Category: புஹாரி

Bukhari

Bukhari-4932

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 அந்த நெருப்பு , மாளிகைகளைப் போன்ற பெரும் பெரும் தீக்கங்குகளைக் கக்கும் எனும் (77:32ஆவது) இறைவசனம்.

4932. அப்துர் ரஹ்மான் இப்னு ஆபிஸ்(ரஹ்) அறிவித்தார்

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள ‘கஸ்ர்’ எனும் சொல்லுக்கு விளக்கம் கூறுகையில்,) இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.

நாங்கள் குளிர்காலத்தில் குளிர் காய்வதற்காக மூன்று முழம், அல்லது அதைவிடக் குறைந்த அளவில் மரக்கட்டைகளை வெட்டி எடுத்துவருவோம். அவற்றுக்கு நாங்கள் ‘கஸர்’ எனப் பெயரிட்டழைத்துவந்தோம். 4

Book : 65


«كُنَّا نَرْفَعُ الخَشَبَ بِقَصَرٍ ثَلاَثَةَ أَذْرُعِ أَوْ أَقَلَّ، فَنَرْفَعُهُ لِلشِّتَاءِ فَنُسَمِّيهِ القَصَرَ»


Bukhari-4931

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4931. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

(ஒருநாள் மினாவிலுள்ள) ஒரு குகையில் நாங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் இருந்துகொண்டிருந்தபோது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றின் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)’ எனும் (77 வது) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து புத்தம் புதியதாக (ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அந்நேரம் பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘அதை விடாதீர்கள்; கொன்று விடுங்கள்’ என்று கூறினார்கள். உடனே (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு (தன்னுடைய புற்றுக்குள் புகுந்து)விட்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள்.

இதே ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :65


بَيْنَا نَحْنُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَارٍ، إِذْ نَزَلَتْ عَلَيْهِ: وَالمُرْسَلاَتِ فَتَلَقَّيْنَاهَا مِنْ فِيهِ، وَإِنَّ فَاهُ لَرَطْبٌ بِهَا، إِذْ خَرَجَتْ حَيَّةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَيْكُمُ اقْتُلُوهَا» قَالَ: فَابْتَدَرْنَاهَا فَسَبَقَتْنَا، قَالَ: فَقَالَ: «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا»


Bukhari-4930

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4930. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

நாங்கள் (ஒருமுறை) இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (மினாவிலுள்ள ஒரு குகையில் தங்கி) இருந்தோம். அப்போது அவர்களுக்கு, ‘வல் முர்சலாத்தி (ஒன்றன் பின் ஒன்றாக அனுப்பப்படுகின்றவை மீது சத்தியமாக!)’ எனும் (77 வது) அருளப்பட்டது. அதை நாங்கள் நபி(ஸல்) அவர்களின் வாயிலிருந்து (அவர்களே ஓதக்) கேட்டுக் கொண்டிருந்தோம். அப்போது பாம்பு ஒன்று (தன்னுடைய புற்றிலிருந்து) வெளிப்பட்டது. (அதைக் கொல்ல) போட்டியிட்டுக் கொண்டு நாங்கள் விரைந்தோம். அது எங்களை முந்திக் கொண்டு தன்னுடைய புற்றுக்குள் நுழைந்துவிட்டது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘நீங்கள் அதன் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டதைப் போன்றே அதுவும் உங்கள் தீங்கிலிருந்து காப்பாற்றப்பட்டுவிட்டது’ என்று கூறினார்கள்.3

Book : 65


كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأُنْزِلَتْ عَلَيْهِ: وَالمُرْسَلاَتِ وَإِنَّا لَنَتَلَقَّاهَا مِنْ فِيهِ، فَخَرَجَتْ حَيَّةٌ، فَابْتَدَرْنَاهَا، فَسَبَقَتْنَا فَدَخَلَتْ جُحْرَهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وُقِيَتْ شَرَّكُمْ كَمَا وُقِيتُمْ شَرَّهَا» حَدَّثَنَا عَبْدَةُ بْنُ عَبْدِ اللَّهِ، أَخْبَرَنَا يَحْيَى بْنُ آدَمَ، عَنْ إِسْرَائِيلَ، عَنْ مَنْصُورٍ بِهَذَا. وَعَنْ إِسْرَائِيلَ، عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ مِثْلَهُ، وَتَابَعَهُ أَسْوَدُ بْنُ عَامِرٍ، عَنْ إِسْرَائِيلَ، وَقَالَ حَفْصٌ، وَأَبُو مُعَاوِيَةَ، وَسُلَيْمَانُ بْنُ قَرْمٍ عَنِ الأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، قَالَ يَحْيَى بْنُ حَمَّادٍ: أَخْبَرَنَا أَبُو عَوَانَةَ، عَنْ مُغِيرَةَ، عَنْ إِبْرَاهِيمَ، عَنْ عَلْقَمَةَ، عَنْ عَبْدِ اللَّهِ، وَقَالَ ابْنُ إِسْحَاقَ: عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الأَسْوَدِ، عَنْ أَبِيهِ، عَنْ عَبْدِ اللَّهِ


Bukhari-4929

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 3

“நபியே! நாம் இதனை ஓதிவிட்டோமாயின் நீங்கள் ஓதுவதைத் தொடருங்கள்” எனும் (அல்குர்ஆன் 75:18) ஆவது இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “நாம் இதனை விவரிக்கும் போது அதன்படி செயல்படுங்கள்” என்று இவ்வசனத்திற்குப் பொருள் எனக் கூறியுள்ளார்கள்.

4929. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 

“(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசரம் அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்” எனும் (அல்குர்ஆன் 75:16) ஆவது வசனம் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) (பின்வருமாறு) கூறினார்கள்:

(வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தம்மிடம் ‘வஹீ’யைக் கொண்டுவரும்போது நபி (ஸல்) அவர்கள் தம் நாவையும், இரண்டு உதடுகளையும் (எங்கே மறந்து விடப்போகிறதோ என்ற அச்சத்தினால், மனனமிடுவதற்காக ஓதியபடி) அசைத்துக் கொண்டிருப்பார்கள். இது அவர்களுக்குச் சிரமமாக இருந்தது. அது அவர்களின் முகத்திலேயே தெரிந்தது.

எனவே, அல்லாஹ்,

فِي قَوْلِهِ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]، قَالَ: ” كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ جِبْرِيلُ بِالوَحْيِ، وَكَانَ مِمَّا يُحَرِّكُ بِهِ لِسَانَهُ وَشَفَتَيْهِ فَيَشْتَدُّ عَلَيْهِ، وَكَانَ يُعْرَفُ مِنْهُ، فَأَنْزَلَ اللَّهُ الآيَةَ الَّتِي فِي: لا أُقْسِمُ بِيَوْمِ القِيَامَةِ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ، إِنَّ عَلَيْنَا جَمْعَهُ وَقُرْآنَهُ} [القيامة: 17] قَالَ: عَلَيْنَا أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ، {وَقُرْآنَهُ فَإِذَا قَرَأْنَاهُ فَاتَّبِعْ قُرْآنَهُ} [القيامة: 17]: فَإِذَا أَنْزَلْنَاهُ فَاسْتَمِعْ، {ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19]: عَلَيْنَا أَنْ نُبَيِّنَهُ بِلِسَانِكَ، قَالَ: فَكَانَ إِذَا أَتَاهُ جِبْرِيلُ أَطْرَقَ، فَإِذَا ذَهَبَ قَرَأَهُ كَمَا وَعَدَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ.

{أَوْلَى لَكَ فَأَوْلَى} [القيامة: 34] تَوَعُّدٌ


Bukhari-4928

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 அதனை (உங்கள் மனத்தில்) ஒன்று சேர்த்து, அதை (நீங்கள்) ஓதும்படி செய்வது எமது பொறுப்பாகும் (எனும் 75:17ஆவது இறை வசனம்).

4928. மூஸா இப்னு அபீ ஆயிஷா(ரஹ்) அறிவித்தார்

நான் ஸயீத் இப்னு ஜுபைர்(ரஹ்) அவர்களிடம், ‘(நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ எனும் (திருக்குர்ஆன் 75:16 வது) இறை வசனம் குறித்துக் கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்:

இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்: தம்மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்படும்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு உதடுகளையும் அசைத்துக் கொண்டிருந்தார்கள். எனவே, (அல்லாஹ்விடமிருந்து) நபி(ஸல்) அவர்களுக்கு ‘வஹீ அருளப்படும்போது அவசர அவசரமாக உங்கள் நாவை அசைக்காதீர்கள்’ என்று உத்தரவிடப்பட்டது. (எங்கே தம் மீது அருளப்படும் வேத வசனங்கள் நினைவில் பதியாமல் மறதியில்,) தம்மைவிட்டு நழுவிப் போய்விடுமோ என்று நபி(ஸல்) அவர்கள் அஞ்சியதே இதற்குக் காரணமாகும்.

‘அதை ஒன்றுசேர்த்து, ஓதும்படி செய்வது எம்முடைய

أَنَّهُ سَأَلَ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، عَنْ قَوْلِهِ تَعَالَى: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} [القيامة: 16] قَالَ: وَقَالَ ابْنُ عَبَّاسٍ: ” كَانَ يُحَرِّكُ شَفَتَيْهِ إِذَا أُنْزِلَ عَلَيْهِ، فَقِيلَ لَهُ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ} [القيامة: 16] يَخْشَى أَنْ يَنْفَلِتَ مِنْهُ، {إِنَّ عَلَيْنَا جَمْعَهُ} [القيامة: 17] وَقُرْآنَهُ، أَنْ نَجْمَعَهُ فِي صَدْرِكَ وَقُرْآنَهُ، أَنْ تَقْرَأَهُ {فَإِذَا قَرَأْنَاهُ} [القيامة: 18] يَقُولُ: أُنْزِلَ عَلَيْهِ: {فَاتَّبِعْ قُرْآنَهُ ثُمَّ إِنَّ عَلَيْنَا بَيَانَهُ} [القيامة: 19] أَنْ نُبَيِّنَهُ عَلَى لِسَانِكَ


Bukhari-4927

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 (நபியே!) இந்த வஹீயை (வேத அறிவிப்பை) அவசர அவசரமாக மனனம் செய்வதற்காக உங்கள் நாவை அசைக்காதீர்கள் (எனும் 75:16ஆவது இறைவசனம்). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (75:36ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) சுதா எனும் சொல்லுக்கு, வெறுமனே என்று பொருள். (75:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) – யஃப்ஜுர அமாமஹு (எதிர்காலத்திலும் தீமை செய்து கொண்டேயிருக்கவேண்டும் என்று விரும்புகிறான்) என்பதற்கு, வெகு விரைவில் பாவமன்னிப்புக் கோருவேன்; நல்லறங்கள் புரிவேன் என்று சொல்லிக் கொண்டே பாவங்களைச் செய்ய விரும்புகிறான்என்று பொருள். (75:11ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) லா வஸர எனும் சொல்லுக்கு, எந்தப் புக-டமும் இருக்காதுஎன்று பொருள்.

4927. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

தம் மீது ‘வஹீ’ (வேத அறிவிப்பு) அருளப்படும்போது, நபி(ஸல்) அவர்கள் (தாம் இதனை எங்கே மறந்துவிடப் போகிறோமோ என்ற அச்சத்தினால் வேக வேகமாக ஓதி,) தம் நாவை அசைப்பவர்களாக இருந்தார்கள். -அருளப்படும் வேத வசனங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு தம் நாவை அசைத்து ஓதினார்கள் என

«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا نَزَلَ عَلَيْهِ الوَحْيُ حَرَّكَ بِهِ لِسَانَهُ – وَوَصَفَ سُفْيَانُ – يُرِيدُ أَنْ يَحْفَظَهُ» فَأَنْزَلَ اللَّهُ: {لاَ تُحَرِّكْ بِهِ لِسَانَكَ لِتَعْجَلَ بِهِ} [القيامة: 16]


Bukhari-4926

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள் (எனும் 74:5ஆவது இறைவசனம்). (இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அர்ருஜ்ஸ் எனும் சொல்லுக்கும் அர்ரிஜ்ஸ் எனும் சொல்லுக்கும் வேதனை என்று பொருள் எனக் கூறப்படுகின்றது.

4926. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

வஹீ (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக் காலத்தைப் பற்றி இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நடந்து போய்க் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டேன். உடனே வானை நோக்கி என் பார்வையை உயர்த்தினேன். அங்கு, ‘ஹிரா’ குகையில் என்னிடம் வந்த அதே வானவர் (ஜிப்ரீல்) வானத்திற்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருந்தார். உடனே நான் அவரைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு (கீழே) பூமியில் விழுந்து விட்டேன். அப்போது நான் (நடுக்கமுற்றவனாக) என் வீட்டாரிடம் (திரும்பி) வந்து (கதீஜாவிடம்), ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்’ என்றேன். அப்போது, ‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள்

أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الوَحْيِ ” فَبَيْنَا أَنَا أَمْشِي سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ، فَرَفَعْتُ بَصَرِي قِبَلَ السَّمَاءِ، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ قَاعِدٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجَئِثْتُ مِنْهُ حَتَّى هَوَيْتُ إِلَى الأَرْضِ، فَجِئْتُ أَهْلِي فَقُلْتُ: زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُونِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {يَا أَيُّهَا المُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ} [المدثر: 2] إِلَى قَوْلِهِ {فَاهْجُرْ} [المدثر: 5]- قَالَ أَبُو سَلَمَةَ: وَالرِّجْزَ الأَوْثَانَ – ثُمَّ حَمِيَ الوَحْيُ وَتَتَابَعَ


Bukhari-4925

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4 மேலும், உங்கள் ஆடைகளைத் தூய்மை யாக வைத்திருங்கள் (எனும் 74:4ஆவது இறைவசனம்).

4925. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் தமக்கு வஹீ (இறைச்செய்தி) (வேத அறிவிப்பு) நின்று போயிருந்த இடைக்காலத்தைப் பற்றி அறிவிக்கையில் (பின் வருமாறு) கூறினார்கள்:

நான் நடந்து போய் கொண்டிருக்கும்போது வானத்திலிருந்து ஒரு குரலைக் கேட்டு என்னுடைய தலையை உயர்த்தினேன். அங்கே, நான் ‘ஹிரா’வில் இருந்தபோது என்னிடம் வந்த வானவர் (ஜிப்ரீல்) வானுக்கும் பூமிக்குமிடையே ஓர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து அச்சமேற்பட்டு நான் அதிர்ச்சிக்குள்ளாக்கப்பட்டேன். உடனே நான் (வீட்டிற்குத்) திரும்பி, (என் துணைவியாரான) கதீஜாவிடம், ‘எனக்குப் போர்த்திவிடுங்கள்: என்று சொன்னேன். அவர்களும் என்னைப் போர்த்திவிட்டார்கள். அப்போது அல்லாஹ், ‘போர்த்தியிருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள். உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்துங்கள். உங்கள் ஆடைகளைத் தூய்மையாக வைத்திருங்கள். அசுத்தத்திலிருந்து விலகியிருங்கள்’

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يُحَدِّثُ عَنْ فَتْرَةِ الوَحْيِ، فَقَالَ فِي حَدِيثِهِ: ” فَبَيْنَا أَنَا أَمْشِي إِذْ سَمِعْتُ صَوْتًا مِنَ السَّمَاءِ فَرَفَعْتُ رَأْسِي، فَإِذَا المَلَكُ الَّذِي جَاءَنِي بِحِرَاءٍ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَجَئِثْتُ مِنْهُ رُعْبًا، فَرَجَعْتُ فَقُلْتُ: زَمِّلُونِي زَمِّلُونِي، فَدَثَّرُونِي، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {يَا أَيُّهَا المُدَّثِّرُ} [المدثر: 1] إِلَى (وَالرِّجْزَ فَاهْجُرْ) قَبْلَ أَنْ تُفْرَضَ الصَّلاَةُ وَهِيَ الأَوْثَانُ


Bukhari-4924

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 3 உங்களுடைய இறைவனைப் பெருமைப்படுத்திடுங்கள் (எனும் 74:3ஆவது இறை வசனம்).

4924. யஹ்யா இப்னு அபீ கஸீர்(ரஹ்) அறிவித்தார்

நான் அபூ ஸலமா(ரஹ்) அவர்களிடம் ‘முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அன்னார், ‘போர்த்தியிருப்பவரே!’ (யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்) எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்றார்கள். அப்போது நான், ‘(நபியே!) படைத்த உங்களுடைய இறைவனின் பெயரால் ஓதுக!’ (இக்ரஃ பிஸ்மி ரப்பிக் கல்லஃதீ கலக்) எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் என்றல்லவா எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது! என்றேன். அதற்கு அபூ ஸலமா(ரஹ்), ‘நான் ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அவர்களிடம், ‘முதன் முதலாக அருளப்பெற்ற குர்ஆன் வசனம் எது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘யா அய்யுஹல் முத்தஸ்ஸிர்’ எனும் (திருக்குர்ஆன் 74:1 வது) வசனம் என்று கூறினார்கள். உடனே நான், ‘இக்ரஃ பிஸ்மி ரப்பிக்கல்லஃதீ கலக்’ எனும் (திருக்குர்ஆன் 96:1 வது) வசனம் தான் (முதன் முதலில் அருளப்பட்ட வசனம்) என்று எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதே! என்று கேட்டேன். அதற்கு ஜாபிர்(ரலி), ‘நபி(ஸல்) அவர்கள் சொன்னதைத்

سَأَلْتُ أَبَا سَلَمَةَ: أَيُّ القُرْآنِ أُنْزِلَ أَوَّلُ؟ فَقَالَ: {يَا أَيُّهَا المُدَّثِّرُ} [المدثر: 1]، فَقُلْتُ: أُنْبِئْتُ أَنَّهُ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} [العلق: 1]، فَقَالَ أَبُو سَلَمَةَ سَأَلْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ أَيُّ القُرْآنِ أُنْزِلَ أَوَّلُ؟ فَقَالَ: {يَا أَيُّهَا المُدَّثِّرُ} [المدثر: 1] فَقُلْتُ: أُنْبِئْتُ أَنَّهُ: {اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ} [العلق: 1]، فَقَالَ: لاَ أُخْبِرُكَ إِلَّا بِمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” جَاوَرْتُ فِي حِرَاءٍ، فَلَمَّا قَضَيْتُ جِوَارِي هَبَطْتُ، فَاسْتَبْطَنْتُ الوَادِيَ فَنُودِيتُ فَنَظَرْتُ أَمَامِي وَخَلْفِي، وَعَنْ يَمِينِي وَعَنْ شِمَالِي، فَإِذَا هُوَ جَالِسٌ عَلَى كُرْسِيٍّ بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَأَتَيْتُ خَدِيجَةَ فَقُلْتُ: دَثِّرُونِي، وَصُبُّوا عَلَيَّ مَاءً بَارِدًا، وَأُنْزِلَ عَلَيَّ: {يَا أَيُّهَا المُدَّثِّرُ قُمْ فَأَنْذِرْ وَرَبَّكَ فَكَبِّرْ} [المدثر: 2]


Bukhari-4923

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 எழுந்து எச்சரிக்கை செய்யுங்கள் எனும் (74:2ஆவது) இறைவசனம்.

4923. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ‘ஹிரா’ மலைக் குகையில் தங்கியிருந்தேன். (எனத் தொடங்கி) மேற்கண்ட ஹதீஸ் போன்றே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 65


«جَاوَرْتُ بِحِرَاءٍ» مِثْلَ حَدِيثِ عُثْمَانَ بْنِ عُمَرَ، عَنْ عَلِيِّ بْنِ المُبَارَكِ


Next Page » « Previous Page