Category: புஹாரி

Bukhari

Bukhari-6890

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

ஒருவர் நெரிசலில் சிக்கி இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால்..?27

6890. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போர் நாளில் (ஆரம்பத்தில்) இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். அப்போது இப்லீஸ், ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்!’ என்று கத்தினான். உடனே முஸ்லிம்களில் முன் அணிப் படையினர் திரும்பிச் சென்று (எதிரிகள் தாம் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டு) பின் அணிப்படையினருடன் மோதினார்கள்.

அப்போது அங்கு (தமக்கு அருகேயிருந்த) தம் தந்தை அல்யமான் (ரலி) அவர்கள் (முன்னணிப் படையினரிடம்) சிக்கிக் கொண்டதை ஹுதைஃபா (ரலி) அவர்கள் பார்த்துவிட்டு, ‘அல்லாஹ்வின் அடியார்களே! (அவர்) என் தந்தை! என் தந்தை’ என்று (உரத்த குரலில்) கூறினார்கள். ஆனால், அல்லாஹ்வீன் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பே (அவரைவிட்டு) அவர்கள் விலகினார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று கூறினார்கள்.

لَمَّا كَانَ يَوْمُ أُحُدٍ هُزِمَ المُشْرِكُونَ، فَصَاحَ إِبْلِيسُ: أَيْ عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ فَاجْتَلَدَتْ هِيَ وَأُخْرَاهُمْ، فَنَظَرَ حُذَيْفَةُ فَإِذَا هُوَ بِأَبِيهِ اليَمَانِ، فَقَالَ: أَيْ عِبَادَ اللَّهِ أَبِي أَبِي ” قَالَتْ: «فَوَاللَّهِ مَا احْتَجَزُوا حَتَّى قَتَلُوهُ، قَالَ حُذَيْفَةُ غَفَرَ اللَّهُ لَكُمْ» قَالَ عُرْوَةُ: «فَمَا زَالَتْ فِي حُذَيْفَةَ مِنْهُ بَقِيَّةُ خَيْرٍ حَتَّى لَحِقَ بِاللَّهِ»


Bukhari-6889

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6889. யஹ்யா இப்னு ஸயீத் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

‘ஒருவர் நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குள் (ஒரு துவாரம் வழியாக) எட்டிப் பார்த்தார். அப்போது அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் கூர்மையான பகுதியை நேராகக் கொண்டு சென்றார்கள்’ என்று ஹுமைத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நான் ‘இதை உங்களுக்கு அறிவித்தவர் யார்?’ என்று கேட்டேன். அதற்கு ஹுமைத் (ரஹ்) அவர்கள், ‘அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் தாம் ( அறிவித்தார்கள்)’ என்று பதிலளித்தார்கள். 26

Book :87


أَنَّ رَجُلًا اطَّلَعَ فِي بَيْتِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَسَدَّدَ إِلَيْهِ مِشْقَصًا» فَقُلْتُ: مَنْ حَدَّثَكَ؟ قَالَ: أَنَسُ بْنُ مَالِكٍ


Bukhari-6888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6888. மேற்சொன்ன அதே அறிவிப்பாளர் தொடரில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்கள் அனுமதியின்றி ஒருவர் உங்கள் வீட்டுக்குள் எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீங்கள் சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உங்களின் மீது எந்தக் குற்றமும் இல்லை.

Book :87


«لَوِ اطَّلَعَ فِي بَيْتِكَ أَحَدٌ، وَلَمْ تَأْذَنْ لَهُ، خَذَفْتَهُ بِحَصَاةٍ، فَفَقَأْتَ عَيْنَهُ مَا كَانَ عَلَيْكَ مِنْ جُنَاحٍ»


Bukhari-6887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

ஒருவர் ஆட்சியாளரிடம் (வழக்கைக் கொண்டு) செல்லாமல் தமது உரிமையைத் தாமே மீட்டெடுப்பதும் (தமது உறவினருக் காகத்) தாமே பழிவாங்குவதும்.24

6887. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நாமே (காலத்தால்) பிந்தியவர்களும் மறுமை நாளில் (அந்தஸ்தால்) முந்தியவர்களும் ஆவோம்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார். 25

Book : 87


«نَحْنُ الآخِرُونَ السَّابِقُونَ يَوْمَ القِيَامَةِ»


Bukhari-6886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 14

ஆண்களாயினும் பெண்களாயினும் காயங்களுக்கும் தண்டனை உண்டு.22

பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படுவான் என்றே அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆணைக் கொன்றதற்குத் தண்டனையாகப் பெண் பழிவாங்கப்படுவாள். இது வேண்டுமென்றே நடந்த எல்லாக் கொலைகளுக்கும், கொலையை விடக் குறைவான காயங்களுக்கும் பொருந்தும் என உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) ஆகியோரும் இவ்வாறே கூறியுள்ளனர். அபுஸ்ஸினாத் (ரஹ்) அவர்கள் தம் தோழர்களிடமிருந்து இதையே அறிவித்துள்ளார்கள். ருபய்யிஉ பின்த் நள்ர் (ரலி) அவர் களுடைய சகோதரி ஓர் ஆணைக் காயப் படுத்திவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (இதற்கும்) பழிவாங்கல் உண்டு என்று சொன்னார்கள்.

6886. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்யப்பட்டிருந்தபோது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம்.

لَدَدْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي مَرَضِهِ، فَقَالَ: «لاَ تُلِدُّونِي» فَقُلْنَا: كَرَاهِيَةُ المَرِيضِ لِلدَّوَاءِ، فَلَمَّا أَفَاقَ قَالَ: «لاَ يَبْقَى أَحَدٌ مِنْكُمْ إِلَّا لُدَّ، غَيْرَ العَبَّاسِ، فَإِنَّهُ لَمْ يَشْهَدْكُمْ»


Bukhari-6885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 13

பெண்ணைக் கொன்றதற்குத் தண்டனையாக ஆண் கொல்லப்படல்.

6885. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

ஒரு சிறுமியை, அவளுடைய வெள்ளி நகைக்காக கொலை செய்த (ஆண்) யூதன் ஒருவனைக் கொலை செய்திடுமாறு நபி (ஸல்) அவர்கள் ஆணையிட்டார்கள்.21

Book : 87


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «قَتَلَ يَهُودِيًّا بِجَارِيَةٍ قَتَلَهَا عَلَى أَوْضَاحٍ لَهَا»


Bukhari-6884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 11

அல்லாஹ் கூறுகின்றான்: தவறாக அன்றி, ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றோர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்வது அனுமதிக்கப்பட்டதன்று. அவ்வாறு தவறாக எவரேனும் ஓர் இறைநம்பிக்கையாளரைக் கொலை செய்து விட்டால் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்வதும் கொல்லப்பட்டவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதும் அதற்குப் பரிகாரமாகும்- அவருடைய குடும்பத்தார் (அதை மன்னித்து) தர்மமாக விட்டுவிட்டால் தவிர. அதாவது கொலையுண்டவர் உங்களுடைய எதிரி சமூகத்தைச் சேர்ந்த இறைநம்பிக்கையாளராக இருந்தால் அப்போது இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இழப்பீடு செலுத்த வேண்டிய தில்லை.)

கொலையுண்டவர் உங்களுடன் (சமாதான) உடன்படிக்கை செய்து கொண்ட சமூகத்தைச் சேர்ந்தவராக இருப்பின், அவருடைய குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவதுடன் இறைநம்பிக்கை கொண்ட ஓர் அடிமையை விடுதலையும் செய்ய வேண்டும். இவ்வாறு (அடிமையை விடுதலை) செய்ய இயலாத போது, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும் பொருட்டு தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நோன்பு நோற்றிட வேண்டும். அல்லாஹ் நன்கறிந்தவனாகவும் விவேகமிக்கவனாகவும் இருக்கின்றான்.

أَنَّ يَهُودِيًّا رَضَّ رَأْسَ جَارِيَةٍ بَيْنَ حَجَرَيْنِ، فَقِيلَ لَهَا: مَنْ فَعَلَ بِكِ هَذَا، أَفُلاَنٌ، أَفُلاَنٌ؟ حَتَّى سُمِّيَ اليَهُودِيُّ، فَأَوْمَأَتْ بِرَأْسِهَا، فَجِيءَ بِاليَهُودِيِّ فَاعْتَرَفَ، فَأَمَرَ بِهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرُضَّ رَأْسُهُ بِالحِجَارَةِ ” وَقَدْ قَالَ هَمَّامٌ: بِحَجَرَيْنِ


Bukhari-6883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 10

தவறுதலாக நிகழ்ந்துவிட்ட கொலைக்குப் பின் (கொல்லப்பட்டவரின் உறவினர்கள் கொலையாளியை) மன்னித்துவிடுவது.

6883. ஆயிஷா (ரலி) அறிவித்தார்.

உஹுதுப் போரின் (தொடக்கத்தின்)போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள். பின்னர் மக்களிடையே இப்லீஸ் புகுந்து), ‘அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்’ என்று கூவினான். எனவே, முஸ்லிம்களில் முன் அணியினர் பின் அணியினரை நோக்கித் திரும்பி (அவர்களைத் தாக்கத் தொடங்கி)னர். அப்போது முஸ்லிம்கள் அல்யமான் (ரலி) அவர்களைக் கொன்றுவிட்டனர். உடனே (அவரின் புதல்வர்) ஹுதைஃபா (ரலி) அவர்கள் ‘என் தந்தை என் தந்தை’ என்று கூறினார். (ஆயினும் எதிரி என்று நினைத்து) அவரின் தந்தையை மக்கள் கொன்றுவிட்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள், ‘அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!’ என்று (கொலை செய்தவர்களை நோக்கிக்) கூறினார்கள். தோல்வியுற்றவர்(களான இணைவைப்பாளர்)களில் சிலர் தாயிஃப் நகருக்குச் சென்றுவிட்டனர்.19

இந்த ஹதீஸ் இரண்டு

صَرَخَ إِبْلِيسُ يَوْمَ أُحُدٍ فِي النَّاسِ: يَا عِبَادَ اللَّهِ أُخْرَاكُمْ، فَرَجَعَتْ أُولاَهُمْ عَلَى أُخْرَاهُمْ، حَتَّى قَتَلُوا اليَمَانِ، فَقَالَ حُذَيْفَةُ: أَبِي أَبِي، فَقَتَلُوهُ. فَقَالَ حُذَيْفَةُ: غَفَرَ اللَّهُ لَكُمْ. قَالَ: وَقَدْ كَانَ انْهَزَمَ مِنْهُمْ قَوْمٌ حَتَّى لَحِقُوا بِالطَّائِفِ


Bukhari-6882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 9

நியாயமின்றி ஒரு மனிதனைக் கொலை செய்யத் தூண்டுவது.

6882. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

மனிதர்களிலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகிறவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகிறவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச் செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகிறவன்.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

Book : 87


أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلاَثَةٌ: مُلْحِدٌ فِي الحَرَمِ، وَمُبْتَغٍ فِي الإِسْلاَمِ سُنَّةَ الجَاهِلِيَّةِ، وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ


Bukhari-6881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6881. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

பனூ இஸ்ராயீல்களிடையே (கொலை நடந்து விட்டால்) பழிக்குப்பழி (கிஸாஸ்) வாங்குதல் (நடைமுறையில்) இருந்தது; ஆனால், இழப்பீடு (பெற்றுக் கொண்டு கொலையாளியை மன்னித்துவிடும் சட்டம் நடைமுறையில்) இருக்கவில்லை. எனவேதான், அல்லாஹ் (தன்னுடைய வேதத்தில்) இந்தச் சமுதாயத்தை நோக்கி ‘இறைநம்பிக்கை கொண்டோரே! கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்குவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. சுதந்திர மனிதன் சுதந்திர மனிதனுக்கு பதிலாகவும், அடிமை அடிமைக்கு பதிலாகவும், பெண் பெண்ணுக்கு பதிலாகவுமே (பழிவாங்கப்படுபவர். கொலை செய்த) எவனுக்கேனும் (பாதிக்கப்பட்ட) சகோதரனா(கிய கொலையுண்டவனின் வாரிசுகளா)ல் ஏதேனும் மன்னிப்பு அளிக்கப்பட்டால், நியதியைப் பின்பற்றி நன்முறையில் அவனிடம் (இழப்பீட்டுத் தொகையை) நிறைவேற்றிட வேண்டும். இது, உங்களுடைய இறைவனிடமிருந்து கிடைத்த சலுகையும் கருணையுமாகும். இதன் பின்னரும் எவரேனும் வரம்பு மீறினால் அவருக்குத் துன்பமிகு வேதனை உண்டு’ (திருக்குர்ஆன் 02:178) என்று கூறுகிறான்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

كَانَتْ فِي بَنِي إِسْرَائِيلَ قِصَاصٌ وَلَمْ تَكُنْ فِيهِمُ الدِّيَةُ، فَقَالَ اللَّهُ لِهَذِهِ الأُمَّةِ: {كُتِبَ عَلَيْكُمُ القِصَاصُ} [البقرة: 178] فِي القَتْلَى – إِلَى هَذِهِ الآيَةِ – {فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ} [البقرة: 178] ” قَالَ ابْنُ عَبَّاسٍ: «فَالعَفْوُ أَنْ يَقْبَلَ الدِّيَةَ فِي العَمْدِ» قَالَ: {فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ} [البقرة: 178] «أَنْ يَطْلُبَ بِمَعْرُوفٍ وَيُؤَدِّيَ بِإِحْسَانٍ»


Next Page » « Previous Page