Category: புஹாரி

Bukhari

Bukhari-3361

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9 இறை வசனம் 39:94-ல் வரும் யஸிஃப்பூன் என்பதற்கு விரைந்து ஓடுதல் என்று பொருள்
3361. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
ஒரு நாள் (விருந்தின்போது) நபி(ஸல்) அவர்களிடம் இறைச்சி கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மறுமை நாளில் முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் ஒன்று திரட்டுவான். அழைப்பவனின் குரலை அவர்கள் கேட்பார்கள்; அனைவரின் பார்வைக்கும் அவர்கள் தென்படுவார்கள்; சூரியன் அவர்களுக்கு அருகில் வரும்.’ என்று கூறிவிட்டு ‘ஷஃபாஅத்’ எனும் பரிந்துரை தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்… பிறகு அவர்கள் இப்ராஹீம்(அலை) அவர்களிடம் வருவார்கள். ‘நீங்கள் அல்லாஹ்வின் தூதரும் பூமியில் அவனுடைய நண்பருமாவீர்கள். எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரையுங்கள்’ என்று கூறுவார்கள். அவர்கள், தாம் சொன்ன பொய்களை நினைவு கூர்ந்து, (இன்று) என்னைப் பற்றியே நான் கவலைப்படுகிறேன். நீங்கள் மூஸா(அலை) அவர்களிடம் செல்லுங்கள்’ என்று பதிலளிப்பார்கள்.
Book : 60


أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا بِلَحْمٍ فَقَالَ: ” إِنَّ اللَّهَ يَجْمَعُ يَوْمَ القِيَامَةِ الأَوَّلِينَ وَالآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ، فَيُسْمِعُهُمُ الدَّاعِي وَيُنْفِذُهُمُ البَصَرُ، وَتَدْنُو الشَّمْسُ مِنْهُمْ، – فَذَكَرَ حَدِيثَ الشَّفَاعَةِ – فَيَأْتُونَ إِبْرَاهِيمَ فَيَقُولُونَ: أَنْتَ نَبِيُّ اللَّهِ وَخَلِيلُهُ مِنَ الأَرْضِ، اشْفَعْ لَنَا إِلَى رَبِّكَ، فَيَقُولُ، فَذَكَرَ كَذَبَاتِهِ، نَفْسِي نَفْسِي، اذْهَبُوا إِلَى مُوسَى


Bukhari-3360

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3360. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்

‘நம்பிக்கை கொண்டு, பிறகு தம் நம்பிக்கையில் அநீதியைக் கலந்து விடாதவர்களுக்கு மட்டுமே அபயமுண்டு. மேலும், அவர்களே நேர்வழி பெற்றவர்களாவர்’ என்றும் (திருக்குர்ஆன் 06:82ம்) இறைவசனம் அருளப்பட்டபோது,

நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் தனக்கு அநீதியிழைத்துக் கொள்ளாதவர் எவர் தானிருக்கிறார்?’ என்று கேட்டோம். அதற்கு அவர்கள், ‘(அதன் பொருள்) நீங்கள் சொல்வது போல் அல்ல. ‘தங்கள் இறை நம்பிக்கையில் இணைவைப்பு என்பது மாபெரும் அநீதியாகும்’ என்று சொன்ன(தாக குர்ஆனில் 31:13-வது வசனத்தில் அல்லாஹ் கூறுவ)தை நீங்கள் கேட்கவில்லையா?’ என்று பதிலளித்தார்கள்.
Book :60


لَمَّا نَزَلَتْ {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا} [الأنعام: 82] إِيمَانَهُمْ بِظُلْمٍ، قُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، أَيُّنَا لاَ يَظْلِمُ نَفْسَهُ؟

قَالَ: ” لَيْسَ كَمَا تَقُولُونَ {لَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} [الأنعام: 82] بِشِرْكٍ، أَوَلَمْ تَسْمَعُوا إِلَى قَوْلِ لُقْمَانَ لِابْنِهِ يَا بُنَيَّ لاَ تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ


Bukhari-3359

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3359. உம்மு ஷரீக் (ரலி) அறிவித்தார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்திரவிட்டார்கள்.

மேலும், அவர்கள், ‘அது இப்ராஹீம் (அலை) அவர்கள் தீக்குண்டத்தில் எறியப்பட்டபோது நெருப்பை) அவர்களுக்கெதிராக ஊதிவிட்டுக் கொண்டிருந்தது’ என்றும் கூறினார்கள்.
Book :60


أَمَرَ بِقَتْلِ الوَزَغِ، وَقَالَ: كَانَ يَنْفُخُ عَلَى إِبْرَاهِيمَ عَلَيْهِ السَّلاَمُ


Bukhari-3358

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3358. இப்ராஹீம் (அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. அவற்றின் இரண்டு அல்லாஹ்வின் (மார்க்கத்தின் நலன் காக்கும்) விஷயத்தைச் சொன்னவையாகும்.

அவை 1. (அவரை இணைக்கும் திருவிழாவிற்கு மக்கள் அழைத்தபோது) நான் நோயுற்றியிருக்கின்றேன்,  என்று (அதில் கலந்து கொள்ளாமல் தவிர்ப்பதற்காகக்) கூறியதும்.

2. (சிலைகளை உடைத்துப் பெரிய சிலையின் தோளில் கோடாரியை மாட்டிவிட்டு மக்கள் இப்படிச் செய்தது யார் என்று பேட்ட போது) ‘….ஆயினும் இவர்களில் பெரியதான இந்தச் சிலை தான் இதைச் செய்தது என்று கூறியதுமாகும்.

3. (மூன்றாவது முறையாகப் பொய் சொன்ன சூழ்நிலை வருமாறு) ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவியார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவனுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) இங்கு ஒரு மனிதர் வந்திருக்கிறார். அவருடன் அவரது அழகான மனைவியும் இருக்கிறாள் என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம் (அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் ஆள் அனுப்பினான்.

(அவர்கள் வந்தவுடன்) அவர்களிடம் சாராவைப் பற்றி, இவர் யார் என்று விசாரித்தான். இப்ராஹீம் (அலை) அவர்கள் என் சகோதரி என்று பதிலளித்தார்கள். பிறகு சாரா (அலை) அவர்களிடம் சென்று சாராவே! பூமியின் மீது

لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ إِلَّا ثَلاَثَ كَذَبَاتٍ، ثِنْتَيْنِ مِنْهُنَّ فِي ذَاتِ اللَّهِ عَزَّ وَجَلَّ، قَوْلُهُ {إِنِّي سَقِيمٌ} [الصافات: 89].

وَقَوْلُهُ: {بَلْ فَعَلَهُ كَبِيرُهُمْ هَذَا} [الأنبياء: 63].

وَقَالَ: بَيْنَا هُوَ ذَاتَ يَوْمٍ وَسَارَةُ، إِذْ أَتَى عَلَى جَبَّارٍ مِنَ الجَبَابِرَةِ، فَقِيلَ لَهُ: إِنَّ هَا هُنَا رَجُلًا مَعَهُ امْرَأَةٌ مِنْ أَحْسَنِ النَّاسِ، فَأَرْسَلَ إِلَيْهِ فَسَأَلَهُ عَنْهَا، فَقَالَ: مَنْ هَذِهِ؟ قَالَ: أُخْتِي، فَأَتَى سَارَةَ قَالَ: يَا سَارَةُ: لَيْسَ عَلَى وَجْهِ الأَرْضِ مُؤْمِنٌ غَيْرِي وَغَيْرَكِ، وَإِنَّ هَذَا سَأَلَنِي فَأَخْبَرْتُهُ أَنَّكِ أُخْتِي، فَلاَ تُكَذِّبِينِي،

فَأَرْسَلَ إِلَيْهَا فَلَمَّا دَخَلَتْ عَلَيْهِ ذَهَبَ يَتَنَاوَلُهَا بِيَدِهِ فَأُخِذَ، فَقَالَ: ادْعِي اللَّهَ لِي وَلاَ أَضُرُّكِ، فَدَعَتِ اللَّهَ فَأُطْلِقَ، ثُمَّ تَنَاوَلَهَا الثَّانِيَةَ فَأُخِذَ مِثْلَهَا أَوْ أَشَدَّ، فَقَالَ: ادْعِي اللَّهَ لِي وَلاَ أَضُرُّكِ، فَدَعَتْ فَأُطْلِقَ، فَدَعَا بَعْضَ حَجَبَتِهِ، فَقَالَ: إِنَّكُمْ لَمْ تَأْتُونِي بِإِنْسَانٍ، إِنَّمَا أَتَيْتُمُونِي بِشَيْطَانٍ، فَأَخْدَمَهَا هَاجَرَ، فَأَتَتْهُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي، فَأَوْمَأَ بِيَدِهِ: مَهْيَا، قَالَتْ: رَدَّ اللَّهُ كَيْدَ الكَافِرِ، أَوِ الفَاجِرِ، فِي نَحْرِهِ، وَأَخْدَمَ هَاجَرَ ” قَالَ أَبُو هُرَيْرَةَ تِلْكَ أُمُّكُمْ يَا بَنِي مَاءِ السَّمَاءِ


Bukhari-3357

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3357. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம்(அலை) அவர்கள் மூன்று பொய்களைத் தவிர வேறு பொய் எதுவும் பேசியதில்லை. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book :60


«لَمْ يَكْذِبْ إِبْرَاهِيمُ إِلَّا ثَلاَثًا»


Bukhari-3356

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3356. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இப்ராஹீம் (அலை) அவர்கள், தம் எண்பதாவது வயதில் ‘கத்தூம்’ (எனும் வாய்ச்சி-மரம், செங்கல் செதுக்கும் ஆயுதம்) மூலமாக விருத்த சேதனம் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


இந்தச் செய்தியை அபுஸ்ஸினாத் அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷுஐப் பின் தீனார் அவர்களின் அறிவிப்பில் ‘கதூம்’ என்று இடம்பெற்றுள்ளது.

ஷுஐப் பின் தீனார் அவர்களைப் போன்றே இந்தச் செய்தியை அப்துர்ரஹ்மான் பின் இஸ்ஹாக் அறிவித்துள்ளார்.


மேலும் அஜ்லான் அவர்கள், இந்தச் செய்தியை அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார். முஹம்மத் பின் அம்ர் அவர்கள் அபூஸலமா —> அபூஹுரைரா (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவித்துள்ளார்.

அத்தியாயம்: 60


«اخْتَتَنَ إِبْرَاهِيمُ عَلَيْهِ السَّلاَمُ وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالقَدُّومِ»،

حَدَّثَنَا أَبُو اليَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، وَقَالَ «بِالقَدُومِ مُخَفَّفَةً»


Bukhari-3355

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3355. முஜாஹித்(ரலி) அறிவித்தார்

இப்னு அப்பாஸ்(ரலி) இருக்கும்போது மக்கள், ‘தஜ்ஜாலின் இரண்டு கண்களுக்கிடையே ‘காஃபிர்’ (நிராகரிப்பவன்) என்றோ ‘காஃப், ஃபா, ரா’ என்றோ எழுதப்பட்டிருக்கும். (என்பது உண்மையா?)’ என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது இப்னு அப்பாஸ்(ரலி), ‘நான் இப்படிச் செவியுறவில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள், ‘இப்ராஹீம்(அலை) அவர்கள் (எத்தகைய தோற்றமுடையவர்களாக இருந்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும்) என்றால் உங்கள் தோழரான என்னைப் பாருங்கள்.

மூஸா(அலை) அவர்களோ சுருள்முடி கொண்டவர்களாகவும், (கோதுமை போன்ற) பழுப்பு நிறம் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். ஈச்ச மர நாரினாலான கடிவாளம் இடப்பட்ட சிகப்பு நிற ஒட்டகத்தின் மீது சவாரி செய்வார்கள். அவர்கள் (ஹஜ்ஜின்போது ‘அல் அஸ்ரக்’ எனும்) பள்ளத்தாக்கில் இறங்குவதை (இப்போதும்) நான் பார்ப்பதைப் போன்று உள்ளது’ என்று கூறினார்கள்’ எனச் சொல்ல கேட்டேன்.
Book :60


أَنَّهُ سَمِعَ ابْنَ عَبَّاسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَذَكَرُوا لَهُ الدَّجَّالَ بَيْنَ عَيْنَيْهِ مَكْتُوبٌ كَافِرٌ، أَوْ ك ف ر، قَالَ: لَمْ أَسْمَعْهُ، وَلَكِنَّهُ قَالَ: «أَمَّا إِبْرَاهِيمُ فَانْظُرُوا إِلَى صَاحِبِكُمْ، وَأَمَّا مُوسَى فَجَعْدٌ آدَمُ عَلَى جَمَلٍ أَحْمَرَ مَخْطُومٍ بِخُلْبَةٍ كَأَنِّي أَنْظُرُ إِلَيْهِ انْحَدَرَ فِي الوَادِي»


Bukhari-3354

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3354. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் இன்றிரவு (கனவில்) இரண்டு வானவர்கள் (ஜீப்ரீலும் மீக்காயிலும்) வந்தார்கள். பிறகு நாங்கள் உயரமான ஒரு மனிதரிடம் சென்றோம். நீளத்தின் காரணத்தால் அவரின் தலையை நான் பார்க்க முடியவில்லை. அவர்கள் தாம் இப்ராஹீம்(அலை) அவர்கள் ஆவர். என சமுரா இப்னு ஜுன்தப்(ரலி) அறிவித்தார்.
Book :60


«أَتَانِي اللَّيْلَةَ آتِيَانِ، فَأَتَيْنَا عَلَى رَجُلٍ طَوِيلٍ، لاَ أَكَادُ أَرَى رَأْسَهُ طُولًا، وَإِنَّهُ إِبْرَاهِيمُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-3353

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3353. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்

(நபி(ஸல்) அவர்களிடம்) ‘இறைத்தூதர் அவர்களே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘மனிதர்களிலேயே (அல்லாஹ்வுக்கு) அதிகமாக அஞ்சுபவர் தான்’ என்று பதிலளித்தார்கள்.

உடனே அவர்கள், ‘நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘அப்படியென்றால் அல்லாஹ்வின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய மகனான இறைத்தூதர்(ஸல்) (இஸ்ஹாக்) உடைய மகனான இறைத்தூதர் (யஅகூப்) உடைய மகனான இறைத்தூதர் யூசுஃப் அவர்கள் தாம்!’ என்று பதிலளித்தார்கள்.

அதற்கு மக்கள், ‘நாங்கள் தங்களிடம் அதைப் பற்றிக் கேட்கவில்லை’ என்று கூறினர். உடனே நபி(ஸல்) அவர்கள், ‘அரபுகளின் (பரம்பரையான) சுரங்கங்ளைப் பற்றியா கேட்கிறீர்கள்? அவர்களில் அறியாமைக் காலத்தில் (இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு) சிறந்தவர்களாயிருந்தவர்கள் தாம், இஸ்லாத்திலும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; அவர்கள் மார்க்க ஞானத்தைப் பெற்றால்’ என்று பதிலளித்தார்கள்.

இது அபூ ஹுரைரா(ரலி) அவர்களிடமிருந்து மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்படுகிறது.
Book :60


قِيلَ يَا رَسُولَ اللَّهِ: مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ» فَقَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللَّهِ، ابْنُ نَبِيِّ اللَّهِ، ابْنِ نَبِيِّ اللَّهِ، ابْنِ خَلِيلِ اللَّهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَعَنْ مَعَادِنِ العَرَبِ تَسْأَلُونِ؟ خِيَارُهُمْ فِي الجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الإِسْلاَمِ، إِذَا فَقُهُوا» قَالَ: أَبُو أُسَامَةَ، وَمُعْتَمِرٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ سَعِيدٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3352

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3352. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவில் உருவப்படங்களைப் பார்த்தபோது அவற்றை அழிக்கும்படி உத்திரவிட்டு அவ்வாறே அவை அழிக்கப்பட்ட பின்புதான் அதனுள் நுழைந்தார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களையும், இஸ்மாயீல் (அலை) அவர்களையும்  தம் கையில் குறி சொல்லும் அம்புகளைப் பிடித்தபடி இருக்கும் நிலையில் (உருவங்களாகப்) பார்த்தார்கள். உடனே, ‘அல்லாஹ் தன் கருணையிலிருந்து அவர்களை (குறைஷிகளை) அப்புறப்படுத்தவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் இருவரும் ஒருபோதும் அம்புகளின் மூலம் குறி பார்த்ததில்லை’ என்று கூறினார்கள்.
Book :60


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ، لَمَّا رَأَى الصُّوَرَ فِي البَيْتِ لَمْ يَدْخُلْ حَتَّى أَمَرَ بِهَا فَمُحِيَتْ، وَرَأَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ عَلَيْهِمَا السَّلاَمُ بِأَيْدِيهِمَا الأَزْلاَمُ، فَقَالَ «قَاتَلَهُمُ اللَّهُ، وَاللَّهِ إِنِ اسْتَقْسَمَا بِالأَزْلاَمِ قَطُّ»


Next Page » « Previous Page