5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ், ‘ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்’ என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
Book :69
قَالَ اللَّهُ: أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ
Bukhari
5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
அல்லாஹ், ‘ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்’ என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
Book :69
قَالَ اللَّهُ: أَنْفِقْ يَا ابْنَ آدَمَ أُنْفِقْ عَلَيْكَ
பாடம் : 1 உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: நபியே! (மக்களிடம் கூறுக:) நீங்கள் பெண்களுக்கு மணவிலக்கு அளிப்பீர் களானால், அவர்களுடைய இத்தா’ விற்கேற்ற நேரத்தில் மணவிலக்கு அளித்து, இத்தா’வைக் கணக்கிட்டு வாருங்கள் (65:1). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள அஹ்ஸூ’ எனும் சொல்லின் வினைச் சொல்லான) அஹ்ஸய்னாஹு’எனும் சொல்லுக்கு அதை நாம் கணக்கிட்டு மனனமிட்டோம்’ என்று பொருள். ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளாமல் (மாதவிடாய் போன்ற வற்றிலிருந்து) அவள் தூய்மையானவளாய் இருக்கும் சமயத்தில் இரு சாட்சிகளின் முன்னிலையில் அளிக்கின்ற மணவிலக்கு (நபிவழியில் அமைந்த) தலாக்குஸ் ஸுன்னா’ ஆகும்.2
5351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்:
நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், ‘இதை நீங்கள் நபி(ஸல்)
فَقُلْتُ: عَنِ النَّبِيِّ؟ فَقَالَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَنْفَقَ المُسْلِمُ نَفَقَةً عَلَى أَهْلِهِ، وَهُوَ يَحْتَسِبُهَا، كَانَتْ لَهُ صَدَقَةً»
பாடம் : 53 மணக்கொடை (மஹ்ர்) நிர்ணயிக்கப்படாத பெண்ணுக்கு உதவித் தொகை (முத்ஆ) வழங்குதல். ஏனெனில் உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்: பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மணக்கொடையை நிர்ணயிப்பதற்கு முன் தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. (இந்நிலையில்) வசதியுள்ளவர் தன் தகுதிக்கேற்றவாறும், ஏழை தன் தகுதிக்கேற்றவாறும் அவர்களுக்குப் பயனுள்ள ஏதேனும் பொருட்களை (உதவித் தொகையை) நல்ல முறையில் வழங்கிட வேண்டும். (இது) நல்லோர் மீது கடமை யாகும். (2:236, 237) மேலும், மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்களுக்கு (கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு விளக்கிக் காட்டு கின்றான். (2:241, 242) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணை, அவளுடைய கணவர் தலாக் சொன்ன போது உதவித் தொகை (முத்ஆ) வழங்கிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.106
5350. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்
சாப அழைப்புப் பிரமாணம் (லிஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْمُتَلاَعِنَيْنِ: «حِسَابُكُمَا عَلَى اللَّهِ، أَحَدُكُمَا كَاذِبٌ، لاَ سَبِيلَ لَكَ عَلَيْهَا» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَالِي؟ قَالَ: «لاَ مَالَ لَكَ، إِنْ كُنْتَ صَدَقْتَ عَلَيْهَا، فَهُوَ بِمَا اسْتَحْلَلْتَ مِنْ فَرْجِهَا، وَإِنْ كُنْتَ كَذَبْتَ عَلَيْهَا، فَذَاكَ أَبْعَدُ وَأَبْعَدُ لَكَ مِنْهَا»
பாடம் : 52 தாம்பத்திய உறவு கொள்ளப்பட்ட பெண்ணுக்குரிய மணக்கொடை, தாம்பத்திய உறவு தீர்மானிக்கப்படும் முறை, தாம்பத்திய உறவுக்கு முன் மணவிலக்கு அளித்தல் (ஆகியன குறித்த சட்டம்).104
5349. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்
நான் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் ‘ஒருவர் தம் மனைவியின் மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன?)’ என்று கேட்டேன்.
அதற்கு அவர்கள் கூறினார்கள்:
அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை நபி(ஸல்) அவர்கள் பிரித்து வைத்துவிட்டு, ‘உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?’ என்று கேட்க, (தம்பதியர்களான) அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகும் நபி(ஸல்) அவர்கள் ‘உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். எனவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா?’ என்று கேட்க, அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தனர். قُلْتُ لِابْنِ عُمَرَ: رَجُلٌ قَذَفَ امْرَأَتَهُ؟ فَقَالَ: فَرَّقَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَخَوَيْ بَنِي العَجْلاَنِ، وَقَالَ: «اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ؟» فَأَبَيَا، فَقَالَ: «اللَّهُ يَعْلَمُ أَنَّ أَحَدَكُمَا كَاذِبٌ، فَهَلْ مِنْكُمَا تَائِبٌ؟» فَأَبَيَا، فَفَرَّقَ بَيْنَهُمَا – قَالَ أَيُّوبُ: فَقَالَ لِي عَمْرُو بْنُ دِينَارٍ: فِي الحَدِيثِ شَيْءٌ لاَ أَرَاكَ تُحَدِّثُهُ قَالَ – قَالَ الرَّجُلُ: مَالِي؟ قَالَ: «لاَ مَالَ لَكَ، إِنْ كُنْتَ صَادِقًا فَقَدْ دَخَلْتَ بِهَا، وَإِنْ كُنْتَ كَاذِبًا فَهُوَ أَبْعَدُ مِنْكَ»
5348. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
அடிமைப் பெண்கள் (விபசாரம் போன்ற தகாத வழிகளில்) பொருளீட்டுவதை நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.
Book :68
«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كَسْبِ الإِمَاءِ»
5347. அபூ ஜுஹைஃபா(ரலி) அறிவித்தார்
பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103
Book :68
«لَعَنَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَاشِمَةَ وَالمُسْتَوْشِمَةَ، وَآكِلَ الرِّبَا وَمُوكِلَهُ، وَنَهَى عَنْ ثَمَنِ الكَلْبِ، وَكَسْبِ البَغِيِّ، وَلَعَنَ المُصَوِّرِينَ»
பாடம் : 51 விலைமாதின் வருமானமும், செல்லாத திருமணமும்.101 ஒருவர் தமக்கு மணமுடிக்கத் தடை செய்யப்பட்டுள்ள பெண்ணைத் தம்மை அறியாமல் மணந்து கொண்டால் அவர்கள் இருவரும் பிரித்துவைக்கப்படுவர். மண ஒப்பந்தத்தின் போது முடிவு செய்யப்பட்ட மணக்கொடை (மஹ்ர்) அவளுக்குக் கிடைக்கும்; வேறெதுவும் கிடைக்காது என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். பிறகு (அக்கருத்திலிருந்து மாறி) அவளுக்கு (நிகரான பெண்களுக்குத் தரப் படும்) நிகர மணக்கொடை (மஹ்ருல் மிஸ்ல்) உண்டென்று சொன்னார்கள்.
5346. அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்
நாய் விற்ற காசு, சோதிடனின் தட்சணை, விபசாரியின் வருமானம் ஆகியவற்றுக்கு நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். 102
Book : 68
«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ثَمَنِ الكَلْبِ، وَحُلْوَانِ الكَاهِنِ، وَمَهْرِ البَغِيِّ»
5345. ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) அறிவித்தார்
தம் தந்தை (அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் இறப்புச் செய்தி வந்தபோது (அன்னை) உம்மு ஹபீபா(ரலி) நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரண்டு கைகளிலும் தடவினார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இலை. ஆயினும், நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்த ஒருவருக்காக மூன்று நாள்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாள்கள் தவிர’ என்று சொல்லக் கேட்டுள்ளேன். 100
Book :68
لَمَّا جَاءَهَا نَعِيُّ أَبِيهَا، دَعَتْ بِطِيبٍ فَمَسَحَتْ ذِرَاعَيْهَا، وَقَالَتْ: مَا لِي بِالطِّيبِ مِنْ حَاجَةٍ، لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ يَحِلُّ لِامْرَأَةٍ تُؤْمِنُ بِاللَّهِ وَاليَوْمِ الآخِرِ تُحِدُّ عَلَى مَيِّتٍ فَوْقَ ثَلاَثٍ، إِلَّا عَلَى زَوْجٍ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا»
பாடம் : 50 உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்துபோயிருந்தால், அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். தங்கள் தவணையின் இறுதியை அவர்கள் எட்டி விட்டால், தங்கள் விஷயத்தில் முறையோடு அவர்கள் செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (தலையிடாமல் இருப்ப தால்) உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்).
5344. முஜாஹித்(ரஹ்) அறிவித்தார்
‘உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்து போயிருந்தால், அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாள்கள் தங்களின் விஷயத்தில் காத்திருப்பார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 02:234 வது) வசனத்தின் கருத்தாவது:
(கணவன் இறந்த) அந்தப் பெண் (நான்கு மாதம் பத்து நாள்கள் காத்திருத்தல் எனும்) இந்த ‘இத்தா’வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாயமாக இருந்தது. இந்நிலையில் ‘உங்களில் மனைவியரைவிட்டு இற(க்கும் தருவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டிலிருந்து வெளியேற்றிவிடாமல் ஓராண்டு {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا} [البقرة: 234] قَالَ: ” كَانَتْ هَذِهِ العِدَّةُ تَعْتَدُّ عِنْدَ أَهْلِ زَوْجِهَا وَاجِبًا، فَأَنْزَلَ اللَّهُ: {وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ} قَالَ: ” جَعَلَ اللَّهُ لَهَا تَمَامَ السَّنَةِ سَبْعَةَ أَشْهُرٍ وَعِشْرِينَ لَيْلَةً وَصِيَّةً، إِنْ شَاءَتْ سَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ، وَهُوَ قَوْلُ اللَّهِ تَعَالَى: {غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ} [البقرة: 240] فَالعِدَّةُ كَمَا هِيَ وَاجِبٌ عَلَيْهَا ” زَعَمَ ذَلِكَ عَنْ مُجَاهِدٍ وَقَالَ عَطَاءٌ: قَالَ ابْنُ عَبَّاسٍ: ” نَسَخَتْ هَذِهِ الآيَةُ عِدَّتَهَا عِنْدَ أَهْلِهَا، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَقَوْلُ اللَّهِ تَعَالَى: {غَيْرَ إِخْرَاجٍ} [البقرة: 240] وَقَالَ عَطَاءٌ: ” إِنْ شَاءَتْ اعْتَدَّتْ عِنْدَ أَهْلِهَا، وَسَكَنَتْ فِي وَصِيَّتِهَا، وَإِنْ شَاءَتْ خَرَجَتْ لِقَوْلِ اللَّهِ: {فَلاَ جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ} [البقرة: 234] قَالَ عَطَاءٌ: «ثُمَّ جَاءَ المِيرَاثُ فَنَسَخَ السُّكْنَى، فَتَعْتَدُّ حَيْثُ شَاءَتْ، وَلاَ سُكْنَى لَهَا»
5343. உம்மு அதிய்யா(ரலி) அறிவித்தார்
(கணவன் இறந்து இத்தாவிலிருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது ‘குஸ்த்’ மற்றும் ‘ழஃபார்’ ஆகிய கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ளலாம்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:
(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) ‘குஸ்த்’ (கோஷ்டம்) எனும் சொல் (ஃகுஸ்த், குஸ்த்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுகிறது ‘காஃபூர்’ (கற்பூரம்) எனும் சொல் (ஃகாபூர், காஃபூர்) என இரண்டு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. 98
Book :68
«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلاَ تَمَسَّ طِيبًا، إِلَّا أَدْنَى طُهْرِهَا إِذَا طَهُرَتْ نُبْذَةً مِنْ قُسْطٍ وَأَظْفَارٍ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «القُسْطُ وَالكُسْتُ مِثْلُ الكَافُورِ وَالقَافُورِ»
சமீப விமர்சனங்கள்