Category: புஹாரி

Bukhari

Bukhari-3078 & 3079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3078 & 3079. முஜாஷிஉ இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நான் என் சகோதரர் முஜாலித் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்களை நபி(ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ‘இவர் (என் சகோதரர்) முஜாலித்; தங்களிடம் ஹிஜ்ரத் செய்வதாக உறுதிமொழியளிக்(க வந்திருக்)கிறார்’ என்று கூறினேன்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘மக்கா வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது. ஆயினும், நான் இவரிடம் இஸ்லாத்திற்கு விசுவாசமாக இருப்பதாக உறுதிமொழி வாங்குவேன்’ என்று கூறினார்கள்.
Book :56


جَاءَ مُجَاشِعٌ بِأَخِيهِ مُجَالِدِ بْنِ مَسْعُودٍ، إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: هَذَا مُجَالِدٌ [ يُبَايِعُكَ عَلَى الهِجْرَةِ،

فَقَالَ: «لاَ هِجْرَةَ بَعْدَ فَتْحِ مَكَّةَ، وَلَكِنْ أُبَايِعُهُ عَلَى الإِسْلاَمِ»


Bukhari-3077

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 193 நற்செய்தி அறிவிப்பவருக்குக் கொடுக்கப்படும் அன்பளிப்பு.

(தபூக் போரில் கலந்து கொள்ளாமல் அசிரத்தையாக இருந்த குற்றத்திற்காக, தாம் மன்னிப்புக் கோரியதை ஏற்று) தமக்கு இறைவன் மன்னிப்பு வழங்கி விட்டான் என்னும் நற்செய்தி தமக்கு அறிவிக்கப்பட்ட போது (நற்செய்தியை அறிவித்தவருக்கு) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் இரண்டு துணிகளை (அன்பளிப்பாகக்) கொடுத்தார்கள்.

பாடம் : 194 (மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் கிடையாது.

3077. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், ‘ஹிஜ்ரத் இனி கிடையாது. ஆயினும், ஜிஹாதும் (அதற்காகவும் பிற நற்செயல்கள் புரியவும்) நாட்டம் (நிய்யத்) கொள்வதும் உண்டு. நீங்கள் அறப்போர் புரியப் புறப்படும் படி அழைக்கப்பட்டால் உடனே புறப்பட்டு விடுங்கள்’ என்று கூறினார்கள்.
Book : 56


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ فَتْحِ مَكَّةَ: «لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ، وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا»


Bukhari-3076

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 192 வெற்றிகள் குறித்து நற்செய்தி சொல்வது.

3076. ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், ‘துல் கலஸாவின் கவலையிலிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா?’ என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரிடையே ‘யமன் நாட்டு கஅபா’ என்றழைக்கப்பட்டு வந்த ஆலயமாக இருந்தது. நான் ‘அஹ்மஸ்’ குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது (குதிரை) வீரர்களுடன் புறப்பட்டோம். அவர்கள் சிறந்த குதிரைப் படை வீரர்களாக இருந்தனர். ‘என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை’ என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். எனவே, அவர்கள் என் நெஞ்சில் அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால் அவர்களின் விரல்கள் பதிந்த அடையாளத்தை என் நெஞ்சில் பார்த்தேன்.

அப்போது அவர்கள் ‘இறைவா! இவரை உறுதிப்படுத்து இவரை நேர்வழி காட்டுபவராகவும் ஆக்கு’ என்று பிரார்த்தித்தார்கள். நான் அதை நோக்கிச் சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். நபி(ஸல்) அவர்களுக்கு அதை (உடைத்து எரித்துவிட்டது) பற்றிய நற்செய்தி தெரிவிக்கச் சொல்லி ஆளனுப்பினேன்.

என்னுடைய தூதுவர், ‘இறைத்தூதர் அவர்களே! உங்களைச் சத்திய மார்க்கத்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அந்த ஆலயத்தைச் சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று விட்டுவிட்டுத்

قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلاَ تُرِيحُنِي مِنْ ذِي الخَلَصَةِ»، وَكَانَ بَيْتًا فِيهِ خَثْعَمُ، يُسَمَّى كَعْبَةَ اليَمَانِيَةِ، فَانْطَلَقْتُ فِي خَمْسِينَ وَمِائَةٍ مِنْ أَحْمَسَ، وَكَانُوا أَصْحَابَ خَيْلٍ، فَأَخْبَرْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الخَيْلِ، فَضَرَبَ فِي صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ أَصَابِعِهِ فِي صَدْرِي، فَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ، وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا»، فَانْطَلَقَ إِلَيْهَا، فَكَسَرَهَا وَحَرَّقَهَا، فَأَرْسَلَ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَشِّرُهُ، فَقَالَ رَسُولُ جَرِيرٍ لِرَسُولِ اللَّهِ: يَا رَسُولَ اللَّهِ، وَالَّذِي بَعَثَكَ بِالحَقِّ، مَا جِئْتُكَ حَتَّى تَرَكْتُهَا كَأَنَّهَا جَمَلٌ أَجْرَبُ، فَبَارَكَ عَلَى خَيْلِ أَحْمَسَ وَرِجَالِهَا خَمْسَ مَرَّاتٍ، قَالَ مُسَدَّدٌ: بَيْتٌ فِي خَثْعَمَ


Bukhari-3075

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 191 போரில் கிடைத்த ஒட்டகங்களையும் ஆடுகளையும் (பங்கிடுவதற்கு முன்னால்) அறுப்பது வெறுக்கத் தக்கது.

3075. ராஃபிஉ இப்னு கதீஜ்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் துல் ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது மக்களுக்குப் பசி ஏற்பட்டது. எங்களுக்கு ஒட்டகம் ஒன்றும் ஆடு ஒன்றும் கிடைத்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் மக்களின் பின்வரிசையில் இருந்தார்கள். எனவே, மக்கள் அவசரப்பட்டுப் பாத்திரங்களை அடுப்புகளில் வைத்து (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி(ஸல்) அவர்கள், ‘பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்க்கும்படி உத்தரவிட அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன.

பிறகு (அவற்றை) நபி(ஸல்) அவர்கள் பங்கிட்டார்கள். அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள். அவற்றில் ஓர் ஒட்டகம் ஓடிவிட்டது மக்களிடம் சில குதிரைகளே இருந்தன. அந்த ஒட்டகத்தை அவர்கள் விரட்டிப் பிடிக்க முயன்றார்கள். அது அவர்களைக் களைப்படையச் செய்துவிட்டது.

ஒருவர் அதை நோக்கி ஓர் அம்பை எய்தார். அல்லாஹ் அந்த ஒட்டகத்தை (ஓட முடியாமல்) தடுத்து நிறுத்திவிட்டான். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘காட்டு மிருகங்களில் கட்டுக் கடங்காதவை இருப்பது போல் இந்த விலங்குகளும் கட்டுக்கடங்காதவையாகும். உங்களிடமிருந்து விரண்டோடி விடுபவற்றை

كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذِي الحُلَيْفَةِ، فَأَصَابَ النَّاسَ جُوعٌ، وَأَصَبْنَا إِبِلًا وَغَنَمًا، وَكَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أُخْرَيَاتِ النَّاسِ، فَعَجِلُوا فَنَصَبُوا القُدُورَ، فَأَمَرَ بِالقُدُورِ، فَأُكْفِئَتْ، ثُمَّ قَسَمَ، فَعَدَلَ عَشَرَةً مِنَ الغَنَمِ بِبَعِيرٍ، فَنَدَّ مِنْهَا بَعِيرٌ، وَفِي القَوْمِ خَيْلٌ يَسِيرَةٌ، فَطَلَبُوهُ فَأَعْيَاهُمْ، فَأَهْوَى إِلَيْهِ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ اللَّهُ، فَقَالَ: «هَذِهِ البَهَائِمُ لَهَا أَوَابِدُ كَأَوَابِدِ الوَحْشِ، فَمَا نَدَّ عَلَيْكُمْ، فَاصْنَعُوا بِهِ هَكَذَا». فَقَالَ جَدِّي: إِنَّا نَرْجُو، أَوْ نَخَافُ أَنْ نَلْقَى العَدُوَّ غَدًا، وَلَيْسَ مَعَنَا مُدًى، أَفَنَذْبَحُ بِالقَصَبِ؟ فَقَالَ: ” مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ عَلَيْهِ فَكُلْ، لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ، وَسَأُحَدِّثُكُمْ عَنْ ذَلِكَ: أَمَّا السِّنُّ فَعَظْمٌ، وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الحَبَشَةِ


Bukhari-3074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 190

(போர்ச் செல்வத்தில்) சிறிதளவு மோசடி செய்வது(ம் பாவமே).

(மோசடியாக மேலங்கியொன்றை எடுத்து வைத்திருந்த கிர்கிரா என்பவரைக் கையும் களவுமாகப் பிடித்த போது) நபி (ஸல்) அவர்கள் அவரது பொருள்களை எரித்து விட்டார்கள் என்று அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) அவர்கள் கூறவில்லை.

இது தான் (அதாவது: எரித்தார்கள் என்று கூறப்படாத இந்த அறிவிப்பு தான் எரித்து விட்டார்கள் என்று கூறப்பட்டுள்ள அறிவிப்பை விட) சரியானதாகும்.

3074. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்களின் பயணச் சுமைகளுக்குக் காவலாக ‘கிர்கிரா’ என்றழைக்கப்பட்ட மனிதர் ஒருவர் இருந்தார். அவர் (ஒரு நாள்) இறந்துவிட்டார். உடனே, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்தில் நுழைவார்’ என்று கூறினார்கள். (இதைக் கேட்டு) நபித்தோழர்கள் அவரைப் பார்ப்பதற்காகச் சென்றனர். அங்கு அவர் மோசடி செய்து (திருடி) எடுத்து வைத்திருந்த மேலங்கி ஒன்றைக் கண்டார்கள்.

‘(என் ஆசிரியர்) இப்னு சலாம் (ரஹ்) ‘கிர்கிரா’வை ‘கர்கரா’ என்று வாசிக்க வேண்டும் என்று கூறினார்கள்’ என அபூ அப்தில்லாஹ் புகாரீயாகிய நான் கூறுகிறேன்.
Book : 56


كَانَ عَلَى ثَقَلِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، رَجُلٌ يُقَالُ لَهُ كِرْكِرَةُ، فَمَاتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هُوَ فِي النَّارِ»، فَذَهَبُوا يَنْظُرُونَ إِلَيْهِ، فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا،

قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: “قَالَ ابْنُ سَلاَمٍ: كَرْكَرَةُ يَعْنِي بِفَتْحِ الكَافِ: وَهُوَ مَضْبُوطٌ كَذَا


Bukhari-3073

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 189 (போர்ச் செல்வங்களை) மோசடி செய்வது (பெரும் பாவமாகும்).

அல்லாஹ் கூறுகிறான்: எவரேனும் மோசடி செய்தால் மோசடி செய்த பொருளுடன் மறுமை நாளில் அவர் வருவார்.(3:161)

3073. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அதன் பாவம் பெரியது என்பதையும் எடுத்துரைத்தார்கள். அப்போது, ‘மறுமை நாளில் தன் கழுத்தில், கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காணவேண்டாம்.

(ஏனெனில்) அப்போது நான், ‘உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் (இறைச் சட்டத்தை) எடுத்துரைத்து விட்டேன்’ என்று கூறி விடுவேன். இவ்வாறே, (மறுமை நாளில்) தன் கழுத்தில் கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைச் சுமந்து வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்,) அப்போது நான், ‘என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு (இறைச் சட்டத்தை) நான்

قَامَ فِينَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ الغُلُولَ فَعَظَّمَهُ وَعَظَّمَ أَمْرَهُ، قَالَ: ” لاَ أُلْفِيَنَّ أَحَدَكُمْ يَوْمَ القِيَامَةِ عَلَى رَقَبَتِهِ شَاةٌ لَهَا ثُغَاءٌ، عَلَى رَقَبَتِهِ فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ، يَقُولُ: يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي، فَأَقُولُ: لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ، وَعَلَى رَقَبَتِهِ بَعِيرٌ لَهُ رُغَاءٌ، يَقُولُ: يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي، فَأَقُولُ: لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ، وَعَلَى رَقَبَتِهِ صَامِتٌ، فَيَقُولُ: يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي، فَأَقُولُ لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا قَدْ أَبْلَغْتُكَ، أَوْ عَلَى رَقَبَتِهِ رِقَاعٌ تَخْفِقُ، فَيَقُولُ: يَا رَسُولَ اللَّهِ أَغِثْنِي، فَأَقُولُ: لاَ أَمْلِكُ لَكَ شَيْئًا، قَدْ أَبْلَغْتُكَ ” وَقَالَ أَيُّوبُ: عَنْ أَبِي حَيَّانَ: فَرَسٌ لَهُ حَمْحَمَةٌ


Bukhari-3072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3072. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

ஹஸன் இப்னு அலீ(ரலி) (சிறுவராயிருந்த போது) தருமப் பொருளாக வந்த பேரீச்சம் பழங்களிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துத் தம் வாயில் வைத்தார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பாரசீக மொழியில், ‘ம்ஹ் கிஹ்’ – சீச்சி!’ (என்று சொல்லிவிட்டு) ‘நாம் தருமப் பொருளைச் சாப்பிட மாட்டோம் என்று உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டார்கள்.
Book :56


أَنَّ الحَسَنَ بْنَ عَلِيٍّ، أَخَذَ تَمْرَةً مِنْ تَمْرِ الصَّدَقَةِ، فَجَعَلَهَا فِي فِيهِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالفَارِسِيَّةِ: «كِخْ كِخْ، أَمَا تَعْرِفُ أَنَّا لاَ نَأْكُلُ الصَّدَقَةَ»


Bukhari-3071

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3071. உம்மு காலித் (ரலி) அறிவித்தார்:

இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் நான் என் தந்தையுடன் மஞ்சள் நிறச் சட்டை ஒன்றை அணிந்து சென்றேன். இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘(இவள்) நன்றாயிருக்கிறாள். (இவள்) நன்றாயிருக்கிறாள்’ என்றார்கள். நான் (நபி (ஸல்) அவர்களின் இரண்டு புஜங்களுக்கிடையே இருந்த) நபித்துவ முத்திரையுடன் விளையாடத் தொடங்கினேன்.

உடனே, என் தந்தை என்னை அதட்டினார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(குழந்தை தானே!) அவனை (விளையாட விடுவீராக!’ என்று கூறினார்கள். பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (இந்தச் சட்டையை) நீ (பழையதாக்கிக்) கிழித்து நைந்து போகச் செய்து விடு. மீண்டும் அதைக் கிழித்து நைந்து போகச் செய்து விடு’ என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் முபாரக் (ரஹ்), ‘அந்தச் சட்டை, நிறம் பழுத்துப் போய் மக்களால் பேசப்படும் அளவிற்கு உம்மு காலித் (ரலி) நெடுங்காலம் வாழ்ந்தார்கள்’ என்று கூறுகிறார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் கூறிய ‘சனா’ (நன்றாயிருக்கிறாள்) என்னும் சொல் அபிசீனிய மொழிச் சொல்லாகும்’ என்றும் கூறுகிறார்கள்.

அத்தியாயம்: 56


أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ أَبِي وَعَلَيَّ قَمِيصٌ أَصْفَرُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «سَنَهْ سَنَهْ» – قَالَ عَبْدُ اللَّهِ: وَهِيَ بِالحَبَشِيَّةِ حَسَنَةٌ -، قَالَتْ: فَذَهَبْتُ أَلْعَبُ بِخَاتَمِ النُّبُوَّةِ، فَزَبَرَنِي أَبِي، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «دَعْهَا»، ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَبْلِي وَأَخْلِفِي ثُمَّ، أَبْلِي وَأَخْلِفِي، ثُمَّ أَبْلِي وَأَخْلِفِي»

قَالَ عَبْدُ اللَّهِ: فَبَقِيَتْ حَتَّى ذَكَرَ


Bukhari-3070

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 188 பாரசீக மொழியிலும் (அரபியல்லாத பிற அஜமி) மொழியிலும் பேசுவது.

அல்லாஹ் கூறுகிறான்: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதும், உங்கள் மொழிகளும், உங்கள் நிறங்களும் மாறுபட்டிருப்பதும் அவனுடைய சான்றுகளில் உள்ளனவையே. திண்ணமாக, இவற்றிலெல்லாம் அறிவுடையோருக்கு நிறையச் சான்றுகள் உள்ளன. (30:22)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்: தூதர்கள் அனைவரையும் அவரவரின் சமுதாய மொழியிலேயே தூதுச் செய்தி அறிவிப்பவர்களாய் நாம் அனுப்பி வைத்தோம். (14:4)185

3070. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

(அகழ்ப் போரின் போது) நான் நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நாங்கள் எங்கள் ஆட்டுக் குட்டி ஒன்றை அறுத்தோம்; நான் ஒரு ஸாவு வாற்கோதுமையை அரைத்து மாவாக்கியுள்ளேன்; எனவே, தாங்களும் இன்னொருவரும் (சேர்ந்து அதை உண்பதற்கு) வாருங்கள்’ என்று சொன்னேன். நபி(ஸல்) அவர்கள், ‘அகழ் தோண்டுபவர்களே! ஜாபிர் விருந்துச் சாப்பாடு தயாரித்திருக்கிறார். சீக்கிரம் வாருங்கள்’ என்று உரத்த குரலில் அழைத்தார்கள்.
Book : 56


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ ذَبَحْنَا بُهَيْمَةً لَنَا، وَطَحَنْتُ صَاعًا مِنْ شَعِيرٍ، فَتَعَالَ أَنْتَ وَنَفَرٌ، فَصَاحَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «يَا أَهْلَ الخَنْدَقِ إِنَّ جَابِرًا قَدْ صَنَعَ سُؤْرًا، فَحَيَّ هَلًا بِكُمْ»


Bukhari-3069

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3069. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

முஸ்லிம்கள் பைஸாந்தியர்களைப் போர்க்களத்தில் சந்தித்தபோது நான் ஒரு குதிரையின் மீது (பயணித்தபடி) இருந்தேன்; அப்போது முஸ்லிம்களின் (படைத்) தலைவராக காலித் இப்னு வலீத் அவர்கள் இருந்தார்கள்.

அவரை அபூ பக்ர்(ரலி) (தளபதியாக) அனுப்பியிருந்தார்கள். என்னுடைய) அந்தக் குதிரையை எதிரிகள் எடுத்துக் கொண்டனர். எதிரிகள் தோற்கடிக்கப்பட்டபோது காலித் இப்னு வலீத்(ரலி) என்னுடைய குதிரையைத் திருப்பித் தந்துவிட்டார்கள்.
Book :56


«أَنَّهُ كَانَ عَلَى فَرَسٍ يَوْمَ لَقِيَ المُسْلِمُونَ، وَأَمِيرُ المُسْلِمِينَ يَوْمَئِذٍ خَالِدُ بْنُ الوَلِيدِ بَعَثَهُ أَبُو بَكْرٍ، فَأَخَذَهُ العَدُوُّ فَلَمَّا هُزِمَ العَدُوُّ رَدَّ خَالِدٌ فَرَسَهُ»


Next Page » « Previous Page