Category: புஹாரி

Bukhari

Bukhari-6921

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6921. அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ‘நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?’ என ஒருவர் கேட்டதற்கு, ‘இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார்.

இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

அத்தியாயம்: 88


قَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الجَاهِلِيَّةِ؟ قَالَ: «مَنْ أَحْسَنَ فِي الإِسْلاَمِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلاَمِ أُخِذَ بِالأَوَّلِ وَالآخِرِ»


Bukhari-6920

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6920. அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) தூதரே! பெரும் பாவங்கள் எவை?’ என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ‘இறைவனுக்கு இணை கற்பிப்பது’ என்றார்கள். அவர், ‘பிறகு எது?’ என்றார். நபி (ஸல்) அவர்கள், ‘பிறகு தாய் தந்தையரைப் புண்படுத்துவது’ என்றார்கள்.

அவர், ‘பிறகு எது?’ எனக் கேட்க நபி (ஸல்) அவர்கள்,’பொய்ச் சத்தியம் செய்தல் என்றார்கள்.

‘பொய்ச் சத்தியம் என்றால் என்ன?’ என்று நான் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ‘பொய் சொல்லி ஒரு முஸ்லிமான மனிதரின் செல்வத்தைக் கைப்பற்றுவதற்காகச் சத்தியம் செய்வது’ என்றார்கள்.5

Book :88


جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا الكَبَائِرُ؟ قَالَ: «الإِشْرَاكُ بِاللَّهِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «ثُمَّ عُقُوقُ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ مَاذَا؟ قَالَ: «اليَمِينُ الغَمُوسُ» قُلْتُ: وَمَا اليَمِينُ الغَمُوسُ؟ قَالَ: «الَّذِي يَقْتَطِعُ مَالَ امْرِئٍ مُسْلِمٍ، هُوَ فِيهَا كَاذِبٌ»


Bukhari-6919

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6919. அபூ பக்ரா (ரலி) அறிவித்தார்.

‘அல்லாஹ்வுக்கு இணைவைப்பது, பெற்றோரைப் புண்படுத்துவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, பொய் சாட்சியம் கூறுவது, அல்லது ‘பொய் பேசுவது’ ஆகியன பெரும்பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

‘பொய் சாட்சி’ என்பதை நபி (ஸல்) அவர்கள் திரும்பத் திரும்பத் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

(இதைக் கண்ட) நாங்கள் ‘அவர்கள் நிறுத்திக் கொள்ளலாமே!’ என்று கூறினோம்.4

இந்த ஹதீஸ் இரண்டு வழிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Book :88


أَكْبَرُ الكَبَائِرِ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، وَشَهَادَةُ الزُّورِ، وَشَهَادَةُ الزُّورِ – ثَلاَثًا – أَوْ: قَوْلُ الزُّورِ ” فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا: لَيْتَهُ سَكَتَ


Bukhari-6918

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

அல்லாஹ்வுக்கு இணைவைப்பவன் அடையும் பாவமும், இம்மையிலும் மறுமையிலும் அவனுக்குரிய தண்டனையும்.
அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக (இறைவனுக்கு) இணை வைத்தல் மிகப்பெரும் அநியாயமாகும். (31:13)2
அல்லாஹ் கூறுகின்றான்: நீர் (இறைவனுக்கு) இணைவைத்தால், உம் நன்மைகள் (யாவும்) அழிந்து, நஷ்டவாளர்களில் ஒருவராகிவிடுவீர். (39:65)
6918. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது.

மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக்

لَمَّا نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ} [الأنعام: 82] شَقَّ ذَلِكَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالُوا: أَيُّنَا لَمْ يَلْبِسْ إِيمَانَهُ بِظُلْمٍ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَيْسَ بِذَاكَ، أَلاَ تَسْمَعُونَ إِلَى قَوْلِ لُقْمَانَ: {إِنَّ الشِّرْكَ} [لقمان: 13] لَظُلْمٌ عَظِيمٌ


Bukhari-6917

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6917. அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.

யூதர்களில் ஒருவர் முகத்தில் அடி வாங்கிக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார். அவர், ‘முஹம்மதே! உங்கள் அன்சாரித் தோழர் ஒருவர் என் முகத்தில் அறைந்துவிட்டார்’ என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், ‘அவரைக் கூப்பிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே அவரை அழைத்(து வந்)தார்கள். (அவரிடம்) ‘இவரை முகத்தில் அறைந்தீரா?’ என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், ‘இறைத்தூதர் அவர்களே! நான் யூதர்களைக் கடந்துசென்றேன். அப்போது இவர் ‘மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவைத் தேர்ந்தேடுத்தவன் மீது சத்தியமாக’ என்று கூறக் கேட்டேன்.

உடனே நான், ‘முஹம்மத் (ஸல்) அவர்களை விடவுமா? என வினவினேன். அப்போது எனக்குக் கோபம் ஏற்பட்டு இவரை அறைந்து விட்டேன்’ என்றார். நபி (ஸல்) அவர்கள் ‘இறைத்தூதர்களிடையே என்னைச் சிறந்தவன் என்று சொல்லாதீர்கள். ஏனெனில், மக்கள் மறுமை நாளில் மூர்ச்சையடைந்து விடுவார்கள். மூர்ச்சை தெளி(ந்து எழு)பவர்களில் நானே முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூஸா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அவர்கள் இறை அரியாசனத்தின் கால்களில்

جَاءَ رَجُلٌ مِنَ اليَهُودِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لُطِمَ وَجْهُهُ، فَقَالَ: يَا مُحَمَّدُ، إِنَّ رَجُلًا مِنْ أَصْحَابِكَ مِنَ الأَنْصَارِ قَدْ لَطَمَ فِي وَجْهِي، قَالَ: «ادْعُوهُ». فَدَعَوْهُ، قَالَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي مَرَرْتُ بِاليَهُودِ فَسَمِعْتُهُ يَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَى البَشَرِ، قَالَ: قُلْتُ: وَعَلَى مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: فَأَخَذَتْنِي غَضْبَةٌ فَلَطَمْتُهُ، قَالَ: «لَا تُخَيِّرُونِي مِنْ بَيْنِ الأَنْبِيَاءِ، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ يَوْمَ القِيَامَةِ، فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا أَنَا بِمُوسَى آخِذٌ بِقَائِمَةٍ مِنْ قَوَائِمِ العَرْشِ، فَلَا أَدْرِي أَفَاقَ قَبْلِي، أَمْ جُوزِيَ بِصَعْقَةِ الطُّورِ»


Bukhari-6916

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 32

கோபத்தில் ஒரு முஸ்லிம் ஒரு யூதனின் கன்னத்தில் அடித்துவிட்டால்…?

இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.60

6916. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைத்தூதர்களில் சிலர் சிலரைவிட உயர்ந்தவர்கள் என்று சொல்லாதீர்கள்.

என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.61

Book : 87


«لاَ تُخَيِّرُوا بَيْنَ الأَنْبِيَاءِ»


Bukhari-6915

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 31

இறைமறுப்பாளனுக்கு பதிலாக முஸ்லிம் கொல்லப்பட மாட்டான்.58

6915. அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்.

நான் அலீ (ரலி) அவர்களிடம், ‘(நபிகளாரின் குடும்பத்தாராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?’ என்று கேட்டேன்.

-அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) அவர்கள் சில வேளைகளில் ‘மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?’ என்று அபூ ஜுஹைஃபா(ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்கள்.

அதற்கு அலீ (ரலி) அவர்கள், ‘வித்துக்களைப் பிளந்தவனும் உயிரினங்களை உருவாக்கியவனுமான அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் உள்ளதைத் தவிர வேறெதுவும் (நபிகளாரின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை; இறைவேதத்தில் ஒருவருக்கு அளிக்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர’ என்று பதிலளித்தார்கள். நான் ‘இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?’ என்று கேட்டேன். அலீ (ரலி) அவர்கள், ‘இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க்

سَأَلْتُ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ هَلْ عِنْدَكُمْ شَيْءٌ مِمَّا لَيْسَ فِي القُرْآنِ؟، وَقَالَ ابْنُ عُيَيْنَةَ مَرَّةً: مَا لَيْسَ عِنْدَ النَّاسِ؟ فَقَالَ: «وَالَّذِي فَلَقَ الحَبَّةَ وَبَرَأَ النَّسَمَةَ مَا عِنْدَنَا إِلَّا مَا فِي القُرْآنِ إِلَّا فَهْمًا يُعْطَى رَجُلٌ فِي كِتَابِهِ، وَمَا فِي الصَّحِيفَةِ» قُلْتُ: وَمَا فِي الصَّحِيفَةِ؟ قَالَ: «العَقْلُ، وَفِكَاكُ الأَسِيرِ، وَأَنْ لاَ يُقْتَلَ مُسْلِمٌ بِكَافِرٍ»


Bukhari-6914

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 30

இஸ்லாமிய அரசின் கீழ் வாழும் முஸ்லிமல்லாத குடிமகனைக் குற்றமேயின்றி கொலை செய்வதிலுள்ள பாவம்.

6914. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

(இஸ்லாமிய அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டு அதன் கீழ் வாழ்ந்துவரும்) ஓர் ஒப்பந்தக் குடிமகனை (அநியாயமாக)க் கொலை செய்பவன் சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டான். சொர்க்கத்தின் நறுமணமோ நாற்பதாண்டுப் பயணத் தொலைவிலிருந்தே வீசிக் கொண்டிருக்கும்.

என அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.57

Book : 87


«مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الجَنَّةِ، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا»


Bukhari-6913

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 29

வாயில்லாப் பிராணிகளால் ஏற்படும் சேதத்திற்கு இழப்பீடு கிடையாது.

இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: வாகனப் பிராணி ஒன்று தமது காலால் (யாரையேனும்) எட்டி உதைத்துவிட்டால் (ஓட்டுநர்) அதற்குப் பொறுப்பாளி அல்லர்; கடிவாளத்தைச் சுண்டியதால் (பிராணி எட்டி உதைத்து) சேதம் ஏற்படின் (ஓட்டுநர்) பொறுப்பாளி ஆவார் என்பது முன்னோர் களின் தீர்ப்பாகும்.

ஹம்மாத் பின் அபீசுலைமான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: வாகனப் பிராணி எட்டி உதைத்து விட்டால் (ஓட்டுநர்) பொறுப்பாளியாக்கப் பட மாட்டார். யாரேனும் அதைக் குத்தி (அதனால் அது மிரண்டு உதைத்து)விட்டால் தவிர! (அப்போது குத்தியவன் பொறுப்பாளியாக்கப்படுவான்.)

ஷுரைஹ் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: வாகனப் பிராணி பதிலுக்கு பதில் தாக்கினால் அதற்கு யாரும் பொறுப்பல்ல. அதாவது அதை ஒருவர் அடிக்க, அது (பதிலுக்குத்) தனது காலால் தாக்கியது. (அப்போது யாரும் பொறுப்பாளியாக்கப்பட மாட்டார்.)

ஹகம் பின் உதைபா (ரஹ்) அவர்களும் ஹம்மாத்

«العَجْمَاءُ عَقْلُهَا جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»


Bukhari-6912

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 28

சுரங்க(விப)த்திற்கு இழப்பீடு இல்லை; கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு இல்லை.53

6912. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

வாயில்லாப் பிராணிகளால் சேதம் ஏற்பட்டால் இழப்பீடு கிடையாது. கிணற்று(விபத்து)க்கும் இழப்பீடு கிடையாது. சுரங்க(விப)த்திற்கும் இழப்பீடு கிடையாது. புதையலில் ஐந்தில் ஒரு பங்கு (ஸகாத்தாக) வசூலிக்கப்படும்.

என அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்.54

Book : 87


«العَجْمَاءُ جَرْحُهَا جُبَارٌ، وَالبِئْرُ جُبَارٌ، وَالمَعْدِنُ جُبَارٌ، وَفِي الرِّكَازِ الخُمُسُ»


Next Page » « Previous Page