Category: புஹாரி

Bukhari

Bukhari-3533

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3533. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைஷி (மறுப்பாளர்)களின் திட்டுதலையும், அவர்களின் சபித்தலையும் என்னைவிட்டு அல்லாஹ் எப்படி திருப்பி விடுகிறான் என்பதைக் கண்டு நீங்கள் வியப்படைய வில்லையா? (என்னை) ‘முதம்மம்’ (இகழப்படுவர்)’ என்று (சொல்லி) ஏசுகிறார்கள்; சபிக்கிறார்கள். ஆனால் நானோ ‘முஹம்மத்’ (புகழப்படுபவர்) ஆவேன்.
அத்தியாயம்: 61


أَلاَ تَعْجَبُونَ كَيْفَ يَصْرِفُ اللَّهُ عَنِّي شَتْمَ قُرَيْشٍ وَلَعْنَهُمْ، يَشْتِمُونَ مُذَمَّمًا، وَيَلْعَنُونَ مُذَمَّمًا وَأَنَا مُحَمَّدٌ»


Bukhari-3532

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 17

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் இறைவசனங்கள் (48:29, 61:6)

அல்லாஹ் கூறுகிறான்:

முஹம்மத், அல்லாஹ்வின் தூதர் ஆவார். அவருடன் இருப்பவர்கள் இறை மறுப்பாளர்களைப் பொறுத்துக் கடினமானவர்களும் தங்களுக்கிடையே கருணைமிக்கவர்களும் ஆவர். (அல்குர்ஆன்: 48:29)

மர்யமின் மைந்தர் ஈஸா இவ்வாறு கூறியதையும் நினைவு கூருங்கள்:

இஸ்ராயீலின் வழித்தோன்றல்களே! நான் அல்லாஹ்வினால் உங்களிடம் அனுப்பப்பட்டிருக்கும் தூதராவேன். நான், எனக்கு முன்பே வந்துள்ள தவ்ராத் வேதத்தை மெய்ப்படுத்தத் கூடியவனாய் இருக்கின்றேன்.

மேலும், எனக்கு பிறகு அஹ்மத் எனும் பெயருடைய ஒரு தூதர் வருவார் என்று நற்செய்தி சொல்பவனாகவும் இருக்கிறேன்.

எனினும், அவர் அம்மக்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு

لِي خَمْسَةُ أَسْمَاءٍ: أَنَا مُحَمَّدٌ، وَأَحْمَدُ وَأَنَا المَاحِي الَّذِي يَمْحُو اللَّهُ بِي الكُفْرَ، وَأَنَا الحَاشِرُ الَّذِي يُحْشَرُ النَّاسُ عَلَى قَدَمِي، وَأَنَا العَاقِبُ


Bukhari-3531

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

ஒருவர், தன் வமிசம் ஏசப்படக் கூடாது என்று விரும்புவது.

3531. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

(முஸ்லிம்களுக்கெதிராக இணைவைப்பவர்கள் வசை பாடிய போது) இணைவைப்பவர்களுக்கெதிராக வசைக் கவிதை பாடுவதற்கு நபி(ஸல்) அவர்களிடம் (கவிஞர்) ஹஸ்ஸான் இப்னு ஸாபித் (ரலி) அனுமதி கேட்டார்கள். நபி(ஸல்) அவர்கள் என் வமிசம் (அவர்களுடன் கலந்திருக்க, அவர்களை வசை பாடுவது எப்படி?’ என்று கேட்டார்கள். அதற்கு ஹஸ்ஸான் (ரலி), ‘மாவிலிருந்து முடியை உருவியெடுப்பது போல் தங்களை அவர்களிலிருந்து உருவியெடுத்து (வசையிலிருந்து நீக்கி) விடுவேன்’ என்று கூறினார்கள்.

உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) கூறினார்

(ஒரு முறை) நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள், ‘அவரைத் திட்டாதே! ஏனெனில், அவர் (எதிரிகளின் வசைப் பாடல்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து) நபி(ஸல்) அவர்களைப் பாதுகாப்பவராக இருந்தார்’ என்று கூறினார்கள்.
Book : 61


اسْتَأْذَنَ حَسَّانُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هِجَاءِ المُشْرِكِينَ قَالَ: «كَيْفَ بِنَسَبِي» فَقَالَ حَسَّانُ: لَأَسُلَّنَّكَ مِنْهُمْ كَمَا تُسَلُّ الشَّعَرَةُ مِنَ العَجِينِ،

وَعَنْ أَبِيهِ قَالَ: ذَهَبْتُ أَسُبُّ حَسَّانَ عِنْدَ عَائِشَةَ، فَقَالَتْ: «لاَ تَسُبَّهُ فَإِنَّهُ كَانَ يُنَافِحُ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3530. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அபிசீனியர்கள் பள்ளிவாசலில் (வீர விளையாட்டுகள்) விளையாடுவதை நான் பார்த்துக் கொண்டிருக்க, நபி (ஸல்) அவர்கள் (அவர்களின் பார்வையிலிருந்து) என்னை மறைப்பதை கண்டேன்.

அப்போது உமர் (ரலி) அபிசீனியர்களைக் கண்டித்து தடுத்தார்கள். இதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள், ‘அவர்களை விட்டு விடுங்கள். நீங்கள் அச்சமின்றி இருங்கள், அர்ஃபிதாவின் மக்களே!’ என்று கூறினார்கள்.
Book :61


رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْتُرُنِي، وَأَنَا أَنْظُرُ إِلَى الحَبَشَةِ، وَهُمْ يَلْعَبُونَ فِي المَسْجِدِ، فَزَجَرَهُمْ عُمَر

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهُمْ، أَمْنًا بَنِي أَرْفِدَةَ يَعْنِي مِنَ الأَمْنِ»


Bukhari-3529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

அபிசீனியர்களின் நிகழ்ச்சியும், நபி (ஸல்) அவர்கள், அர்ஃபிதாவின் மக்களே! என்று (அபிசீனியர்களை) அழைத்ததும்.

3529. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

அபூ பக்ர் (ரலி) (ஒரு முறை) என்னிடம் வந்தார்கள். அப்போது இரண்டு சிறுமிகள் என்னிடம் (தஃப் எனப்படும்) சலங்கைகள் இல்லாத கஞ்சிராவைத் தட்டி பாடிக் கொண்டிருந்தார்கள். அது, மினாவில் தங்கும் (காலமான துல்ஹஜ் 10, 11, 12, 13 ஆகிய) நாள்களில் (ஒன்றாக) இருந்தது.

நபி (ஸல்) அவர்கள் (படுக்கையில் படுத்தபடி முகத்தைத் திருப்பிக் கொண்டு) தம் துணியால் போர்த்திக் கொண்டிருந்தார்கள். எனவே, அபூ பக்ர் (ரலி) இரண்டு சிறுமிகளையும் அதட்டினார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களின் முகத்திலிருந்து (ஆடையை) நீக்கிவிட்டு, ‘அவ்விருவரையும் விட்டு விடுங்கள், அபூ பக்ரே! ஏனெனில், இவை பண்டிகை நாள்கள்’ என்று கூறினார்கள். அந்த நாள்கள் மினாவில் தங்கும் நாள்களாயிருந்தன.
Book : 61


أَنَّ أَبَا بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، دَخَلَ عَلَيْهَا، وَعِنْدَهَا جَارِيَتَانِ فِي أَيَّامِ مِنًى تُغَنِّيَانِ، وَتُدَفِّفَانِ، وَتَضْرِبَانِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَغَشٍّ بِثَوْبِهِ،

فَانْتَهَرَهُمَا أَبُو بَكْرٍ، فَكَشَفَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ وَجْهِهِ، فَقَالَ: «دَعْهُمَا يَا أَبَا بَكْرٍ، فَإِنَّهَا أَيَّامُ عِيدٍ». وَتِلْكَ الأَيَّامُ أَيَّامُ مِنًى


Bukhari-3528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

ஒரு சமுதாயத்தினரின் சகோதரி மகன், அவர்களைச் சேர்ந்தவரே. ஒரு சமுதாயத்தினர் விடுதலை செய்த அடிமையும், அவர்களைச் சேர்ந்தவரே.

3528. அனஸ் (ரலி) அறிவித்தார்.

(ஏதோ பேசுவதற்காக ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளைத் (தனியாக) அழைத்தார்கள். (அவர்கள் வந்த) பின்னர், ‘உங்களிடையே எவரேனும் உங்கள் (கூட்டாத்தார்) அல்லாதவர் (இங்கே வந்து) இருக்கிறாரா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அன்சாரிகள், ‘எங்கள் சகோதரி ஒருத்தியின் மகனை (நுஃமான் இப்னு முக்ரினை)த் தவிர வேறெவருமில்லை’ என்று பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘ஒரு சமுதாயத்தினரின் சகோதரி மகன் அவர்களைச் சேர்ந்தவரே’ என்று கூறினார்கள்.
Book : 61


دَعَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَنْصَارَ فَقَالَ: «هَلْ فِيكُمْ أَحَدٌ مِنْ غَيْرِكُمْ» قَالُوا: لاَ، إِلَّا ابْنُ أُخْتٍ لَنَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ابْنُ أُخْتِ القَوْمِ مِنْهُمْ»


Bukhari-3527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3527. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். அப்துல் முத்தலிபின் மக்களே! உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள். (அதாவது- இஸ்லாமை ஏற்றல் என்னும் விலையை இறைவனுக்கு கொடுத்து (இறைபிடியிலிருந்து பாதுகாப்பு பெற )உங்களை வாங்கிக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் தூதருடைய அத்தையான ஸுபைர் இப்னு அவ்வாமின் தாயாரே! முஹம்மதின் மகளான ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் உங்களை அல்லாஹ்விடமிருந்து விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

நான் உங்கள் இருவருக்கும் அல்லாஹ்விடமிருந்து எதையும் வாங்கித் தர முடியாது. என் செல்வத்திலிருந்து இருவரும் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள். (நான் உங்களுக்குத் தருகிறேன்.) என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :61


يَا بَنِي عَبْدِ مَنَافٍ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللهِ يَا بَنِي عَبْدِ الْمُطَّلِبِ اشْتَرُوا أَنْفُسَكُمْ مِنَ اللهِ

يَا أُمَّ الزُّبَيْرِ بْنِ الْعَوَّامِ عَمَّةَ رَسُولِ اللهِ يَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ اشْتَرِيَا أَنْفُسَكُمَا مِنَ اللهِ لَا أَمْلِكُ لَكُمَا مِنَ اللهِ شَيْئًا سَلَانِي مِنْ مَالِي مَا شِئْتُمَا


Bukhari-3526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3526. இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.

‘(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!’ என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள் குலங்கள் குலங்களாக (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.
Book :61


لَمَّا نَزَلَتْ { وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُوهُمْ قَبَائِلَ قَبَائِلَ


Bukhari-3525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

அறியாமைக் காலத்திலும், இஸ்லாத்தை ஏற்ற பின்னரும் தன் முன்னோர்களுடன் தன்னை இணைத்துப் பேசுவது செல்லும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வரான கண்ணியத்திற்குரியவரின் புதல்வர் தாம் கண்ணியத்திற்குரியவர். அவர் (எவரெனில்), அல்லாஹ்வின் நண்பர் இப்ராஹீம் அவர் களின் புதல்வரான இஸ்ஹாக் அவர்களின் புதல்வரான யஃகூப் அவர்களின் புதல்வரான யூசுஃப் அவர்கள் தாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்களும், இப்னு உமர் (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

நான் அப்துல் முத்தலிபின் மகனாவேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

3525. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

‘(நபியே!) உங்கள் நெருங்கிய உறவினர்களை எச்சரிப்பீராக!’ என்னும் (திருக்குர்ஆன் 26:214) இறைவசனம் அருளப்பட்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!’ என்று குறைஷிகளின் கிளைக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள்.
Book : 61


لَمَّا نَزَلَتْ { وَأَنْذِرْ عَشِيرَتَكَ الأَقْرَبِينَ } جَعَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي يَا بَنِي فِهْرٍ يَا بَنِي عَدِيٍّ بِبُطُونِ قُرَيْشٍ


Bukhari-3524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3524. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

அரபுகளின் அறியாமையை அறிந்து கொள்ள உங்களுக்கு விருப்பமென்றால் ‘அல் அன்ஆம்’ (என்னும் 6-வது) அத்தியாயத்தில் நூற்றி முப்பதாவது வசனத்திற்கு மேல் ஓதுங்கள்.

அந்த வசனம் இதுதான்: அறியாமையினாலும், மூடத்தனத்தினாலும் தம் குழந்தைகளை கொன்றுவிட்டு, அல்லாஹ்வின் மீது பழி சுமத்தி தங்களுக்கு வழங்கியிருந்தவற்றைத் தாங்களாகவே தடை செய்தவர்கள் நிச்சயமாகப் பேரிழப்புக்கு ஆளாகிவிட்டார்கள். நிச்சயமாக அவர்கள் வழிதவறிப் போய்விட்டார்கள். அவர்கள் நேர்வழி பெற்றவர்களாய் இல்லை. (திருக்குர்ஆன் 06:140)
Book :61


إِذَا سَرَّكَ أَنْ تَعْلَمَ جَهْلَ الْعَرَبِ فَاقْرَأْ مَا فَوْقَ الثَّلَاثِينَ وَمِائَةٍ فِي سُورَةِ الْأَنْعَامِ { قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ } إِلَى قَوْلِهِ { قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ }


Next Page » « Previous Page