Category: ஹாகிம்

Hakim

Hakim-2742

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2742. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒரு மனிதருக்கு திருமணம் நடத்திவைக்கும் போது அவரிடம், நான் இந்த பெண்ணை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அந்த பெண்ணிடமும் நான் இந்த மனிதரை உனக்கு திருமணம் முடித்துவைப்பதை நீர் பொருந்திக்கொள்கிறீரா? என்று (சம்மதம்) கேட்டார்கள். அதற்கு அந்த பெண்ணும் ஆம் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மஹர் எதையும் நிர்ணயிக்காமலேயே அவ்விருவருக்கும் திருமணம் முடித்துவைத்தார்கள். அந்த மனிதரும் மஹர் தரவில்லை. அவர் ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர். ஹுதைபியா உடன்படிக்கையில் கலந்துக்கொண்டவர்களுக்கு கைபர் போரில் பங்குண்டு என்ற வகையில் அவருக்கு ஒரு பங்கு கிடைத்தது.

அவரின் மரணத்தருவாயில், தன் அருகில் இருந்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் மஹர் எதுவும் நிர்ணயிக்காமலேயே எனக்கு இந்த பெண்ணை திருமணம் முடித்து வைத்தார்கள். நானும் இதுவரை மஹர் எதுவும் தரவில்லை. இப்போது கைபர் போரில் எனக்கு கிடைத்த பங்கை அந்தப்பெண்ணுக்கு மஹராக தருகிறேன், நீங்களே இதற்கு சாட்சி என்று கூறினார். அந்தபெண் கைபரின் பங்கை அவரிடம் மஹராக வாங்கி, அதை விற்று ஒரு லட்சம் திர்ஹத்தை பெற்றார்.

மேலும்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ: «أَتَرْضَى أَنْ أُزَوِّجَكَ فُلَانَةً؟» قَالَ: نَعَمْ، وَقَالَ لِلْمَرْأَةِ: «أَتَرْضَيْنَ أَنْ أُزَوِّجَكَ فُلَانًا؟» قَالَتْ: نَعَمْ، فَزَوِّجْ أَحَدَهُمَا صَاحِبَهُ، وَلَمْ يَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ يُعْطِهَا شَيْئًا، وَكَانَ مِمَّنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ، وَكَانَ مَنْ شَهِدَ الْحُدَيْبِيَةَ لَهُ سَهْمٌ بِخَيْبَرَ، فَلَمَّا حَضَرَتْهُ الْوَفَاةُ، قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زَوَّجَنِي فُلَانَةً، وَلَمْ أَفْرِضْ لَهَا صَدَاقًا، وَلَمْ أُعْطِهَا شَيْئًا، وَإِنِّي أُشْهِدُكُمْ أَنِّي أَعْطَيْتُهَا صَدَاقَهَا سَهْمِي بِخَيْبَرَ، فَأَخَذَتْ سَهْمًا فَبَاعَتْهُ بِمِائَةِ أَلْفٍ، قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُ الصَّدَاقِ أَيْسَرُهُ»


Hakim-2732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2732. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குறைந்த மஹரை பெறும் பெண்களே அதிகம் பரக்கத் உள்ள பெண்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


«أَعْظَمُ النِّسَاءِ بَرَكَةً أَيْسَرُهُنَّ صَدَاقًا»


Hakim-6770

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6770. முஹம்மது பின் உமர் அல்வாகிதீ கூறுகிறார்:

உம்மு ஹபீபா (ரலி) அவர்களின் இயற்பெயர் ரம்லா பின்த் அபூசுப்யான் பின் ஹர்ப் (ரலி) என்பதாகும். இவரின் தாயார் பெயர் ஸஃபிய்யா பின்த் அபுல் ஆஸ் பின் உமைய்யா பின் அப்துஷ் ஷம்ஸ் என்பதாகும். மேலும் இவர் உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் மாமி ஆவார்.

ஆரம்பத்தில் இவரை உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷ் திருமணம் முடித்திருந்தார். இவர் மூலம் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு பிறந்த குழைந்தைக்கு ஹபீபா என்று பெயரிடப்பட்டதால் இவரை உம்மு ஹபீபா என்று அழைக்கப்பட்டது. ஹபீபா அவர்களை தாவூத் பின் உர்வா பின் மஸ்வூத் அஸ்ஸகஃபீ என்பவர் திருமணம் செய்தார்.

மேலும் முஹம்மது பின் உமர் அல்வாகிதீ அறிவித்தார்:

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருநாள் இரவு எனது கனவில், எனது கணவரான உபைதுல்லாஹ் பின் ஜஹ்ஷின் முகம் சிதைக்கப்பட்டு அசிங்கமான தோற்றத்தில் கண்டு பயந்துவிட்டோன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவரின் நிலை மாறிவிட்டது என்று கூறினேன்…

…நஜ்ஜாஷி மன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சார்பில் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கு நானூறு தீனார்களை மஹராக கொடுத்தார்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் உம்மு ஹபீபா (ரலி) அவர்களுக்கும் திருமணம் நடந்த போது அபிசீனிய நாட்டு

«وَأُمُّ حَبِيبَةَ اسْمُهَا رَمْلَةُ بِنْتُ أَبِي سُفْيَانَ بْنِ حَرْبٍ، وَأُمُّهَا صَفِيَّةُ بِنْتُ أَبِي الْعَاصِ بْنِ أُمَيَّةَ بْنِ عَبْدِ شَمْسٍ، عَمَّةُ عُثْمَانَ بْنِ عَفَّانَ تَزَوَّجَهَا عُبَيْدُ اللَّهِ بْنُ جَحْشِ بْنِ رَبَابٍ حَلِيفُ حَرْبِ بْنِ أُمَيَّةَ، فَوَلَدَتْ لَهُ حَبِيبَةَ فَكُنِّيَتْ بِهَا، وَتَزَوَّجَ حَبِيبَةَ دَاودُ بْنُ عُرْوَةَ بْنِ مَسْعُودٍ الثَّقَفِيُّ»

قَالَ ابْنُ عُمَرَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَمْرِو بْنِ زُهَيْرٍ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ عَمْرِو بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ، قَالَ: قَالَتْ أُمُّ حَبِيبَةَ: رَأَيْتُ فِي الْمَنَامِ كَأَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ جَحْشٍ زَوْجِي بِأَسْوَإِ صُورَةٍ وَأَشْوَهِهِ فَفَزِعْتُ، فَقُلْتُ: تَغَيَّرَتْ وَاللَّهِ حَالُهُ، فَإِذَا هُوَ يَقُولُ حِينَ أَصْبَحَ: يَا أُمَّ حَبِيبَةَ، إِنِّي نَظَرْتُ فِي الدِّينِ فَلَمْ أَرَ دِينًا خَيْرًا مِنَ النَّصْرَانِيَّةِ وَكُنْتُ قَدْ دِنْتُ بِهَا، ثُمَّ دَخَلْتُ فِي دِينِ مُحَمَّدٍ، ثُمَّ رَجَعْتُ إِلَى النَّصْرَانِيَّةِ، فَقُلْتُ: وَاللَّهِ مَا خَيْرٌ لَكَ وَأَخْبَرْتُهُ بِالرُّؤْيَا الَّتِي رَأَيْتُ لَهُ، فَلَمْ يَحْفَلْ بِهَا وَأَكَبَّ عَلَى الْخَمْرِ حَتَّى مَاتَ، فَأُرِيَ فِي النَّوْمِ كَأَنَّ آتِيًا يَقُولُ لِي: يَا أُمَّ الْمُؤْمِنِينَ، فَفَزِعْتُ وَأَوَّلْتُهَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَزَوَّجُنِي، قَالَتْ: فَمَا هُوَ إِلَّا أَنِ انْقَضَتْ عِدَّتِي، فَمَا شَعَرْتُ إِلَّا بِرَسُولِ النَّجَاشِيِّ عَلَى بَابِي يَسْتَأْذِنُ، فَإِذَا جَارِيَةٌ لَهُ يُقَالُ لَهَا: أَبْرَهَةَ كَانَتْ تَقُومُ عَلَى ثِيَابِهِ وَدَهْنِهِ، فَدَخَلَتْ عَلَيَّ فَقَالَتْ: إِنَّ الْمَلِكَ يَقُولُ لَكِ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَيَّ أَنْ أُزَوِّجَكِ، فَقُلْتُ: بَشَّرَكِ اللَّهُ بِخَيْرٍ، وَقَالَتْ: يَقُولُ لَكِ الْمَلِكُ: وَكِّلِي مَنْ يُزَوِّجُكِ، فَأَرْسَلَتْ إِلَى خَالِدِ بْنِ سَعِيدِ بْنِ الْعَاصِ فَوَكَّلَتْهُ وَأَعْطَتْ أَبْرَهَةَ سِوَارَيْنِ مِنْ فِضَّةٍ وَخَدَمَتَيْنِ كَانَتَا فِي رِجْلَيْهَا وَخَوَاتِيمَ فِضَّةً كَانَتْ فِي أَصَابِعِ رِجْلَيْهَا سُرُورًا بِمَا بَشَّرَتْهَا بِهِ، فَلَمَّا كَانَ الْعَشِيُّ أَمَرَ النَّجَاشِيُّ جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ وَمَنْ هُنَاكَ مِنَ الْمُسْلِمِينَ فَحَضَرُوا فَخَطَبَ النَّجَاشِيُّ، فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ الْمَلِكِ الْقُدُّوسِ السَّلَامِ الْمُؤْمِنِ الْمُهَيْمِنِ الْعَزِيزِ الْجَبَّارِ، الْحَمْدُ لِلَّهِ حَقَّ حَمْدِهِ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، وَأَنَّهُ الَّذِي بَشَّرَ بِهِ عِيسَى ابْنُ مَرْيَمَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ، أَمَّا بَعْدُ فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَبَ إِلَيَّ أَنْ أُزَوِّجَهُ أُمَّ حَبِيبَةَ بِنْتَ سُفْيَانَ فَأَجَبْتُ إِلَى مَا دَعَا إِلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ أَصْدَقْتُهَا أَرْبَعمِائَةِ دِينَارٍ، ثُمَّ سَكَبَ الدَّنَانِيرَ بَيْنَ يَدَيِ الْقَوْمِ، فَتَكَلَّمَ خَالِدُ بْنُ سَعِيدٍ فَقَالَ: الْحَمْدُ لِلَّهِ أَحْمَدُهُ وَأَسْتَعِينُهُ وَأَسْتَنْصِرُهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ


Hakim-808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

808. நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருக்கும் போது (சிலநேரம்) எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


كُنَّا نَجْلِسُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «فَيَقْرَأُ الْقُرْآنَ فَرُبَّمَا مَرَّ بِسَجْدَةٍ فَيَسْجُدُ وَنَسْجُدُ مَعَهُ»


Hakim-7513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7513. உக்பா பின்ஆமிர் (ரலி) கூறியதாவது:

நாங்கள் பத்து பேர் கொண்ட ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம்  சென்ற போது ஒன்பது நபர்களிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கி கொண்டு ஒருவரிடம் வாங்கவில்லை. அதற்கு சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களே, இவரை மட்டும் ஏன் விட்டுவிட்டீர்கள் என கேட்க, அவர் தோளில் தாயத் அணிந்து உள்ளார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்த மனிதர் தாயத்தை அறுத்தெரிந்தார். அதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வாக்குறுதிப் பிரமாணம் வாங்கினார்கள். அதன் பிறகு நபி (ஸல்) கூறினார்கள்: யார் (தாயத்தைத்) தொங்க விடுகிறாரோ அவர் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்து விட்டார்.


أَنَّهُ جَاءَ فِي رَكْبِ عَشَرَةٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَايَعَ تِسْعَةً وَأَمْسَكَ عَنْ بَيْعَةِ رَجُلٍ مِنْهُمْ، فَقَالُوا: مَا شَأْنُ هَذَا الرَّجُلِ لَا تُبَايِعُهُ؟ فَقَالَ: «إِنَّ فِي عَضُدِهِ تَمِيمَةً» فَقَطَعَ الرَّجُلُ التَّمِيمَةَ، فَبَايَعَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ قَالَ: «مَنْ عَلَّقَ فَقَدْ أَشْرَكَ»


Hakim-7503

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7503. ஈஸா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ் கூறியதாவது:

அபூமஃபத் அல்ஜுஹைனி (ரலி) – (அப்துல்லாஹ் பின் ஹகீம்) அவர்களுக்கு தோலில் ஒரு வகையான நோய் ஏற்பட்ட போது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது  அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறினேன்.

அதற்கு அவர்கள், தாயத் போன்றதை அணிவதற்கு மரணமே பரவாயில்லை எனக் கூறி, யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.


دَخَلْتُ عَلَى أَبِي مَعْبَدٍ الْجُهَنِيِّ وَهُوعَبْدُ اللَّهِ بْنُ حَكِيمٍ، وَبِهِ جَمْرٌ فَقُلْتُ: أَلَا تُعَلِّقُ شَيْئًا. فَقَالَ: الْمَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


Hakim-8289

ஹதீஸின் தரம்: More Info

8289. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


«مَنْ عَلَّقَ وَدَعَةً فَلَا وَدَعَ اللَّهُ لَهُ، وَمَنْ عَلَّقَ تَمِيمَةً فَلَا تَمَّمَ اللَّهُ لَهُ»


Hakim-7501

ஹதீஸின் தரம்: More Info

7501. யார் தாயத்தைத் தொங்க விடுகின்றாரோ அவருடைய காரியத்தை அல்லாஹ் பூர்த்தியாக்க மாட்டான். யார் சிப்பியைத் தொங்க விடுகின்றாரோ அல்லாஹ் அவருடைய காரியத்தை நிறைவேற்ற மாட்டான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)


«مَنْ عَلَّقَ تَمِيمَةً فَلَا أَتَمَّ اللَّهُ لَهُ وَمَنْ عَلَّقَ وَدَعَةً فَلَا وَدَعَ اللَّهُ لَهُ»


Hakim-3281

ஹதீஸின் தரம்: Pending

3281. தங்கத்தையும், வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக’ (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிந்தது. இனி நமது வாரிசுகளுக்கு யாரும் சொத்து சேர்த்துவைக்க முடியாது என்று கூறிக்கொண்டனர்.

உடனே உமர் (ரலி) அவர்கள், ‘உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன்’ என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். ஸவ்பான் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களை பின்தொடர்ந்து சென்றார்கள். மற்றவர்களும் உடன் சென்றனர்.

உமர் (ரலி)  அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது’ என்று கேட்டார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை’ அல்லாஹ் வாரிசுரிமை சட்டத்தை கடமையாக்கியதே உங்களுக்கு பின்னால் வரும் வாரிசுகளுக்காக தான் என்று விளக்கமளித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் அல்லாஹு அக்பர் என்று கூறினார்கள்.

அதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள்

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள்.

لَمَّا نَزَلَتْ {الَّذِينَ يَكْنِزُونَ} [التوبة: 34] الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنْفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ كَبُرَ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ وَقَالُوا: مَا يَسْتَطِيعُ أَحَدُنَا أَنْ يَتْرُكَ مَالًا لِوَلَدِهِ يَبْقَى بَعْدَهُ. فَقَالَ عُمَرُ: أَنَا أُفَرِّجُ عَنْكُمْ، قَالَ: فَانْطَلَقُوا وَانْطَلَقَ عُمَرُ وَاتَّبَعَهُ ثَوْبَانُ فَأَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ عُمَرُ: يَا نَبِيَّ اللَّهِ، قَدْ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هَذِهِ الْآيَةُ. فَقَالَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ اللَّهَ لَمْ يَفْرِضِ الزَّكَاةَ إِلَّا لِيُطَيِّبَ بِهَا مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ، وَإِنَّمَا فَرَضَ الْمَوَارِيثَ فِي أَمْوَالٍ تَبْقَى بَعْدَكُمْ» قَالَ: فَكَبَّرَ عُمَرُ ثُمَّ قَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُخْبِرُكَ بِخَيْرِ مَا يَكْنِزُهُ الْمَرْءُ الْمَرْأَةُ الصَّالِحَةُ، إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ، وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ، وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ»


Hakim-2052

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2052. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அமர்ந்திருந்தபோது தமக்கு மேலிருந்து ஒரு சப்தம் வருவதைக் கேட்டார் அவர். அப்போது வானத்தை அண்ணாந்து பார்த்த ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இதோ, வானில் இதுவரை திறக்கப்பட்டிராத ஒரு கதவு இப்போது திறக்கப்பட்டிருக்கிறது. (அதன் சப்தமே இப்போது கேட்டது.)” என்று கூறினார்கள்.

அந்தக் கதவு வழியாக ஒரு வானவர் இறங்கி (நபியவர்களிடம்) வந்தார்.

“உங்களுக்கு முன் எந்த இறைத்தூதருக்கும் வழங்கப் பெற்றிராத இரு ஒளிச்சுடர்கள் உங்களுக்கு வழங்கப்பெற்றுள்ள நற்செய்தியைப் பெறுங்கள். “அல்ஃபாத்திஹா” அத்தியாயமும் “அல்பகரா” அத்தியாயத்தின் இறுதி வசனங்களுமே அவை. அவற்றிலுள்ள (பிரார்த்தனை வரிகளில்) எதை நீங்கள் ஓதினாலும் அது உங்களுக்கு வழங்கப் பெறாமல் இருப்பதில்லை” என்று அவ்வானவர் கூறினார்.


بَيْنَا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ جَالِسٌ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ نَقِيضًا مِنَ السَّمَاءِ فَرَفَعَ رَأْسَهُ ثُمَّ قَالَ: ” فُتِحَ بَابٌ مِنَ السَّمَاءِ لَمْ يُفْتَحْ قَبْلَهُ قَطُّ، فَإِذَا مَلَكٌ يَقُولُ: أَبْشِرْ بِنُورَيْنِ أُوتِيتَهُمَا لَمْ يُؤْتَهُمَا نَبِيٌّ قَبْلَكَ: فَاتِحَةَ الْكِتَابِ، وَخَوَاتِيمَ سُورَةِ الْبَقَرَةِ لَمْ تَقْرَأْ مِنْهَا حَرْفًا إِلَّا أُعْطِيتَهُ


Next Page » « Previous Page