Category: புஹாரி

Bukhari

Bukhari-3411

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

அல்லாஹ் கூறுகிறான்:

அல்லாஹ் ஃபிர் அவ்னுடைய மனைவியை இறை நம்பிக்கையாளார்களுக்கான உதாரணமாகக் கூறுகிறான். ஒரு முறை அவர், என் அதிபதியே! எனக்காக உன்னிடம் சொர்க்கத்தில் ஓர் இல்லத்தை அமைத்துக் கொடுப்பாயாக! ஃபிர் அவ்னிடமிருந்தும் அவனது (தீய) செயலிலிருந்தும் என்னைக் காப்பாற்றுவாயாக! அக்கிரமம் புரியும் சமுதாயத்தாரிடமிருந்தும் என்னைக் காப் பாற்றுவாயாக! என்று அவர் பிரார்த்தித்தார்.

மேலும், இம்ரானின் மகள் மர்யமை (மற்றொரு) உதாரணமாக எடுத்துக் காட்டு கிறான். அவர் தம் வெட்கத் தலத்தைப் பாதுகாத்துக் கொண்டார். பிறகு, நாம் நம்மிடமிருந்து ஆவியை அவருக்குள் ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் அறிவுரைகளையும் அவனுடைய வேதங்களையும் உண்மையென ஏற்றுக் கொண்டார். மேலும், அவர் கீழ்ப்படிந்து வாழ்பவர்களில் ஒருவராயும் இருந்தார். (66:11, 12)

3411. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆண்களில் நிறையப் பேர் முழுமையடைந்திருக்கிறார்கள். பெண்களில் ஃபிர்அவ்னின் துணைவியார் ஆஸியாவையும் இம்ரானின் மகள் மர்யமையும் தவிர வேறெவரும் முழுமையடையவில்லை. மற்ற பெண்களை விட ஆயிஷாவுக்குள்ள சிறப்பு எல்லாவகை உணவுகளை விடவும் ‘ஸரீத்’ உணவுக்குள்ள சிறப்பைப் போன்றதாகும்.’

كَمَلَ مِنَ الرِّجَالِ كَثِيرٌ، وَلَمْ يَكْمُلْ مِنَ النِّسَاءِ: إِلَّا آسِيَةُ امْرَأَةُ فِرْعَوْنَ، وَمَرْيَمُ بِنْتُ عِمْرَانَ، وَإِنَّ فَضْلَ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ


Bukhari-3410

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3410. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

ஒரு நாள் நபி(ஸல்) அவர்கள் எங்களிடம் புறப்பட்டு வந்து, ‘(மிஅராஜுடைய இரவில்) பல சமுதாயங்கள் எனக்கு எடுத்துக் காட்டப்பட்டன. அடி வானத்தை அடைத்த படி ஏராளமான மக்களை கண்டேன். அப்போது, ‘தம் சமுதாயத்தினரிடையே மூஸா(அலை) அவர்கள் இருக்கும் காட்சி தான் இது’ என்று (எனக்குக்) கூறப்பட்டது.
Book :60


خَرَجَ عَلَيْنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَوْمًا قَالَ: ” عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ، وَرَأَيْتُ سَوَادًا كَثِيرًا سَدَّ الأُفُقَ، فَقِيلَ: هَذَا مُوسَى فِي قَوْمِهِ


Bukhari-3409

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3409. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தடை செய்யப்பட்ட மரத்திலிருந்து சாப்பிட்ட) ஆதமும், மூஸாவும் தர்க்கித்தார்கள். ஆதமிடம் மூஸா, ‘உங்கள் தவறு உங்களை சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதே அந்த ஆதம் நீங்கள் தானோ?’ என்று கேட்டார்கள். அதற்கு ஆதம் மூஸாவிடம், ‘நீங்கள் அல்லாஹ், தன் தூதுத்துவச் செய்திகளை அனுப்பிடவும் தன்னுடன் உரையாடவும் தேர்ந்தெடுத்த மூஸா ஆவீர். இருந்தும், நான் படைக்கப்படுவதற்கு முன்பே என் மீது விதிக்கப்பட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் நீங்கள் பழிககிறீர்களே!’ என்று கேட்டார்கள்.

‘இதை கூறிய பின் இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘ஆக, ஆதம் விவாதத்தில் மூஸாவை வென்றுவிட்டார்கள்’ என்று இருமுறை கூறினார்கள்’ என இந்த நபிமொழியை அறிவிக்கும் அபூ ஹுரைரா(ரலி) கூறினார்.
Book :60


احْتَجَّ آدَمُ وَمُوسَى، فَقَالَ لَهُ مُوسَى: أَنْتَ آدَمُ الَّذِي أَخْرَجَتْكَ خَطِيئَتُكَ مِنَ الجَنَّةِ، فَقَالَ لَهُ آدَمُ: أَنْتَ مُوسَى الَّذِي اصْطَفَاكَ اللَّهُ بِرِسَالاَتِهِ وَبِكَلاَمِهِ، ثُمَّ تَلُومُنِي عَلَى أَمْرٍ قُدِّرَ عَلَيَّ قَبْلَ أَنْ أُخْلَقَ ” فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَحَجَّ آدَمُ مُوسَى مَرَّتَيْنِ»


Bukhari-3408

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3408. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

முஸ்லிம்களில் ஒருவரும் யூதர்களில் ஒருவரும் (ஒருவரோடொருவர்) சச்சரவிட்டார்கள். அந்த முஸ்லிம், ‘அகிலத்தார் அனைவரை விடவும் முஹம்மதை (சிறந்தவராக்கித்) தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக!’ என்று அவர் செய்த ஒரு சத்தியத்தின்போது கூறினார். அந்த யூதர், ‘அகிலத்தார் அனைவரை விடவும் மூஸா(அலை) அவர்களை (சிறந்தவராகத்) தேர்ந்தெடுத்தவன் மீது சத்தியமாக!’ என்று கூறினார்.

(யூதரின்) இச்சொல்லைக் கேட்டபோது அந்த முஸ்லிம் தம் கையை உயர்த்தி யூதரை அறைந்துவிட்டார். உடனே, அந்த யூதர் நபி(ஸல்) அவர்களிடம் சென்று நடந்த, தன்னுடைய விவகாரத்தையும் அந்த முஸ்லிமின் விவகாரத்தையும் தெரிவித்தார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘மூஸாவைவிடச் சிறந்தவராக என்னை ஆக்காதீர்கள் . ஏனெனில், (மறுமை நாளில்) மக்கள் மூர்ச்சையுற்று (கீழே) விழுந்து விடுவார்கள். அப்போது, நானே மயக்கம் தெளி(ந்து எழு)பவர்களில் முதல் ஆளாக இருப்பேன். அந்த நேரத்தில் மூஸா இறை சிம்மாசனத்தின் ஓர் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

اسْتَبَّ رَجُلٌ مِنَ المُسْلِمِينَ وَرَجُلٌ مِنَ اليَهُودِ، فَقَالَ المُسْلِمُ : وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى العَالَمِينَ، فِي قَسَمٍ يُقْسِمُ بِهِ، فَقَالَ اليَهُودِيُّ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى العَالَمِينَ، فَرَفَعَ المُسْلِمُ عِنْدَ ذَلِكَ يَدَهُ فَلَطَمَ اليَهُودِيَّ، فَذَهَبَ اليَهُودِيُّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَخْبَرَهُ الَّذِي كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ المُسْلِمِ، فَقَالَ «لاَ تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ العَرْشِ، فَلاَ أَدْرِي أَكَانَ فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي، أَوْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللَّهُ»