Category: புஹாரி

Bukhari

Bukhari-3068

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3068. நாஃபிஉ(ரஹ்) அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்களின் அடிமையொருவன் தப்பியோடி பைஸாந்தியர்களுடன் சேர்ந்து கொண்டான். காலித் இப்னு வலீத்(ரலி) பைஸாந்தியர்களை வென்றபோது, அவனை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.

(இவ்வாறே) இப்னு உமர்(ரலி) அவர்களின் குதிரையொன்று விரண்டோடி பைஸாந்தியர்களிடம் சிக்கியது. பைஸாந்திய நாட்டை காலித் இப்னு வலீத்(ரலி) வென்றபோது அதை அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
Book :56


«أَنَّ عَبْدًا لِابْنِ عُمَرَ أَبَقَ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِ خَالِدُ بْنُ الوَلِيدِ، فَرَدَّهُ عَلَى عَبْدِ اللَّهِ، وَأَنَّ فَرَسًا لِابْنِ عُمَرَ عَارَ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِ، فَرَدُّوهُ عَلَى عَبْدِ اللَّهِ»،


Bukhari-3067

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 187 இணைவைப்பவர்கள் முஸ்லிமின் செல்வத்தைக் கொள்ளையடித்துச் செல்ல, அதையே அவர் பிறகு பெற்றுக் கொண்டால்…

3067. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

என்னுடைய குதிரை ஒன்று (என்னைக் கீழே வீழ்த்திவிட்டு ஓடிச்) சென்றது. அதை எதிரிகள் பிடித்தனர். பின்னர், முஸ்லிம்கள் எதிரிகளை வென்றபோது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் காலத்தில் அது என்னிடம் திருப்பித் தரப்பட்டுவிட்டது. (இவ்வாறே) என்னுடைய அடிமை ஒருவன் தப்பியோடி ரோமர்(பைஸாந்தியர்)களுடன் சேர்ந்து கொண்டான். பைஸாந்தியர்களை முஸ்லிம்கள் வென்றபோது அந்த அடிமையை காலித் இப்னு வலீத்(ரலி) நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பிறகு என்னிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார்கள்.
Book : 56


ذَهَبَ فَرَسٌ لَهُ، فَأَخَذَهُ العَدُوُّ، فَظَهَرَ عَلَيْهِ المُسْلِمُونَ، فَرُدَّ عَلَيْهِ فِي زَمَنِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبَقَ عَبْدٌ لَهُ فَلَحِقَ بِالرُّومِ، فَظَهَرَ عَلَيْهِمُ المُسْلِمُونَ، فَرَدَّهُ عَلَيْهِ خَالِدُ بْنُ الوَلِيدِ بَعْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Bukhari-3066

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 186 கனீமத் – போர்ச் செல்வத்தைப் போரின் போதும், பிரயாணத்திலும் பங்கிடுவது.

ராஃபிஉ (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது ஓர் ஆடும் ஓர் ஒட்டகமும் எங்களுக்குக் கிடைத்தன. நபி (ஸல்) அவர்கள் பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாகக் கருதினார்கள்.

3066. அனஸ்(ரலி) அறிவித்தார்.

ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைத் தாம் பங்கிட்ட இடமான ஜிஇர்ரானாவிலிருந்து (புறப்பட்டுப் போய்) நபி(ஸல்) அவர்கள் உம்ரா செய்தார்கள்.
Book : 56


«اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الجِعْرَانَةِ، حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ»


Bukhari-3065

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 185 பகைவர்களை வென்று அவர்களுடைய திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாட்கள் தங்குவது.

3065. அபூ தல்ஹா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தாரை வென்றால் அவர்களின் திறந்த வெளிப் பகுதியில் மூன்று நாள்கள் தங்குவார்கள்.

இதே போன்று முஆத்(ரஹ்) அவர்களும் அப்துல் அஃலா(ரஹ்) அவர்களும் அறிவித்தார்கள்.
Book : 56


«أَنَّهُ كَانَ إِذَا ظَهَرَ عَلَى قَوْمٍ أَقَامَ بِالعَرْصَةِ ثَلاَثَ لَيَالٍ»


Bukhari-3064

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 184 படையனுப்பி உதவுதல்.

3064. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லிஹ்யான் ஆகிய குலத்தார் (சிலர்) வந்து, தாங்கள் இஸ்லாத்தை ஏற்றதாகக் கூறினர். மேலும், தம் சமுதாயத்தினரை நோக்கி ஒரு படையனுப்பி உத்தரவிடும் படியும் நபி(ஸல்) அவர்களிடம் அவர்கள் கேட்டுக் கொண்டனர். நபி(ஸல்) அவர்கள், அன்சாரிகளிலிருந்து எழுபது பேரை அனுப்பி அவர்களுக்கு உதவினார்கள்.

அவர்களை நாங்கள் ‘காரீகள்’ (குர்ஆனை மனனம் செய்து முறைப்படி ஓதுவோர்) என்று அழைத்து வந்தோம். அவர்கள் பகல் நேரத்தில் விறகு சேகரிப்பார்கள்; இரவு நேரத்தில் தொழுவார்கள். அவர்களை அழைத்துக் கொண்டு அந்தக் குலத்தார் சென்றனர்.

இறுதியில், ‘பீரு மஊனா’ என்னுமிடத்தை அவர்கள் அடைந்தவுடன் முஸ்லிம்களை ஏமாற்றிக் கொன்றுவிட்டனர். உடனே, நபி(ஸல்) அவர்கள் ஒரு மாதம் (முழுவதும்) ரிஅல், தக்வான், பனூ லிஹ்யான் ஆகிய குலங்களுக்குத் தீங்கு நேரப் பிரார்த்தனை செய்தார்கள். (கொல்லப்பட்ட) அந்த எழுபது பேரைக் குறித்து (அவர்கள் சொல்வதாக அருளப்பட்ட) ஓர் இறைவசனத்தை குர்ஆனில் நாங்கள் ஓதி வந்தோம்.

‘நாங்கள் எங்கள் இறைவனைச் சந்திக்கச் சென்று விட்டோம் என்றும், அவன் எங்களைக் குறித்துத் திருப்தியடைந்தான்; நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَاهُ رِعْلٌ، وَذَكْوَانُ، وَعُصَيَّةُ، وَبَنُو لَحْيَانَ، فَزَعَمُوا أَنَّهُمْ قَدْ أَسْلَمُوا، وَاسْتَمَدُّوهُ عَلَى قَوْمِهِمْ، «فَأَمَدَّهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسَبْعِينَ مِنَ الأَنْصَارِ»، قَالَ أَنَسٌ: كُنَّا نُسَمِّيهِمُ القُرَّاءَ، يَحْطِبُونَ بِالنَّهَارِ وَيُصَلُّونَ بِاللَّيْلِ، فَانْطَلَقُوا بِهِمْ، حَتَّى بَلَغُوا بِئْرَ مَعُونَةَ، غَدَرُوا بِهِمْ وَقَتَلُوهُمْ، فَقَنَتَ شَهْرًا يَدْعُو عَلَى رِعْلٍ، وَذَكْوَانَ، وَبَنِي لَحْيَانَ، قَالَ قَتَادَةُ: وَحَدَّثَنَا أَنَسٌ: أَنَّهُمْ قَرَءُوا بِهِمْ قُرْآنًا: أَلاَ بَلِّغُوا عَنَّا قَوْمَنَا، بِأَنَّا قَدْ لَقِيَنَا رَبَّنَا، فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا، ثُمَّ رُفِعَ ذَلِكَ بَعْدُ


Bukhari-3063

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 183 ஒரு போரில் (தளபதி எவரும் இல்லாத போது) பகைவர்களைக் குறித்த அச்சம் ஒருவருக்கு ஏற்பட்டால், நியமிக்கப்படாமல் தானாகவே அவர் படைத் தளபதியாகலாம்.

3063. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(மூத்தா போரின்போது போர்கள் நிகழ்ச்சிகளை மதீனாவில் இருந்தபடியே நேர்முக வர்ணணையாக விவரித்து,) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். உரையில், ‘இப்போது (இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் இப்னு ஹாரிஸா எடுத்தார். அவர் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு, அதை ஜஃபர் இப்னு அபீ தாலிப் எடுத்தார். அவரும் கொல்லப்பட்டுவிட்டார். பிறகு அப்துல்லாஹ் இப்னு ரவாஹா எடுத்தார். இப்போது அவரும் கொல்லப்பட்டுவிட்டார்.

பிறகு, காலித் இப்னு வலீத் (நம்முடைய) உத்தரவு இன்றியே (கொடியை) எடுத்தார். அல்லாஹ் அவருக்கே வெற்றி வாய்ப்பை அளித்துவிட்டான்’ என்று கூறிவிட்டு, ‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்காது’ என்றோ, ‘(இப்போது) அவர்கள் நம்மிடமிருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்காது’ என்றோ சொன்னார்கள். மேலும், இதைச் சொல்லும்போது நபி(ஸல்) அவர்களின் கண்கள் இரண்டும் கண்ணீரைப் பொழிந்து கொண்டிருந்தன.
Book : 56


خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” أَخَذَ الرَّايَةَ زَيْدٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا جَعْفَرٌ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا عَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ فَأُصِيبَ، ثُمَّ أَخَذَهَا خَالِدُ بْنُ الوَلِيدِ عَنْ غَيْرِ إِمْرَةٍ فَفُتِحَ عَلَيْهِ، وَمَا يَسُرُّنِي، أَوْ قَالَ: مَا يَسُرُّهُمْ، أَنَّهُمْ عِنْدَنَا “، وَقَالَ وَإِنَّ عَيْنَيْهِ لَتَذْرِفَانِ


Bukhari-3062

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 182 பாவியான மனிதனின் வாயிலாகவும் இந்த மார்க்கத்திற்கு அல்லாஹ் வலுவூட்டுகின்றான்.

3062. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் நாங்கள் (கைபர் போரில்) கலந்து கொண்டோம். தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைக் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்தபோது காயம் ஒன்று அவருக்கு ஏற்பட்டது. நபி(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் எவரைக் குறித்து, ‘இவர் நரகவாசிகளில் ஒருவர்’ என்று குறிப்பிட்டீர்களோ அவர் இன்று கடுமையாகப் போரிட்டு மடிந்துவிட்டார்’ என்று கூறப்பட்டது.

அப்போதும் நபி(ஸல்) அவர்கள், ‘அவர் நரகத்திற்கே செல்வார்’ என்று (மீண்டும்) கூறினார்கள். மக்களில் சிலர் (நபி(ஸல்) அவர்களின் இச்சொல்லை) சந்தேகப்படலாயினர். அவர்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, ‘அவர் (போரில் கொல்லப்பட்டு) இறக்கவில்லை. ஆயினும், அவர் கடும் காயத்திற்கு ஆளானார். இரவு வந்தபோது, காயத்தின் வேதனையை அவரால் தாங்க முடியாமல் தற்கொலை செய்தார்’ என்று கூறப்பட்டது.

நபி(ஸல்) அவர்களுக்கு இச்செய்தி தெரிவிக்கப்பட்டது. அப்போது அவர்கள், ‘அல்லாஹ் மிகப் பெரியவன். நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்பதற்கு

شَهِدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لِرَجُلٍ مِمَّنْ يَدَّعِي الإِسْلاَمَ: «هَذَا مِنْ أَهْلِ النَّارِ»، فَلَمَّا حَضَرَ القِتَالُ قَاتَلَ الرَّجُلُ قِتَالًا شَدِيدًا فَأَصَابَتْهُ جِرَاحَةٌ، فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، الَّذِي قُلْتَ لَهُ إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ، فَإِنَّهُ قَدْ قَاتَلَ اليَوْمَ قِتَالًا شَدِيدًا وَقَدْ مَاتَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِلَى النَّارِ»، قَالَ: فَكَادَ بَعْضُ النَّاسِ أَنْ يَرْتَابَ، فَبَيْنَمَا هُمْ عَلَى ذَلِكَ، إِذْ قِيلَ: إِنَّهُ لَمْ يَمُتْ، وَلَكِنَّ بِهِ جِرَاحًا شَدِيدًا، فَلَمَّا كَانَ مِنَ اللَّيْلِ لَمْ يَصْبِرْ عَلَى الجِرَاحِ فَقَتَلَ نَفْسَهُ، فَأُخْبِرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِذَلِكَ، فَقَالَ: «اللَّهُ أَكْبَرُ، أَشْهَدُ أَنِّي عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ»، ثُمَّ أَمَرَ بِلاَلًا فَنَادَى بِالنَّاسِ: «إِنَّهُ لاَ يَدْخُلُ الجَنَّةَ إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ، وَإِنَّ اللَّهَ لَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِالرَّجُلِ الفَاجِرِ»


Bukhari-3061

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3061. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டியலில்) என்னுடைய பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், என் மனைவி ஹஜ் செய்யவிருக்கிறாள்’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘நீ திரும்பிச் சென்று உன் மனைவியுடன் ஹஜ் செய்’ என்று கூறினார்கள்.
Book :56


جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي كُتِبْتُ فِي غَزْوَةِ كَذَا وَكَذَا، وَامْرَأَتِي حَاجَّةٌ، قَالَ: «ارْجِعْ، فَحُجَّ مَعَ امْرَأَتِكَ»


Bukhari-3060

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 181 (அறப் போருக்குச் செல்ல முன்வரும்) மக்களை தலைவர் எழுதிப் பதிவு செய்வது.

3060. ஹுதைஃபா(ரலி) அறிவித்தார்.

‘மக்களில் இஸ்லாத்தை ஏற்றிருப்பதாகக் கூறுபவர்களின் பெயர்களை எனக்காக எழுதுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள். நாங்கள் அவர்களுக்காக ஆயிரத்து ஐநூறு பெயர்களை எழுதினோம். அப்போது நாங்கள், ‘நாம் ஆயிரத்து ஐநூறு பேர் இருக்க (எதிரிகளுக்கு) நாம் பயப்படுவதா?’ என்று கேட்டோம். (ஆனால், பிற்காலத்தில்) நாங்கள் அச்சப்பட்டு தனியாகத் தொழுமளவிற்கு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்ததை பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பாளர் அஃமஷ்(ரஹ்) கூறினார்:

‘(மொத்தம்) ஐநூறு பேர்களை நாங்கள் கண்டோம்’ என்று ஹுதைஃபா(ரலி) மற்றோர் அறிவிப்பில் கூறுகிறார்கள்.

‘அறுநூறு பேரிலிருந்து எழுநூறு பேர் வரை’ என்று ஹுதைஃபா(ரலி) சொன்னதாக அபூ முஆவியா(ரஹ்) அறிவித்தார்.
Book : 56


«اكْتُبُوا لِي مَنْ تَلَفَّظَ بِالإِسْلاَمِ مِنَ النَّاسِ»، فَكَتَبْنَا لَهُ أَلْفًا وَخَمْسَ مِائَةِ رَجُلٍ، فَقُلْنَا: نَخَافُ وَنَحْنُ أَلْفٌ وَخَمْسُ مِائَةٍ، فَلَقَدْ رَأَيْتُنَا ابْتُلِينَا، حَتَّى إِنَّ الرَّجُلَ لَيُصَلِّي وَحْدَهُ وَهُوَ خَائِفٌ. حَدَّثَنَا عَبْدَانُ، عَنْ أَبِي حَمْزَةَ، عَنِ الأَعْمَشِ فَوَجَدْنَاهُمْ خَمْسَ مِائَةٍ. قَالَ أَبُو مُعَاوِيَةَ: مَا بَيْنَ سِتِّ مِائَةٍ إِلَى سَبْعِ مِائَةٍ


Next Page » « Previous Page