Category: புஹாரி

Bukhari

Bukhari-4828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும்என்று கூறினார்கள். அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டி ருந்தீர்களோ அது தான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு (எனக் கூறப்பட்டது) எனும் (46:24 ஆவது) இறைவசனம். இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்தி லுள்ள) ஆரிள் எனும் சொல்லுக்கு மேகம் என்று பொருள்.

4828. நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) கூறினார்.

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.

Book : 65


مَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَاحِكًا حَتَّى [ص:134] أَرَى مِنْهُ لَهَوَاتِهِ، إِنَّمَا كَانَ يَتَبَسَّمُ


Bukhari-4827

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4827. யூசுஃப் இப்னு மாஹக்(ரஹ்) அறிவித்தார்.

மர்வான் இப்னு அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா(ரலி) நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா(ரலி) அவர்களின் புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அபீ பக்ர்(ரலி) மர்வானுக்கு (மறுப்புக் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் ‘அவரைப் பிடியுங்கள்’! என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே, அப்துர் ரஹ்மான்(ரலி) தம் சகோதரி ஆயிஷா(ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். எனவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான் ‘ஒருவன் தன் பெற்றோரிடம் ‘சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?…’ எனும் (திருக்குர்ஆன் 46:17 வது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில் தான் அல்லாஹ் அருளினான்’ என்று கூறினார். அப்போது ஆயிஷா(ரலி) திரைக்கப்பால்

كَانَ مَرْوَانُ عَلَى الحِجَازِ اسْتَعْمَلَهُ مُعَاوِيَةُ فَخَطَبَ، فَجَعَلَ يَذْكُرُ يَزِيدَ بْنَ مُعَاوِيَةَ لِكَيْ يُبَايَعَ لَهُ بَعْدَ أَبِيهِ، فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ شَيْئًا، فَقَالَ: خُذُوهُ، فَدَخَلَ بَيْتَ عَائِشَةَ فَلَمْ يَقْدِرُوا، فَقَالَ مَرْوَانُ: إِنَّ هَذَا الَّذِي أَنْزَلَ اللَّهُ فِيهِ، {وَالَّذِي قَالَ لِوَالِدَيْهِ أُفٍّ لَكُمَا أَتَعِدَانِنِي} [الأحقاف: 17]، فَقَالَتْ عَائِشَةُ مِنْ وَرَاءِ الحِجَابِ: «مَا أَنْزَلَ اللَّهُ فِينَا شَيْئًا مِنَ القُرْآنِ إِلَّا أَنَّ اللَّهَ أَنْزَلَ عُذْرِي»


Bukhari-4826

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4826. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் என்னைப் புண்படுத்துகிறான். அவன் காலத்தை ஏசுகிறான். நானே காலம் (படைத்தவன்); என் கையிலேயே அதிகாரம் உள்ளது; நானே இரவு பகலை மாறி மாறி வரச் செய்கிறேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :65


يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ، بِيَدِي الأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ


Bukhari-4825

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4825. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(மறுமை நாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாயங்கள் நடந்து (முடிந்து)விட்டன. ஒன்று, (பத்ருப் போரில் எதிரிகளுக்குக் கிடைத்த) தண்டனை இரண்டாவது, ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது). மூன்றாவது, இறைவனின் தண்டனைப் பிடி, நான்காவது, சந்திரன் பிளந்தது. ஐந்தாவது, புகை.

Book :65


حَدَّثَنَا يَحْيَى، حَدَّثَنَا وَكِيعٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ


Bukhari-4824

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4824. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறுசெய்த குறைஷியருக்கெதிராக, ‘இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் (பசியினால்) செத்த பிராணிகளைப் புசிக்கலாயினர். அவர்களில் ஒருவர் பசியினாலும் களைப்பினாலும் எழுந்து (பார்த்தால் கண் பஞ்சடைந்துப் போய்) தமக்கும் வானுக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். பிறகு, ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்’ என்று தொடங்கி, ‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்’ என்று முடியும் (திருக்குர்ஆன்

إِنَّ اللَّهَ بَعَثَ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: {قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ المُتَكَلِّفِينَ} [ص: 86] فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا رَأَى قُرَيْشًا اسْتَعْصَوْا عَلَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» فَأَخَذَتْهُمُ السَّنَةُ حَتَّى حَصَّتْ كُلَّ شَيْءٍ، حَتَّى أَكَلُوا العِظَامَ وَالجُلُودَ، فَقَالَ أَحَدُهُمْ: حَتَّى أَكَلُوا الجُلُودَ وَالمَيْتَةَ، وَجَعَلَ يَخْرُجُ مِنَ الأَرْضِ كَهَيْئَةِ الدُّخَانِ، فَأَتَاهُ أَبُو سُفْيَانَ، فَقَالَ: أَيْ مُحَمَّدُ، إِنَّ قَوْمَكَ قَدْ هَلَكُوا، فَادْعُ اللَّهَ أَنْ يَكْشِفَ عَنْهُمْ، فَدَعَا، ثُمَّ قَالَ: تَعُودُونَ بَعْدَ هَذَا – فِي حَدِيثِ مَنْصُورٍ – ثُمَّ قَرَأَ: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} [الدخان: 10] إِلَى {عَائِدُونَ} [الدخان: 15] أَنَكْشِفُ عَنْهُمْ عَذَابَ الآخِرَةِ؟ فَقَدْ مَضَى: الدُّخَانُ، وَالبَطْشَةُ وَاللِّزَامُ، وَقَالَ أَحَدُهُمْ: القَمَرُ، وَقَالَ الآخَرُ: وَالرُّومُ


Bukhari-4823

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4823. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். (சிறு உரையாடலுக்குப்) பிறகு அவர்கள் கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மை நம்ப மறுத்துத் தமக்கு மாறுசெய்த குறைஷியருக்கெதிராக, ‘இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்ச) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களுக்குப் பஞ்சம் ஏற்பட்டு, எல்லாவற்றையும் அழித்துவிட்டது. எந்த அளவுக்கென்றால், அவர்கள் (பசியினால்) செத்த பிராணிகளைப் புசிக்கலாயினர். அவர்களில் ஒருவர் பசியினாலும் களைப்பினாலும் எழுந்து (பார்த்தால் கண் பஞ்சடைந்துப் போய்) தமக்கும் வானுக்குமிடையே புகை போன்ற ஒன்றையே காண்பார். பிறகு, ‘(நபியே!) வெளிப்படையானதொரு புகை வானிலிருந்து வரும் நாளை எதிர்பார்த்திருங்கள்’ என்று தொடங்கி, ‘மெய்யாகவே (நீங்கள் உணர்வு பெறக் கூடுமென்று) அவ்வேதனையை இன்னும் சிறிது காலத்திற்கு நீக்கி வைத்தோம். எனினும், நீங்கள் (பாவத்திற்கே) திரும்பச் செல்கிறீர்கள்’ என்று முடியும் (திருக்குர்ஆன்

دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا دَعَا قُرَيْشًا كَذَّبُوهُ وَاسْتَعْصَوْا عَلَيْهِ، فَقَالَ: «اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ» فَأَصَابَتْهُمْ سَنَةٌ حَصَّتْ، يَعْنِي كُلَّ شَيْءٍ، حَتَّى كَانُوا يَأْكُلُونَ المَيْتَةَ، فَكَانَ يَقُومُ أَحَدُهُمْ فَكَانَ يَرَى بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ مِثْلَ الدُّخَانِ مِنَ الجَهْدِ وَالجُوعِ، ثُمَّ قَرَأَ: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ، يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ} [الدخان: 11]، حَتَّى بَلَغَ {إِنَّا كَاشِفُو العَذَابِ قَلِيلًا إِنَّكُمْ عَائِدُونَ} [الدخان: 15]، قَالَ عَبْدُ اللَّهِ أَفَيُكْشَفُ عَنْهُمُ العَذَابُ يَوْمَ القِيَامَةِ؟ قَالَ: وَالبَطْشَةُ الكُبْرَى يَوْمَ بَدْرٍ


Bukhari-4822

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4822. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

(ஒருமுறை) நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: நீங்கள் அறியாத ஒன்றைக் குறித்து (கேட்கப்படும்போது,) ‘அல்லாஹ்வே நன்கறிவான்’ என்று கூறுவது அறிவின்பாற்பட்டதாகும். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரிடம், ‘(நபியே! அவர்களிடம்) நீங்கள் கூறிவிடுங்கள்: இந்த (அழைப்பு)ப் பணிக்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. மேலும், நான் (இல்லாததைச் சொல்லி) பவானை செய்வோரில் ஒருவன் அல்லன்’ என்று கூறியுள்ளான். (திருக்குர்ஆன் 38:86). குறைஷியர் நபி(ஸல்) அவர்களிடம் வரம்பு மீறி நடந்து, மாறுசெய்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘இறைவா! யூசுஃப்(அலை) அவர்களின் (காலத்து) ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைப் போல் இவர்களுக்கும் ஏழு (பஞ்சம் நிறைந்த) ஆண்டுகளைக் கொடுத்து, இவர்களுக்கெதிராக எனக்கு உதவுவாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள். அவ்வாறே அவர்களைப் பஞ்சம் வாட்டியது. மக்கள் (பசிக்) கொடுமையால் எலும்புகளையும், செத்தவற்றையும் தின்றனர். அவர்களில் ஒருவர் பசி மயக்கத்தால், (கண் பஞ்சடைந்து) தமக்கும் வானத்திற்குமிடையே புகை போன்ற ஒன்றையே

دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ، فَقَالَ: إِنَّ مِنَ العِلْمِ أَنْ تَقُولَ لِمَا لاَ تَعْلَمُ اللَّهُ أَعْلَمُ، إِنَّ اللَّهَ قَالَ لِنَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: {قُلْ مَا أَسْأَلُكُمْ عَلَيْهِ مِنْ أَجْرٍ وَمَا أَنَا مِنَ المُتَكَلِّفِينَ} [ص: 86] إِنَّ قُرَيْشًا لَمَّا غَلَبُوا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَعْصَوْا عَلَيْهِ، قَالَ: ” اللَّهُمَّ أَعِنِّي عَلَيْهِمْ بِسَبْعٍ كَسَبْعِ يُوسُفَ فَأَخَذَتْهُمْ سَنَةٌ أَكَلُوا فِيهَا العِظَامَ وَالمَيْتَةَ مِنَ الجَهْدِ، حَتَّى جَعَلَ أَحَدُهُمْ يَرَى مَا بَيْنَهُ وَبَيْنَ السَّمَاءِ كَهَيْئَةِ الدُّخَانِ مِنَ الجُوعِ، قَالُوا: {رَبَّنَا اكْشِفْ عَنَّا العَذَابَ إِنَّا مُؤْمِنُونَ} [الدخان: 12] فَقِيلَ لَهُ: إِنْ كَشَفْنَا عَنْهُمْ [ص:132] عَادُوا، فَدَعَا رَبَّهُ فَكَشَفَ عَنْهُمْ فَعَادُوا، فَانْتَقَمَ اللَّهُ مِنْهُمْ يَوْمَ بَدْرٍ، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ} [الدخان: 10] إِلَى قَوْلِهِ جَلَّ ذِكْرُهُ {إِنَّا مُنْتَقِمُونَ} [الدخان: 16]


Bukhari-4821

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4821. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார்.

(குறைஷியருக்கு ஏற்பட்ட) இந்தப் பஞ்சத்திற்குக் காரணம், குறைஷியர் நபி(ஸல்) அவர்களுக்கு மாறுசெய்தபோது நபி(ஸல்) அவர்கள், ‘யூசுஃப்(அலை) அவர்களின் காலத்துப் பஞ்சத்தைப் போன்று இவர்களுக்கும் ஏற்படட்டும்’ எனக் குறைஷியருக்கு எதிராகப் பிரார்த்தித்தார்கள். அதையடுத்து அவர்களுக்குப் பஞ்சமும் கஷ்டமும் ஏற்பட்டது. எலும்புகளை அவர்கள் சாப்பிடும் அளவிற்கு(ப் பஞ்சம் கடுமையாக இருந்தது.) அவர்களில் ஒருவர் (கடும் பசியினால் கண் பஞ்சடைந்து) களைப்படைந்து தமக்கும் வானத்திற்கும் இடையே புகை போன்ற ஒன்றையே காணலானார். அப்போது அல்லாஹ், ‘(நபியே!) வெளிப்படையொனதொரு புகை வானிலிருந்து வரும் நாளை நீங்கள் எதிர்பார்த்திருங்கள். அது மனிதர்களைச் சூழ்ந்து கொள்ளும்; அது துன்புறுத்தும் வேதனை ஆகும்’ எனும் (திருக்குர்ஆன் 44:10, 11ஆகிய) வசனங்களை அருளினான். அப்போது ஒருவர் (அபூ சுஃப்யான்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! முளர் குலத்தாருக்கு மழைவேண்டிப் பிரார்த்தியுங்கள். அவர்கள் அழிவுக்குள்ளாகி விட்டார்கள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘முளர் குலத்தினருக்கா?

إِنَّمَا كَانَ هَذَا، لِأَنَّ قُرَيْشًا لَمَّا اسْتَعْصَوْا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَا عَلَيْهِمْ بِسِنِينَ كَسِنِي يُوسُفَ، فَأَصَابَهُمْ قَحْطٌ وَجَهْدٌ حَتَّى أَكَلُوا العِظَامَ، فَجَعَلَ الرَّجُلُ يَنْظُرُ إِلَى السَّمَاءِ فَيَرَى مَا بَيْنَهُ وَبَيْنَهَا كَهَيْئَةِ الدُّخَانِ مِنَ الجَهْدِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {فَارْتَقِبْ يَوْمَ تَأْتِي السَّمَاءُ بِدُخَانٍ مُبِينٍ. يَغْشَى النَّاسَ هَذَا عَذَابٌ أَلِيمٌ} [الدخان: 11] قَالَ: فَأُتِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقِيلَ لَهُ: يَا رَسُولَ اللَّهِ: اسْتَسْقِ اللَّهَ لِمُضَرَ، فَإِنَّهَا قَدْ هَلَكَتْ، قَالَ: «لِمُضَرَ؟ إِنَّكَ لَجَرِيءٌ» فَاسْتَسْقَى لَهُمْ فَسُقُوا، فَنَزَلَتْ: {إِنَّكُمْ عَائِدُونَ} [الدخان: 15] فَلَمَّا أَصَابَتْهُمُ الرَّفَاهِيَةُ عَادُوا إِلَى حَالِهِمْ حِينَ أَصَابَتْهُمُ الرَّفَاهِيَةُ، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {يَوْمَ نَبْطِشُ البَطْشَةَ الكُبْرَى إِنَّا مُنْتَقِمُونَ} [الدخان: 16] قَالَ: يَعْنِي يَوْمَ بَدْرٍ


Bukhari-4820

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4820. மஸ்ரூக் இப்னு அஜ்தஉ(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), ‘(மறுமைநாளின் அடையாளங்களில்) ஐந்து அடையாளங்கள் நடந்து(முடிந்து)விட்டன. ஒன்று புகை; இரண்டாவது ரோமர்கள் (பாரசீகர்களால் தோற்கடிக்கப்பட்டு மீண்டும் வெற்றி கண்டது); மூன்றாவது சந்திரன் பிளந்தது; நான்காவதும், ஐந்தாவதும் இறைவனின் தண்டனைப் பிடியும் அவனுடைய வேதனையும்’ என்று கூறினார்கள்.

Book :65


مَضَى خَمْسٌ: الدُّخَانُ، وَالرُّومُ، وَالقَمَرُ، وَالبَطْشَةُ، وَاللِّزَامُ


Bukhari-4819

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4819. யஅலா இப்னு உமைய்யா அத்தமீமி(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், உரைமேடை (மிம்பர்) மீதிருந்தபடி, ‘(நரகத்தின் பொறுப்பாளரான வானவர்) மாலிக்கே! உங்களுடைய இறைவன் எங்களுக்கு (மரணத்தின் மூலமாவது) தீர்ப்பளிக்கட்டும்!’ என்று (நரகவாசிகள்) சப்தமிடுவார்கள்’ எனும் (திருக்குர்ஆன் 43:77 வது) வசனத்தை ஓதக் கேட்டேன்.

கத்தாதா(ரஹ்) கூறினார்

(திருக்குர்ஆன் 43:56 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘மஸலன் லில் ஆம்ரீன்’ எனும் சொற்றொடருக்குப் ‘பிற்கால மக்களுக்கு அறிவுரையாக (ஆக்கினோம்)’ என்று பொருள்.

கத்தாதா(ரஹ்) அல்லாதோர் கூறினார்

(திருக்குர்ஆன் 43:13 வது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முக்ரினீன்’ எனும் சொல்லுக்குக் ‘கட்டுப்படுத்தக் கூடியவர்கள்’ என்று பொருள். ‘இன்னார் இன்னாரைக் கட்டுப்படுத்தக் கூடியவர்’ என்பதைக் குறிக்க ‘முக்ரின்’ எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

(திருக்குர்ஆன் 43:71 வது வசனத்தின்

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ عَلَى المِنْبَرِ: ” {وَنَادَوْا يَا مَالِكُ لِيَقْضِ عَلَيْنَا رَبُّكَ} [الزخرف: 77] ” وَقَالَ قَتَادَةُ: {مَثَلًا لِلْآخِرِينَ} [الزخرف: 56]: «عِظَةً لِمَنْ بَعْدَهُمْ» وَقَالَ غَيْرُهُ: {مُقْرِنِينَ} [إبراهيم: 49]: ” ضَابِطِينَ، يُقَالُ: فُلاَنٌ مُقْرِنٌ لِفُلانٍ ضَابِطٌ لَهُ، وَالأَكْوَابُ الأَبَارِيقُ الَّتِي لا خَرَاطِيمَ لَهَا “، {أَوَّلُ العَابِدِينَ} [الزخرف: 81]: «أَيْ مَا كَانَ، فَأَنَا أَوَّلُ الآنِفِينَ، وَهُمَا لُغَتَانِ رَجُلٌ عَابِدٌ وَعَبِدٌ» وَقَرَأَ عَبْدُ اللَّهِ: ” وَقَالَ الرَّسُولُ: يَا رَبِّ ” وَيُقَالُ: {أَوَّلُ العَابِدِينَ} [الزخرف: 81]: «الجَاحِدِينَ، مِنْ عَبِدَ يَعْبَدُ» وَقَالَ قَتَادَةُ: ” فِي أُمِّ الكِتَابِ: جُمْلَةِ الكِتَابِ أَصْلِ الكِتَابِ ” {أَفَنَضْرِبُ عَنْكُمُ الذِّكْرَ صَفْحًا أَنْ كُنْتُمْ قَوْمًا مُسْرِفِينَ} [الزخرف: 5]: «مُشْرِكِينَ، وَاللَّهِ لَوْ أَنَّ هَذَا القُرْآنَ رُفِعَ حَيْثُ رَدَّهُ أَوَائِلُ هَذِهِ الأُمَّةِ لَهَلَكُوا»، {فَأَهْلَكْنَا أَشَدَّ [ص:131] مِنْهُمْ بَطْشًا وَمَضَى مَثَلُ الأَوَّلِينَ} [الزخرف: 8]: «عُقُوبَةُ الأَوَّلِينَ»، {جُزْءًا} [البقرة: 260]: «عِدْلًا»


Next Page » « Previous Page