Category: புஹாரி

Bukhari

Bukhari-3089

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 199 பிரயாணத்திலிருந்து திரும்பிய பின் உணவு அருந்துவது.

இப்னு உமர் (ரலி) அவர்கள் (பயணத்திலிருந்து திரும்பி வந்தவுடன்) தமக்கு வரவேற்புத் தந்து,  முதலில் தங்க இடம் கொடுத்து விருந்துபசாரம் செய்பவருக்காக (வழமையாக நோற்கும் உபரி) நோன்பை (நோற்காமல்) விட்டு விடுவார்கள்.

3089. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த போது ஒட்டகத்தையோ மாட்டையோ அறுத்தார்கள். நபி(ஸல்) அவர்கள் ஒரு முறை இரண்டு ஊக்கியாக்களுடன் ஒரு திர்ஹம் அல்லது இரண்டு திர்ஹம்களைக் கொடுத்து என்னிடமிருந்து ஓர் ஒட்டகத்தை வாங்கினார்கள்.

(மதீனாவிற்கு அருகிலுள்ள) ‘ஸிரார்’ என்னுமிடத்திற்கு அவர்கள் வந்தபோது ஒரு மாட்டை அறுக்கும்படி உத்தரவிட்டார்கள். அதன்படி அறுக்கப்பட்டது. அதை அனைவரும் உண்டார்கள். மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசலுக்குச் சென்று இரண்டு ரக்அத்துகள் தொழும்படி எனக்கு உத்தரவிட்டார்கள். (தொழுது முடித்த) பிறகு, ஒட்டகத்தின் விலையை எனக்கு நிறுத்துத் தந்தார்கள்.
Book : 56


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا قَدِمَ المَدِينَةَ، نَحَرَ جَزُورًا أَوْ بَقَرَةً»، زَادَ مُعَاذٌ، عَنْ شُعْبَةَ، عَنْ مُحَارِبٍ، سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ «اشْتَرَى مِنِّي النَّبِيُّ  صلّى الله عليه وسلم بَعِيرًا بِوَقِيَّتَيْنِ وَدِرْهَمٍ أَوْ دِرْهَمَيْنِ، فَلَمَّا قَدِمَ صِرَارًا أَمَرَ بِبَقَرَةٍ، فَذُبِحَتْ فَأَكَلُوا مِنْهَا، فَلَمَّا قَدِمَ المَدِينَةَ أَمَرَنِي أَنْ آتِيَ المَسْجِدَ، فَأُصَلِّيَ رَكْعَتَيْنِ وَوَزَنَ لِي ثَمَنَ البَعِيرِ»


Bukhari-3088

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3088. கஅப்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து ‘ளுஹா’ (முற்பகல்) நேரத்தில் திரும்பி வந்தால் பள்ளிவாசலில் நுழைந்து உட்காருவதற்கு முன்பாக இரண்டு ரக்அத்துகள் தொழுவார்கள்.
Book :56


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَدِمَ مِنْ سَفَرٍ، ضُحًى دَخَلَ المَسْجِدَ، فَصَلَّى رَكْعَتَيْنِ قَبْلَ أَنْ يَجْلِسَ»


Bukhari-3087

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 198 ஒருவர் பிரயாணத்திலிருந்து திரும்பியவுடன் தொழுவது.

3087. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நான் நபி(ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தேன். நாங்கள் (பயணம் முடிந்து) மதீனாவிற்குத் திரும்பி வந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘பள்ளிவாசலில் நுழைந்து இரண்டு ரக்அத்துகள் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.
Book : 56


كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَلَمَّا قَدِمْنَا المَدِينَةَ قَالَ لِي: «ادْخُلِ المَسْجِدَ فَصَلِّ رَكْعَتَيْنِ»


Bukhari-3086

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3086. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நானும் அபூ தல்ஹா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களுடன் (போரிலிருந்து) மதீனா நோக்கிச் சென்று கொண்டிருந்தோம். நபி(ஸல்) அவர்களுடன் ஸஃபிய்யா(ரலி) அவர்களும் இருந்தார்கள். அவர்களை நபி(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தில் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதளவு தூரத்தைக் கடந்து வந்து கொண்டிருந்தபோது வழியில் வாகனம் சறுக்கி விழுந்தது. நபி(ஸல்) அவர்களும் அவர்களின் துணைவியாரும் கீழே விழுந்தார்கள்.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக்(ரஹ்) கூறினார்:

மேலும், அனஸ்(ரலி) இப்படிச் சொன்னார்கள் என்று எண்ணுகிறேன்:

அபூ தல்ஹா அவர்கள் தங்களின் ஒட்டகத்திலிருந்து குதித்து இறங்கி, அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னை அல்லாஹ் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக! தங்களுக்கு காயம் எதுவும் ஏற்பட்டதா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இல்லை ஆயினும், நீ அந்தப் பெண்ணை கவனி’ என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா அவர்கள் தம் துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) இருந்த திசையை நோக்கி நடந்து சென்று அவர்களின் மீது அத்துணியை போட்டார்கள். உடனே, அப்பெண்மணி (ஸஃபிய்யா(ரலி)) எழுந்தார்கள்.

பிறகு அபூ தல்ஹா அவர்கள், அவர்கள் (நபியவர்கள்

أَنَّهُ أَقْبَلَ هُوَ وَأَبُو طَلْحَةَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَفِيَّةُ مُرْدِفَهَا عَلَى رَاحِلَتِهِ، فَلَمَّا كَانُوا بِبَعْضِ الطَّرِيقِ عَثَرَتِ النَّاقَةُ، فَصُرِعَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالمَرْأَةُ، وَإِنَّ أَبَا طَلْحَةَ – قَالَ: أَحْسِبُ قَالَ: – اقْتَحَمَ عَنْ بَعِيرِهِ، فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ هَلْ أَصَابَكَ مِنْ شَيْءٍ؟ قَالَ: «لاَ، وَلَكِنْ عَلَيْكَ بِالْمَرْأَةِ»،

فَأَلْقَى أَبُو طَلْحَةَ ثَوْبَهُ عَلَى وَجْهِهِ، فَقَصَدَ قَصْدَهَا، فَأَلْقَى ثَوْبَهُ عَلَيْهَا، فَقَامَتِ المَرْأَةُ، فَشَدَّ لَهُمَا عَلَى رَاحِلَتِهِمَا فَرَكِبَا، فَسَارُوا حَتَّى إِذَا كَانُوا بِظَهْرِ المَدِينَةِ – أَوْ قَالَ أَشْرَفُوا عَلَى المَدِينَةِ –

قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ»، فَلَمْ يَزَلْ يَقُولُهَا حَتَّى دَخَلَ المَدِينَةَ


Bukhari-3085

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3085. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் உஸ்ஃபானிலிருந்து (போர் முடிந்து) திரும்பியபோது நாங்கள் அவர்களுடன் இருந்தோம். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தங்களின் வாகனத்தின் மீது அமர்ந்திருந்தார்கள். (தம் துணைவியார்) ஸஃபிய்யா பின்த்து ஹுயை(ரலி) அவர்களை (வாகனத்தில்) தமக்குப் பின்னே அமர்த்திக் கொண்டிருந்தார்கள். அவர்களின் ஒட்டகம் கால் சறுக்கி விட அவர்களிருவரும் ஒரு சேரக் கீழே விழுந்தார்கள்.

உடனே, அபூ தல்ஹா(ரலி) (தம் வாகனத்திலிருந்து) கீழே குதித்து, ‘இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என்னைத் தங்களுக்கு அர்ப்பணமாக்குவானாக!’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘(முதலில்) அந்தப் பெண்ணை (ஸஃபிய்யாவை) கவனி’ என்று கூறினார்கள். உடனே, அபூ தல்ஹா(ரலி) ஒரு துணியைத் தம் முகத்தின் மீது போட்டு மூடிக் கொண்டு ஸஃபிய்யா(ரலி) அவர்களிடம் சென்று அவர்களின் மீது அந்தத் துணியைப் போட்டார்கள்.

பிறகு இருவருக்கும் அவர்களின் வாகனத்தைச் சரிசெய்து கொடுத்தார்கள். உடனே அவ்விருவரும் (வாகனத்தில்) ஏறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரைச் சுற்றிலும் (வட்டமாக) நின்று அவர்களுக்குப் பாதுகாப்பாகச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கியவுடன் நபி(ஸல்) அவர்கள், ‘பாவ மன்னிப்புக் கோரியவர்களாக, எங்கள் இறைவனையே வணங்கியவர்களாக,

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقْفَلَهُ مِنْ عُسْفَانَ وَرَسُولُ اللَّهِ صلّى الله عليه وسلم عَلَى رَاحِلَتِهِ، وَقَدْ أَرْدَفَ صَفِيَّةَ بِنْتَ حُيَيٍّ، فَعَثَرَتْ نَاقَتُهُ، فَصُرِعَا جَمِيعًا، فَاقْتَحَمَ أَبُو طَلْحَةَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ جَعَلَنِي اللَّهُ فِدَاءَكَ، قَالَ: «عَلَيْكَ المَرْأَةَ»، فَقَلَبَ ثَوْبًا عَلَى وَجْهِهِ، وَأَتَاهَا، فَأَلْقَاهُ عَلَيْهَا، وَأَصْلَحَ لَهُمَا مَرْكَبَهُمَا، فَرَكِبَا وَاكْتَنَفْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا أَشْرَفْنَا عَلَى المَدِينَةِ قَالَ: «آيِبُونَ تَائِبُونَ عَابِدُونَ لِرَبِّنَا حَامِدُونَ» فَلَمْ يَزَلْ يَقُولُ ذَلِكَ حَتَّى دَخَلَ المَدِينَةَ


Bukhari-3084

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 197 புனிதப் போரிலிருந்து திரும்பும் போது அறப்போர் வீரர் என்ன சொல்ல வேண்டும்?

3084. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (புனிதப் போரிலிருந்து) திரும்பிச் செல்லும்போது மூன்று முறை ‘அல்லாஹு அக்பர் – அல்லாஹ் மிகப் பெரியவன்’ என்று கூறிவிட்டு, ‘இறைவன் நாடினால் நாங்கள் பாவமன்னிப்புக் கோரியவர்களாகவும் வணக்கம் புரிபவர்களாகவும், (அவனைப்) புகழ்ந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்கே (நெற்றியை நிலத்தில் வைத்துச்) சிரம் பணிந்தவர்களாகவும் திரும்பிச் செல்கிறோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கிக் காட்டிவிட்டான்; தன் அடியாருக்கு உதவி புரிந்துவிட்டான்; தன்னந் தனியாக (அனைத்துக்) குலங்களையும் தோற்கடித்துவிட்டான்’ என்று கூறினார்கள்.
Book : 56


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” كَانَ إِذَا قَفَلَ كَبَّرَ ثَلاَثًا، قَالَ: «آيِبُونَ إِنْ شَاءَ اللَّهُ تَائِبُونَ، عَابِدُونَ حَامِدُونَ، لِرَبِّنَا سَاجِدُونَ، صَدَقَ اللَّهُ وَعْدَهُ، وَنَصَرَ عَبْدَهُ، وَهَزَمَ الأَحْزَابَ وَحْدَهُ»


Bukhari-3083

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3083. சாயிப் இப்னு யஸீத்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் (சிறுவர்களாயிருந்த போது மற்ற) சிறுவர்களுடன் சேர்ந்து (தபூக் போரிலிருந்து திரும்பி வரும்) இறைத்தூதர்(ஸல்) அவர்களை வரவேற்பதற்காக ‘வதா’ மலைக் குன்றை நோக்கிச் சென்றோம்.
Book :56


«ذَهَبْنَا نَتَلَقَّى رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ الصِّبْيَانِ إِلَى ثَنِيَّةِ الوَدَاعِ»


Bukhari-3082

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 196 அறப்போர் வீரர்களை வரவேற்பது.

3082. இப்னு அபீ முலைக்கா(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு ஜஅஃபர்(ரலி) அவர்களிடம், ‘நானும் நீங்களும் இப்னு அப்பாஸ் அவர்களும் நபி(ஸல்) அவர்களை எதிர்கொண்டு வரவேற்கச் சென்றதை நீங்கள் நினைவில் வைத்திருக்கிறீர்களா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவர்கள், ‘ஆம், நபி(ஸல்) அவர்கள் எங்களை (என்னையும் இப்னு அப்பாஸ் அவர்களையும் தம்முடன்) வாகனத்தில் ஏற்றினார்கள்; உங்களை விட்டுவிட்டார்கள்’ என்று பதிலளித்தார்கள்.
Book : 56


قَالَ: ابْنُ الزُّبَيْرِ لِابْنِ جَعْفَرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ، أَتَذْكُرُ إِذْ تَلَقَّيْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَأَنْتَ، وَابْنُ عَبَّاسٍ قَالَ: «نَعَمْ فَحَمَلَنَا وَتَرَكَكَ»


Bukhari-3081

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 195 இஸ்லாமிய அரசின் கீழுள்ள பிற சமுதாயப் பெண்கள் (அரச துரோகக் குற்றமிழைக்கும் போது) அல்லது முஸ்லிமான பெண்கள் அல்லாஹ்வுக்கு மாறு செய்யும் போது அவர்களின் முடியை, மற்றும் அவர்களின் ஆடையை அவிழ்த்துச் சோதிக்க வேண்டிய (பணி) நிர்பந்தம் (அரசு அதிகாரியான) ஒருவருக்கு ஏற்பட்டால், அவ்வாறு செய்ய அனுமதியுண்டு.

3081. ஸஅத் இப்னு உபைதா(ரஹ்) அறிவித்தார்.

உஸ்மான்(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான அபூ அப்திர் ரஹ்மான்(ரஹ்), அலீ(ரலி) அவர்களின் ஆதரவாளர்களில் ஒருவரான இப்னு அதிய்யா(ரஹ்) அவர்களிடம் இப்படிக் கூறினார்கள்.
உங்கள் தோழர் (அலீ) அவர்களுக்கு ரத்தம் சிந்துவதற்கான துணிவைக் கொடுத்தது எது என்று அறிவேன்.

(ஏனெனில்) அவர் (பின்வருமாறு) சொல்ல கேட்டிருக்கிறேன்:

என்னையும் ஸுபைர்(ரலி) அவர்களையும் நபி(ஸல்) அவர்கள் அனுப்பி, ‘நீங்கள் இன்ன ‘ரவ்ளா’ என்னும் இடத்திற்குச் செல்லுங்கள். அங்கு ஒரு பெண்ணை நீங்கள் காண்பீர்கள். அவளிடம் ஹாதிப் ஒரு கடிதத்தைக் கொடுத்திருக்கிறார்’ என்று கூறினார்கள். நாங்கள் ரவ்ளாவுக்குச் சென்று, ‘கடிதம் (எங்கே)?’ என்று (அப்பெண்ணிடம்) கேட்டோம். அந்தப் பெண், ‘அவர் என்னிடம் கொடுக்கவில்லை’ என்று கூறினாள். நாங்கள், ‘நீயாக அதை வெளியே எடுக்கிறாயா அல்லது நான் உன்னை நிர்வாணப்படுத்தட்டுமா?’

إِنِّي لَأَعْلَمُ مَا الَّذِي جَرَّأَ صَاحِبَكَ عَلَى الدِّمَاءِ، سَمِعْتُهُ يَقُولُ: بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالزُّبَيْرَ، فَقَالَ: «ائْتُوا رَوْضَةَ كَذَا، وَتَجِدُونَ بِهَا امْرَأَةً، أَعْطَاهَا حَاطِبٌ كِتَابًا»، فَأَتَيْنَا الرَّوْضَةَ: فَقُلْنَا: الكِتَابَ، قَالَتْ: لَمْ يُعْطِنِي، فَقُلْنَا: لَتُخْرِجِنَّ أَوْ لَأُجَرِّدَنَّكِ، فَأَخْرَجَتْ مِنْ حُجْزَتِهَا، فَأَرْسَلَ إِلَى حَاطِبٍ، فَقَالَ: لاَ تَعْجَلْ، وَاللَّهِ مَا كَفَرْتُ وَلاَ ازْدَدْتُ لِلْإِسْلاَمِ إِلَّا حُبًّا، وَلَمْ يَكُنْ أَحَدٌ مِنْ أَصْحَابِكَ إِلَّا وَلَهُ بِمَكَّةَ مَنْ يَدْفَعُ اللَّهُ بِهِ عَنْ أَهْلِهِ وَمَالِهِ، وَلَمْ يَكُنْ لِي أَحَدٌ، فَأَحْبَبْتُ أَنْ أَتَّخِذَ عِنْدَهُمْ يَدًا، فَصَدَّقَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ عُمَرُ: دَعْنِي أَضْرِبْ عُنُقَهُ فَإِنَّهُ قَدْ نَافَقَ، فَقَالَ: ” مَا يُدْرِيكَ، لَعَلَّ اللَّهَ اطَّلَعَ عَلَى أَهْلِ بَدْرٍ فَقَالَ: اعْمَلُوا مَا شِئْتُمْ “، فَهَذَا الَّذِي جَرَّأَهُ


Bukhari-3080

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3080. அதா இப்னு அபீ ரபாஹ்(ரஹ்) அறிவித்தார்.

நான் உபைத் இப்னு உமைர்(ரஹ்) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (முஸ்தலிஃபாவில்) ஸபீர் மலையருகே தங்கியிருந்தார்கள். அவர்கள் எங்களிடம், ‘நபி(ஸல்) அவர்களுக்கு அல்லஹ் மக்காவின் வெற்றியை அளித்த பின்னால் (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்யும் கடமை நீங்கிவிட்டது’ என்றார்கள்.
Book :56


ذَهَبْتُ مَعَ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ إِلَى عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا – وَهِيَ مُجَاوِرَةٌ بِثَبِيرٍ – فَقَالَتْ لَنَا: «انْقَطَعَتِ الهِجْرَةُ مُنْذُ فَتَحَ اللَّهُ عَلَى نَبِيِّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَكَّةَ»


Next Page » « Previous Page