Category: புஹாரி

Bukhari

Bukhari-6900

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

ஒருவர் மற்றவர்களின் வீட்டுக்குள் (அவர்களுடைய அனுமதியில்லாமல்) எட்டிப் பார்க்க, அவர்கள் அவரது கண்ணைப் பழுதாக்கிவிட்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.

6900. அனஸ் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் நபி (ஸல்) அவர்களின் அறைகளில் ஒன்றின் வழியாக எட்டிப் பார்த்தார். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் நீளமான அம்பின் ‘கூர்முனையால்’ அல்லது ‘கூர்முனைகளால்’ அவருக்குத் தெரியாமல் அவரைக் குத்துவதற்காகச் சென்றார்கள். 43

Book : 87


أَنَّ رَجُلًا اطَّلَعَ مِنْ حُجْرٍ فِي بَعْضِ حُجَرِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «فَقَامَ إِلَيْهِ بِمِشْقَصٍ، أَوْ بِمَشَاقِصَ، وَجَعَلَ يَخْتِلُهُ لِيَطْعُنَهُ»


Bukhari-6899

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6899. அபூ கிலாபா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

(கலீஃபா) உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு நாள் மக்களிடம் பேசுவதற்காகத் தம் ஆசனத்தை எடுத்து வெளியே வைத்தார்கள். பிறகு மக்களுக்கு அனுமதி அளித்திட மக்கள் உள்ளே வந்தனர். பின்னர் (அவர்களிடம்) ‘அல்கஸாமா சத்தியம் குறித்து நீங்கள் என்ன கூறுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘அல்கஸாமா மூலம் பழிவாங்கிடல் உண்டு என்றே கருதுகிறோம். கலீஃபாக்கள் அதைக் கொண்டு பழிவாங்கியுள்ளனர்’ என்று கூறினர். உமர் இப்னு அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் மக்களின் பார்வையில் நான் படும் வகையில் என்னை நிறுத்திவைத்து என்னிடம், ‘அபூ கிலாபா அவர்களே! (இது குறித்து) நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். உடனே நான், ‘இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களிடம் படைத் தளபதி (களான ஆளுநர்)களும் அரபுத் தலைவர்களும் உள்ளனர். இவர்களில் ஐம்பது பேர் திமஷ்க் (டமாஸ்கஸ்) நகரிலுள்ள திருமணமான ஒருவர் குறித்து அவரைப் பார்க்காமலேயே அவர் விபசாரம் புரிந்துவிட்டதாகச் சாட்சியம் அளித்தால் அவருக்கு நீங்கள் கல்லெறி தண்டனை வழங்கிவிடுவீர்களா, சொல்லுங்கள்?’

أَنَّ عُمَرَ بْنَ عَبْدِ العَزِيزِ أَبْرَزَ سَرِيرَهُ يَوْمًا لِلنَّاسِ، ثُمَّ أَذِنَ لَهُمْ فَدَخَلُوا، فَقَالَ: مَا تَقُولُونَ فِي القَسَامَةِ؟ قَالَ: نَقُولُ: القَسَامَةُ القَوَدُ بِهَا حَقٌّ، وَقَدْ أَقَادَتْ بِهَا الخُلَفَاءُ. قَالَ لِي: مَا تَقُولُ يَا أَبَا قِلاَبَةَ؟ وَنَصَبَنِي لِلنَّاسِ، فَقُلْتُ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، عِنْدَكَ رُءُوسُ الأَجْنَادِ وَأَشْرَافُ العَرَبِ، أَرَأَيْتَ لَوْ أَنَّ خَمْسِينَ مِنْهُمْ شَهِدُوا عَلَى رَجُلٍ مُحْصَنٍ بِدِمَشْقَ أَنَّهُ قَدْ زَنَى، لَمْ يَرَوْهُ، أَكُنْتَ تَرْجُمُهُ؟ قَالَ: لاَ. قُلْتُ: أَرَأَيْتَ لَوْ أَنَّ خَمْسِينَ مِنْهُمْ شَهِدُوا عَلَى رَجُلٍ بِحِمْصَ أَنَّهُ سَرَقَ، أَكُنْتَ تَقْطَعُهُ وَلَمْ يَرَوْهُ؟ قَالَ: لاَ، قُلْتُ: فَوَاللَّهِ مَا قَتَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحَدًا قَطُّ إِلَّا فِي إِحْدَى ثَلاَثِ خِصَالٍ: رَجُلٌ قَتَلَ بِجَرِيرَةِ نَفْسِهِ فَقُتِلَ، أَوْ رَجُلٌ زَنَى بَعْدَ إِحْصَانٍ، أَوْ رَجُلٌ حَارَبَ اللَّهَ وَرَسُولَهُ، وَارْتَدَّ عَنِ الإِسْلاَمِ. فَقَالَ القَوْمُ: أَوَلَيْسَ قَدْ حَدَّثَ أَنَسُ بْنُ مَالِكٍ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَطَعَ فِي السَّرَقِ، وَسَمَرَ الأَعْيُنَ، ثُمَّ نَبَذَهُمْ فِي الشَّمْسِ؟ فَقُلْتُ: أَنَا أُحَدِّثُكُمْ حَدِيثَ أَنَسٍ: حَدَّثَنِي أَنَسٌ: أَنَّ نَفَرًا مِنْ عُكْلٍ ثَمَانِيَةً، قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعُوهُ عَلَى الإِسْلاَمِ، فَاسْتَوْخَمُوا الأَرْضَ فَسَقِمَتْ أَجْسَامُهُمْ، فَشَكَوْا ذَلِكَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «أَفَلاَ تَخْرُجُونَ مَعَ رَاعِينَا فِي إِبِلِهِ، فَتُصِيبُونَ مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا» قَالُوا: بَلَى، فَخَرَجُوا فَشَرِبُوا مِنْ أَلْبَانِهَا وَأَبْوَالِهَا، فَصَحُّوا، فَقَتَلُوا رَاعِيَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَطْرَدُوا النَّعَمَ، فَبَلَغَ ذَلِكَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلَ فِي آثَارِهِمْ، فَأُدْرِكُوا فَجِيءَ بِهِمْ، فَأَمَرَ بِهِمْ فَقُطِّعَتْ أَيْدِيهِمْ وَأَرْجُلُهُمْ  ، وَسَمَرَ أَعْيُنَهُمْ، ثُمَّ نَبَذَهُمْ فِي الشَّمْسِ حَتَّى مَاتُوا، قُلْتُ: وَأَيُّ شَيْءٍ أَشَدُّ مِمَّا صَنَعَ هَؤُلاَءِ، ارْتَدُّوا عَنِ الإِسْلاَمِ، وَقَتَلُوا وَسَرَقُوا. فَقَالَ عَنْبَسَةُ بْنُ سَعِيدٍ: وَاللَّهِ إِنْ سَمِعْتُ كَاليَوْمِ قَطُّ، فَقُلْتُ: أَتَرُدُّ عَلَيَّ حَدِيثِي يَا عَنْبَسَةُ؟ قَالَ: لاَ، وَلَكِنْ جِئْتَ بِالحَدِيثِ عَلَى وَجْهِهِ، وَاللَّهِ لاَ يَزَالُ هَذَا الجُنْدُ بِخَيْرٍ مَا عَاشَ هَذَا الشَّيْخُ بَيْنَ أَظْهُرِهِمْ، قُلْتُ: وَقَدْ كَانَ فِي هَذَا سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، دَخَلَ عَلَيْهِ نَفَرٌ مِنَ الأَنْصَارِ، فَتَحَدَّثُوا عِنْدَهُ، فَخَرَجَ رَجُلٌ مِنْهُمْ بَيْنَ أَيْدِيهِمْ فَقُتِلَ، فَخَرَجُوا بَعْدَهُ، فَإِذَا هُمْ بِصَاحِبِهِمْ يَتَشَحَّطُ فِي الدَّمِ، فَرَجَعُوا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، صَاحِبُنَا كَانَ تَحَدَّثَ مَعَنَا، فَخَرَجَ بَيْنَ أَيْدِينَا، فَإِذَا نَحْنُ بِهِ يَتَشَحَّطُ فِي الدَّمِ، فَخَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «بِمَنْ تَظُنُّونَ،


Bukhari-6898

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

அல்கஸாமா’ எனும் சத்தியம்.36

அஷ்அஸ் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உம்முடைய இரண்டு சாட்சிகள் தேவை. அல்லது (பிரதிவாதியான) அவருடைய சத்தியம் தேவை என்று சொன்னார்கள்.37

இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: முஆவியா (ரலி) அவர்கள் அல்கஸாமா’சத்தியத்தை ஏற்றுப் பழி வாங்கும்படி உத்தரவிடவில்லை. உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், தாம் பஸ்ரா நகருக்கு ஆளுநராக நியமித்திருந்த அதீ பின் அர்தாத் அவர்களுக்கு, நெய் வியாபாரிகளின் வீடுகளில் ஒன்றுக்கு அருகில் கொலை செய்யப்பட்டுக் கிடந்த ஒருவர் தொடர்பாக(ப் பின்வருமாறு) கடிதம் எழுதினார்கள்: கொல்லப்பட்டவரின் நண்பர்கள் சாட்சியத்தைக் கொண்டுவந்தால் சரி. அவ்வாறில்லையாயின், (சாட்சியில்லாமல் நீங்கள் தீர்ப்பளித்து) மக்களுக்கு அநீதியிழைத்துவிடாதீர்கள். இதைப் போன்ற வழக்குகளில் மறுமை நாள்வரை (சரியான) தீர்ப்பு வழங்க முடியாது.

6898. ஸஹ்ல் இப்னு அபீ ஹஸ்மா (ரலி) அறிவித்தார்.

أَنَّ نَفَرًا مِنْ قَوْمِهِ انْطَلَقُوا إِلَى خَيْبَرَ، فَتَفَرَّقُوا فِيهَا، وَوَجَدُوا أَحَدَهُمْ قَتِيلًا، وَقَالُوا لِلَّذِي وُجِدَ فِيهِمْ: قَدْ قَتَلْتُمْ صَاحِبَنَا، قَالُوا: مَا قَتَلْنَا وَلاَ عَلِمْنَا قَاتِلًا، فَانْطَلَقُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، انْطَلَقْنَا إِلَى خَيْبَرَ، فَوَجَدْنَا أَحَدَنَا قَتِيلًا، فَقَالَ: «الكُبْرَ الكُبْرَ» فَقَالَ لَهُمْ: «تَأْتُونَ بِالْبَيِّنَةِ عَلَى مَنْ قَتَلَهُ» قَالُوا: مَا لَنَا بَيِّنَةٌ، قَالَ: «فَيَحْلِفُونَ» قَالُوا: لاَ نَرْضَى بِأَيْمَانِ اليَهُودِ، فَكَرِهَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُبْطِلَ دَمَهُ، فَوَدَاهُ مِائَةً مِنْ إِبِلِ الصَّدَقَةِ


Bukhari-6897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6897. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (கடைசிக் காலத்தில்) நோய் வாய்ப்பட்டிருந்தபோது (அரை மயக்கத்தில் இருந்தார்கள். அப்போது) நாங்கள் அவர்களின் வாய் ஓரத்தில் மருந்தூற்றினோம். என் வாயில் மருந்தூற்றாதீர்கள் என்று அவர்கள் சைகை செய்யலானார்கள். ‘நோயாளி மருந்தை வெறுப்பதைப் போன்றுதான் (நபியவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்றவேண்டாம் என்று தடை செய்யவில்லை)’ என்று நாங்கள் கூறிக்கொண்டோம் அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்தபோது’ என் வாயில் மருந்தூற்ற வேண்டாம் என்று உங்களை நான் தடுக்கவில்லையா?’ என்று கேட்டார்கள். நாங்கள் ‘மருந்து உட்கொள்ளப் பிடிக்காமலேயே (அவ்வாறு சைகை செய்தீர்கள்)’ என்று சொன்னோம்.

அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘(நான் தடுத்தும் கேட்காததற்கு பதிலாக) உங்களில் ஒருவர் பாக்கியில்லாமல் அனைவர் வாயிலும் நான் பார்த்துக் கொண்டிருக்க மருந்தூற்றப்பட வேண்டும்’ என்று கூறிவிட்டு, ‘ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில் (மருந்தூற்றும் போது) அவர் உங்களுடன் கலந்து கொள்ளவில்லை’ என்று கூறினார்கள்.35

Read More »

Bukhari-6896

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

ஒரு மனிதரை ஒரு கூட்டமே சேர்ந்து கொலை செய்துவிட்டாலோ காயப்படுத்தி விட்டாலோ அவர்கள் அனைவருமே தண்டிக்கப்படுவார்களா? பழிவாங்கப் படுவார்களா?34

முதர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் திருடிவிட்டார் என இரண்டு பேர் சாட்சியம் அளித்தனர். ஆகவே, அலீ (ரலி) அவர்கள் (குற்றம் சாட்டப்பட்ட) அவரது கையை வெட்டும்படி உத்தரவிட்டார்கள். பிறகு வேறொரு மனிதரை (சாட்சியம் அளித்த) அவ்விருவரும் அழைத்துவந்து (இவர் தாம் திருடியவர்; முதலில்) நாங்கள் கூறியது தவறு என்றனர். அப்போது அலீ (ரலி) அவர்கள் (முதல் மனிதருக்கெதிராக) அவர்கள் கூறிய சாட்சியத்தைச் செல்லாததாக்கினார்கள். மேலும், அந்த முதல் நபருக்காக அவர்கள் இருவரிடமும் இழப்பீடும் பெறப்பட்டது. அத்துடன், நீங்கள் இருவரும் திட்டமிட்டே (இவ்வாறு பொய்ச் சாட்சியம்) கூறினீர்கள் என்று நான் அறிந்திருந்தால் உங்கள் இருவரின் கைகளையும் வெட்டியிருப்பேன் என்றும் கூறினார்கள்.

6896. இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

ஒரு சிறுவன் வஞ்சித்துக் கொல்லப்பட்டான்.

أَنَّ غُلاَمًا قُتِلَ غِيلَةً، فَقَالَ عُمَرُ: «لَوِ اشْتَرَكَ فِيهَا أَهْلُ صَنْعَاءَ لَقَتَلْتُهُمْ» وَقَالَ مُغِيرَةُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ: «إِنَّ أَرْبَعَةً قَتَلُوا صَبِيًّا»، فَقَالَ عُمَرُ: مِثْلَهُ وَأَقَادَ أَبُو بَكْرٍ، وَابْنُ الزُّبَيْرِ، وَعَلِيٌّ وَسُوَيْدُ بْنُ مُقَرِّنٍ مِنْ لَطْمَةٍ وَأَقَادَ عُمَرُ، مِنْ ضَرْبَةٍ بِالدِّرَّةِ وَأَقَادَ عَلِيٌّ، مِنْ ثَلاَثَةِ أَسْوَاطٍ وَاقْتَصَّ شُرَيْحٌ، مِنْ سَوْطٍ وَخُمُوشٍ


Bukhari-6895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

விரல்களுக்கான இழப்பீடுகள் (சமமானவையா? மாறுபட்டவையா?)33

6895. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இதோ இந்த மோதிர விரலும் கட்டை விரலும் (இழப்பீட்டில்) சமமானவையே.

என இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

இதைப் போன்றே நபி (ஸல்) அவர்களிடம் தாம் செவியேற்றதாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள ஒரு ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ளது.

Book : 87


«هَذِهِ وَهَذِهِ سَوَاءٌ» يَعْنِي الخِنْصَرَ وَالإِبْهَامَ


Bukhari-6894

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 19

பல்லுக்குப் பல்32

6894. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

(என் பாட்டனார்) நள்ர் அவர்களின் புதல்வி (ருபய்யிஉ பின்த் நள்ர்) ஓர் இளம் பெண்ணின் கன்னத்தில் அறைந்து அவளுடைய முன் பல்லை உடைத்துவிட்டார். எனவே, அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (வழக்கைக் கொண்டு) வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் பழிவாங்கிடுமாறு உத்தரவிட்டார்கள்.

Book : 87


«أَنَّ ابْنَةَ النَّضْرِ لَطَمَتْ جَارِيَةً فَكَسَرَتْ ثَنِيَّتَهَا، فَأَتَوُا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَمَرَ بِالقِصَاصِ»


Bukhari-6893

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6893. யஃலா இப்னு உமய்யா (ரலி) அறிவித்தார்.

நான் (தபூக்) போருக்குப் புறப்பட்டுச் சென்றேன். அப்போது ஒருவர் (இன்னொருவரைக்) கடித்தார். கடிபட்ட மனிதர் (தம் கையை விடுவிக்கும் போது) கடித்தவரின் முன்பல்லைக் கழற்றிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் இதற்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தார்கள்.

Book :87


«خَرَجْتُ فِي غَزْوَةٍ، فَعَضَّ رَجُلٌ فَانْتَزَعَ ثَنِيَّتَهُ، فَأَبْطَلَهَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Bukhari-6892

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 18

ஒருவர் மற்றவர்(கரம்)தனைக் கடிக்க, கடித்தவரின் முன்பற்கள் விழுந்துவிட்டால்…?31

6892. இம்ரான் இப்னு ஹுஸைன் (ரலி) அறிவித்தார்.

ஒருவர் மற்றொரு மனிதரின் கையைக் கடித்தார். அப்போது (கடிபட்டவர்) தம் கையை அவரின் வாயிலிருந்து இழுத்தார். இதனால் கடித்தவரின் முன் பற்கள் இரண்டு விழுந்து விட்டன. இதையொட்டி அவர்கள் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டுவந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களில் ஒருவர் தம் சகோதரனின் கையைக் கடா ஒட்டகம் கடிப்பதைப் போன்று கடிப்பாரா? (அவர் கடித்துக் கொண்டிருக்கும் வரை அவன் தன்னுடைய கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பானா? பல்லிழந்த) உமக்கு இழப்பீட்டுத் தொகை கிடையாது’ என்றார்கள்.

Book : 87


أَنَّ رَجُلًا عَضَّ يَدَ رَجُلٍ، فَنَزَعَ يَدَهُ مِنْ فَمِهِ، فَوَقَعَتْ ثَنِيَّتَاهُ، فَاخْتَصَمُوا إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «يَعَضُّ أَحَدُكُمْ أَخَاهُ كَمَا يَعَضُّ الفَحْلُ؟ لاَ دِيَةَ لَكَ»


Bukhari-6891

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 17

ஒருவர் தவறுதலாகத் தம்மைத் தாமே கொலை செய்து கொண்டால் அவருக்காக இழப்பீடு கிடையாது.29

6891. ஸலமா இப்னு அக்வஃ (ரலி) அறிவித்தார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கிப் (போருக்காகப்) புறப்பட்டோம். அப்போது மக்களில் ஒருவர் (என் தந்தையின் சகோதரிடம்) ‘ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலவற்றை(ப் பாடி) எங்களைச் செவியுறச் செய்யமாட்டீர்களா?’ என்று கூறினார். எனவே, ஆமிர்(ரலி) அவர்கள் (சில கவிதைகளைப் பாடி) மக்களின் ஒட்டகங்களை விரைந்தோடச் செய்தார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், ‘இந்த ஒட்டகவோட்டி யார்?’ என்று கேட்டார்கள். ‘ஆமிர் இப்னு அக்வஃ’ என்று மக்கள் பதிலளித்தனர். அப்போது நபி(ஸல்) அவர்கள் ‘அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக!’ என்று கூறினார்கள். (அந்தப் பிரார்த்தனையின் பொருளைப் புரிந்து கொண்ட) மக்கள், ‘அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக் கூடாதா (இறைத்தூதர் அவர்களே!)?’ என்று கேட்டார்கள். அவர் அன்றைய இரவின் காலையில் (தம் முழங்காலில் தம் வாளாலேயே) தாக்கப்பட்டு

خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى خَيْبَرَ، فَقَالَ رَجُلٌ مِنْهُمْ: أَسْمِعْنَا يَا عَامِرُ مِنْ هُنَيْهَاتِكَ، فَحَدَا بِهِمْ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنِ السَّائِقُ» قَالُوا: عَامِرٌ، فَقَالَ: «رَحِمَهُ اللَّهُ» فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ، هَلَّا أَمْتَعْتَنَا بِهِ، فَأُصِيبَ صَبِيحَةَ لَيْلَتِهِ، فَقَالَ القَوْمُ: حَبِطَ: عَمَلُهُ، قَتَلَ نَفْسَهُ، فَلَمَّا رَجَعْتُ وَهُمْ يَتَحَدَّثُونَ أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَجِئْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ، فَدَاكَ أَبِي وَأُمِّي، زَعَمُوا أَنَّ عَامِرًا حَبِطَ عَمَلُهُ، فَقَالَ: «كَذَبَ مَنْ قَالَهَا، إِنَّ لَهُ لَأَجْرَيْنِ اثْنَيْنِ، إِنَّهُ لَجَاهِدٌ مُجَاهِدٌ، وَأَيُّ قَتْلٍ يَزِيدُهُ عَلَيْهِ»


Next Page » « Previous Page