Category: புஹாரி

Bukhari

Bukhari-5565

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14 பிராணியை அறுக்கும் போது தக்பீர்’ (அல்லாஹ் அக்பர்-அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று) கூறுவது.

5565. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவ்விரண்டையும் தம் கரத்தால் அறுத்தார்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயர் (‘பிஸ்மில்லாஹ்’) கூறினார்கள். தக்பீரும் (‘அல்லாஹு அக்பர்’) கூறினார்கள். மேலும், தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்(துக் கொண்டு அறுத்)தார்கள்.21

Book : 73


«ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، ذَبَحَهُمَا بِيَدِهِ، وَسَمَّى وَكَبَّرَ، وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا»


Bukhari-5564

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13 அறுக்கப்படும் பிராணியின் பக்கவாட்டில் கால் வைத்(து மிதி)த்துக்கொள்வது.

5564. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் கொம்பு உள்ள இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்துவந்தார்கள். அப்போது தம் காலை அவற்றின் பக்கவாட்டில் வைத்துக்கொண்டு தம் கரத்தால் அவற்றை அறுப்பார்கள்.20

பகுதி 14

பிராணியை அறுக்கும்போது ‘தக்பீர்’ (‘அல்லாஹ் அக்பர் – அலலாஹ் மிகப் பெரியவன்’ என்று) கூறுவது.

Book : 73


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُضَحِّي بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ، وَيَضَعُ رِجْلَهُ عَلَى صَفْحَتِهِمَا وَيَذْبَحُهُمَا بِيَدِهِ»


Bukhari-5563

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5563. பராஉ(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஒரு (ஈதுல் அள்ஹா பெரு)நாளில் தொழுதுவிட்டு, ‘நம்முடைய தொழுகையைத் தொழுது (அதில்) நம்முடைய (தொழும் திசையான) கிப்லாவை முன்னோக்கியவர் எவரும் (தொழுகை முடித்துத்) திரும்பும் வரை (குர்பானிப் பிராணியை) அறுக்க வேண்டாம்’ என்று கூறினார்கள். உடனே அபூ புர்தா(ரலி) எழுந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் (தொழுகைக்க முன்பே அறுத்து) அதைச் செய்துவிட்டேனே?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘அது நீங்கள் அவசரப்பட்டு (அறுத்து)விட்ட பொருளாகும்’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் ‘என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான இரண்டு ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான வெள்ளாட்டுக் குட்டி ஒன்று உள்ளது. நான் அதை அறுக்கலாமா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சரி (நீங்கள் அறுக்கலாம்). பிறகு உங்களைத் தவிர வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஆமிர் ஷஅபீ (ரஹ்), ‘அதுவே (அவர் தொழுகைக்கு முன்பும், தொழுகைக்குப் பின்பும் கொடுத்த) அவரின் இரண்டு குர்பானிகளில் சிறந்ததாகும்’ எனக் கூறுகிறார்கள்.

صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ فَقَالَ: «مَنْ صَلَّى صَلاَتَنَا، وَاسْتَقْبَلَ قِبْلَتَنَا، فَلاَ يَذْبَحْ حَتَّى يَنْصَرِفَ» فَقَامَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَعَلْتُ. فَقَالَ: «هُوَ شَيْءٌ عَجَّلْتَهُ» قَالَ: فَإِنَّ عِنْدِي جَذَعَةً هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّتَيْنِ، آذْبَحُهَا؟ قَالَ: «نَعَمْ، ثُمَّ لاَ تَجْزِي عَنْ أَحَدٍ بَعْدَكَ» قَالَ عَامِرٌ: هِيَ خَيْرُ نَسِيكَتَيْهِ


Bukhari-5562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5562. ஜுன்தப் இப்னு சுஃப்யான் அல்பஜலீ(ரலி) கூறினார்

நான் நபி(ஸல்) அவர்களுடன் நஹ்ருடைய (துல்ஹஜ் 10 வது) நாளில் இருந்தேன். அப்போது அவர்கள், ‘(பெருநாள்) தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் அதனிடத்தில் (அதற்கு பதிலாக) வேறொன்றை (தொழுகைக்கப் பின்) அறுக்கட்டும். அறுக்காமல் இருப்பவர் (தொழுகை முடிந்தவுடன்) அறுக்கட்டும்’ என்று கூறினார்கள்.19

Book :73


شَهِدْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَلْيُعِدْ مَكَانَهَا أُخْرَى، وَمَنْ لَمْ يَذْبَحْ فَلْيَذْبَحْ»


Bukhari-5561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்துவிட்டவர் (தொழுகை முடிந்த பின்) மீண்டும் (வேறொன்றை) அறுக்கவேண்டும்.

5561. அனஸ்(ரலி) கூறினார்

(ஈதுல் அள்ஹா பெருநாளில்) நபி(ஸல்) அவர்கள், ‘(பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்துவிட்டவர் மறுபடியும் குர்பானி கொடுக்கட்டும்’ என்று கூறினார்கள். அப்போது ஒருவர், ‘இது, இறைச்சி விரும்பி உண்ணப்படும் நாள்’ என்று சொல்லிவிட்டு, தம் (வீட்டார் மற்றும்) அண்டை வீட்டாரின் தேவை பற்றி(யும் அதனாலேயே தாம் தொழுகைக்கு முன்பு அறுத்தது பற்றியும்) குறிப்பிட்டார். நபி(ஸல்) அவர்கள் அவர் சொன்ன காரணத்தை ஏற்றதைப் போல் இருந்தது. அந்த மனிதர், ‘என்னிடம் இரண்டு (இறைச்சி) ஆடுகளைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை இப்போது குர்பானி கொடுக்கலாமா?)’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்களும் அவருககு அனுமதியளித்தார்கள்.

அந்த அனுமதி மற்றவர்களுக்கும் பொருந்துமா? அல்லது இல்லையா என்று எனக்குத் தெரியாது. -பிறகு நபி(ஸல்) அவர்கள் இரண்டு செம்மறியாட்டுக் கடாக்கள்

«مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَلْيُعِدْ» فَقَالَ رَجُلٌ: هَذَا يَوْمٌ يُشْتَهَى فِيهِ اللَّحْمُ، – وَذَكَرَ هَنَةً مِنْ جِيرَانِهِ – فَكَأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَذَرَهُ، وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ شَاتَيْنِ؟ فَرَخَّصَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلاَ أَدْرِي بَلَغَتِ الرُّخْصَةُ أَمْ لاَ، ثُمَّ انْكَفَأَ إِلَى كَبْشَيْنِ، يَعْنِي فَذَبَحَهُمَا، ثُمَّ انْكَفَأَ النَّاسُ إِلَى غُنَيْمَةٍ فَذَبَحُوهَا


Bukhari-5560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

(பெருநாள்) தொழுகைக்குப் பிறகு (குர்பானிப் பிராணிகளை) அறுப்பது.

5560. பராஉ (ரலி) கூறினார்:

நபி (ஸல்) அவர்கள் (ஈதுல் அள்ஹா பெநாளில்) உரையாற்றியதை கேட்டேன். அவர்கள் (தம் உரையில்) ‘நாம் இன்றைய தினம் செய்யும் முதல் வேலை (பெருநாள் தொழுகை) தொழுதுவிட்டுத் திரும்பிச் சென்று குர்பானிப் பிராணிகளை அறுப்பதாகவே இருக்கவேண்டும். இதை செய்கிறவர் நம்முடைய வழியைப் பின்பற்றியவராவார். (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (பிராணியை) அறுக்கிறவர் தம் குடும்பத்தாருக்காக முன்கூட்டியே தயார் செய்த (சாதாரண) இறைச்சியாகவே அது அமையும்; அது (குர்பானி) வழிபாட்டில் எதிலும் சேராது’ என்று கூறினார்கள்.

அப்போது அபூபுர்தா(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! நான் தொழுவதற்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுத்து விட்டேன். என்னிடம் இரண்டு வயது பூர்த்தியான ஓர் ஆட்டைவிடச் சிறந்த ஒரு வயது பூர்த்தியான (வெள்ளாட்டுக் குட்டி) ஒன்று உள்ளது. (அதை நான் அறுக்கலாமா?)’ என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ‘முதலில் அறுத்ததற்கு

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ مِنْ يَوْمِنَا هَذَا أَنْ نُصَلِّيَ، ثُمَّ نَرْجِعَ فَنَنْحَرَ، فَمَنْ فَعَلَ هَذَا فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ نَحَرَ فَإِنَّمَا هُوَ لَحْمٌ يُقَدِّمُهُ لِأَهْلِهِ، لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ» فَقَالَ أَبُو بُرْدَةَ: يَا رَسُولَ اللَّهِ، ذَبَحْتُ قَبْلَ أَنْ أُصَلِّيَ، وَعِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ؟ فَقَالَ: «اجْعَلْهَا مَكَانَهَا، وَلَنْ تَجْزِيَ – أَوْ تُوفِيَ – عَنْ أَحَدٍ بَعْدَكَ»


Bukhari-5559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10 பிறருடைய குர்பானிப் பிராணியை அறுப்பது. இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு அவர்களின் ஒட்டகத்தை அறுப்பதற்கு ஒருவர் உதவினார். அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் தம் புதல்வியருக்கு அவர்கள் கரங்களாலேயே அறுக்கும்படி கட்டளையிட் டார்கள்.

5559. ஆயிஷா(ரலி) கூறினார்

(நபி(ஸல்) அவர்களுடன் நான் ஹஜ்ஜுக்குச் சென்றிருந்தபோது) ‘சரிஃப்’ எனுமிடத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அப்போது அழுதுகொண்டிருந்தேன். அவர்கள், ‘உனக்கென்ன ஆயிற்று? உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம்’ என்றேன். அவர்கள், இ(ந்த மாதவிடாயான)து, பெண்களுக்கு அல்லாஹ் எழுதிவிட்ட விதியாகும். ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் வழிபாடுகள் அனைத்தையும் நீயும் நிறைவேற்று. ஆனால், இறையில்லத்தை (புனித கஅபாவை)ச் சுற்றி வராதே’ என்று கூறினார்கள். மேலும், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் துணைவியருக்காக மாடுகளை அறுத்துக் குர்பானி கொடுத்தார்கள்.16

Book : 73


دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَرِفَ وَأَنَا أَبْكِي، فَقَالَ: «مَا لَكِ أَنَفِسْتِ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «هَذَا  أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، اقْضِي مَا يَقْضِي الحَاجُّ غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ» وَضَحَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ


Bukhari-5558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 குர்பானிப் பிராணிகளைத் தமது கையால் அறுப்பது.14

5558. அனஸ்(ரலி) கூறினார்

நபி(ஸல்) அவர்கள் இரண்டு கறுப்பு வெள்ளை செம்மறியாட்டுக் கடாக்களைக் குர்பானி கொடுத்தார்கள். அவர்கள் தங்களின் பாதத்தை அவற்றின் பக்கவாட்டின் மீது வைத்துக்கொண்டு அல்லாஹ்வின்பெயர் கூறி, ‘தக்பீர்’ (அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன் என்று) சொல்லி அவற்றைத் தம் கையால் அறுத்ததை பார்த்தேன்.15

Book : 73


«ضَحَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ، فَرَأَيْتُهُ وَاضِعًا قَدَمَهُ عَلَى صِفَاحِهِمَا، يُسَمِّي وَيُكَبِّرُ، فَذَبَحَهُمَا بِيَدِهِ»


Bukhari-5557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5557. பராஉ(ரலி) கூறினார்

அபூ புர்தா(ரலி) (பெருநாள்) தொழுகைக்கு முன்பே (குர்பானி பிராணியை) அறுத்துவிட்டார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள் அவரிடம் ‘அதற்கு பதிலாக வேறொன்றை அறுப்பீராக!’ என்று கூறினார்கள். அதற்கு அபூ புர்தா(ரலி), ‘என்னிடம் ஒரு வயதுடைய வெள்ளாடு ஒன்றைத் தவிர வேறொன்றுமில்லை; (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)’ என்று வினவினார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா(ரஹ்) கூறினார்: ‘அது இரண்டு வயது பூர்த்தியான ஆட்டைவிடச் சிறந்தது’ என்று அபூ புர்தா(ரலி) சொன்னதாக (எனக்கு அறிவிக்கப்பட்டது என்று) எண்ணுகிறேன். நபி(ஸல்) அவர்கள், ‘இதையே அதற்கு பதிலாக அறுத்துக்கொள்ளங்கள். உங்களுக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது’ என்று கூறினார்கள்.

இது பற்றிய அனஸ்(ரலி) அவர்களின் அறிவிப்பில், ‘என்னிடம் ஒரு வயதுடைய பெட்டை வெள்ளாட்டைத் தவிர வேறொன்றுமில்லை’ என்று அபூ புர்தா(ரலி) கூறினார் என உள்ளது.

Book :73


ذَبَحَ أَبُو بُرْدَةَ قَبْلَ الصَّلاَةِ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْدِلْهَا» قَالَ: لَيْسَ عِنْدِي إِلَّا جَذَعَةٌ – قَالَ شُعْبَةُ: وَأَحْسِبُهُ قَالَ: هِيَ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ – قَالَ: «اجْعَلْهَا مَكَانَهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ» وَقَالَ حَاتِمُ بْنُ وَرْدَانَ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «عَنَاقٌ جَذَعَةٌ»


Bukhari-5556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 8

ஒரு வயதுடைய வெள்ளாட்டைக் குர்பானி கொடுப்பீராக! உமக்குப் பிறகு வேறெவருக்கும் அது செல்லாது எனும் நபிமொழி.

5556. பராஉ இப்னு ஆஸிப் (ரலி) கூறினார்:

அபூபுர்தா என்றழைக்கப்பட்டு வந்த என் தாய் மாமன் ஒருவர் (பெருநாள்) தொழுகைக்கு முன்பே குர்பானி கொடுத்தார். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரிடம், ‘உம்முடைய ஆடு இறைச்சி ஆடுதான். (குர்பானி ஆடன்று)’ என்று கூறினார்கள். அபூபுர்தா (ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! என்னிடம் வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு  வயதுடைய வெள்ளாடு ஒன்று உள்ளது. (அதை நான் குர்பானி கொடுக்கலாமா?)’ என்று வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘அதை அறுத்து (குர்பானி) கொடுங்கள். (ஆனால்,) இது மற்றவருக்குப் பொருந்தாது’ என்று சொல்லிவிட்டு, ‘தொழுகைக்கு முன்பே (குர்பானிப் பிராணியை) அறுப்பவர், தமக்காகவே (அதை) அறுக்கிறார். தொழுகைக்குப் பிறகு (அதை) அறுப்பவரின் வழிபாடு முழுமையடைந்துவிட்டது. அவர் முஸ்லிம்களின் வழிமுறையைப் பின்பற்றிவிட்டார்’ என்று கூறினார்கள்.

இதே

ضَحَّى خَالٌ لِي، يُقَالُ لَهُ أَبُو بُرْدَةَ، قَبْلَ الصَّلاَةِ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «شَاتُكَ شَاةُ لَحْمٍ» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ عِنْدِي دَاجِنًا جَذَعَةً مِنَ المَعَزِ، قَالَ: «اذْبَحْهَا، وَلَنْ تَصْلُحَ لِغَيْرِكَ» ثُمَّ قَالَ: «مَنْ ذَبَحَ قَبْلَ الصَّلاَةِ فَإِنَّمَا يَذْبَحُ لِنَفْسِهِ، وَمَنْ ذَبَحَ بَعْدَ الصَّلاَةِ فَقَدْ تَمَّ نُسُكُهُ وَأَصَابَ سُنَّةَ المُسْلِمِينَ»

تَابَعَهُ عُبَيْدَةُ، عَنِ الشَّعْبِيِّ، وَإِبْرَاهِيمَ، وَتَابَعَهُ وَكِيعٌ، عَنْ حُرَيْثٍ، عَنِ الشَّعْبِيِّ،

وَقَالَ عَاصِمٌ، وَدَاوُدُ، عَنِ الشَّعْبِيِّ: «عِنْدِي عَنَاقُ لَبَنٍ» وَقَالَ زُبَيْدٌ، وَفِرَاسٌ، عَنِ الشَّعْبِيِّ: «عِنْدِي جَذَعَةٌ» وَقَالَ أَبُو الأَحْوَصِ: حَدَّثَنَا مَنْصُورٌ: «عَنَاقٌ جَذَعَةٌ» وَقَالَ ابْنُ عَوْنٍ: «عَنَاقٌ جَذَعٌ، عَنَاقُ لَبَنٍ»


Next Page » « Previous Page