Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-80

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

80. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

உங்கள் விஷயத்தில் நான் மிகவும் அஞ்சுவது, நாவன்மை மிக்க ஒவ்வொரு நயவஞ்சகர்களின் வாதத்திறமை பற்றிதான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் புரைதா (ரஹ்)


«أَخْوَفُ مَا أَخَافُ عَلَيْكُمْ جِدَالُ الْمُنَافِقِ عَلِيمِ اللِّسَانِ»


Ibn-Hibban-2074

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2074. ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், அவர்களின் சகோதரர் மகன்களில் ஒருவருக்குமிடையில் ஒரு பிரச்சனை இருந்தது. அவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தபோது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர் எழுந்து பள்ளிவாசலுக்கு செல்ல தயாரானார்.

உடனே ஆயிஷா (ரலி) அவர்கள், “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் (ரஹ்)


كَانَ بَيْنَ عَائِشَةَ وَبَيْنَ بَعْضِ بَنِي أَخِيهَا شَيْءٌ، فَدَخَلَ عَلَيْهَا فَلَمَّا جَلَسَ جِيءَ بِالطَّعَامِ، فَقَامَ إِلَى الْمَسْجِدِ فَقَالَتْ لَهُ: اجْلِسْ غُدَرُ، فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يُصَلِّي أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ».


Ibn-Hibban-2073

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

நாம் கூறிய கருத்து சரியானது என்று தெளிவாக உணர்த்தும் இரண்டாவது செய்தி.

2073. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உங்களில் எவரும் உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழவேண்டாம்” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«لَا يَقُومُ أَحَدُكُمْ إِلَى الصَّلَاةِ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلَا هُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ الْغَائِطُ وَالْبَوْلُ»


Ibn-Hibban-2072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கூட்டுத் தொழுகையில் ஈடுபடுவதை விட்டு திசை திருப்பும் மனிதனின் தேவைகள் இருக்கும் போது ஜமாஅத் தொழுகையை விட்டுவிடலாம் என்று நாம் கூறியிருப்பது அவனுக்கு தொல்லை தரும் தேவை இருக்கும் போது தான். அவனுக்கு தொல்லை தராத தேவைகள் விசயத்தில் அல்ல.

2072. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் மலம், ஜலம் போன்ற (இயற்கைத் தேவையை) அடக்கிக்கொண்டு தொழ (நிற்க) வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يُصَلِّ أَحَدُكُمْ وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ»


Ibn-Hibban-470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

மேற்கண்ட (ஹதீஸ் எண்-469 இல் இடம்பெறும்) செய்தியை அப்தா பின் ஸுலைமான் மட்டுமே தனித்து அறிவிக்கிறார் என்போரின் வாதத்தை முறியடிக்கும் செய்தி.

470. (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கள், “நரகம் தடைசெய்யப்பட்ட ஒருவரை பற்றி உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு மக்கள், “ஆம் அறிவியுங்கள் அல்லாஹ்வின் தூதரே!” என்று கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டதாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«أَلَا أُخْبِرُكُمْ بِمَنْ تُحَرَّمُ عَلَيْهِ النَّارُ»؟ قَالُوا: بَلَى يَا رَسُولَ اللَّهِ، قَالَ: «عَلَى كُلِّ هَيِّنٍ، لَيِّنٍ، قَرِيبٍ، سَهْلٍ»


Ibn-Hibban-469

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் பணிவு, நாகரீகம், மென்மை கொண்டவராக, மக்களின் அன்பிற்குரியவராக இருந்தால் அவர் நரகத்தை விட்டு ஈடேற்றம் பெற வாய்ப்புள்ளது என்பது பற்றி வந்துள்ளவை.

469. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பணிவுள்ள; நாகரீகமிக்க; மக்களின் நெருக்கத்திற்குரிய; மென்மையான ஒவ்வொருவருக்கும் நரகம் தடைசெய்யப்பட்டுள்ளது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«إِنَّمَا يُحَرَّمُ عَلَى النَّارِ كُلُّ هَيِّنٍ لَيِّنٍ قَرِيبٍ سَهْلٍ»


Ibn-Hibban-5538

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5538.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ إِذَا تَبَوَّأَ مَضْجَعَهُ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي كَفَانِي وَآوَانِي وَسَقَانِي، الْحَمْدُ لِلَّهِ الَّذِي مَنَّ عَلَيَّ فَأَفْضَلَ، الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَعْطَانِي فَأَجْزَلَ، الْحَمْدُ لِلَّهِ عَلَى كُلِّ حَالٍ، اللَّهُمَّ رَبَّ كُلِّ شَيْءٍ، وَمَالِكَ كُلِّ شَيْءٍ، وَإِلَهَ كُلِّ شَيْءٍ، لَكَ كُلُّ شَيْءٍ، أَعُوذُ بِكَ مِنَ النَّارِ»


Ibn-Hibban-4570

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

தனது சமுதாயம் வழிகெடுக்கும் தலைவர்களுக்கு கட்டுபட்டு நேரான பாதையை விட்டு தூரமாகிவிடுவார்கள் என்பது பற்றி நபி (ஸல்) அவர்களின் அச்சம்.

4570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது சமுதாயத்தின் விசயத்தில் நான் பயப்படுவதெல்லாம் வழிகெடுக்கும் தலைவர்களை குறித்துதான். எனது சமுதாயத்தில் வாள் வீசப்பட்டால் மறுமைநாள் வரை அது அவர்களை விட்டு அகற்றப்படாது.

அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)


«إِنِّي لَا أَخَافُ عَلَى أُمَّتِي إِلَّا الْأَئِمَّةَ الْمُضِلِّينَ، وَإِذَا وُضِعَ السَّيْفُ فِي أُمَّتِي لَمْ يُرْفَعْ عَنْهُمْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Ibn-Hibban-6190

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஆதம் (அலை) அவர்களுக்கும், நூஹ் (அலை) அவர்களுக்கும் இடையில் உள்ள தலைமுறையினர் பற்றி வந்துள்ள செய்திகள்.

6190. ஒரு மனிதர் (நபி-ஸல் அவர்களிடம்) “அல்லாஹ்வின் தூதரே! ஆதம் (அலை) அவர்கள் நபியா? என்று கேட்டார். அதற்கவர்கள், “ஆம், அவர் அல்லாஹ்விடம் பேசிய நபி” என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், “ஆதம் நபிக்கும், நூஹ் நபிக்கும் இடைப்பட்ட காலம் எவ்வளவு? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 10 தலைமுறை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)


أَنَّ رَجُلًا، قَالَ: يَا رَسُولَ اللَّهِ أَنَبِيٌّ كَانَ آدَمُ؟ قَالَ: «نَعَمْ، مُكَلَّمٌ»، قَالَ: فَكَمْ كَانَ بَيْنَهُ وَبَيْنَ نُوحٍ؟ قَالَ: «عَشَرَةُ قُرُونٍ»


Next Page » « Previous Page