Category: ஹாகிம்

Hakim

Hakim-2225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2225. (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில் கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு.

கடன் தவணை முடிந்தும் ( கூடுதல்) அவகாசம் அளித்தாலும் அவருக்கு தவணை அளித்த ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அறிவித்தார்.


«مَنْ أَنْظَرَ مُعْسِرًا، فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ، قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ، فَأَنْظَرَهُ بَعْدَ ذَلِكَ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةً»


Hakim-1321

ஹதீஸின் தரம்: Pending

1321. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் உங்களின் தோழர்கள் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள்…


«أَنَّ جِنَازَةَ يَهُودِيٍّ مَرَّتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ» ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ: «إِنَّمَا قُمْتُ لِلْمَلَائِكَةِ»


Hakim-1003

ஹதீஸின் தரம்: More Info

1003. நபி (ஸல்) அவர்கள் (முதல்) ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின், ‘ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ: «رَبِّ اغْفِرْ لِي»


Hakim-1629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1629. ஒலியெழுப்பும் மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْجَرَسُ مِزْمَارُ الشَّيْطَانِ»


Hakim-7281

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7281. ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 


سَرَّهُ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ وَيُوَسَّعَ عَلَيْهِ فِي رِزْقِهِ فَلْيَصِلْ رَحِمَهُ»


Hakim-7266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7266. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் அல்லாஹ்வும் நல்ல முறையில் நடந்து கொள்வான். அதை துண்டித்து விடுகின்றவரை அல்லாஹ்வும் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் ஸைத் (ரலி)


«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ»


Hakim-7269

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7269. …நானே அல்லாஹ். நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை) படைத்து அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَا اللَّهُ وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنِ اسْمِي فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ


Hakim-7287

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7287. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். (அது மறுமை நாளில் வந்து) “ என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன் ” என முறையிடும்.

அப்போது அல்லாஹ், “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று அதற்கு பதிலளிப்பான்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


إِنَّ الرَّحِمَ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ تَقُولُ: يَا رَبِّ إِنِّي قُطِعْتُ إِنِّي أُسِيءَ إِلَيَّ يَا رَبِّ فَيُجِيبُهَا رَبُّهَا فَيَقُولُ: أَلَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ


Hakim-7286

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7286. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், “என்ன?” என்று கேட்டான். இது  “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரும் இடம் தானே?” என்று கூறியது.

அதற்கு அல்லாஹ் “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான்.

(பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“நீங்கள் விரும்பினால் “நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?” (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَمَّا فَرَغَ مِنَ الْخَلْقِ قَامَتِ الرَّحِمُ فَأَخَذَتْ بِحَقْوِ الرَّحْمَنِ فَقَالَ: مَهْ، فَقَالَتْ: هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنَ الْقَطِيعَةِ. فَقَالَ: أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ ” اقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ} [محمد: 22] إِلَى قَوْلِهِ: {أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ} [النساء: 82] إلخ


Hakim-7265

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7265. நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை படைத்து) அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَا الرَّحْمَنُ وَهِيَ الرَّحِمُ فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ


Next Page » « Previous Page