக்குச் செல்லும்போது பயண உணவாக எடுத்துச் செல்வோம்.25

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான்(ரஹ்), (தம் அறிவிப்புகளில் ‘தியாகப் பிராணிகளின் இறைச்சி’ என்பதைக் குறிக்க மேற்கண்ட ஹதீஸின் மூலத்தில் இடம்பெற்றுள்ள ‘லுஹூமுல் அளாஹீ’ எனும் சொல்லுக்கு பதிலாக) ‘லுஹூமுல் ஹத்யி’ எனும் சொல்லை ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் கையாண்டுள்ளார்கள்.

Book : 73


«كُنَّا نَتَزَوَّدُ لُحُومَ الأَضَاحِيِّ عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى المَدِينَةِ» وَقَالَ غَيْرَ مَرَّةٍ: «لُحُومَ الهَدْيِ»


Bukhari-5566

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15 ஒருவர் தமது தியாகப் பிராணியை (ஹஜ்ஜில்) அறுப்பதற்காக அனுப்பி வைப்பதால் அவர் மீது எந்தத் தடையும் விதிக்கப்படாது.22

5566. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) கூறினார்

நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, ‘இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே! ஒருவர் தம் தியாகப் பிராணியை கஅபாவிற்கு (வேறொருவர் மூலம்) அனுப்பிவிட்டு (தம்) ஊரில் உட்கார்ந்துகொள்கிறார். தம் அந்த ஒட்டகத்திற்கு (அது தியாகப் பிராணி என்பதைக் காட்டும் அடையாளமாக) கழுத்தில் மாலை கட்டித் தொங்கவிடப்பட வேண்டுமென்றும் சொல்லி அனுப்புகிறார். அந்த நாளிலிருந்து மக்கள் (ஹாஜிகள்) இஹ்ராமிலிருந்து விடுபடும் நாள் வரை தாமும் இஹ்ராம் கட்டியவராகவே நடந்து கொள்கிறார் (என்றால் அவருக்கான சட்டம் என்ன?)’ என்று கேட்டேன்.

அப்போது ஆயிஷா(ரலி) (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை கேட்டேன். (தொடர்ந்து) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் தியாகப் பிராணிகளுடைய கழுத்து மாலைகளைக் கோத்துவந்தேன். நபி(ஸல்) அவர்கள் தங்களின் (இந்தத்) தியாகப் பிராணிகளை (ஹஜ் பருவத்தில்)

أَنَّهُ أَتَى عَائِشَةَ، فَقَالَ لَهَا: يَا أُمَّ المُؤْمِنِينَ، إِنَّ رَجُلًا يَبْعَثُ بِالهَدْيِ إِلَى الكَعْبَةِ وَيَجْلِسُ فِي المِصْرِ، فَيُوصِي أَنْ تُقَلَّدَ بَدَنَتُهُ، فَلاَ يَزَالُ مِنْ ذَلِكِ اليَوْمِ مُحْرِمًا حَتَّى يَحِلَّ النَّاسُ، قَالَ: فَسَمِعْتُ تَصْفِيقَهَا مِنْ وَرَاءِ الحِجَابِ، فَقَالَتْ: لَقَدْ «كُنْتُ أَفْتِلُ قَلاَئِدَ هَدْيِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيَبْعَثُ هَدْيَهُ إِلَى الكَعْبَةِ، فَمَا يَحْرُمُ عَلَيْهِ مِمَّا حَلَّ لِلرِّجَالِ مِنْ أَهْلِهِ، حَتَّى يَرْجِعَ النَّاسُ»


Next Page » « Previous Page