Category: புஹாரி

Bukhari

Bukhari-3523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 12 ஸம்ஸம் கிணறும், அரபுகளின் அறியாமையும்.

3523. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அஸ்லம் குலத்தாரும், கிஃபார் குலத்தாரும், முஸைனா குலத்தவரிலும் ஜுஹைனா குலத்தவரிலும் சிலரும் அஸத், தமீம், ஹவாஸின் மற்றும் கத்ஃபான் ஆகிய குலத்தினரை விட அல்லாஹ்விடம்… அல்லது மறுமை நாளில்…. சிறந்தவர்கள்.

… இதை அறிவித்த அபூ ஹுரைரா (ரலி), ‘முஸைனா குலத்தவரிலும் ஜுஹைனா குலத்தவரிலும் சிலரும்’ என்றும் கூறியிருக்கலாம்; (அதற்கு பதிலாக) ‘ஜுஹைனா குலத்தவரில் சிலரும்’ என்று மட்டுமோ ‘முஸைனா குலத்தவரில் சிலரும்’ என்று மட்டுமோ கூறியிருக்கலாம் என்று அறிவிப்பாளர் முஹம்மத் இப்னு சிரீன் (ரஹ்) கூறினார்.
Book : 61


أَسْلَمُ وَغِفَارُ وَشَيْءٌ مِنْ مُزَيْنَةَ وَجُهَيْنَةَ أَوْ قَالَ شَيْءٌ مِنْ جُهَيْنَةَ أَوْ مُزَيْنَةَ خَيْرٌ عِنْدَ اللهِ أَوْ قَالَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ أَسَدٍ وَتَمِيمٍ وَهَوَازِنَ وَغَطَفَانَ

(பார்க்க- 3516-A)


Bukhari-3522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

அபூதர் கிஃபாரீ (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற நிகழ்ச்சி.

பாடம் : 11

ஸம்ஸம் (கிணற்றின்) சரிதை.

3522. அபூ ஜம்ரா (ரஹ்) அறிவித்தார்.

எங்களிடம் இப்னு அப்பாஸ் (ரலி), ‘அபூ தர் (ரலி) இஸ்லாத்தைத் தழுவிய விதம் குறித்து உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?’ என்று கேட்க, நாங்கள், ‘சரி (அறிவியுங்கள்)’ என்றோம். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:

அபூ தர் (ரலி) (என்னிடம்) கூறினார்கள்: நான் கிஃபார் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதனாக இருந்தேன். அப்போது ‘ஒருவர் தம்மை நபி என்று வாதிட்டபடி மக்கா நகரில் புறப்பட்டிருக்கிறார்’ என்று எங்களுக்குச் செய்தி எட்டியது. எனவே, நான் என் சகோதரர் (அனீஸ்) இடம், ‘நீ இந்த மனிதரிடம் போய்ப் பேசி அவரின் செய்தியை (அறிந்து) என்னிடம் கொண்டு வா’ என்று சொன்னேன். அவ்வாறே அவர் சென்று அவரைச் சந்தித்துப் பிறகு திரும்பி வந்தார். நான், ‘உன்னிடம் என்ன செய்தி உண்டு’ என்று கேட்டேன். ‘நன்மை புரியும்படி கட்டளையிடவும் தீமையிலிருந்து (மக்களைத்) தடுக்கவும் செய்கிற ஒரு மனிதராக அவரைக் கண்டேன்’ என்றார்.

நான் அவரிடம், ‘போதிய செய்தியை எனக்கு நீ கொண்டுவரவில்லை’ என்று கூறினேன். பிறகு தோலினால் ஆன (தண்ணீர்ப்)பையையும் கைத்தடியையும்

قَالَ لَنَا ابْنُ عَبَّاسٍ: أَلاَ أُخْبِرُكُمْ بِإِسْلاَمِ أَبِي ذَرٍّ؟ قَالَ: قُلْنَا بَلَى، قَالَ: قَالَ أَبُو ذَرٍّ: كُنْتُ رَجُلًا مِنْ غِفَارٍ، فَبَلَغَنَا أَنَّ رَجُلًا قَدْ خَرَجَ بِمَكَّةَ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَقُلْتُ لِأَخِي: انْطَلِقْ إِلَى هَذَا الرَّجُلِ كَلِّمْهُ وَأْتِنِي بِخَبَرِهِ، فَانْطَلَقَ فَلَقِيَهُ، ثُمَّ رَجَعَ، فَقُلْتُ مَا عِنْدَكَ؟ فَقَالَ: وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَجُلًا يَأْمُرُ بِالخَيْرِ وَيَنْهَى عَنِ الشَّرِّ، فَقُلْتُ لَهُ: لَمْ تَشْفِنِي مِنَ الخَبَرِ، فَأَخَذْتُ جِرَابًا وَعَصًا، ثُمَّ أَقْبَلْتُ إِلَى مَكَّةَ، فَجَعَلْتُ لاَ أَعْرِفُهُ، وَأَكْرَهُ أَنْ أَسْأَلَ عَنْهُ، وَأَشْرَبُ مِنْ مَاءِ زَمْزَمَ وَأَكُونُ فِي المَسْجِدِ، قَالَ: فَمَرَّ بِي عَلِيٌّ فَقَالَ: كَأَنَّ الرَّجُلَ غَرِيبٌ؟ قَالَ: قُلْتُ: نَعَمْ، قَالَ: فَانْطَلِقْ إِلَى المَنْزِلِ، قَالَ: فَانْطَلَقْتُ مَعَهُ، لاَ يَسْأَلُنِي عَنْ شَيْءٍ وَلاَ أُخْبِرُهُ، فَلَمَّا أَصْبَحْتُ غَدَوْتُ إِلَى المَسْجِدِ لِأَسْأَلَ عَنْهُ، وَلَيْسَ أَحَدٌ يُخْبِرُنِي عَنْهُ بِشَيْءٍ، قَالَ: فَمَرَّ بِي عَلِيٌّ، فَقَالَ: أَمَا نَالَ لِلرَّجُلِ يَعْرِفُ مَنْزِلَهُ بَعْدُ؟ قَالَ: قُلْتُ: لاَ، قَالَ: انْطَلِقْ مَعِي، قَالَ: فَقَالَ مَا أَمْرُكَ، وَمَا أَقْدَمَكَ هَذِهِ البَلْدَةَ؟ قَالَ: قُلْتُ لَهُ: إِنْ كَتَمْتَ عَلَيَّ أَخْبَرْتُكَ، قَالَ: فَإِنِّي أَفْعَلُ، قَالَ: قُلْتُ لَهُ: بَلَغَنَا أَنَّهُ قَدْ خَرَجَ هَا هُنَا رَجُلٌ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، فَأَرْسَلْتُ أَخِي لِيُكَلِّمَهُ، فَرَجَعَ وَلَمْ يَشْفِنِي مِنَ الخَبَرِ، فَأَرَدْتُ أَنْ أَلْقَاهُ، فَقَالَ لَهُ: أَمَا إِنَّكَ قَدْ رَشَدْتَ، هَذَا وَجْهِي إِلَيْهِ فَاتَّبِعْنِي، ادْخُلْ حَيْثُ أَدْخُلُ، فَإِنِّي إِنْ رَأَيْتُ أَحَدًا أَخَافُهُ عَلَيْكَ، قُمْتُ إِلَى الحَائِطِ كَأَنِّي أُصْلِحُ نَعْلِي وَامْضِ أَنْتَ، فَمَضَى وَمَضَيْتُ مَعَهُ، حَتَّى دَخَلَ وَدَخَلْتُ مَعَهُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ لَهُ: اعْرِضْ عَلَيَّ الإِسْلاَمَ، فَعَرَضَهُ فَأَسْلَمْتُ مَكَانِي، فَقَالَ لِي: «يَا أَبَا ذَرٍّ، اكْتُمْ هَذَا الأَمْرَ، وَارْجِعْ إِلَى بَلَدِكَ، فَإِذَا بَلَغَكَ ظُهُورُنَا فَأَقْبِلْ» فَقُلْتُ: وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، لَأَصْرُخَنَّ بِهَا بَيْنَ أَظْهُرِهِمْ، فَجَاءَ إِلَى المَسْجِدِ وَقُرَيْشٌ فِيهِ، فَقَالَ: يَا مَعْشَرَ قُرَيْشٍ، إِنِّي أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، فَقَالُوا: قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ، فَقَامُوا فَضُرِبْتُ لِأَمُوتَ، فَأَدْرَكَنِي العَبَّاسُ فَأَكَبَّ عَلَيَّ، ثُمَّ أَقْبَلَ عَلَيْهِمْ، فَقَالَ: وَيْلَكُمْ، تَقْتُلُونَ رَجُلًا مِنْ غِفَارَ، وَمَتْجَرُكُمْ وَمَمَرُّكُمْ عَلَى غِفَارَ، فَأَقْلَعُوا عَنِّي، فَلَمَّا أَنْ أَصْبَحْتُ الغَدَ رَجَعْتُ، فَقُلْتُ مِثْلَ مَا قُلْتُ بِالأَمْسِ، فَقَالُوا: قُومُوا إِلَى هَذَا الصَّابِئِ فَصُنِعَ بِي مِثْلَ مَا صُنِعَ بِالأَمْسِ، وَأَدْرَكَنِي العَبَّاسُ فَأَكَبَّ عَلَيَّ، وَقَالَ مِثْلَ مَقَالَتِهِ بِالأَمْسِ، قَالَ: فَكَانَ هَذَا أَوَّلَ إِسْلاَمِ أَبِي ذَرٍّ رَحِمَهُ اللَّهُ


Bukhari-3521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3521. ஸயீத் இப்னு அல்முஸய்யப் (ரஹ்) கூறினார்:

‘அல் பஹீரா’ என்பது (ஒட்டகங்களில்) எதனுடைய பாலை(க் கறக்கலாகாது என்று) ஷைத்தான்களுக்காகத் தடை செய்யப்பட்டு விடுமோ அந்த ஒட்டக(த்தின் நாம)மாகும். அதன் பாலை மக்களில் எவருமே கறக்க மாட்டார்கள்.

‘சாயிபா’ என்பது அரபுகள் தங்கள் கடவுள்களுக்காக (நேர்ச்சை செய்து) மேயவிட்ட ஒட்டகமாகும். எனவே, அதன் மீது சுமை எதுவும் சுமத்தப்படாது.

மேலும், நபி (ஸல்) அவர்கள், ‘குஸாஆ குலத்தைச் சேர்ந்த அம்ர் இப்னு ஆமிர் இப்னி லுஹை என்பவரை, நரகத்தில் தன் குடலை இழுத்துச் சென்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்தான் முதன் முதலில் ‘சாயிபா’ ஒட்டகங்களை (சிலைகளுக்காக) நேர்ந்து (மேய்ந்து கொண்டிருக்கும்படி) விட்டவர்’ என்று கூறினார்கள். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book :61


«البَحِيرَةُ الَّتِي يُمْنَعُ دَرُّهَا لِلطَّوَاغِيتِ وَلاَ يَحْلُبُهَا أَحَدٌ مِنَ النَّاسِ، وَالسَّائِبَةُ الَّتِي كَانُوا يُسَيِّبُونَهَا لِآلِهَتِهِمْ فَلاَ يُحْمَلُ عَلَيْهَا شَيْءٌ»

قَالَ: وَقَالَ أَبُو هُرَيْرَةَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رَأَيْتُ عَمْرَو بْنَ عَامِرِ بْنِ لُحَيٍّ الخُزَاعِيَّ يَجُرُّ قُصْبَهُ فِي النَّارِ وَكَانَ أَوَّلَ مَنْ سَيَّبَ السَّوَائِبَ»


Bukhari-3520

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

குஸாஆ குலத்தின் சரிதை

3520. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அம்ர் இப்னு லுஹை இப்னி கம்ஆ இப்னி கிந்திஃப் என்பவர் தம் குஸாஆ குலத்தாரின் தந்தையாவார். என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.
Book : 61


«عَمْرُو بْنُ لُحَيِّ بْنِ قَمَعَةَ بْنِ خِنْدِفَ أَبُو خُزَاعَةَ»


Bukhari-3519

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3519. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(துக்கத்தில்) கன்னங்களில்) அறைந்து கொள்பவனும், சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும், அறியாமைக் கால அழைப்பை விடுப்பவனும் நம்மைச் சேர்ந்தவனல்லன்.
என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.
Book :61


«لَيْسَ مِنَّا مَنْ ضَرَبَ الخُدُودَ، وَشَقَّ الجُيُوبَ، وَدَعَا بِدَعْوَى الجَاهِلِيَّةِ»


Bukhari-3518

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

அறியாமைக் கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பது தடை செய்யப்பட்ட தாகும்.

3518. ஜாபிர் (ரலி) கூறினார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (பனூ முஸ்தலிக்) புனிதப் போருக்குச் சென்றோம். நபியவர்களுடன் முஹாஜிர்களும் ஒருவர் இருவராகப் புறப்பட்டு நிறையப் பேராகிவிட்டனர். முஹாஜிர்களிடையே விளையாட்டுக்காட்டும் ஒருவர் இருந்தார். அவர் அன்சாரி ஒருவரின் புட்டத்தில் (விளையாட்டாக) அடித்துவிட்டார். எனவே, அந்த அன்சாரி கடும் கோபம் அடைந்தார்.

(தகராறு முற்றி) இருவரும் தத்தம் குலத்தாரை உதவிக்கு அழைத்தார்கள். அன்சாரி, ‘அன்சாரிகளே!’ என்றழைத்தார். முஹாஜிர், ‘முஹாஜிர்களே!’ என்றழைத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் வெளியே வந்து, ‘அறியாமைக் கால மக்களின் அழைப்பு இங்கே கேட்கிறதே, ஏன்?’ என்று கேட்டு விட்டு, ‘அவ்விருவரின் விவகாரம் என்ன?’ என்று கேட்டார்கள். முஹாஜிர், அன்சாரியைப் புட்டத்தில் அடித்தது நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இந்த அறியாமைக் கால அழைப்பை விட்டு விடுங்கள். இது அருவருப்பானது’ என்று கூறினார்கள்.

(நயவஞ்சகர்களின் தலைவனான) அப்துல்லாஹ் இப்னு உபை இப்னி சலூல், ‘நமக்கெதிராக (இந்த அகதிகளான முஹாஜிர்கள் தம் குலத்தாரிடம்) உதவி

غَزَوْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ ثَابَ مَعَهُ نَاسٌ مِنَ المُهَاجِرِينَ حَتَّى كَثُرُوا، وَكَانَ مِنَ المُهَاجِرِينَ رَجُلٌ لَعَّابٌ، فَكَسَعَ أَنْصَارِيًّا، فَغَضِبَ الأَنْصَارِيُّ غَضَبًا شَدِيدًا حَتَّى تَدَاعَوْا، وَقَالَ الأَنْصَارِيُّ: يَا لَلْأَنْصَارِ، وَقَالَ المُهَاجِرِيُّ: يَا لَلْمُهَاجِرِينَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” مَا بَالُ دَعْوَى أَهْلِ الجَاهِلِيَّةِ؟ ثُمَّ قَالَ: مَا شَأْنُهُمْ ” فَأُخْبِرَ بِكَسْعَةِ المُهَاجِرِيِّ الأَنْصَارِيَّ، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعُوهَا فَإِنَّهَا خَبِيثَةٌ» وَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَيٍّ ابْنُ سَلُولَ: أَقَدْ تَدَاعَوْا عَلَيْنَا، لَئِنْ رَجَعْنَا إِلَى المَدِينَةِ لَيُخْرِجَنَّ الأَعَزُّ مِنْهَا الأَذَلَّ، فَقَالَ عُمَرُ: أَلاَ نَقْتُلُ يَا رَسُولَ اللَّهِ هَذَا الخَبِيثَ؟ لِعَبْدِ اللَّهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ يَتَحَدَّثُ النَّاسُ أَنَّهُ كَانَ يَقْتُلُ أَصْحَابَهُ»


Bukhari-3516 & 3517

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3516 & 3517. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “தங்களிடம் (இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக) உறுதிமொழி கொடுத்தவர்கள் எல்லாம் ஹஜ் செய்ய வருபவர்களிடம் திருடியவர் களான அஸ்லம், ஃகிஃபார் மற்றும் முஸைனா குலங்களைச் சேர்ந்தவர்கள் தான்” என்று கூறினார்கள்.

-மற்றும் ஜுஹைனா குலத்தைச் சேர்ந்தவர்களும்’ என்றும் (நபியவர்கள் கூறியதாக) அறிவிப்பாளர் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரா அறிவித்தார் என்று மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் பின் அபீயஅகூப் சந்தேகத் துடன் கூறுகிறார்-

நபி (ஸல்) அவர்கள், “பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத், மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய குலங்களைவிட அஸ்லம், ஃகிஃபார், மற்றும் முஸைனா குலத்தார் சிறந்தவர்கள் அல்லவா? அவர்கள் நஷ்டமும் இழப்பும் அடைந்து விட்டார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “என் உயிர் யார் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக! (அஸ்லம், ஃகிஃபார், முஸைனா மற்றும் ஜுஹைனா ஆகிய குலத்தாரான) இவர்கள் (பனூ தமீம், பனூ ஆமிர், பனூ அசத் மற்றும் பனூ ஃகத்ஃபான் ஆகிய) அவர்களைவிடச் சிறந்தவர்களே” என்று சொன்னார்கள்.

-(அஸ்லம், ஃகிஃபார், முஸைனா குலத்தாருடன்) ஜுஹைனா குலத்தாரையும் சேர்த்துக் குறிப்பிட்டதாக

أَنَّ الأَقْرَعَ بْنَ حَابِسٍ، قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّمَا بَايَعَكَ سُرَّاقُ الحَجِيجِ، مِنْ أَسْلَمَ وَغِفَارَ وَمُزَيْنَةَ، – وَأَحْسِبُهُ – وَجُهَيْنَةَ – ابْنُ أَبِي يَعْقُوبَ شَكَّ – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَرَأَيْتَ إِنْ كَانَ أَسْلَمُ، وَغِفَارُ، وَمُزَيْنَةُ، – وَأَحْسِبُهُ – وَجُهَيْنَةُ، خَيْرًا مِنْ بَنِي تَمِيمٍ، وَبَنِي عَامِرٍ، وَأَسَدٍ، وَغَطَفَانَ خَابُوا وَخَسِرُوا» قَالَ: نَعَمْ، قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّهُمْ لَخَيْرٌ مِنْهُمْ»


Bukhari-3515

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3515. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலத்தார் பனூ தமீம், பனூ அஸத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகிய குலங்களைவிடச் சிறந்தவையாக உள்ளனவா என்று எனக் குத் தெரிவியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது ஒரு மனிதர் (அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள்), “அவர்கள் நஷ்டமடைந்தார்கள்; இழப்புக்குள்ளானார்கள்” என்று சொன் னார்.

நபி (ஸல்) அவர்கள், “(இல்லை;) அவர்கள் (ஜுஹைனா, முஸைனா, அஸ்லம், ஃகிஃபார் ஆகிய குலங்கள் இஸ்லாத்தை முதலில் தழுவிய காரணத் தால்), பனூ தமீம், பனூ அசத், பனூ அப்தில்லாஹ் பின் ஃகத்ஃபான் மற்றும் பனூ ஆமிர் பின் ஸஅஸஆ ஆகியவர் களைவிடச் சிறந்தவர்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 61


«أَرَأَيْتُمْ إِنْ كَانَ جُهَيْنَةُ، وَمُزَيْنَةُ، وَأَسْلَمُ، وَغِفَارُ، خَيْرًا مِنْ بَنِي تَمِيمٍ، وَبَنِي أَسَدٍ، وَمِنْ بَنِي عَبْدِ اللَّهِ بْنِ غَطَفَانَ، وَمِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ»

فَقَالَ رَجُلٌ: خَابُوا وَخَسِرُوا، فَقَالَ: «هُمْ خَيْرٌ مِنْ بَنِي تَمِيمٍ، وَمِنْ بَنِي أَسَدٍ، وَمِنْ بَنِي عَبْدِ اللَّهِ بْنِ غَطَفَانَ، وَمِنْ بَنِي عَامِرِ بْنِ صَعْصَعَةَ»


Bukhari-3513

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3513. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் (உரை மேடையின்) மீதிருந்தபடி, ‘கிஃபார்’ குலத்தை அல்லாஹ் மன்னிப்பானாக! ‘அஸ்லம்’ குலத்தை அல்லாஹ் (போரை விரும்பாத) அமைதி விரும்பியாக ஆக்குவானாக! ‘உஸைய்யா’ குலம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டது’ என்று கூறினார்கள்.
Book :61


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عَلَى المِنْبَرِ: «غِفَارُ غَفَرَ اللَّهُ لَهَا، وَأَسْلَمُ سَالَمَهَا اللَّهُ، وَعُصَيَّةُ عَصَتِ اللَّهَ وَرَسُولَهُ»


Next Page » « Previous Page