Category: ஹாகிம்

Hakim

Hakim-1643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1643. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அப்து மனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் நீங்கள் தடுக்காதீர்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி)


«يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ، وَصَلَّى أَيَّ سَاعَةٍ أَحَبَّ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ»


Hakim-1156

ஹதீஸின் தரம்: Pending

1156.


«عَلَيْكُمْ بِقِيَامِ اللَّيْلِ فَإِنَّهُ دَأَبُ الصَّالِحِينَ قَبْلَكُمْ، وَهُوَ قُرْبَةٌ لَكُمْ إِلَى رَبِّكُمْ، وَمُكَفِّرٌ لِلسَّيِّئَاتِ، وَمَنْهَاةٌ عَنِ الْإِثْمِ»


Hakim-2809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2809. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தகுந்த காரணமின்றி கணவனிடம் விவாகரத்து கோரிய பெண்ணுக்கு சுவர்க்கத்தின் வாடை தடுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«أَيُّمَا امْرَأَةٍ سَأَلَتْ زَوْجَهَا الطَّلَاقَ مِنْ غَيْرِ بَأْسٍ، حَرَّمَ اللَّهُ عَلَيْهَا أَنْ تُرِيحَ رَائِحَةَ الْجَنَّةَ»


Hakim-2225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2225. (கடன் வாங்கி) சிரமப்படுவோருக்கு ஒருவர் தவணை வழங்குகின்றார் எனில் கடனின் (தவணைக்) காலம் முடிவதற்கு முன்னால் ஒவ்வொரு நாளும் (அது போல் ஒரு மடங்கு) தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு.

கடன் தவணை முடிந்தும் ( கூடுதல்) அவகாசம் அளித்தாலும் அவருக்கு தவணை அளித்த ஒவ்வொரு நாளும் அவர் அளித்த தொகையைப் போல் ஒரு மடங்கு தர்மம் செய்த கூலி அவருக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா (ரலி) அறிவித்தார்.


«مَنْ أَنْظَرَ مُعْسِرًا، فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ، قَبْلَ أَنْ يَحِلَّ الدَّيْنُ، فَإِذَا حَلَّ الدَّيْنُ، فَأَنْظَرَهُ بَعْدَ ذَلِكَ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةً»


Hakim-1321

ஹதீஸின் தரம்: Pending

1321. அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் உங்களின் தோழர்கள் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள்…


«أَنَّ جِنَازَةَ يَهُودِيٍّ مَرَّتْ بِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَامَ» ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ: «إِنَّمَا قُمْتُ لِلْمَلَائِكَةِ»


Hakim-1003

ஹதீஸின் தரம்: More Info

1003. நபி (ஸல்) அவர்கள் (முதல்) ஸஜ்தாவிலிருந்து எழுந்த பின், ‘ரப்பிக்ஃபிர்லீ (இறைவா! என்னை மன்னித்து விடு)’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا رَفَعَ رَأْسَهُ مِنَ السُّجُودِ: «رَبِّ اغْفِرْ لِي»


Hakim-1629

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1629. ஒலியெழுப்பும் மணி ஷைத்தானின் இசைக் கருவியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْجَرَسُ مِزْمَارُ الشَّيْطَانِ»


Hakim-7281

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7281. ஒருவர் தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும், செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும் என அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 


سَرَّهُ أَنْ يُنْسَأَ لَهُ فِي أَجَلِهِ وَيُوَسَّعَ عَلَيْهِ فِي رِزْقِهِ فَلْيَصِلْ رَحِمَهُ»


Hakim-7266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7266. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். அதை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் அல்லாஹ்வும் நல்ல முறையில் நடந்து கொள்வான். அதை துண்டித்து விடுகின்றவரை அல்லாஹ்வும் துண்டித்து விடுவான்.

அறிவிப்பவர் : ஸயீத் பின் ஸைத் (ரலி)


«الرَّحِمُ شَجْنَةٌ مِنَ الرَّحْمَنِ فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ عَزَّ وَجَلَّ»


Hakim-7269

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7269. …நானே அல்லாஹ். நானே ரஹ்மான். நான் “ரஹிமை’ (உறவுமுறையை) படைத்து அதற்குரிய பெயரை எனது பெயரிலிருந்து எடுத்தேன்.

யார் அதைச் சேர்த்துக் கொள்கிறாரோ அவரை நானும் சேர்த்துக் கொள்கிறேன். யார் அதைத் துண்டிக்கிறாரோ அவரை நானும் துண்டித்து விடுகிறேன் .”

என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி)


قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ: أَنَا اللَّهُ وَأَنَا الرَّحْمَنُ خَلَقْتُ الرَّحِمَ وَشَقَقْتُ لَهَا مِنِ اسْمِي فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ


Next Page » « Previous Page