Category: புஹாரி

Bukhari

Bukhari-3058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 179 நபி (ஸல்) அவர்கள் யூதரிடம், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். (ஈருலகிலும்) பாதுகாப்புப் பெறுவீர்கள் என்று கூறியது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 180 எதிரி நாட்டிலிருக்கும் சிலர், அங்கு தமக்குச் செல்வமும் நிலங்களும் இருக்கும் நிலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அந்த நாட்டை இஸ்லாமிய அரசு கைப்பற்றிக் கொள்ளும் பட்சத்தில் அது அந்தச் சிலருக்கே உரியதாகும்.

3058. உஸாமா இப்னு ஸைத்(ரலி) கூறினார்.

நான் நபி(ஸல்) அவர்களின் ஹஜ்ஜின்போது, ‘இறைத்தூதர் அவர்களே! தாங்கள் நாளை (மக்காவில்) எங்கு தங்குகிறீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(அபூ தாலிபின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா?’ என்று கேட்டு விட்டுப் பிறகு, ‘குறைஷிகள் இறைநிராகரிப்பில் நிலைத்திருக்கப் போவதாக சத்தியம் செய்த இடமான ‘முஹஸ்ஸப்’ என்கிற ‘பனூ கினானா’ பள்ளத்தாக்கில் நாளை நாம் தங்கவிருக்கிறோம்’ என்று கூறினார்கள்.

பனூ கினானா குலத்தார் குறைஷிகளிடம் பனூ ஹாஷிம் கிளையாருக்கு எதிராக, ‘அவர்களுடன் கொடுக்கல் வாங்கல் வைத்துக் கொள்ள மாட்டோம்; அவர்களுக்குப் புகலிடம் அளிக்கவும் மாட்டோம்’ என்று ஒப்பந்தம் செய்திருந்தையே நபி(ஸல்)

قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، أَيْنَ تَنْزِلُ غَدًا فِي حَجَّتِهِ؟ قَالَ: «وَهَلْ تَرَكَ لَنَا عَقِيلٌ مَنْزِلًا؟»، ثُمَّ قَالَ: «نَحْنُ نَازِلُونَ غَدًا بِخَيْفِ بَنِي كِنَانَةَ المُحَصَّبِ، حَيْثُ قَاسَمَتْ قُرَيْشٌ عَلَى الكُفْرِ»، وَذَلِكَ أَنَّ بَنِي كِنَانَةَ حَالَفَتْ قُرَيْشًا عَلَى بَنِي هَاشِمٍ، أَنْ لاَ يُبَايِعُوهُمْ، وَلاَ يُؤْوُوهُمْ، قَالَ الزُّهْرِيُّ: وَالخَيْفُ: الوَادِي


Bukhari-3057

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3057. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

…பிறகு நபி(ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுடைய தகுதிக்கேற்பப் புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்.
நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கிறேன்.

எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும், நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத்தூதரும் தன் சமுதாயத்தாருக்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும் அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.
Book :56


ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ، فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ، ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ: «إِنِّي أُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا قَدْ أَنْذَرَهُ قَوْمَهُ، لَقَدْ أَنْذَرَهُ نُوحٌ قَوْمَهُ، وَلَكِنْ سَأَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ، تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ، وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ»


Bukhari-3056

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3056. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களும் உபை இப்னு கஅப்(ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் தங்கியிருந்த பேரீச்ச தோட்டத்திற்குச் செல்வதற்காக நடக்கலாயினர். பேரீச்சந் தோட்டத்திற்குள் நுழைந்தவுடன் நபி(ஸல்) அவர்கள், இப்னு ஸய்யாத் தம்மைப் பார்த்து விடும் முன்பே அவனிடமிருந்து, அவனது பேச்சு எதையாவது கேட்டு விட வேண்டுமென்று  திட்டமிட்டபடி பேரீச்ச மரங்களின் அடிப்பகுதிகளுக்கிடையே தம்மை மறைத்து நடந்தார்கள். அப்போது இப்னு ஸய்யாத் தன்னுடைய படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வையில் எதையோ முணுமுணுத்தபடி படுத்திருந்தான்.

இப்னு ஸய்யாதின் தாய் நபி(ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களின் தண்டுகளுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதைக் கண்டு இப்னு ஸய்யாதை, ‘ஸாஃபியே!’ இது இப்னு ஸய்யாதின் பெயராகும்… என்றழைத்தாள். உடனே இப்னு ஸய்யாத் குதித்தெழுந்து உட்கார்ந்தான். நபி(ஸல்) அவர்கள், ‘அவள் அவனை அப்படியேவிட்டு விட்டிருந்தால் அவன் (உண்மை நிலையைத்) தெளிவுபடுத்தியிருப்பான்’ என்றார்கள்.
Book :56


انْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأُبَيُّ بْنُ كَعْبٍ يَأْتِيَانِ النَّخْلَ الَّذِي فِيهِ ابْنُ صَيَّادٍ، حَتَّى إِذَا دَخَلَ النَّخْلَ طَفِقَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، وَهُوَ يَخْتِلُ ابْنَ صَيَّادٍ أَنْ يَسْمَعَ مِنْ ابْنِ صَيَّادٍ شَيْئًا قَبْلَ أَنْ يَرَاهُ،

وَابْنُ صَيَّادٍ مُضْطَجِعٌ عَلَى فِرَاشِهِ فِي قَطِيفَةٍ لَهُ فِيهَا رَمْزَةٌ، فَرَأَتْ أُمُّ ابْنِ صَيَّادٍ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَتَّقِي بِجُذُوعِ النَّخْلِ، فَقَالَتْ لِابْنِ صَيَّادٍ: أَيْ صَافِ وَهُوَ اسْمُهُ، فَثَارَ ابْنُ صَيَّادٍ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَوْ تَرَكَتْهُ بَيَّنَ»


Bukhari-3055

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 178 சிறுவனுக்கு இஸ்லாத்தை எடுத்துரைப்பது எப்படி?

3055. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) நபித்தோழர்களின் ஒரு குழுவினருடன் நபியவர்களோடு (தான் இறைத்தூதர் என்று வாதாடிய) இப்னு ஸய்யாதை நோக்கிச் சென்றார்கள். பனீ மகாலா குலத்தாரின் மாளிகைகளுக்கருகே சிறுவர்களுடன் (சிறுவனாக) அவன் விளையாடிக் கொண்டிருக்கக் கண்டார்கள். அப்போது இப்னு ஸய்யாத் பருவ வயதை நெருங்கி விட்டிருந்தான். நபி(ஸல்) அவர்கள் தம் கரத்தால் அவனுடைய முதுகில் அடிக்கும் வரையில் அவன் எதையுமே உணரவில்லை. பிறகு, நபி(ஸல்) அவர்கள், ‘நான் இறைத்தூதர்(ஸல்)தான் என்று நீ சாட்சி கூறுகிறாயா?’ என்று கேட்டார்கள். நபி(ஸல்) அவர்களை இப்னு ஸய்யாத் (கூர்ந்து) பார்த்து வீட்டு, ‘நீங்கள் (எழுதப் படிக்கத் தெரியாத மக்களான) உம்மீகளின் தூதர் என்று நான் சாட்சி கூறுகிறேன்’ என்று பதிலளித்தான்.

அப்போது இப்னு ஸய்யாத் நபி(ஸல்) அவர்களிடம், நீங்கள் நான் அல்லாஹ்வின் தூதன் என்று (என்னை ஏற்றுக் கொண்டு) சாட்சி கூறுகிறீர்களா?’ என்று கேட்டான். அதற்கு நபி(ஸல்) அவர்கள் இப்னு ஸய்யாதை நோக்கி, ‘அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நான் நம்பிக்கை கொண்டேன்’ என்று கூறினார்கள். (பின்னர்)

நபி(ஸல்) அவர்கள், (உன் நிலை பற்றி) நீ என்ன நினைக்கிறாய்?’

أَنَّ عُمَرَ انْطَلَقَ فِي رَهْطٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قِبَلَ ابْنِ صَيَّادٍ، حَتَّى وَجَدُوهُ يَلْعَبُ مَعَ الغِلْمَانِ، عِنْدَ أُطُمِ بَنِي مَغَالَةَ، وَقَدْ قَارَبَ يَوْمَئِذٍ ابْنُ صَيَّادٍ يَحْتَلِمُ، فَلَمْ يَشْعُرْ بِشَيْءٍ حَتَّى ضَرَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ظَهْرَهُ بِيَدِهِ، ثُمَّ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟»، فَنَظَرَ إِلَيْهِ ابْنُ صَيَّادٍ، فَقَالَ: أَشْهَدُ أَنَّكَ رَسُولُ الأُمِّيِّينَ، فَقَالَ ابْنُ صَيَّادٍ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ»، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَاذَا تَرَى؟» قَالَ ابْنُ صَيَّادٍ: يَأْتِينِي صَادِقٌ وَكَاذِبٌ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خُلِطَ عَلَيْكَ الأَمْرُ؟» قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنِّي قَدْ خَبَأْتُ لَكَ خَبِيئًا»، قَالَ ابْنُ صَيَّادٍ: هُوَ الدُّخُّ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْسَأْ، فَلَنْ تَعْدُوَ قَدْرَكَ»، قَالَ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِيهِ أَضْرِبْ عُنُقَهُ، قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ يَكُنْهُ، فَلَنْ تُسَلَّطَ عَلَيْهِ، وَإِنْ لَمْ يَكُنْهُ، فَلاَ خَيْرَ لَكَ فِي قَتْلِهِ»


Bukhari-3054

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 177 தூதுக் குழுவினரை வரவேற்பதற்காக (ஆடையணிகளால்) அலங்கரித்துக் கொள்வது.

3054. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

உமர்(ரலி) கெட்டியான பட்டு அங்கி ஒன்று சந்தையில் விற்கப்படுவதைக் கண்டார்கள், அதை (வாங்கி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் கொண்டு வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! இந்த அங்கியை வாங்கி, பெருநாளின் போதும் தூதுக் குழுக்கள் வருகை தரும் போதும் இதனால் (உங்களை) அலங்கரித்துக் கொள்ளுங்கள்’ என்றார்கள். அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர்களின் ஆடையாகும்.’.. அல்லது ‘(மறுமையில்) எந்தப் பங்கும் இல்லாதவர்கள் தான் இதை அணிவார்கள்.’. சொன்னார்கள்.

பிறகு, உமர்(ரலி) அல்லாஹ் நாடிய வரை (சிறிது நேரம்) தங்கியிருந்தார்கள். பின்பு, நபி(ஸல்) அவர்கள் பூவேலைப்பாடு செய்யப்பட்ட பட்டு அங்கி ஒன்றை உமர்(ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். உமர்(ரலி) அதை எடுத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் வந்தார்கள்.

‘இறைத்தூதர் அவர்களே! ‘இது (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவருடைய ஆடையாகும்’ அல்லது… அல்லது.. (மறுமையில்) எந்த நற்பேறும் இல்லாதவர் தான் இதை அணிவார்’… கூறினீர்கள். பிறகு, இதையே எனக்கு அனுப்பி வைத்திருக்கிறீர்களே’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘இதை

وَجَدَ عُمَرُ حُلَّةَ إِسْتَبْرَقٍ تُبَاعُ فِي السُّوقِ، فَأَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ ابْتَعْ هَذِهِ الحُلَّةَ، فَتَجَمَّلْ بِهَا لِلْعِيدِ وَلِلْوُفُودِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ، أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ» فَلَبِثَ مَا شَاءَ اللَّهُ، ثُمَّ أَرْسَلَ إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجُبَّةِ دِيبَاجٍ فَأَقْبَلَ بِهَا عُمَرُ حَتَّى أَتَى بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، قُلْتَ إِنَّمَا هَذِهِ لِبَاسُ مَنْ لاَ خَلاَقَ لَهُ أَوْ إِنَّمَا يَلْبَسُ هَذِهِ مَنْ لاَ خَلاَقَ لَهُ، ثُمَّ أَرْسَلْتَ إِلَيَّ بِهَذِهِ، فَقَالَ: «تَبِيعُهَا أَوْ تُصِيبُ بِهَا بَعْضَ حَاجَتِكَ»


Bukhari-3053

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 175

தூதுக் குழுவினருக்குப் பரிசுகள் வழங்குதல்

3053. ஸயீத் இப்னு ஜுபைர் (ரஹ்) அறிவித்தார்.

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி), ‘(அன்று) வியாழக்கிழமை, எந்த வியாழக்கிழமை (தெரியுமா?)’ என்று கேட்டுவிட்டு, அவர்களின் கண்ணீர் சரளைக் கல் பூமியை நனைத்து விடும் அளவிற்கு அழுதார்கள்.

பிறகு கூறினார்கள்.

வியாழக்கிழமையன்று இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள், ‘ஓர் ஏட்டை என்னிடம் கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒருபோதும் வழி தவற மாட்டீர்கள்’ என்று கூறினார்கள். அப்போது மக்கள் (உரத்த குரலில்) சச்சரவிட்டார்கள். ஆனால், ஓர் இறைத் தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல.

மக்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோயுற்றுவிட்டார்கள்’ என்று கூறினார்கள். எனவே நபி(ஸல்) அவர்கள், ‘என்னைவிட்டு விடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரண சாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறை நினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது?’ என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை) மேலும், அவர்கள் தங்களின் மரணத் தருவாயில் மூன்று விஷயங்களைக் கட்டளையிட்டார்கள்.

அவை: அரபு தீபகற்பத்திலிருந்து

يَوْمُ الخَمِيسِ وَمَا يَوْمُ الخَمِيسِ؟ ثُمَّ بَكَى حَتَّى خَضَبَ دَمْعُهُ الحَصْبَاءَ، فَقَالَ: اشْتَدَّ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَجَعُهُ يَوْمَ الخَمِيسِ، فَقَالَ: «ائْتُونِي بِكِتَابٍ أَكْتُبْ لَكُمْ كِتَابًا لَنْ تَضِلُّوا بَعْدَهُ أَبَدًا»، فَتَنَازَعُوا، وَلاَ يَنْبَغِي عِنْدَ نَبِيٍّ تَنَازُعٌ، فَقَالُوا: هَجَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «دَعُونِي، فَالَّذِي أَنَا فِيهِ خَيْرٌ مِمَّا تَدْعُونِي إِلَيْهِ»، وَأَوْصَى عِنْدَ مَوْتِهِ بِثَلاَثٍ: «أَخْرِجُوا المُشْرِكِينَ مِنْ جَزِيرَةِ العَرَبِ، وَأَجِيزُوا الوَفْدَ بِنَحْوِ مَا كُنْتُ أُجِيزُهُمْ»، وَنَسِيتُ الثَّالِثَةَ،

وَقَالَ يَعْقُوبُ بْنُ مُحَمَّدٍ، سَأَلْتُ المُغِيرَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ جَزِيرَةِ العَرَبِ: فَقَالَ مَكَّةُ، وَالمَدِينَةُ، وَاليَمَامَةُ، وَاليَمَنُ، وَقَالَ يَعْقُوبُ وَالعَرْجُ أَوَّلُ تِهَامَةَ


Bukhari-3052

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 174 இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் பிற மதத்தவர்களின் பாதுகாப்பிற்காகப் போரிட வேண்டும்; அவர்களை அடிமைகளாக நடத்தக் கூடாது.

3052. உமர்(ரலி) அறிவித்தார்.

(எனக்குப் பின் வருகிற புதிய) கலீஃபாவுக்கு நான் உபதேசிக்கிறேன். அல்லாஹ்வின் பொறுப்பிலும், அவனுடைய தூதர்(ஸல்) அவர்களின் பொறுப்பிலும் உள்ள (முஸ்லிமல்லாத)வர்களின் ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றிட வேண்டும்.

(அதன்படி) அவர்களைப் பாதுகாப்பதற்காகப் போரிட வேண்டும்; அவர்களின் சக்திக்கேற்பவே தவிர (ஜிஸ்யா எனும் பாதுகாப்பு வரியின்) பாரத்தை அவர்களின் மீது சுமத்தக் கூடாது.
Book : 56


«وَأُوصِيهِ بِذِمَّةِ اللَّهِ، وَذِمَّةِ رَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنْ يُوفَى لَهُمْ بِعَهْدِهِمْ، وَأَنْ يُقَاتَلَ مِنْ وَرَائِهِمْ، وَلاَ يُكَلَّفُوا إِلَّا طَاقَتَهُمْ»


Bukhari-3051

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 173 எதிரி நாட்டைச் சேர்ந்த ஒருவன் இஸ்லாமிய நாட்டில் எவருடைய அடைக்கலமும் பெறாமல் நுழைந்து விட்டால்….

3051. ஸலமா பின் அக்வஃ(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் (ஹுனைன் போருக்கான) பயணத்தில் இருந்தபோது அவர்களிடம் இணைவைப்பவர்களிடையேயிருந்து உளவாளி ஒருவன் வந்தான்; நபி(ஸல்) அவர்களின் தோழர்களிடம் பேசியபடி அமர்ந்தான்; பிறகு, திரும்பிச் சென்றுவிட்டான். நபி(ஸல்) அவர்கள் (விஷயம் தெரிந்தவுடன்), ‘அவனைத் தேடிப் பிடித்துக் கொன்று விடுங்கள்’ என்று உத்தரவிட்டார்கள். நான் அவனை (தேடிப் பிடித்துக்) கொன்று விட்டேன். அவனிடமிருந்து கைப்பற்றப்பட்ட அவனுடைய உடைமைகளை (போர்ச் செல்வத்தில் என் பங்கிற்கு மேல்) உபரியாக நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கொடுத்தார்கள்.
Book : 56


أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَيْنٌ مِنَ المُشْرِكِينَ وَهُوَ فِي سَفَرٍ، فَجَلَسَ عِنْدَ أَصْحَابِهِ يَتَحَدَّثُ، ثُمَّ انْفَتَلَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اطْلُبُوهُ، وَاقْتُلُوهُ». فَقَتَلَهُ، فَنَفَّلَهُ سَلَبَهُ


Bukhari-3050

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3050. முஹம்மத் இப்னு ஜுபைர்(ரஹ்) அறிவித்தார்.

என் தந்தை ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) பத்ருப் போர்க் கைதிகளின் (பிணைத் தொகை மற்றும் விடுதலை) விஷயமாக நபி(ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் ‘தூர்’ அத்தியாயத்தை ஓதக் கேட்டேன்’ என்று (என் தந்தை) கூறினார்கள்.
Book :56


«سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ فِي المَغْرِبِ بِالطُّورِ»


Bukhari-3049

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3049. அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களிடம் பஹ்ரைனிலிருந்து (அரசு நிதி) கொண்டு வரப்பட்டது. அப்போது அப்பாஸ்(ரலி) வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! எனக்குக் கொடுங்கள். ஏனெனில், நான் (இஸ்லாத்தைத் தழுவும் முன்பு பத்ருப் போரில் கைதியாகப் பிடிபட்டபோது எனக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்; (என் சகோதரர்) அகீலுக்காகவும் பிணைத் தொகை செலுத்தியிருக்கிறேன்’ என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள், ‘எடுத்துக் கொள்வீராக!’ என்று கூறி (நிதியை) அவரின் ஆடையில் (கொட்டி) அவருக்குக் கொடுத்தார்கள்.
Book :56


أُتِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَالٍ مِنَ البَحْرَيْنِ فَجَاءَهُ العَبَّاسُ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي فَإِنِّي فَادَيْتُ نَفْسِي وَفَادَيْتُ عَقِيلًا فَقَالَ: «خُذْ»، فَأَعْطَاهُ فِي ثَوْبِهِ


Next Page » « Previous Page