Category: புஹாரி

Bukhari

Bukhari-4983

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4983. ஜுன்துப் இப்னு அப்தில்லாஹ் இப்னி சுஃப்யான் (ரலி) கூறினார்

(ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டபோது ‘ஓர்இரவு’ அல்லது ‘இரண்டு இரவுகள்’ அவர்கள் (இரவுத் தொழுகைக்காகக் கூட) எழவில்லை. அப்போது ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘முஹம்மதே! உம்முடைய ஷைத்தான் உம்மைக் கைவிட்டுவிட்டதாகவே கருதுகிறேன். (எனவேதான் ஓரிரு இரவுகளாக உம்மை அவன் நெருங்கவில்லை)’ என்று கூறினாள்.

அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், ‘முற்பகலின் மீது சத்தியமாக! மேலும், இருண்டுவிட்ட இரவின் மீது சத்தியமாக! (நபியே!) உங்களுடைய இறைவன் உங்களைக் கைவிடவுமில்லை; கோபங்கொள்ளவும் இல்லை’ எனும் (திருக்குர்ஆன் 93:1-3ஆகிய) வசனங்களை அருளினான். 5

Book :66


اشْتَكَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمْ يَقُمْ لَيْلَةً – أَوْ لَيْلَتَيْنِ – فَأَتَتْهُ امْرَأَةٌ، فَقَالَتْ: يَا مُحَمَّدُ مَا أُرَى شَيْطَانَكَ إِلَّا قَدْ تَرَكَكَ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {وَالضُّحَى وَاللَّيْلِ إِذَا سَجَى مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَى} [الضحى: 2]


Bukhari-4982

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4982. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து ‘வஹீ’ (வேத அறிவிப்பை) அருளினான். அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு (மற்ற காலங்களில் அருளப்பெற்றதை விட) அதிகமாக இருந்தது. அதற்குப் பின்னரே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.4

Book :66


«أَنَّ اللَّهَ تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الوَحْيَ قَبْلَ وَفَاتِهِ، حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الوَحْيُ، ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ»


Bukhari-4981

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4981. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆக வேண்டிய நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேதஅறிவிப்பு (வஹீ)தான். ஆகவே, நபிமார்களிலேயே மறுமை நாளில், பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

அத்தியாயம்: 66


«مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ البَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ، فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ القِيَامَةِ»


Bukhari-4980

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4980. அபூஉஸ்மான்-அந்நஹ்தீ-அப்துர்ரஹ்மான்(ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

(பின்வருமாறு) எனக்கு அறிவிக்கப்பட்டது:

நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் அருகில் (அன்னை) உம்மு ஸலமா (ரலி) இருந்தார்கள். (ஜிப்ரீல் எழுந்து சென்றதும்) நபி (ஸல்) அவர்கள் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம், ‘இவர் யார் (தெரியுமா)?’ என்றோ, இது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியோ கேட்டார்கள். உம்மு ஸலமா (ரலி), ‘இவர் (தங்களின் தோழர்) திஹ்யா’ என்று பதிலளித்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எழுந்து சென்ற பின், உம்மு ஸலமா (ரலி), ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்கள் சொன்ன செய்தி குறித்து நிகழ்த்திய உரையை நான் செவியுறும் வரை, வந்தவர் திஹ்யா அல்கல்பீ என்றே நினைத்திருந்தேன். (அந்த உரையைக் கேட்ட பின்புதான் அவர் திஹ்யாவின் உருவில் வந்த வானவர் ஜிப்ரீல் என்று எனக்குத் தெரியவந்தது.)’ என்று கூறினார்கள்.


(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுலைமான் பின் தர்கான் அத்தைமீ (ரஹ்) கூறினார்கள்:

أُنْبِئْتُ أَنَّ جِبْرِيلَ، أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعِنْدَهُ أُمُّ سَلَمَةَ، فَجَعَلَ يَتَحَدَّثُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِأُمِّ سَلَمَةَ: «مَنْ هَذَا؟» أَوْ كَمَا قَالَ، قَالَتْ: هَذَا دِحْيَةُ، فَلَمَّا قَامَ، قَالَتْ: وَاللَّهِ مَا حَسِبْتُهُ إِلَّا إِيَّاهُ، حَتَّى سَمِعْتُ خُطْبَةَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُخْبِرُ خَبَرَ جِبْرِيلَ، أَوْ كَمَا قَالَ،

قَالَ أَبِي: قُلْتُ لِأَبِي عُثْمَانَ: مِمَّنْ سَمِعْتَ هَذَا؟ قَالَ: مِنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ


Bukhari-4978 & 4979

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

குர்ஆனின் சிறப்புகள்

பாடம் : 1

வேத அறிவிப்பு (வஹீ) எவ்வாறு அருளப் பெற்றது? என்பது பற்றியும், முதன்முதலில் அருளப்பெற்றது எது? என்பது பற்றியும்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (5:48ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அல்முஹைமின்’ எனும் சொல்லுக்குப் பாதுகாக்கக்கூடியது’என்று பொருள்; தனக்கு முன்வந்த எல்லா வேதங்களையும் பாதுகாக் கும் (நம்பிக்கைக்குரிய) வேதம் குர்ஆன்.

4978. & 4979. ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் தம் மீது குர்ஆன் அருளப்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள். (ஹிஜ்ரத்திற்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் தங்கியிருந்தார்கள். 2

Book : 66


«لَبِثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ، يُنْزَلُ عَلَيْهِ القُرْآنُ وَبِالْمَدِينَةِ عَشْرَ سِنِينَ»


bukhari-4977

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4977. ஸிர்ரு இப்னு ஹுபைஷ் (ரஹ்) கூறினார்

நான் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் ‘அபூ முன்ஃதிரே! தங்கள் சகோதரர் இப்னு மஸ்வூத் (ரலி) இப்படி இப்படி சொல்கிறாரே?’ என்று கேட்டேன். 2

அதற்கு உபை (ரலி), ‘நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். அதற்கு அவர்கள், ‘என்னிடம் (இவ்விரு அத்தியாயங்களிலும் ‘நபியே! கூறுக: பாதுகாப்புக் கோருகிறேன்’ என்று) கூறப்பட்டது. (அதற்கேற்ப) நானும் கூறினேன்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ரு கூறுகிறார்கள்:)

எனவே, நாங்கள் (நானும் உபை அவர்களும்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம்.3

Book :65


سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ، قُلْتُ: يَا أَبَا المُنْذِرِ إِنَّ أَخَاكَ ابْنَ مَسْعُودٍ يَقُولُ كَذَا وَكَذَا، فَقَالَ أُبَيٌّ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِي: «قِيلَ لِي فَقُلْتُ» قَالَ: فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-4976

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4976. ஸிர்ரு இப்னு ஹுபைஷ் (ரஹ்) அறிவித்தார்

நான் உபை இப்னு கஅப் (ரலி) அவர்களிடம் ‘முஅவ்வஃதத்தைனி’ (பாதுகாப்புக் கோரும் பிரார்த்தனைகளான 113, 114 வது அத்தியாயங்கள் குர்ஆனில் கட்டுப்பட்டவையா? என்பது) பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

இது குறித்து நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘என்னிடம் (நபியே!) கூறுக: நான் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று) கூறப்பட்டது. நானும் கூறினேன்’ என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர் ஸிர்ருபின் ஹுபைஷ்(ரஹ்) கூறினார்:)

எனவே, நாங்களும் (நானும் உபை இப்னு கஅபும்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே சொல்வோம். 2

Book :65


سَأَلْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ عَنِ المُعَوِّذَتَيْنِ؟ فَقَالَ: سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «قِيلَ لِي فَقُلْتُ» فَنَحْنُ نَقُولُ كَمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-4975

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

அல்லாஹ் (எவரிடத்திலும்) எத்தேவையுமில்லாதவன் எனும் (112:2ஆவது) இறைவசனம்.

அரபுகள் தங்களுடைய பிரமுகர்களை அஸ்ஸமத் என்று அழைக்கின்றனர். அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: எவரிடம் தலைமைப் பதவி போய்முடிகிறதோ அத்தகைய (உயர் மட்டத்) தலைவரே அஸ்ஸமத் எனப்படுவார்.

4975. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை ஆரம்பத்தில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். ‘அல்லாஹ் (தனக்குக்) குழந்தையை ஆக்கிக் கொண்டான்’ என்று அவன் கூறுவதே அவன் என்னை ஏசுவதாகும.

ஆனால், நானோ (எவரிடமும்) எந்தத் தேவையுமற்றவன்; நான் யாரையும் பெற்றவனுமல்லன்; யாருக்கும் பிறந்தவனுமல்லன். எனக்கு நிகராக யாருமில்லை. (அல்லாஹ்

قَالَ اللَّهُ: كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، أَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: إِنِّي لَنْ أُعِيدَهُ كَمَا بَدَأْتُهُ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ أَنْ يَقُولَ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا، وَأَنَا الصَّمَدُ الَّذِي لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفُؤًا أَحَدٌ «(لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُؤًا أَحَدٌ)»


Bukhari-4974

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

அவனுடன் அவன் மனைவியும் (அழியட்டும்!) அவளோ விறகு சுமப்பவள் (எனும் 111:4 ஆவது இறைவசனம்).

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்திலுள்ள) ஹம் மாலத்தல் ஹதப் எனும் சொல்லுக்குப் புறம் பேசித் திரிகின்றவள்(முஸ்லிம்களுக்கும் இணை வைப்பாளர்களுக்குமிடையே பகைமையை வளர்ப்பவள்) என்று பொருள்.

(111:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) மசத் எனும் சொல், பனைமர நாருக்குச் சொல்லப்படும். இதுவே (மறுமையில்) நரகத்தின் சங்கிலியைக் குறிக்கும்…

பாடம் : 1

4974. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

அல்லாஹ் கூறினான்: ஆதமின் மகன் என்னை நம்ப மறுக்கிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. அவன் என்னை ஏசுகிறான்; ஆனால், அவனுக்கு அது (தகுதி) இல்லை. நான், (மனிதனான) அவனை முதலில் படைத்தது போன்றே மீண்டும் அவனை நான் படைக்கமாட்டேன் என்று அவன் கூறுவதே அவன் என்னை நம்ப மறுப்பதாகும். (உண்மையில், மனிதன் மரித்த

قَالَ اللَّهُ: كَذَّبَنِي ابْنُ آدَمَ وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، وَشَتَمَنِي وَلَمْ يَكُنْ لَهُ ذَلِكَ، فَأَمَّا تَكْذِيبُهُ إِيَّايَ فَقَوْلُهُ: لَنْ يُعِيدَنِي، كَمَا بَدَأَنِي، وَلَيْسَ أَوَّلُ الخَلْقِ بِأَهْوَنَ عَلَيَّ مِنْ إِعَادَتِهِ، وَأَمَّا شَتْمُهُ إِيَّايَ فَقَوْلُهُ: اتَّخَذَ اللَّهُ وَلَدًا وَأَنَا الأَحَدُ الصَّمَدُ، لَمْ أَلِدْ وَلَمْ أُولَدْ، وَلَمْ يَكُنْ لِي كُفْئًا أَحَدٌ


Bukhari-4973

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3

அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் நுழைவான் எனும் (111:3ஆவது) இறைவசனம்.

4973. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்

‘உமக்கு அழிவுண்டாகட்டும்; இதற்காகவா எங்களை நீ ஒன்று கூட்டினாய்!’ என்று (நபி (ஸல்) அவர்களைப் பார்த்து) அபூ லஹப் கேட்டான். அப்போது ‘அழியட்டும், அபூ லஹபின் இரண்டு கரங்கள்..’ எனும் (111 வது இறைவசனம்) அருளப்பெற்றது.

Book : 65


قَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ، أَلِهَذَا جَمَعْتَنَا؟ ” فَنَزَلَتْ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1] إِلَى آخِرِهَا


Next Page » « Previous Page