Category: புஹாரி

Bukhari

Bukhari-4972

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

அவனும் நாசமாகிவிட்டான். அவனது செல்வமும் அவன் சம்பாதித்தவையும் அவனுக்கு எந்தப் பலனையும் அளிக்கா (எனும் 111:2ஆவது இறைவசனம்).

4972. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

நபி (ஸல்) அவர்கள் (மக்காவின்) பள்ளத்தாக்கு நோக்கிக் கிளம்பிச் சென்று (அங்குள்ள ‘ஸஃபா’ எனும்) அந்த மலை மீதேறி, ‘யா ஸபாஹா! (இதோ, அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று கூவியழைத்தார்கள். உடனே, அவர்களிடம் குறைஷியர் குழுமினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களிடம் ‘காலையிலோ மாலையிலோ (உங்களைத் தாக்குவதற்காக) உங்களை நோக்கிப் பகைவர்கள் வருகிறார்கள்’ என்று தகவல் சொன்னால் என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?, கூறுங்கள்!’ என்று கேட்டார்கள். (குழுமியிருந்த மக்கா) மக்கள், ‘ஆம் (நம்பவே செய்வோம்)’ என்று பதிலளித்தனர்.

நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியானால், கடும் வேதனையொன்று எதிர்நோக்கியுள்ளது என உங்களை எச்சரிக்கை செய்கிறேன்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) உடன் அபூ லஹப், ‘உனக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகத்தான்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى البَطْحَاءِ، فَصَعِدَ إِلَى الجَبَلِ فَنَادَى: «يَا صَبَاحَاهْ» فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ، فَقَالَ: «أَرَأَيْتُمْ إِنْ حَدَّثْتُكُمْ أَنَّ العَدُوَّ مُصَبِّحُكُمْ أَوْ مُمَسِّيكُمْ، أَكُنْتُمْ تُصَدِّقُونِي؟» قَالُوا: نَعَمْ، قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ» فَقَالَ أَبُو لَهَبٍ: أَلِهَذَا جَمَعْتَنَا تَبًّا لَكَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1] ” إِلَى آخِرِهَا


Bukhari-4971

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4971. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

‘(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!’ (அதாவது,) ‘தூய மனம் படைத்த உம்முடைய குழுவினரையும் (எச்சரிக்கை செய்வீராக!’) எனும் (திருக்குர்ஆன் 26:214 வது) இறைவசனம் அருளப்பட்டபோது

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்று ‘ஸஃபா’ (மலை) மீதேறி உரத்த குரலில், ‘யா ஸபாஹா (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!)’ என்று கூறினார்கள். அப்போது (மக்கா நகர) மக்கள், ‘யார் இவர்?’ என்று கூறியவாறு நபியவர்களிடம் ஒன்று கூடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இந்த மலையின் அடிவாரத்திலிருந்து (உங்களைத் தாக்குவதற்காக பகைவர்களின்) குதிரைப் படையொன்று புறப்பட்டு வருகிறது என்று நான் உங்களிடம் தெரிவித்தால், என்னை நீங்கள் நம்பியிருப்பீர்களா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘உம்மிடமிருந்து எந்தப் பொய்யையும் நாங்கள் அனுபவித்ததில்லை. (அவ்வாறிருக்க, இதை நாங்கள் நம்பாமல் இருப்போமா?)’ என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால்,

لَمَّا نَزَلَتْ: {وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ} [الشعراء: 214] وَرَهْطَكَ مِنْهُمُ المُخْلَصِينَ، خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى صَعِدَ الصَّفَا فَهَتَفَ: «يَا صَبَاحَاهْ» فَقَالُوا: مَنْ هَذَا؟، فَاجْتَمَعُوا إِلَيْهِ، فَقَالَ: «أَرَأَيْتُمْ إِنْ أَخْبَرْتُكُمْ أَنَّ خَيْلًا تَخْرُجُ مِنْ سَفْحِ هَذَا الجَبَلِ، أَكُنْتُمْ مُصَدِّقِيَّ؟» قَالُوا: مَا جَرَّبْنَا عَلَيْكَ كَذِبًا، قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ» قَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ، مَا جَمَعْتَنَا إِلَّا لِهَذَا؟ ثُمَّ قَامَ، فَنَزَلَتْ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ} [المسد: 1]


Bukhari-4970

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

உங்கள் இறைவனைப் புகழ்ந்து கொண்டு அவனைத் துதியுங்கள்! மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் பாவமன்னிப்பைப் பெரிதும் ஏற்பவனாக இருக்கின்றான் எனும் (110:3ஆவது) இறைவசனம்.

(இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) தவ்வாப் எனும் சொல்லுக்கு, அடியார்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கையை ஏற்பவன் என்று பொருள். மக்களில் பாவமன்னிப்புக் கோருபவருக்கும் தவ்வாப் என்று கூறப்படுவதுண்டு.

4970. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

உமர் (ரலி) பத்ருப்போரில் கலந்துகொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். எனவே, அவர்களில் சிலர் வருத்தமடைந்து, ‘எங்களுக்கு இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம்விட்டுவிட்டு) இவரை மட்டும் எங்களுடன் ஏன் அமரச்செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள்.

அதற்கு உமர் (ரலி), ‘அவர் நீங்கள் அறிந்துள்ள வகையில் (அருமை பெருமைகள் உடையவராக) இருக்கிறார் என்பதால் தான்’ என்றார்கள்.

كَانَ عُمَرُ يُدْخِلُنِي مَعَ أَشْيَاخِ بَدْرٍ فَكَأَنَّ بَعْضَهُمْ وَجَدَ فِي نَفْسِهِ، فَقَالَ: لِمَ تُدْخِلُ هَذَا مَعَنَا وَلَنَا أَبْنَاءٌ مِثْلُهُ، فَقَالَ عُمَرُ: إِنَّهُ مَنْ قَدْ عَلِمْتُمْ، فَدَعَاهُ ذَاتَ يَوْمٍ فَأَدْخَلَهُ مَعَهُمْ، فَمَا رُئِيتُ أَنَّهُ دَعَانِي يَوْمَئِذٍ إِلَّا لِيُرِيَهُمْ، قَالَ: مَا تَقُولُونَ فِي قَوْلِ اللَّهِ تَعَالَى: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ} [النصر: 1]؟ فَقَالَ بَعْضُهُمْ: أُمِرْنَا أَنْ نَحْمَدَ اللَّهَ وَنَسْتَغْفِرَهُ إِذَا نُصِرْنَا، وَفُتِحَ عَلَيْنَا، وَسَكَتَ بَعْضُهُمْ فَلَمْ يَقُلْ شَيْئًا، فَقَالَ لِي: أَكَذَاكَ تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ؟ فَقُلْتُ: لاَ، قَالَ: فَمَا تَقُولُ؟ قُلْتُ: «هُوَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ لَهُ»، قَالَ: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ} [النصر: 1] «وَذَلِكَ عَلاَمَةُ أَجَلِكَ»، {فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا} [النصر: 3]، فَقَالَ عُمَرُ: «مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَقُولُ»


Bukhari-4969

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

மேலும், (நபியே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீங்கள் காணும் போது (எனும் 110:2ஆவது இறைவசனம்).

4969. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

உமர் (ரலி), ‘(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து..’ எனும் (110 வது) குறித்து (பத்ருப் போரில் கலந்துகொண்ட) நண்பர்களிடம் கேட்டார்கள். நண்பர்கள் ‘பல நாடுகளையும் கோட்டைகளையும் வெற்றிகொள்வது (குறித்துத்தான் இந்த வசனம் முன்னிறிவிப்புச் செய்கிறது)’ என்று கூறினர்.

‘இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களே! நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?’ என்று உமர் (ரலி) (என்னிடம்) கேட்டார்கள். ‘(இது,) இறைத்தூதர் (ஸல்) அவர்களின் ஆயுட்காலம், அல்லது ஓர் உதாரணமாகும். (இதன் மூலம்) அவர்களின் இறப்புச் செய்தி முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளது’ என்று (விளக்கம்) கூறினேன். 3

Book : 65


أَنَّ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَأَلَهُمْ عَنْ قَوْلِهِ تَعَالَى: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ} [النصر: 1]، قَالُوا: فَتْحُ المَدَائِنِ وَالقُصُورِ، قَالَ: «مَا تَقُولُ يَا ابْنَ عَبَّاسٍ؟» قَالَ: «أَجَلٌ، أَوْ مَثَلٌ ضُرِبَ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُعِيَتْ لَهُ نَفْسُهُ»


Bukhari-4968

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

4968. ஆயிஷா (ரலி) கூறினார்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குர்னின் (110 வது அத்தியாயத்தின்) கட்டளையைச் செயல்படுத்தும் முகமாக, தம் (தொழுகையின்) ருகூஉவிலும் சுஜுதிலும் அதிகமாக ‘சுப்ஹானக்க ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள். 2

Book : 65


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: «سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا، وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي، يَتَأَوَّلُ القُرْآنَ»


Bukhari-4967

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4967. ஆயிஷா (ரலி) அறிவித்தார்

‘(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அளிக்கும்) வெற்றியும் கிடைத்து…’ எனும் (110 வது) தமக்கு அருளப்பட்ட பின் ‘சுப்ஹானக்க ரப்பனா வபி ஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ’ (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகிறோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை.

Book : 65


مَا صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلاَةً بَعْدَ أَنْ نَزَلَتْ عَلَيْهِ: {إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالفَتْحُ} [النصر: 1] إِلَّا يَقُولُ فِيهَا: «سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي»


Bukhari-4966

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4966. ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்

(திருக்குர்ஆன் 108:1 வது வசனத்தில் இடம் அப்பாஸ் (ரலி) கூறுகையில், ‘அது, நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ள (அனைத்து) நன்மைகளாகும்’ எனத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர்களில், ஒருவரான) அபூ பிஷ்ர் (ரஹ்) கூறினார்:

நான் ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அவர்களிடம், ‘மக்கள் ‘அல்கவ்ஸர்’ என்பது சொர்க்கத்திலுள்ள நதி என்று கூறுகின்றனரே?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அருளிய (அளவற்ற) நன்மைகளில் சொர்க்கத்திலுள்ள அந்த நதியும் அடங்கும்’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 65


فِي الكَوْثَرِ: هُوَ الخَيْرُ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ “، قَالَ أَبُو بِشْرٍ: قُلْتُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ: فَإِنَّ النَّاسَ يَزْعُمُونَ أَنَّهُ نَهَرٌ فِي الجَنَّةِ، فَقَالَ سَعِيدٌ: النَّهَرُ الَّذِي فِي الجَنَّةِ مِنَ الخَيْرِ الَّذِي أَعْطَاهُ اللَّهُ إِيَّاهُ


Bukhari-4965

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4965. அபூ உபைதா ஆமிர் இப்னு அப்தில்லாஹ் இப்னி மஸ்வூத் (ரலி) அறிவித்தார்

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம்,

‘(நபியே!) நாம் உங்களுக்கு அல்கவ்ஸரை அருளினோம்’ எனும் (திருக்குர்ஆன் 108:1 வது) இறை வசனம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘(அது சொர்க்க) நதியாகும். அது உங்கள் நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துகள் உள்ளன. அதன் பாத்திரங்கள் விண்மீன்களின் எண்ணிக்கை போன்று (எண்ணற்றதாய்) இருக்கும்’ என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :65


سَأَلْتُهَا عَنْ قَوْلِهِ تَعَالَى: {إِنَّا أَعْطَيْنَاكَ الكَوْثَرَ} [الكوثر: 1] قَالَتْ: «نَهَرٌ أُعْطِيَهُ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، شَاطِئَاهُ عَلَيْهِ دُرٌّ مُجَوَّفٌ، آنِيَتُهُ كَعَدَدِ النُّجُومِ»


Bukhari-4964

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (108:3ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஷானிஅக்க எனும் சொல்லுக்கு உங்களுடைய பகைவன் என்று பொருள்.

4964. தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன். அதன் இரண்டு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், ‘ஜிப்ரீலே, இது என்ன?’ என்று கேட்டேன்.

‘இது அல்கவ்ஸர்’ என்று ஜிப்ரீல் (அலை) அவர்கள் பதிலளித்தார்கள்.

என அனஸ் (ரலி) அறிவித்தார்.

Book : 65


لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ، قَالَ: ” أَتَيْتُ عَلَى نَهَرٍ، حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا، فَقُلْتُ: مَا هَذَا يَا جِبْرِيلُ؟ قَالَ: هَذَا الكَوْثَرُ


Bukhari-4963

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாரோ அவர் அதனையும் கண்டுகொள்வார் (எனும் 99:8ஆவது இறைவசனம்).

4963. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்

நபி (ஸல்) அவர்களிடம் கழுதைகள் குறித்து வினவப்பட்டது. அப்போது அவர்கள், ‘இவை குறித்து எனக்கு இந்தத் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த வசனத்தைத் தவிர வேறெதுவும் அருளப்படவில்லை’ என்று கூறிவிட்டு, ‘அணுவளவு நன்மை செய்தவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், அணுவளவு தீமை செய்தவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்’ எனும் (திருக்குர்ஆன் 99:7,8) இறை வசனங்களை ஓதிக் காட்டினார்கள்.

Book : 65


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الحُمُرِ، فَقَالَ: ” لَمْ يُنْزَلْ عَلَيَّ فِيهَا شَيْءٌ إِلَّا هَذِهِ الآيَةُ الجَامِعَةُ الفَاذَّةُ: {فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ، وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ} [الزلزلة: 8]


Next Page » « Previous Page