Category: புஹாரி

Bukhari

Bukhari-5043

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28 திருத்தமாகவும் நிதானமாகவும் குர்ஆனை ஓதுதல். அல்லாஹ் கூறுகின்றான்: மேலும் (நபியே!), குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (73:4). மனிதர்களுக்கு நீர் இதனைச் சிறிது சிறிதாக ஓதிக்காட்ட வேண்டும் என்பதற் காகவே இந்தக் குர்ஆனைப் படிப்படியாக அருளினோம். (17:106) பாடல்களை அவசரம் அவசரமாகப் படிப்பதைப் போன்று குர்ஆனை ஓதுவது வெறுப்புக்குரிய செயலாகும். (44:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபீஹா யுஃப்ரகு’ என்பதற்கு அந்த இரவில் தெளிவுப்படுத்தப்படுகிறது’ என்று பொருள். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (17:106ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபரக்னாஹு’எனும் சொல்லுக்கு, நாம் தெளிவுபடுத்தினோம்’ என்று பொருள்.

5043. அபூ வாயில் ஷகீக் இப்னு ஸலமா(ரஹ்) கூறினார்

நாங்கள் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் (ஒரு நாள்) காலையில் சென்றோம். அப்போது ஒருவர், ‘நேற்றிரவு நான் ‘அல்முஃபஸ்ஸல்’ அத்தியாயங்களை (முழுமையாக) ஓதி முடித்தேன்’ என்றார். அதற்கு அப்துல்லாஹ்(ரலி), ‘பாட்டுப் பாடுவதைப் போன்று அவரச அவரசமாக ஓதினீரா? யாகி (சரியான) ஓதல் முறையைச் செவியேற்றுள்ளோம். மேலும்,

غَدَوْنَا عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ رَجُلٌ: قَرَأْتُ المُفَصَّلَ البَارِحَةَ، فَقَالَ: «هَذًّا كَهَذِّ الشِّعْرِ إِنَّا قَدْ سَمِعْنَا القِرَاءَةَ، وَإِنِّي لَأَحْفَظُ القُرَنَاءَ الَّتِي كَانَ يَقْرَأُ بِهِنَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَمَانِيَ عَشْرَةَ سُورَةً مِنَ المُفَصَّلِ، وَسُورَتَيْنِ مِنْ آلِ حم»


Bukhari-5042

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5042. ஆயிஷா(ரலி) கூறினார்

இரவு நேரம் பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆன் ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நபியவர்கள், ‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன அத்தியாயங்களிலிருந்து நான் மறந்துவிட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள். 

Book :66


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَارِئًا يَقْرَأُ مِنَ اللَّيْلِ فِي المَسْجِدِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا آيَةً أَسْقَطْتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا»


Bukhari-5041

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5041. உமர் இப்னு கத்தாப்(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்நாளில் ஹிஷாம் இப்னு ஹகீம்(ரலி) ‘அல்ஃபுர்கான்’ எனும் (25 வது) அத்தியாயத்தை (தொழுகையில்) ஓதுவதை செவியுற்றேன். அவரின் ஓதலை நான் செவிதாழ்த்திக் கேட்டபோது எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓதிக் காண்பிக்காத பல (வட்டார) மொழி வழக்குகளில் அவர் அதை ஓதிக்கொண்டிருந்தார். தொழுகையில் வைத்தே அவரை நான் தண்டிக்க முனைந்தேன். (சற்று நிதானித்து) அவர் தொழுகையை முடித்து) சலாம் கொடுக்கும் வரை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன்.

(அவர் தொழுகையை முடித்ததும் அவரின் மேல் துண்டை) அவரின் கழுத்தில் போட்டுப் பிடித்து, ‘இந்த அத்தியாயத்தை நான் (உம்மிடமிருந்து) செவியேற்றபடி உமக்கு ஓதிக்கொடுத்தது யார்?’ என்று கேட்டேன். அவர், ‘இதை எனக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் ஓதிக் கொடுத்தார்கள்’ என்று பதிலளித்தார். உடனே நான், ‘நீர் பொய் சொல்லிவிட்டீர்! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உம்மிடம் நான் செவியேற்ற இந்த அத்தியாயத்தை இறைத்தூதர்(ஸல்) அவர்களே எனக்கு (நீர் ஓதியதற்கு மாற்றமாக) ஓதிக் கொடுத்தார்கள்’ என்று கூறியபடி

سَمِعْتُ هِشَامَ بْنَ حَكِيمِ بْنِ حِزَامٍ، يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ فِي حَيَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَمَعْتُ لِقِرَاءَتِهِ، فَإِذَا هُوَ يَقْرَؤُهَا عَلَى حُرُوفٍ كَثِيرَةٍ، لَمْ يُقْرِئْنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكِدْتُ أُسَاوِرُهُ فِي الصَّلاَةِ، فَانْتَظَرْتُهُ حَتَّى سَلَّمَ، فَلَبَبْتُهُ فَقُلْتُ: مَنْ أَقْرَأَكَ هَذِهِ السُّورَةَ الَّتِي سَمِعْتُكَ تَقْرَأُ؟ قَالَ: أَقْرَأَنِيهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: كَذَبْتَ فَوَاللَّهِ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَهُوَ أَقْرَأَنِي هَذِهِ السُّورَةَ، الَّتِي سَمِعْتُكَ فَانْطَلَقْتُ بِهِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقُودُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي سَمِعْتُ هَذَا يَقْرَأُ سُورَةَ الفُرْقَانِ عَلَى حُرُوفٍ لَمْ تُقْرِئْنِيهَا، وَإِنَّكَ أَقْرَأْتَنِي سُورَةَ الفُرْقَانِ، فَقَالَ: «يَا هِشَامُ اقْرَأْهَا» فَقَرَأَهَا القِرَاءَةَ الَّتِي سَمِعْتُهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ» ثُمَّ قَالَ: «اقْرَأْ يَا عُمَرُ» فَقَرَأْتُهَا الَّتِي أَقْرَأَنِيهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَكَذَا أُنْزِلَتْ» ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ القُرْآنَ أُنْزِلَ عَلَى سَبْعَةِ أَحْرُفٍ، فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنْهُ»


Bukhari-5040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27 அல்பகரா’ அத்தியாயம் என்றும், இன்ன இன்ன அத்தியாயம் என்றும் கூறுவதைக் குற்றமாகக் கருதலாகாது.52

5040. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தின் இறுதி இரண்டு வசனங்களை (285, 286) இரவில் ஓதுகிறவருக்கு அந்த இரண்டுமே போதும்!

என அபூ மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

Book : 66


«الآيَتَانِ مِنْ آخِرِ سُورَةِ البَقَرَةِ مَنْ قَرَأَ بِهِمَا فِي لَيْلَةٍ كَفَتَاهُ»


Bukhari-5039

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5039. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இன்ன இன்ன குர்ஆன் வசனங்களை நான்மறந்துவிட்டேன் என்று ஒருவர் கூறுவதே அவரின் வார்த்தைகளிலேயே மிகவும் மோசமான வார்த்தையாகும். உண்மையில், அவர் மறக்கவைக்கப்பட்டுவிட்டார்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். 51

Book :66


بِئْسَ مَا لِأَحَدِهِمْ يَقُولُ: نَسِيتُ آيَةَ كَيْتَ وَكَيْتَ، بَلْ هُوَ نُسِّيَ


Bukhari-5038

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5038. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: 

ஒரு மனிதர், இரவு நேரத்தில் ஓர் அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது அவர்கள், ‘‘அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும்! இன்ன இன்ன அத்தியாயங்களிலிருந்து எனக்கு மறக்கவைக்கப்பட்டிருந்த இன்ன இன்ன வசனங்களை அவர் எனக்கு நினைவூட்டிவிட்டார்” என்று சொன்னார்கள்.

அத்தியாயம்: 66


سَمِعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي سُورَةٍ بِاللَّيْلِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا، آيَةً كُنْتُ أُنْسِيتُهَا مِنْ سُورَةِ كَذَا وَكَذَا»


Bukhari-5037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26 குர்ஆனை மறப்பதும், இன்ன இன்ன வசனங்களை நான் மறந்துவிட்டேன் என்று சொல்லலாமா?என்பதும், (நபியே!) நாம் உம்மை ஓதிடச் செய்வோம். பிறகு நீர் மறக்க மாட்டீர்; ஆனால், அல்லாஹ் நாடியதைத் தவிர எனும் (87:6ஆவது) இறைவசனமும்.

5037. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

பள்ளிவாசலில் ஒருவர் குர்ஆனை ஓதிக்கொண்டிருப்பதை நபி(ஸல்) அவர்கள் செவியுற்றார்கள். அப்போது அவர்கள் ‘அல்லாஹ் அவருக்குக் கருணைபுரியட்டும்! இன்ன அத்தியாயத்தின் இன்ன இன்ன வசனங்களை எனக்கு அவர் நினைவூட்டிவிட்டார்’ என்று கூறினார்கள்.

‘இன்ன அத்தியாயத்தில் நான் மறந்திருந்த இன்ன இன்ன வசனங்களை’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்றும் ஹிஷாம்(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 66


سَمِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا يَقْرَأُ فِي المَسْجِدِ، فَقَالَ: «يَرْحَمُهُ اللَّهُ لَقَدْ أَذْكَرَنِي كَذَا وَكَذَا، آيَةً مِنْ سُورَةِ كَذَا» حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ بْنِ مَيْمُونٍ، حَدَّثَنَا عِيسَى، عَنْ هِشَامٍ، وَقَالَ: أَسْقَطْتُهُنَّ مِنْ سُورَةِ كَذَا، تَابَعَهُ عَلِيُّ بْنُ مُسْهِرٍ، وَعَبْدَةُ ، عَنْ هِشَامٍ


Bukhari-5036

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5036. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

‘நான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வாழ்ந்த) காலத்திலேயே ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை மனனம் செய்திருந்தேன்’ என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார். நான் அவர்களிடம், ‘அல்முஹ்கம்’ என்றால் என்ன?’ என்று கேட்டேன். அவர்கள் ‘அல்முஃபஸ்ஸல்’தான் (‘அல்முஹ்கம்’)’ என்று (பதில்) கூறினார்கள்.

Book :66


«جَمَعْتُ المُحْكَمَ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، فَقُلْتُ لَهُ: وَمَا المُحْكَمُ؟ قَالَ: «المُفَصَّلُ»


Bukhari-5035

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25 சிறுவர்களுக்குக் குர்ஆனைக் கற்றுக் கொடுத்தல்.

5035. ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்

நீங்கள் ‘அல்முஃபஸ்ஸல்’ என்று கூறிவரும் அத்தியாயங்களே ‘அல்முஹ்கம்’ ஆகும்.

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்:

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறக்கும்போது நான் பத்து வயதுடைய (சிறு)வனாக இருந்தேன். அப்போது நான் ‘அல்முஹ்கம்’ அத்தியாயங்களை ஓதிமுடித்திருந்தேன். 49

Book : 66


«تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا ابْنُ عَشْرِ سِنِينَ، وَقَدْ قَرَأْتُ المُحْكَمَ»


Bukhari-5034

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24 வாகனத்தில் இருந்தபடி குர்ஆன் ஓதுதல்.

5034. அப்துல்லாஹ் இப்னு முஃகஃப்பல்(ரலி) அறிவித்தார்

மக்கா வெற்றியின்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , வாகனத்தில் இருந்தபடி ‘அல்ஃபத்ஹ்’ எனும் (48 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்ததை பார்த்தேன். 48

Book : 66


«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَهُوَ يَقْرَأُ عَلَى رَاحِلَتِهِ سُورَةَ الفَتْحِ»


Next Page » « Previous Page