Category: புஹாரி

Bukhari

Bukhari-6911

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 27

ஓர் அடிமையை, அல்லது (அடிமையல்லாத) சிறுவனை உதவியாளராக வைத்துக் கொள்ளல்.51

நபி (ஸல்) அவர்களின் துணைவியரான உம்மு சலமா (ரலி) அவர்கள் ஆரம்பப் பள்ளி ஆசிரியருக்கு ஆளனுப்பி, கம்பளியைப் பிரித்தெடுப்பதற்காகச் சில சிறுவர்களை அனுப்பிவையுங்கள்; அடிமையல்லாத எவரையும் என்னிடம் அனுப்பி விடாதீர்கள் என்று கேட்டுக் கொண்டார்கள் எனக் கூறப்படுகிறது.

6911. அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது அபூ தல்ஹா (ரலி) அவர்கள் என்னுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்று, ‘இறைத்தூதர் அவர்களே! அனஸ் புத்திசாலிப் பையன். அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்’ என்றார்கள். அதன்படி நான் நபி (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும்  அவர்களுக்குப் பணிவிடை செய்து வந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் ‘இதை ஏன் நீ இப்படிச் செய்தாய்?’ என்றோ, நான் செய்யாத எதைப் பற்றியும்

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ، أَخَذَ أَبُو طَلْحَةَ بِيَدِي، فَانْطَلَقَ بِي إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ أَنَسًا غُلاَمٌ كَيِّسٌ فَلْيَخْدُمْكَ، قَالَ: «فَخَدَمْتُهُ فِي الحَضَرِ وَالسَّفَرِ فَوَاللَّهِ مَا قَالَ لِي لِشَيْءٍ صَنَعْتُهُ لِمَ صَنَعْتَ هَذَا هَكَذَا، وَلاَ لِشَيْءٍ لَمْ أَصْنَعْهُ لِمَ لَمْ تَصْنَعْ هَذَا هَكَذَا»


Bukhari-6909

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 26

பெண்ணின் (வயிற்றில் வளரும்) சிசு (கொல்லப்படுவது) குறித்தும், (கொல்லப் பட்ட பெண்ணிற்கான) இழப்பீட்டுத் தொகை (கொலை செய்தவளின்) தந்தையின் மீதே கடமையாகும் என்பது குறித்தும்.

6909. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

‘பனூ லிஹ்யான்’ குலத்தைச் சேர்ந்த (கர்ப்பிணி) பெண் ஒருத்தியின் சிசு (மற்றொரு பெண் அடித்ததால் இறந்து பிறந்தது. அது) தொடர்பாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை, அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (நஷ்ட ஈடாக) வழங்க வேண்டுமென்று தீர்ப்பளித்தார்கள்.

பின்னர் நஷ்ட ஈடு வழங்கும்படி நபியவர்கள் தீர்ப்பளித்த அந்த(க் குற்றவாளி)ப் பெண் இறந்துவிட்டாள். எனவே, (அவள் சார்பாக) அவளுடைய தந்தைவழி உறவினர்கள் (அஸபா) நஷ்ட ஈடு வழங்கிட வேண்டுமென்றும், அவளுடைய சொத்து அவளுடைய ஆண் மக்களுக்கும் கணவருக்கும் உரியதென்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தார்கள்.49

Book : 87


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَضَى فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ، ثُمَّ إِنَّ المَرْأَةَ الَّتِي قَضَى عَلَيْهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا، وَأَنَّ العَقْلَ عَلَى عَصَبَتِهَا»


Bukhari-6908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6908. முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.

ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படுத்துவது குறித்து உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். தொடர்ந்து மேற்கண்ட (6905 வது) ஹதீஸைப் போன்று அறிவித்தார்கள்.

Book :87


أَنَّهُ اسْتَشَارَهُمْ فِي إِمْلاَصِ المَرْأَةِ، مِثْلَهُ


Bukhari-6907

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6907. உர்வா இப்னு ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

உமர் (ரலி) அவர்கள், (வயிற்றிலேயே கொல்லப்பட்டு) விழுந்த கரு தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பைச் செவியேற்ற மக்களைச் சாட்சியம் அளிக்குமாறு கூறினார்கள். அப்போது முஃகீரா (ரலி) அவர்கள், ‘இத்தகையை சிசுவிற்காக ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்குமாறு நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளிக்க கேட்டுள்ளேன்’ என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் ‘இதற்கு உங்களுடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்’ என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள், ‘நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தீர்ப்பளித்ததற்கு நான் சாட்சி’ என்று கூறினார்கள்.

Book :87


أَنَّ عُمَرَ نَشَدَ النَّاسَ: مَنْ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى فِي السِّقْطِ؟ فَقَالَ المُغِيرَةُ: أَنَا سَمِعْتُهُ «قَضَى فِيهِ بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ» قَالَ: ائْتِ مَنْ يَشْهَدُ مَعَكَ عَلَى هَذَا. فَقَالَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ: أَنَا أَشْهَدُ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ هَذَا.


Bukhari-6906

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6906. உமர்(ரலி) அவர்கள், ‘(நீங்கள் கூறிய) இதற்கு உம்முடன் சாட்சியம் அளிப்பவரை அழைத்து வாருங்கள்’ என்றார்கள். அப்போது முஹம்மத் இப்னு மஸ்லமா (ரலி) அவர்கள், அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தபோது தாம் அங்கு இருந்ததாக சாட்சியம் அளித்தார்கள்.

Book :87


فَشَهِدَ مُحَمَّدُ بْنُ مَسْلَمَةَ: أَنَّهُ شَهِدَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَضَى بِهِ


Bukhari-6905

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6905. முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்.

ஒரு (கர்ப்பிணிப்) பெண்ணை (அடித்துக்) குறைப் பிரசவம் ஏற்படவைத்தால் (அதற்குப் பரிகாரம்) என்ன என்பது குறித்து உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் ஆலோசனை கேட்டார்கள். அப்போது நான், ‘நபி (ஸல்) அவர்கள் ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை அந்த சிசுவுக்காக (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்’ என்றேன்.

Book :87


أَنَّهُ اسْتَشَارَهُمْ فِي إِمْلاَصِ المَرْأَةِ، فَقَالَ المُغِيرَةُ: «قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْغُرَّةِ، عَبْدٍ أَوْ أَمَةٍ»


Bukhari-6904

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 25

பெண்ணின் வயிற்றிலுள்ள சிசு

6904. அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.

ஹுதைல் குலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களில் ஒருத்தி மற்றொருத்தியின் மீது (வயிற்றில்) கல்லை எறிய, (வயிற்றிலிருந்த) சிசு இறந்த பிறந்தது. அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அந்த சிசுவுக்காக ஓர் ஆண் அடிமையை அல்லது ஓர் அடிமைப் பெண்ணை (இழப்பீடாக) வழங்கிடுமாறு தீர்ப்பளித்தார்கள்.48

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book : 87


«أَنَّ امْرَأَتَيْنِ مِنْ هُذَيْلٍ، رَمَتْ إِحْدَاهُمَا الأُخْرَى فَطَرَحَتْ جَنِينَهَا، فَقَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا بِغُرَّةٍ، عَبْدٍ أَوْ أَمَةٍ»


Bukhari-6903

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 24

இழப்பீடு வழங்கவேண்டியோர்46

6903. அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்.

நான் அலீ (ரலி) அவர்களிடம் (நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?’ என்று கேட்டேன்.

-அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் ‘மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?’ என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர’ என்று கூறினார்கள். நான், ‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல்,

سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ، هَلْ عِنْدَكُمْ شَيْءٌ مِمَّا لَيْسَ فِي القُرْآنِ؟ وَقَالَ مَرَّةً: مَا لَيْسَ عِنْدَ النَّاسِ؟ فَقَالَ: «وَالَّذِي فَلَقَ الحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ، مَا عِنْدَنَا إِلَّا مَا فِي القُرْآنِ، إِلَّا فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ، وَمَا فِي الصَّحِيفَةِ» قُلْتُ: وَمَا فِي الصَّحِيفَةِ؟ قَالَ: «العَقْلُ، وَفِكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ»


Bukhari-6902

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6902. அபுல் காசிம் (முஹம்மத்-ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உன் அனுமதியின்றி ஒருவர் உன்னை எட்டிப் பார்த்தபோது அவரின் மீது நீ சிறு கல்லைச் சுண்டி எறிய, அது அவரின் கண்ணைப் பறித்துவிட்டால் உன் மீது எந்தக் குற்றமுமில்லை.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.45

Book :87


«لَوْ أَنَّ امْرَأً اطَّلَعَ عَلَيْكَ بِغَيْرِ إِذْنٍ فَخَذَفْتَهُ بِعَصَاةٍ فَفَقَأْتَ عَيْنَهُ، لَمْ يَكُنْ عَلَيْكَ جُنَاحٌ»


Bukhari-6901

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6901. ஸஹ்ல் இப்னு ஸஅத் அஸ்ஸாஇதீ (ரலி) அறிவித்தார்.

ஒருவர் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் (அறையின்) கதவிடுக்கில் எட்டிப் பார்த்தார். அப்போது இறைத்தூதர் ஸல்) அவர்களுடன் (இரும்பாலான) ஈர்வலிச் சீப்பொன்று இருந்தது; அதனால் தம் தலையை அவர்கள் கோதிக் கொண்டிருந்தார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தபோது ‘என்னை நீ பார்க்கிறாய் என்று நான் (முன்பே) அறிந்திருந்தால், இந்தச் சீப்பினால் உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (அடுத்தவர் வீட்டுப் பெண்களைப்) பார்க்க நேரிடும் என்பதற்காகவே அனுமதி கேட்பது சட்டமாக்கப்பட்டது’ என்று கூறினார்கள். 44

Book :87


أَنَّ رَجُلًا اطَّلَعَ فِي جُحْرٍ فِي بَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِدْرًى يَحُكُّ بِهِ رَأْسَهُ، فَلَمَّا رَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَوْ أَعْلَمُ أَنَّكَ تَنْتَظِرُنِي، لَطَعَنْتُ بِهِ فِي عَيْنَيْكَ»
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا جُعِلَ الإِذْنُ مِنْ قِبَلِ البَصَرِ»


Next Page » « Previous Page