Category: புஹாரி

Bukhari

Bukhari-5023

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19 குர்ஆனைக் கொண்டு தன்னிறைவு பெறாத வர் (நம்மைச் சார்ந்தவரல்லர் என்ற நபிமொழியும்) அவர்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்ற வேதத்தை உம்மீது நாம் அருளியிருப்பது அவர்களுக்குப் போதுமானதாக இல்லையா? எனும் (29:51ஆவது) இறைவசனமும்.46

5023. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ், தன் தூதர் (முழு ஈடுபாட்டுடன்) இனிய குரலில் குர்ஆனை ஓதும்போது அதனைச் செவிகொடுத்துக் கேட்டது போல் வேறெதையும் அவன் செவி கொடுத்துக் கேட்டதில்லை.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஸலமா(ரஹ்) அவர்களின் தோழர் ஒருவர் (அப்துல் ஹமீத் இப்னு அப்திர் ரஹ்மான்) கூறுகிறார்:

குரலெடுத்து (இனிமையாகக்) குர்ஆனை ஓதுவதே இங்கு நோக்கமாகும்.

Book : 66


«لَمْ يَأْذَنِ اللَّهُ لِشَيْءٍ مَا أَذِنَ لِلنَّبِيِّ أَنْ يَتَغَنَّى بِالقُرْآنِ»، وَقَالَ صَاحِبٌ لَهُ: يُرِيدُ يَجْهَرُ بِهِ


Bukhari-5022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18 இறைவேதத்தின்படி (செயல்படுமாறு) உபதேசித்தல்.

5022. தல்ஹா இப்னு முஸர்ரிஃப்(ரஹ்) அறிவித்தார்

நான் அப்துல்லாஹ் இப்னு அபீ அவ்ஃபா(ரலி) அவர்களிடம், ‘நபி(ஸல்) அவர்கள் மரண சாசனம் (வஸிய்யத்) செய்துள்ளார்களா?’ என்று கேட்டேன். அன்னார் ‘இல்லை’ என்றார்கள். நான் ‘அப்படியானால் மரண சாசனம் செய்வது மக்களின் மீது எப்படிக் கடமையாக்கப்பட்டது? நபியவர்கள் மரண சாசனம் செய்திராமலேயே மக்களுக்கு அந்தக் கட்டளை பிறப்பிக்கப்பட்டதா?’ என்று வினவினேன். அன்னார் ‘இறைவேதத்தின்படி செயல்படுமாறு நபியவர்கள் உபதேசித்தார்கள்’ என்று பதிலளித்தார்கள். 45

Book : 66


سَأَلْتُ عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى: آوْصَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: لاَ، فَقُلْتُ: كَيْفَ كُتِبَ عَلَى النَّاسِ الوَصِيَّةُ أُمِرُوا بِهَا وَلَمْ يُوصِ؟ قَالَ: «أَوْصَى بِكِتَابِ اللَّهِ»


Bukhari-5021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5021. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(உங்களுக்கு) முன் சென்ற சமுதாயங்களின் ஆயுட்காலத்துடன் ஒப்பிடுகையில் உங்கள் ஆயுட்காலம், அஸர் தொழுகைக்கும் சூரியன் மறைவதற்கும் இடையேயுள்ள (குறைந்த) கால அளவேயாகும். உங்களின் நிலையும் (வேதக்காரர்களான) யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் நிலையும் தொழிலாளர்கள் சிலரை வேலைக்கு அமர்த்திய ஒரு மனிதனின் நிலை போன்றதாகும். அவர் (தொழிலாளர்களிடம்) ‘எனக்காக நண்பகல் வரை ஒவ்வொரு கீராத் (ஊதியத்)திற்கு வேலை செய்பவர் யார்?’ என்று கேட்டார். அப்போது யூதர்கள் (ஒவ்வொரு கீராத்திற்கு நண்பகல் வரை) வேலை செய்தனர். அடுத்து அந்த மனிதர், ‘நண்பகல் முதல் அஸ்ர் வரை (ஒவ்வொரு கீராத் ஊதியத்திற்கு) எனக்காக வேலை செய்பவர் யார்?’ என்று கேட்க, (அவ்வாறே) கிறிஸ்தவர்கள் வேலை செய்தார்கள். பிறகு (என் சமுதாயத்தவராகிய) நீங்கள் இரண்டு கீராத்(ஊதியத்)திற்காக அஸ்ர் முதல் மஃக்ரிப் (நேரம்) வரை வேலை செய்கிறீர்கள். (இதைக் கண்ட வேதக்காரர்களாகிய) அவர்கள் ‘நாங்கள் அதிகமாக வேலை செய்திருக்க, ஊதியம் (மட்டும் எங்களுக்குக்) குறைவாகக் கிடைப்பதா?’ என்று கேட்டனர். அதற்கு (இறைவன்), ‘நான் (ஊதியமாக நிர்ணயித்த)

إِنَّمَا أَجَلُكُمْ فِي أَجَلِ مَنْ خَلاَ مِنَ الأُمَمِ، كَمَا بَيْنَ صَلاَةِ العَصْرِ، وَمَغْرِبِ الشَّمْسِ، وَمَثَلُكُمْ وَمَثَلُ اليَهُودِ وَالنَّصَارَى، كَمَثَلِ رَجُلٍ اسْتَعْمَلَ عُمَّالًا، فَقَالَ: مَنْ يَعْمَلُ لِي إِلَى نِصْفِ النَّهَارِ عَلَى قِيرَاطٍ، فَعَمِلَتِ اليَهُودُ، فَقَالَ: مَنْ يَعْمَلُ لِي مِنْ نِصْفِ النَّهَارِ إِلَى العَصْرِ عَلَى قِيرَاطٍ، فَعَمِلَتِ النَّصَارَى، ثُمَّ أَنْتُمْ تَعْمَلُونَ مِنَ العَصْرِ إِلَى المَغْرِبِ بِقِيرَاطَيْنِ قِيرَاطَيْنِ، قَالُوا: نَحْنُ أَكْثَرُ عَمَلًا وَأَقَلُّ عَطَاءً، قَالَ: «هَلْ ظَلَمْتُكُمْ مِنْ حَقِّكُمْ؟» قَالُوا: لاَ، قَالَ: «فَذَاكَ فَضْلِي أُوتِيهِ مَنْ شِئْتُ»


Bukhari-5020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

மற்றெல்லா உரைகளையும்விடக் குர்ஆனுக்குள்ள தனிச்சிறப்பு.

5020. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1 . குர்ஆனை ஓதுகின்ற(நல்ல)வரின் நிலையானது எலுமிச்சை போன்றதாகும். அதன் சுவையும் நன்று; வாசனையும் நன்று.
2 . மற்ற நற்செயல்கள் புரிந்துகொண்டு) குர்ஆன் ஓதாமலிருப்பவர், பேரிச்சம் பழத்தைப் போன்றவராவார். அதன் சுவை நன்று; (ஆனால்) அதற்கு வாசனை கிடையாது.
3 . தீயவனாக (நயவஞ்சகனாக)வும் இருந்துகொண்டு, குர்ஆனையும் ஓதிவருகிறவனின் நிலையானது, துளசிச் செடியின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் வாசனை நன்று; சுவையோ கசப்பு.
4 . தீமையும் செய்துகொண்டு, குர்ஆனையும் ஓதாமலிருப்பவனின் நிலையானது, குமட்டிக்காயின் நிலையை ஒத்திருக்கிறது. அதன் சுவையும் கசப்பு; அதற்கு வாசனையும் கிடையாது.

அறிவிப்பவர்: அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 66


مَثَلُ الَّذِي يَقْرَأُ القُرْآنَ: كَالأُتْرُجَّةِ طَعْمُهَا طَيِّبٌ، وَرِيحُهَا طَيِّبٌ، وَالَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ: كَالتَّمْرَةِ طَعْمُهَا طَيِّبٌ وَلاَ رِيحَ لَهَا، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي يَقْرَأُ القُرْآنَ: كَمَثَلِ الرَّيْحَانَةِ رِيحُهَا طَيِّبٌ، وَطَعْمُهَا مُرٌّ، وَمَثَلُ الفَاجِرِ الَّذِي لاَ يَقْرَأُ القُرْآنَ: كَمَثَلِ الحَنْظَلَةِ طَعْمُهَا مُرٌّ، وَلاَ رِيحَ لَهَا


Bukhari-5019

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16 (குர்ஆனின்) இரு அட்டைகளுக்கிடையே உள்ளவற்றைத்தான் நபி (ஸல்) அவர்கள் (நம்மிடையே) விட்டுச்சென்றார்கள் எனும் கூற்று.43

5019. அப்துல் அஸீஸ் இப்னு ருஃபைஉ(ரஹ்) கூறினார்

நானும் ஷத்தாத் இப்னு மஅகில்(ரஹ்) அவர்களும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ஷத்தாத்(ரஹ்), ‘நபி(ஸல்) அவர்கள் (உலகைப் பிரிந்தபோது , இந்தக் குர்ஆனில் இடம் பெறாத) வேறு (இறைவசனங்கள்) எதையும் (நம்மிடையே)விட்டுச் சென்றார்களா?’ என்று கேட்டார்கள். இப்னு அப்பாஸ்(ரலி), ‘(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத் தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

நாங்கள் (அலீ(ரலி) அவர்களின் புதல்வரான) முஹம்மத் இப்னு ஹனஃபிய்யா(ரஹ்) அவர்களிடம் சென்று, இது குறித்துக் கேட்டோம். அதற்கு அவர்கள் (இப்னு அப்பாஸ்(ரலி) பதிலளித்தது போன்றே) ‘(இந்தக் குர்ஆனின்) இரண்டு அட்டைகளுக்கிடையேயுள்ள வசனங்களைத்தான் (இறைவேதமாக) நபி(ஸல்) அவர்கள்விட்டுச் சென்றார்கள்’ என்று பதிலளித்தார்கள்.

دَخَلْتُ أَنَا وَشَدَّادُ بْنُ مَعْقِلٍ، عَلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، فَقَالَ لَهُ شَدَّادُ بْنُ مَعْقِلٍ: أَتَرَكَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ شَيْءٍ؟ قَالَ: «مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ» قَالَ: وَدَخَلْنَا عَلَى مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، فَسَأَلْنَاهُ، فَقَالَ: «مَا تَرَكَ إِلَّا مَا بَيْنَ الدَّفَّتَيْنِ»


Bukhari-5018

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 15

குர்ஆன் ஓதும் போது மனஅமைதியும் வானவர்களும் இறங்குதல்.

5018. உஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் கூறியதாவது: 

நான் இரவு நேரத்தில் (என் வீட்டில்) ‘அல்பகரா’ எனும் (2 வது) அத்தியாயத்தை ஓதிக்கொண்டிருந்தேன். என்னுடைய குதிரை எனக்குப் பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. திடீரென அந்தக் குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்திக் கொண்டேன். குதிரை மிகக் கடுமையாக மிரண்டது. உடனே ஓதுவதை நிறுத்தினேன். குதிரை அமைதியாகிவிட்டது. பிறகு ஓதினேன். அப்போது குதிரை (முன் போன்றே) மிரண்டது. நான் ஓதுவதை நிறுத்தினேன். குதிரையும் அமைதியானது. மீண்டும் நான் ஓதியபோது குதிரை மிரண்டது. நான் திரும்பிப் பார்த்தேன் அப்போது என் மகன் யஹ்யா குதிரைக்குப் பக்கத்தில் இருந்தான். அவனை அது (மிதித்துக்) காயப்படுத்திவிடுமோ என்று அஞ்சினேன். எனவே, அவனை (அந்த இடத்திலிருந்து) இழுத்துவிட்டு வானை நோக்கித் தலையைத் தூக்கினேன். அங்கு (விளக்குகள் நிறைந்த மேகம் போன்றதொரு பொருள் வானில் மறைந்தது. அதனால்) அதைக் காணமுடியவில்லை.

بَيْنَمَا هُوَ يَقْرَأُ مِنَ اللَّيْلِ سُورَةَ البَقَرَةِ، وَفَرَسُهُ مَرْبُوطَةٌ عِنْدَهُ، إِذْ جَالَتِ الفَرَسُ فَسَكَتَ فَسَكَتَتْ، فَقَرَأَ فَجَالَتِ الفَرَسُ، فَسَكَتَ وَسَكَتَتِ الفَرَسُ، ثُمَّ قَرَأَ فَجَالَتِ الفَرَسُ فَانْصَرَفَ، وَكَانَ ابْنُهُ يَحْيَى قَرِيبًا مِنْهَا، فَأَشْفَقَ أَنْ تُصِيبَهُ فَلَمَّا اجْتَرَّهُ رَفَعَ رَأْسَهُ إِلَى السَّمَاءِ، حَتَّى مَا يَرَاهَا، فَلَمَّا أَصْبَحَ حَدَّثَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ، اقْرَأْ يَا ابْنَ حُضَيْرٍ، قَالَ: فَأَشْفَقْتُ يَا رَسُولَ اللَّهِ أَنْ تَطَأَ يَحْيَى، وَكَانَ مِنْهَا قَرِيبًا، فَرَفَعْتُ رَأْسِي فَانْصَرَفْتُ إِلَيْهِ، فَرَفَعْتُ رَأْسِي إِلَى السَّمَاءِ، فَإِذَا مِثْلُ الظُّلَّةِ فِيهَا أَمْثَالُ المَصَابِيحِ، فَخَرَجَتْ حَتَّى لاَ أَرَاهَا، قَالَ: «وَتَدْرِي مَا ذَاكَ؟»، قَالَ: لاَ، قَالَ: «تِلْكَ المَلاَئِكَةُ دَنَتْ لِصَوْتِكَ، وَلَوْ قَرَأْتَ لَأَصْبَحَتْ يَنْظُرُ النَّاسُ إِلَيْهَا، لاَ تَتَوَارَى مِنْهُمْ»،

قَالَ ابْنُ الهَادِ: وَحَدَّثَنِي هَذَا الحَدِيثَ عَبْدُ اللَّهِ بْنُ خَبَّابٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ، عَنْ أُسَيْدِ بْنِ حُضَيْرٍ