Category: புஹாரி

Bukhari

Bukhari-4808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 (இறைவா!) எனக்குப் பின் எவருக்கும் கிடைக்க முடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக! திண்ணமாக, நீயே உண்மையான கொடையாளன் (என்று சுலைமான் கூறினார்) எனும் (38:35ஆவது) வசனத் தொடர்.

4808. நபி(ஸல்) அவர்கள் (ஒரு நாள்) கூறினார்கள்:

முரட்டு ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காக திடீரென்று வந்து நின்றது – என்றோ, இதைப் போன்ற வார்த்தையையோ கூறினார்கள் – அதன் மீது அல்லாஹ் எனக்கு சக்தியை வழங்கினான். நீங்கள் அனைவரும் காலையில் வந்து அதைக் காணும்வரை இந்தப் பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அதைக் கட்டிவைக்க விரும்பினேன். அப்போது ‘இறைவா! எனக்குப் பின்வேறு எவருக்கும் கிடைக்கமுடியாத ஓர் ஆட்சியதிகாரத்தை எனக்கு நீ வழங்குவாயாக’ (திருக்குர்ஆன் 38:35) என்று என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த வேண்டுதல் என் நினைவுக்கு வந்தது.

ரவ்ஹ் இப்னு உபாதா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில் ‘எனவே, அதை நான் விரட்டி அடித்துவிட்டேன்’ என்றும் இடம் பெற்றுள்ளது.

என அபூ ஹுரைரா(ரலி)

إِنَّ عِفْرِيتًا مِنَ الجِنِّ تَفَلَّتَ عَلَيَّ البَارِحَةَ – أَوْ كَلِمَةً نَحْوَهَا – لِيَقْطَعَ عَلَيَّ الصَّلاَةَ فَأَمْكَنَنِي اللَّهُ مِنْهُ، وَأَرَدْتُ أَنْ أَرْبِطَهُ إِلَى سَارِيَةٍ مِنْ سَوَارِي المَسْجِدِ، حَتَّى تُصْبِحُوا وَتَنْظُرُوا إِلَيْهِ كُلُّكُمْ، فَذَكَرْتُ قَوْلَ أَخِي سُلَيْمَانَ: {رَبِّ هَبْ لِي مُلْكًا لاَ يَنْبَغِي لِأَحَدٍ مِنْ بَعْدِي}، قَالَ رَوْحٌ: فَرَدَّهُ خَاسِئًا


Bukhari-4807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4807. அவ்வாம் பின் ஹவ்ஷப் அஷ் ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் முஜாஹித் (ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்தின் (ஓதலுக்குரிய)சஜ்தா (வசனம்) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், ‘‘தாங்கள் (ஸாத் அத்தியாயத்தில்) சஜ்தா செய்வதற்கு என்ன ஆதாரம் உள்ளது?” என்று கேட்டேன்.

அதற்கு அன்னார், ‘‘மேலும், இப்ராஹீமுடைய வழித்தோன்றல்களே தாவூதும் சுலைமானும்” என்று தொடங்கி, ‘‘(நபியே!) அவர்கள்தான் அல்லாஹ்வால் நல்வழிகாட்டப்பட்டவர்கள். அவர்களு டைய வழியினையே நீங்களும் பின்பற்றுங்கள்…” என்று முடியும் (அல்குர்ஆன்: 6:84-90) ஆகிய வசனங்களை நீங்கள் ஓதவில்லையா? என்று கேட்டார்கள்.

பிறகு, ‘‘எவரைப் பின்பற்றுமாறு உங்கள் நபி (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்ததோ அத்தகையவர்களில் தாவூத் (அலை) அவர்களும் ஒருவராவார். எனவே (நபி தாவூத் (அலை) அவர்களைப் பின்பற்றி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக) சஜ்தா செய்தார்கள். (எனவே, நாமும் ‘ஸாத்’ அத்தியாயத்தில் நன்றிக்காக சஜ்தா செய்ய வேண்டும்) என்று பதிலளித்தார்கள்..


(38:5ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘உஜாப்’ எனும்

سَأَلْتُ مُجَاهِدًا، عَنْ سَجْدَةٍ فِي ص، فَقَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ: مِنْ أَيْنَ سَجَدْتَ؟ فَقَالَ: أَوَمَا تَقْرَأُ: {وَمِنْ ذُرِّيَّتِهِ دَاوُدَ وَسُلَيْمَانَ}. {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} [الأنعام: 90] «فَكَانَ دَاوُدُ مِمَّنْ أُمِرَ نَبِيُّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَقْتَدِيَ بِهِ، فَسَجَدَهَا دَاوُدُ عَلَيْهِ السَّلاَمُ، فَسَجَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


{عُجَابٌ} [ص: 5]: ” عَجِيبٌ. القِطُّ: الصَّحِيفَةُ هُوَ هَا هُنَا صَحِيفَةُ الحِسَابِ ” وَقَالَ مُجَاهِدٌ: {فِي عِزَّةٍ} [ص: 2]: «مُعَازِّينَ»، {المِلَّةِ الآخِرَةِ} [ص: 7]: ” مِلَّةُ قُرَيْشٍ، الاِخْتِلاَقُ: الكَذِبُ “، {الأَسْبَابُ} [البقرة: 166]: «طُرُقُ السَّمَاءِ فِي أَبْوَابِهَا»، قَوْلُهُ: {جُنْدٌ مَا هُنَالِكَ مَهْزُومٌ} [ص: 11]: «يَعْنِي قُرَيْشًا»، {أُولَئِكَ الأَحْزَابُ} [ص: 13]: «القُرُونُ المَاضِيَةُ»، {فَوَاقٍ} [ص: 15]: «رُجُوعٍ»، {قِطَّنَا} [ص: 16]: «عَذَابَنَا» (اتَّخَذْنَاهُمْ سُخْرِيًّا): «أَحَطْنَا بِهِمْ»، {أَتْرَابٌ} [ص: 52]: «أَمْثَالٌ» وَقَالَ ابْنُ عَبَّاسٍ: {الأَيْدُ} [ص: 17]: «القُوَّةُ فِي العِبَادَةِ»، {الأَبْصَارُ} [ص: 45]: «البَصَرُ فِي أَمْرِ اللَّهِ»، {حُبَّ الخَيْرِ عَنْ ذِكْرِ رَبِّي} [ص: 32]: «مِنْ ذِكْرِ»، {طَفِقَ مَسْحًا}: «يَمْسَحُ أَعْرَافَ الخَيْلِ وَعَرَاقِيبَهَا»، {الأَصْفَادِ} [إبراهيم: 49]: «الوَثَاقِ»


Bukhari-4806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1

4806. அவ்வாம் இப்னு ஹவ்ஷப் அஷ்ஷைபானீ(ரஹ்) அறிவித்தார்.

நான் முஜாஹித்(ரஹ்) அவர்களிடம், ‘ஸாத்’ அத்தியாயத்திலுள்ள (ஓதலுக்குரிய) சஜ்தா (வசனம்) தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், ‘இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் (இது குறித்துக்) கேட்கப்பட்டபோது அதற்கு அன்னார், ‘(நபியே!) அவர்கள் தாம் அல்லாஹ்வினால் நேர்வழி காட்டப்பட்டவர்கள். அவர்களின் வழியினையே நீங்களும் பின்பற்றிச் செல்லுங்கள்..’ என்ற (திருக்குர்ஆன் 06:90 வது) வசனத்தை பதிலாகக் கூறினார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) இந்த வசனத்தில் (ஓதலுக்குரிய) சஜ்தா செய்வது வழக்கம்.

Book : 65


سَأَلْتُ مُجَاهِدًا، عَنِ السَّجْدَةِ، فِي ص، قَالَ: سُئِلَ ابْنُ عَبَّاسٍ فَقَالَ: {أُولَئِكَ الَّذِينَ هَدَى اللَّهُ فَبِهُدَاهُمُ اقْتَدِهْ} [الأنعام: 90] «وَكَانَ ابْنُ عَبَّاسٍ يَسْجُدُ فِيهَا»


Bukhari-4805

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4805. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

‘நான் யூனுஸ் இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர்’ என்று (என்னைக் குறித்து புகழ்ந்து) கூறுகிறவர் பொய் சொல்லிவிட்டார்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Book :65


مَنْ قَالَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى فَقَدْ كَذَبَ


Bukhari-4804

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 நிச்சயமாக யூனுஸும் (இறைத்) தூதர்களாக அனுப்பப்பட்டவர்களில் ஒருவராவார் எனும் (37:139ஆவது) இறைவசனம்.

4804. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

‘எவரும் தம்மை (இறைத்தூதர் யூனுஸ்) இப்னு மத்தாவைவிடச் சிறந்தவர் என வாதிடுவது தகாது’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Book : 65


«مَا يَنْبَغِي لِأَحَدٍ أَنْ يَكُونَ خَيْرًا مِنْ يُونُسَ بْنِ مَتَّى»


Bukhari-4803

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4803. அபூ தர்(ரலி) அறிவித்தார்.

நான், நபி(ஸல்) அவர்களிடம், ‘சூரியன், தான் நிலைகொள்ளும் இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது’ எனும் (திருக்குர்ஆன் 36:38 வது) வசனம் தொடர்பாகக் கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், ‘அதன் நிலை கொள்ளுமிடம் இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே உள்ளது’ என்று கூறினார்கள்.

Book :65


سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ تَعَالَى: {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ لَهَا} [يس: 38] قَالَ: «مُسْتَقَرُّهَا تَحْتَ العَرْشِ»


Bukhari-4802

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்: 35.

‘அல்மலாயிகா’ (ஃபாத்திர்) அத்தியாயம்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (35:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘கித்மீர்’ எனும் சொல்லுக்கு ‘பேரீச்சங் கொட்டையினை மூடியுள்ள (மெல்லிய) இழை’ என்பது பொருள். (35:18ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘முஸ்கலா’ எனும் சொல்லுக்கு ‘(பாவச்) சுமை ஏற்றப்பட்ட (ஆத்மா)’ என்பது பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (35:21ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அல்ஹரூர்’ எனும் சொல், இரவு நேர வெப்பத்தைக் குறிக்கும். (மற்றொரு சொல்லான) ‘சமூம்’ என்பது, பகல் நேர வெப்பத்தைக் குறிக்கும். மற்றவர்கள் கூறுகின்றனர்: ‘அல்ஹரூர்’ என்பது, பகல் நேர வெயிலைக் குறிக்கும். (35:27ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃகராபீப்’ எனும் சொல்லுக்கு ‘அடர்ந்த கரிய நிறம் கொண்டவை’ என்பது பொருள்.

பாடம்: 36. ‘யாசீன்’ அத்தியாயம்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (36:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘ஃபஅஸ்ஸஸ்னா’ எனும் சொல்லுக்கு ‘நாம் வலுவூட்டினோம்’ என்று பொருள். (36:30ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘யா ஹஸ்ரத்தன் அலல் இபாத்’ (அந்தோ! அடியார்களுக்கு ஏற்பட்ட நஷ்டமே!) என்பதன் கருத்தாவது: இறைத் தூதர்களை அவர்கள் பரிகாசம் செய்ததே அவர்களது நஷ்டத்திற்குக் காரணமாக அமைந்தது. (36:40ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ‘அன் துத்ரிகல் கமர’

كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي المَسْجِدِ عِنْدَ غُرُوبِ الشَّمْسِ، فَقَالَ: «يَا أَبَا ذَرٍّ أَتَدْرِي أَيْنَ تَغْرُبُ الشَّمْسُ؟» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّهَا تَذْهَبُ حَتَّى تَسْجُدَ تَحْتَ العَرْشِ»، فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {وَالشَّمْسُ تَجْرِي لِمُسْتَقَرٍّ} [يس: 38] لَهَا ذَلِكَ تَقْدِيرُ العَزِيزِ العَلِيمِ


Bukhari-4801

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2 (இறைத்தூதரான) அவரோ ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவர் மட்டுமே ஆவார் (எனும் 34:46ஆவது வசனத் தொடர்).
4801. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
ஒருநாள் நபி(ஸல்) அவர்கள் ‘ஸஃபா’ மலைக்குன்றின் மீது ஏறி, ‘யா ஸபாஹா!’ (‘உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!’) என்று கூறினார்கள்.உடனே அவர்களை நோக்கி குறையுயர் ஒன்றுதிரண்டு வந்து, ‘உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?’ என்று கேட்டனர். நபி(ஸல்) அவர்கள், ‘எதிரிகள், காலையிலோ, மனைவியிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?’ என்று கேட்டார்கள். ‘ஆம் (நம்புவோம்)’ என்று அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்’ என்று கூறினார்கள். உடனே அபூ லஹப், ‘உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்று கூட்டினாயா?’ என்று கேட்டான். உடனே அல்லாஹ், ‘அபூ லஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்..’ எனும் (திருக்குர்ஆன் 111:1 வது) வசனத்தை அருளினான்.
Book : 65


صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّفَا ذَاتَ يَوْمٍ، فَقَالَ: «يَا صَبَاحَاهْ»، فَاجْتَمَعَتْ إِلَيْهِ قُرَيْشٌ، قَالُوا: مَا لَكَ؟ قَالَ: «أَرَأَيْتُمْ لَوْ أَخْبَرْتُكُمْ أَنَّ العَدُوَّ يُصَبِّحُكُمْ أَوْ يُمَسِّيكُمْ، أَمَا كُنْتُمْ تُصَدِّقُونِي؟» قَالُوا: بَلَى، قَالَ: «فَإِنِّي نَذِيرٌ لَكُمْ بَيْنَ يَدَيْ عَذَابٍ شَدِيدٍ» فَقَالَ أَبُو لَهَبٍ: تَبًّا لَكَ، أَلِهَذَا جَمَعْتَنَا؟ فَأَنْزَلَ اللَّهُ: {تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ} [المسد: 1]


Bukhari-4800

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 (தீர்ப்பு நாளன்று) மக்களின் உள்ளங்களிலிருந்து அச்சம் அகற்றப்படும் போது (பரிந்துரை புரிபவர்களிடம்),உங்களுடைய இறைவன் என்ன (பதில்) சொன்னான்? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு, சரியான பதில் தந்துள்ளான். அவன் மிக உயர்ந்தவனும் பெரியவனாகவும் இருக்கிறான் என்று கூறுவார்கள் (எனும் 34:23ஆவது வசனத் தொடர்).

4800. அனஸ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (ஒத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் இப்னு சலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்தபோது எட்டியது. உடனே அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ‘தங்களிடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்’ என்று கூறினார்கள். பிறகு, ‘1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘சற்று முன்புதான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து (விளக்கம்) தெரிவித்தார்’

إِذَا قَضَى اللَّهُ الأَمْرَ فِي السَّمَاءِ، ضَرَبَتِ المَلاَئِكَةُ بِأَجْنِحَتِهَا خُضْعَانًا لِقَوْلِهِ، كَأَنَّهُ سِلْسِلَةٌ عَلَى صَفْوَانٍ، فَإِذَا فُزِّعَ عَنْ قُلُوبِهِمْ قَالُوا: مَاذَا قَالَ رَبُّكُمْ؟ قَالُوا لِلَّذِي قَالَ: الحَقَّ، وَهُوَ العَلِيُّ الكَبِيرُ، فَيَسْمَعُهَا مُسْتَرِقُ السَّمْعِ، وَمُسْتَرِقُ السَّمْعِ هَكَذَا بَعْضُهُ فَوْقَ بَعْضٍ – وَوَصَفَ سُفْيَانُ بِكَفِّهِ فَحَرَفَهَا، وَبَدَّدَ بَيْنَ أَصَابِعِهِ – فَيَسْمَعُ الكَلِمَةَ فَيُلْقِيهَا إِلَى مَنْ تَحْتَهُ، ثُمَّ يُلْقِيهَا الآخَرُ إِلَى مَنْ تَحْتَهُ، حَتَّى يُلْقِيَهَا عَلَى لِسَانِ السَّاحِرِ أَوِ الكَاهِنِ، فَرُبَّمَا أَدْرَكَ الشِّهَابُ قَبْلَ أَنْ يُلْقِيَهَا، وَرُبَّمَا أَلْقَاهَا قَبْلَ أَنْ يُدْرِكَهُ، فَيَكْذِبُ مَعَهَا مِائَةَ كَذْبَةٍ، فَيُقَالُ: أَلَيْسَ قَدْ قَالَ لَنَا يَوْمَ كَذَا وَكَذَا: كَذَا وَكَذَا، فَيُصَدَّقُ بِتِلْكَ الكَلِمَةِ الَّتِي سَمِعَ مِنَ السَّمَاءِ


Bukhari-4799

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 11

மூசாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள் எனும் (திருக்குர்ஆன் 33:69 ஆவது) வசனத் தொடர்.

4799. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூஸா (அலை) அவர்கள் அதிகம் வெட்கப்படுபவர்களாக இருந்தார்கள்.

‘மூஸாவைப் புண்படுத்தியவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள். அவர்கள் சொன்ன குறைபாட்டிலிருந்து அவர் தூய்மையானவர் என்பதை அல்லாஹ் நிரூபித்தான். அவர் அல்லாஹ்விடம் கண்ணியம் பொருந்தியவராய் இருந்தார்’ எனும் (திருக்குர்ஆன் 33:69 வது) இறைவசனம் அதைத்தான் குறிக்கிறது.

அத்தியாயம்: 65


إِنَّ مُوسَى كَانَ رَجُلًا حَيِيًّا، وَذَلِكَ قَوْلُهُ تَعَالَى: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَكُونُوا كَالَّذِينَ آذَوْا مُوسَى فَبَرَّأَهُ اللَّهُ مِمَّا قَالُوا، وَكَانَ عِنْدَ اللَّهِ وَجِيهًا} [الأحزاب: 69]


Next Page » « Previous Page