Category: புஹாரி

Bukhari

Bukhari-5483

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7 வேட்டை நாய் (தான் வேட்டையாடிய பிராணியைத்) தின்றுவிட்டால் (அப் பிராணியை உண்பது கூடாது). உயர்ந்தோனாகிய அல்லாஹ் கூறுகின்றான்: (நபியே!) தமக்கு அனுமதிக்கப்பட்ட உண் பொருள் எது என அவர்கள் உம்மிடம் வினவு கின்றார்கள். நீங்கள் கூறுங்கள்: தூய்மையான பொருட்கள் (அனைத்தும்) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அல்லாஹ் உங்களுக்குக் கற்றுக் கொடுத்ததிலிருந்து நீங்கள் கற்பித்துப் பயிற்சியளித்த (வேட்டை விலங்கு முதலான)வை எதை உங்களுக்காகக் கவ்விக் கொண்டுவந்தனவோ அதையும் நீங்கள் உண்ணுங்கள். அவற்றின் மீது அல்லாஹ்வின் பெயர் கூறுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்துகொள்ளுங்கள். நிச்சயம் அல்லாஹ் கணக்குக் கேட்பதில் மிக விரைவானவன் (5:4). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) ஜவாரிஹ்’ எனும் சொல்லுக்கு வேட்டையாடி உழைக்கும் நாய்கள்’என்று பொருள். (இதன் வினைச் சொல்லும், 45:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ளதுமான) இஜ்தரஹூ’எனும் சொல்லுக்கு செய்தவர்கள்’ என்று பொருள் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வேட்டைப் பிராணியை வேட்டை நாய் தின்றுவிட்டால் அது அதைக் கெடுத்து விட்டது (என்று பொருள்). அது தனக்காகவே அதைப் பிடித்து வைத்துக் கொண்டுள்ளது. (எனவே, அதை உண்ணலாகாது.) உங்களுக்கு அல்லாஹ் கற்றுக்கொடுத்ததிலிருந்து

سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ: إِنَّا قَوْمٌ نَصِيدُ بِهَذِهِ الكِلاَبِ؟ فَقَالَ: «إِذَا أَرْسَلْتَ كِلاَبَكَ المُعَلَّمَةَ، وَذَكَرْتَ اسْمَ اللَّهِ، فَكُلْ مِمَّا أَمْسَكْنَ عَلَيْكُمْ وَإِنْ قَتَلْنَ، إِلَّا أَنْ يَأْكُلَ الكَلْبُ، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ إِنَّمَا أَمْسَكَهُ عَلَى نَفْسِهِ، وَإِنْ خَالَطَهَا كِلاَبٌ مِنْ غَيْرِهَا فَلاَ تَأْكُلْ»


Bukhari-5482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5482. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் அளவிற்குக் குறைந்துவிடும்; கால்நடையைப் பாதுகாக்கும் நாயையும் வேட்டையாடும் நாயையும் தவிர!

என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book :72


«مَنِ اقْتَنَى كَلْبًا، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ ضَارِيًا، نَقَصَ مِنْ عَمَلِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»


Bukhari-5480 & 5481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 வேட்டையாடுவதற்காகவோ கால்நடை களைப் பாதுகாப்பதற்காகவோ அல்லாமல் (தக்க காரணமின்றி) நாய் வைத்திருப்பது.

5480. & 5481. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்து விடும்.8

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நாய் வைத்திருப்பவரின் (நற்செயல்களுக்குரிய) நன்மையிலிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு கீராத்கள் குறைந்துவிடும்; பிராணிகளை வேட்டையாடும் நாயையும், கால்நடைகளைப் பாதுகாக்கும் நாயையும் தவிர.

என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

Book : 72


«مَنِ اقْتَنَى كَلْبًا، لَيْسَ بِكَلْبِ مَاشِيَةٍ، أَوْ ضَارِيَةٍ، نَقَصَ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطَانِ»


Bukhari-5479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 5

சிறு கற்களாலும், களிமண் குண்டு, அல்லது ஈயக் குண்டாலும் வேட்டையாடுவது.

5479. அப்துல்லாஹ் இப்னு முகஃப்பல் (ரலி) கூறினார்:

நான் சிறு கற்களை எறிந்து (வேட்டையாடிக்) கொண்டிருந்த ஒரு மனிதரைக் கண்டேன். அவரிடம், ‘சிறு கற்களை எறியாதே. ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சிறு கற்களை எறிய வேண்டாமென்று தடுத்தார்கள்’ அல்லது ‘சிறுகற்களை எறிவதை வெறுத்து வந்தார்கள்’. மேலும், நபி அவர்கள் ‘அவ்வாறு சிறு கற்களை எறிவதால் எந்தப் பிராணியும் வேட்டையாடப்படாது; எந்த எதிரியும் வீழ்த்தப்படமாட்டான். மாறாக, அது பல்லை உடைக்கலாம்; கண்ணைப் பறித்து விடலாம். (அவ்வளவுதான் அதனால் முடியும்)’ என்று கூறினார்கள்’ எனக் கூறினேன்.

அதன் பிறகு ஒரு முறை அதே மனிதர் சிறு கற்களை எறிந்துகொண்டிருப்பதைக் கண்டேன். அவரிடம், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘சிறு கற்கள் எறிவதைத் தடை செய்தார்கள்’ அல்லது ‘சிறு கற்கள் எறிவதை வெறுத்தார்கள்’ என்று நான் உனக்குச் சொல்கிறேன். ஆனால், நீயோ (அதை அலட்சியம் செய்துவிட்டு)

أَنَّهُ رَأَى رَجُلًا يَخْذِفُ، فَقَالَ لَهُ: لاَ تَخْذِفْ، فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الخَذْفِ، أَوْ كَانَ يَكْرَهُ الخَذْفَ وَقَالَ: «إِنَّهُ لاَ يُصَادُ بِهِ صَيْدٌ وَلاَ يُنْكَى بِهِ عَدُوٌّ، وَلَكِنَّهَا قَدْ تَكْسِرُ السِّنَّ، وَتَفْقَأُ العَيْنَ» ثُمَّ رَآهُ بَعْدَ ذَلِكَ يَخْذِفُ، فَقَالَ لَهُ: أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنِ الخَذْفِ أَوْ كَرِهَ الخَذْفَ، وَأَنْتَ تَخْذِفُ لاَ أُكَلِّمُكَ كَذَا وَكَذَا


Bukhari-5478

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 வில்லால் வேட்டையாடுவது ஹஸன் அல்பஸரீ (ரஹ்) மற்றும் இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோர் கூறியதாவது: (அம்பு போன்ற ஆயுதத்தால்) ஒரு வேட்டைப் பிராணியைத் தாக்கியதால் அதன் கை, அல்லது கால் துண்டாகி விழுந்துவிட்டால் துண்டான உறுப்பைச் சாப்பிடாதீர்கள்! உட-ன் மற்ற பகுதிகளைச் சாப்பிடுங்கள். இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள், நீங்கள் வேட்டைப் பிராணியின் கழுத்தையோ அதன் நடுப் பகுதியையோ தாக்கியிருந்தால் அதை உண்ணுங்கள் என்றார்கள். ஸைத் பின் வஹ்ப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதருக்கு (அவர் வேட்டையாடச் சென்ற காட்டு)க் கழுதை ஒன்று அடங்க மறுத்தது. ஆகவே, அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்) அவர்களால் இயன்ற முறையில் அதைத் தாக்கும்படி கட்டளையிட்டு, அதிலிருந்து (துண்டாகி) விழுவதை விட்டுவிடுங்கள். (மற்றதை) உண்ணுங்கள் என்று சொன்னார்கள்.

5478. அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) கூறினார்

நான், ‘அல்லாஹ்வின் நபியே! நாங்கள் வேதம் வழங்கப்பெற்ற ஒரு சமுதாயத்தாரின் நாட்டில் இருக்கிறோம். அவர்களின் பாத்திரத்தில்

قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، إِنَّا بِأَرْضِ قَوْمٍ مِنْ أَهْلِ الكِتَابِ، أَفَنَأْكُلُ فِي آنِيَتِهِمْ؟ وَبِأَرْضِ صَيْدٍ، أَصِيدُ بِقَوْسِي، وَبِكَلْبِي الَّذِي لَيْسَ بِمُعَلَّمٍ وَبِكَلْبِي المُعَلَّمِ، فَمَا يَصْلُحُ لِي؟ قَالَ: «أَمَّا مَا ذَكَرْتَ مِنْ أَهْلِ الكِتَابِ، فَإِنْ وَجَدْتُمْ غَيْرَهَا فَلاَ تَأْكُلُوا فِيهَا، وَإِنْ لَمْ تَجِدُوا فَاغْسِلُوهَا وَكُلُوا فِيهَا، وَمَا صِدْتَ بِقَوْسِكَ فَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ، وَمَا صِدْتَ بِكَلْبِكَ المُعَلَّمِ، فَذَكَرْتَ اسْمَ اللَّهِ فَكُلْ، وَمَا صِدْتَ بِكَلْبِكَ غَيْرِ مُعَلَّمٍ فَأَدْرَكْتَ ذَكَاتَهُ فَكُلْ»


Bukhari-5477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 இறகு இல்லாத அம்பின் பக்கவாட்டினால் வேட்டையாடப்பட்ட பிராணி.

5477. அதீ இப்னு ஹாத்திம்(ரலி) கூறினார்

நான், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை (வேட்டைக்காக) அனுப்புகிறோம். (அவை வேட்டையாடியக் கொண்டு வருகிறவற்றை நாங்கள் உண்ணலாமா?)’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அவை உங்களுக்காக (வேட்டையாடிக்) கவ்விப் பிடித்தவற்றை நீங்கள் சாப்பிடுங்கள்’ என்று பதிலளித்தார்கள்.

நான், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலுமா?’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘(வேட்டைப் பிராணியை) அவை கொன்றுவிட்டாலும் சரியே’ என்று பதிலளித்தார்கள்.

நான், ‘நாங்கள் இறகு இல்லாத அம்பை (வேட்டைப் பிராணிகளின் மீது) எய்கிறோமே! (அதன் சட்டம் என்ன?)’ என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அது (தன்னுடைய முனையால்) குத்தி (வீழ்த்தி)யதைச் சாப்பிடுங்கள். அந்த அம்பின் பக்கவாட்டுப் பகுதியால் தாக்கப்பட்டதைச் சாப்பிடாதீர்கள்’ என்ற கூறினார்கள்.

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا نُرْسِلُ الكِلاَبَ المُعَلَّمَةَ؟ قَالَ: «كُلْ مَا أَمْسَكْنَ عَلَيْكَ» قُلْتُ: وَإِنْ قَتَلْنَ؟ قَالَ: «وَإِنْ قَتَلْنَ» قُلْتُ: وَإِنَّا نَرْمِي بِالْمِعْرَاضِ؟ قَالَ: «كُلْ مَا خَزَقَ، وَمَا أَصَابَ بِعَرْضِهِ فَلاَ تَأْكُلْ»