Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-630

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

630. அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்), சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) ஆகியோர் கூறியதாவது:

“ஒரு முஸ்லிமான மனிதர் இறக்கும்போது நரகத்தில் அவரது இடத்திற்கு யூதர் ஒருவரையோ கிறித்தவர் ஒருவரையோ அல்லாஹ் அனுப்பாமல் இருப்பதில்லை” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (தம் தந்தை) அபூமூசா (ரலி) அவர்கள் கூறினார்கள் என அபூபுர்தா (ரஹ்) அவர்கள் (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தார்கள்.

அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள், “எவனைத் தவிர வேறு இறைவனில்லையோ அ(ந்த ஏக இறை)வன் மீது சத்தியமாக! இதை உம்முடைய தந்தை (அபூமூசா (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றதாக உம்மிடம் கூறினார்களா?” என்று மூன்று முறை கேட்டார்கள். அபூபுர்தா (ரஹ்) அவர்கள், அவ்வாறே சத்தியமிட்டுக் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளரான கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் அபூபுர்தா (ரஹ்) அவர்களைச் சத்தியமிட்டுக் கூறச் சொன்னதாக சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் என்னிடம் அறிவிக்கவில்லை. ஆனால், அவ்ன் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் அவ்வாறு அறிவித்தபோது, அதற்கு சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை.


«لَا يَمُوتُ رَجُلٌ مُسْلِمٌ إِلَّا أَدْخَلَ اللَّهُ مَكَانَهُ النَّارَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا»

قَالَ: فَاسْتَحْلَفَهُ عُمَرُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بِاللَّهِ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ ثَلَاثَ مَرَّاتٍ، أَنَّ أَبَاهُ حَدَّثَهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَحَلَفَ، فَلَمْ يُحَدِّثْنِي سَعِيدٌ أَنَّهُ اسْتَحْلَفَهُ، وَلَمْ يُنْكِرْ عَلَى عَوْنٍ قَوْلَهُ.


Ibn-Hibban-821

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

821. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்ரா-மிஃராஜ் ஜெரூசலத்திற்கும் பின்பு விண்ணுலகத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்ட) விண்ணுலகப் பயணத்தில் ரஹ்மானின் நண்பர்-இப்ராஹீம் (அலை) அவர்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள், “ஜிப்ரீல் (அலை) அவர்களே! உங்களுடன் இருப்பது யார்? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், “இவர் (தான்) முஹம்மது (ஸல்) அவர்கள்” என்று பதிலளித்தார்கள். உடனே இப்ராஹீம் (அலை) அவர்கள், “முஹம்மதே! உமது சமுதாயத்திற்கு சொர்க்கத்தில் அதிகமான மரங்களை நட கட்டளையிடுங்கள். ஏனெனில் சொர்க்கத்தின் மண் மிக வாசனைமிக்கது; சொர்க்க பூமி மிக விசாலமானது” என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “சொர்க்கத்தில் மரம் நடுதல் என்றால் என்ன? (அது எவ்வாறு?) என்று கேட்டார்கள். அதற்கு இப்ராஹீம் (அலை) அவர்கள், “லா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்” (பொருள்: அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது என்று கூறுவது) என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ أُسْرِيَ بِهِ مَرَّ عَلَى إِبْرَاهِيمَ خَلِيلِ الرَّحْمَنِ، فَقَالَ إِبْرَاهِيمُ لِجِبْرِيلَ: مَنْ مَعَكَ يَا جِبْرِيلُ؟، قَالَ جِبْرِيلُ: هَذَا مُحَمَّدٌ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ إِبْرَاهِيمُ: يَا مُحَمَّدُ مُرْ أُمَّتَكَ أَنْ يُكْثِرُوا غِرَاسَ الْجَنَّةِ، فَإِنَّ تُرْبَتَهَا طَيِّبَةٌ، وَأَرْضُهَا وَاسِعَةٌ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِإِبْرَاهِيمَ: «وَمَا غِرَاسُ الْجَنَّةِ؟ »، قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ.


Ibn-Hibban-5668

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5668.


«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ عَبْدٍ مُسْلِمٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَتْ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»


Ibn-Hibban-5667

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5667.


«تُعْرَضُ أَعْمَالُ النَّاسِ فِي كُلِّ جُمُعَةٍ مَرَّتَيْنِ: يَوْمَ الِاثْنَيْنِ وَيَوْمَ الْخَمِيسِ، فَيُغْفَرُ لِكُلِّ مُؤْمِنٍ إِلَّا عَبْدًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: اتْرُكُوا هَذَيْنِ حَتَّى يَفِيئَا»


Ibn-Hibban-5666

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5666.


«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيَغْفِرُ اللَّهُ لِكُلِّ عَبْدٍ مُسْلِمِ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا كَانَ بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»


Ibn-Hibban-5663

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5663.


«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ يَوْمَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ، فَيُغْفَرُ لِمَنْ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا إِلَّا الْمُتَهَاجِرَيْنِ، يَقُولُ: رُدُّوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»


Ibn-Hibban-5661

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

முஸ்லிம்கள் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக்கொள்வது கண்டனத்திற்குரியது. ஏனெனில் அதனால் அல்லாஹ்வின் மன்னிப்பு கிடைப்பது தூரமான விஷயம்.

5661. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. அந்த நாட்களில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காத ஒவ்வோர் அடியாருக்கும் மன்னிப்பு வழங்கப்படுகிறது; தமக்கும் தம் (முஸ்லிம்) சகோதரருக்கும் இடையே பகைமையுள்ள மனிதரைத் தவிர.

அப்போது, “இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்; இவ்விருவரும் தமக்கிடையே சமாதானம் செய்து கொள்ளும்வரை இவர்களை விட்டுவையுங்கள்” என்று கூறப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ يَوْمِ اثْنَيْنِ وَخَمِيسٍ، فَيَغْفِرُ اللَّهُ جَلَّ وَعَلَا لِكُلِّ عَبْدٍ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا، إِلَّا رَجُلًا بَيْنَهُ وَبَيْنَ أَخِيهِ شَحْنَاءُ، فَيُقَالُ: أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا، أَنْظِرُوا هَذَيْنِ حَتَّى يَصْطَلِحَا»


Ibn-Hibban-3644

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. மேலும் அவ்விரண்டிலும் அடியார்களின் செயல்கள் அல்லாஹ்விடம் சமர்ப்பிக்கப்படுகின்றன என்பது பற்றி…

3644. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் (மனிதர்களின் அனைத்துச்) செயல்களும் (அல்லாஹ்விடம்) சமர்ப்பிக்கப்படுகின்றன.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تُفْتَحُ أَبْوَابُ الْجَنَّةِ كُلَّ اثْنَيْنِ وَخَمِيسٍ، وَتُعْرَضُ الْأَعْمَالُ فِي كُلِّ اثْنَيْنِ وَخَمِيسٍ»


Ibn-Hibban-3643

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

முஸ்தஃபா (முஹம்மது நபி ஸல்) அவர்கள் திங்கள், வியாழக்கிழமைகளில் நோன்பு வைப்பார்கள் என்பது பற்றி…

3643. ரபீஆ பின் ஃகாஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் நோன்பு பற்றி கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சிலநேரம்) ரமலான் மாதத்துடன் சேர்த்து நோன்பு வைக்கும் அளவிற்கு ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு வைப்பார்கள். மேலும் திங்கள், வியாழன் ஆகிய நாட்களை தேர்ந்தெடுத்து நோன்பு வைப்பார்கள் என பதிலளித்தார்கள்.


أَنَّهُ سَأَلَ عَائِشَةَ عَنْ صِيَامِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: كَانَ «يَصُومُ شَعْبَانَ كُلَّهُ حَتَّى يَصِلَهُ بِرَمَضَانَ، وَكَانَ يَتَحَرَّى صِيَامَ الِاثْنَيْنِ وَالْخَمِيسِ»


Ibn-Hibban-5952

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பொதுவாக ஆரம்பக்காலத்தை விட இறுதிக்காலம் தீயதாகவே இருக்கும் என்று கூறுவோரை-ஹதீஸ்கலையை சரியாக அறியாதோரை-சந்தேகத்தில் ஆழ்த்திய செய்தி பற்றி…

5952. நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் சென்று (ஆளுநர்) ஹஜ்ஜாஜ் மூலம் நாங்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் குறித்து முறையிட்டோம். அதற்கு அவர்கள், ‘நீங்கள் பொறுமையோடு இருங்கள். ஏனெனில், நீங்கள் உங்களுடைய இறைவனைச் சந்திக்கும் வரை  உங்களிடம் வரும் நாளோ அல்லது காலமோ அதற்குப் பின்வரும் நாளை விட, காலத்தை விட மோசமானதாகவே இருக்கும்’ என்று கூறிவிட்டு, ‘இதை நான் உங்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்’ என்றார்கள்.

அறிவிப்பவர்: ஸுபைர் பின் அதீ (ரஹ்)


أَتَيْنَا أَنَسَ بْنَ مَالِكٍ، فَشَكَوْنَا إِلَيْهِ الْحَجَّاجَ، فَقَالَ: «اصْبِرُوا، فَإِنَّهُ لَا يَأْتِي عَلَيْكُمْ يَوْمٌ أَوْ زَمَانٌ إِلَّا وَالَّذِي بَعْدَهُ شَرٌّ مِنْهُ حَتَّى تَلْقَوْا رَبَّكُمْ سَمِعْتُهُ مِنْ نَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Next Page » « Previous Page