Category: இப்னு ஹிப்பான்

Ibn-Hibban

Ibn-Hibban-444

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

444. உறவு என்பது (இறையருளின்) ஒரு கிளையாகும். (அது மறுமை நாளில் வந்து) “ என் இறைவா நான் அநீதமிழைக்கப்பட்டேன், என் இறைவா நான் கெடுதல் செய்யப்பட்டேன், என் இறைவா நான் துண்டிக்கப்பட்டேன் ” என முறையிடும்.

அப்போது அல்லாஹ், “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று அதற்கு பதிலளிப்பான்…

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ الرَّحِمَ شِجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ» تَقُولُ: أَيْ رَبِّ، إِنِّي ظُلِمْتُ، إِنِّي أُسِيءَ إِلَيَّ، إِنِّي قُطِعْتُ، قَالَ: فَيُجِيبُهَا رَبُّهَا: «أَلَا تَرْضَيْنَ أَنْ أَقْطَعَ مَنْ قَطَعَكِ، وَأَصِلَ مَنْ وَصَلَكِ».


Ibn-Hibban-492

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

492. கத்தாதா (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ் (ரலி) அவர்களிடம் ‘முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்ததா?’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம் (இருந்தது)’ என்றார்கள்.

மேலும் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் முஸாஃபஹா (கரம் பற்றி வாழ்த்துத் தெரிவிக்கும் வழக்கம்) உள்ளவராக இருந்தார்.

 


قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَكَانَتِ الْمُصَافَحَةُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟، قَالَ: «نَعَمْ».

قَالَ قَتَادَةُ: وَكَانَ الْحَسَنُ يُصَافِحُ


Ibn-Hibban-881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

881. ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! “அவசரப்படுதல்” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை” என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ، أَوْ قَطِيعَةِ رَحِمٍ، مَا لَمْ يَسْتَعْجِلْ»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ يَسْتَعْجِلُ؟، قَالَ: «* [يَقُولُ: يَا رَبِّ قَدْ دَعَوتُ و] قَدْ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي، فَيَنْحَسِرُ عِنْدَ ذَلِكَ، فَيَتْرُكُ الدُّعَاءَ»


Ibn-Hibban-976

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

976. ஓர் அடியார் பாவமானதையோ அல்லது உறவைத் துண்டிப்பதையோ வேண்டிப் பிரார்த்திக்காத வரையிலும் அவசரப்படாதவரையிலும் அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! “அவசரப்படுதல்” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ஒருவர் நான் பிரார்த்தித்தேன். (மீண்டும்) பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை” என்று கூறி, சலிப்படைந்து பிரார்த்திப்பதைக் கைவிட்டுவிடுவதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا يَزَالُ يُسْتَجَابُ لِلْعَبْدِ* مَا لَمْ يَدْعُ بِإِثْمٍ، أَوْ قَطِيعَةِ رَحِمٍ، مَا لَمْ يَسْتَعْجِلْ» , قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، مَا الِاسْتِعْجَالُ؟، قَالَ: «يَقُولُ: يَا رَبِّ قَدْ دَعَوْتُ، وَقَدْ دَعَوْتُ، فَمَا أَرَاكَ تَسْتَجِيبُ لِي، فَيَدَعُ الدُّعَاءَ»


Ibn-Hibban-975

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

975. “நான் பிரார்த்தித்தேன்; ஆனால் என் பிரார்த்தனை ஏற்கப்படவில்லை என்று கூறி நீங்கள் அவசரப்படாத வரையில் உங்கள் பிரார்த்தனை ஏற்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعَجَلْ فَيَقُولُ: قَدْ دَعَوْتُ فَلَمْ يُسْتَجَبْ لِي».


Ibn-Hibban-890

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

890. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


«الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ»، ثُمَّ قَرَأَ هَذِهِ الْآيَةَ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ، إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ}. [غافر: 60]


Ibn-Hibban-3802

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3802. என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…

அறிவிப்பவர்: ஸாயிப் பின் கல்லாத் (ரலி)


«أَتَانِي جِبْرِيلُ، فَأَمَرَنِي أَنْ آمُرَ أَصْحَابِي أَنْ يَرْفَعُوا أَصْوَاتَهُمْ بِالْإِهْلَالِ»


Ibn-Hibban-2759

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2759. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமின் மைந்தன் ஸஜ்தா (செய்யுமாறு கட்டளையுள்ள) வசனத்தை ஓதி ஸஜ்தா செய்தால் ஷைத்தான் அழுதவாறே அந்தோ எனக்கு வந்த நாசமே! ஆதமின் மைந்தன் ஸஜ்தா செய்யும்படி கட்டளையிடப்பட்டான். அவன் ஸஜ்தா செய்து விட்டான். அவனுக்கு சொர்க்கம் கிடைக்கப் போகிறது. ஆனால் (ஆதி மனிதர் ஆதமுக்கு) ஸஜ்தா செய்யுமாறு எனக்கு கட்டளையிடப்பட்டது. நானோ மறுத்து விட்டேன். எனவே எனக்கு நரகம் தான் என்று கூறியபடி விலகிச் செல்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِذَا قَرَأَ ابْنُ آدَمَ السَّجْدَةَ فَسَجَدَ، اعْتَزَلَ الشَّيْطَانُ يَبْكِي وَيَقُولُ: يَا وَيْلَهُ أُمِرَ ابْنُ آدَمَ السُّجُودَ فَسَجَدَ فَلَهُ الْجَنَّةُ، وَأُمِرْتُ بِالسُّجُودِ فَأَبَيْتُ فَلِيَ النَّارُ»


Ibn-Hibban-914

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

914. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

பூமியில் சுற்றித் திரியும் வானவர்கள் அல்லாஹ்விற்கு இருக்கிறார்கள். அவர்கள் என் சமூகத்தினரிடமிருந்து சலாத்தை எனக்கு எத்தி வைக்கிறார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


«إِنَّ لِلَّهِ مَلَائِكَةً سَيَّاحِينَ فِي الْأَرْضِ يُبَلِّغُونِي عَنْ أُمَّتِي السَّلَامَ».


Ibn-Hibban-1103

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1103. சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

எனக்கு (அதிகமாக) மதீ வெளிப்பட்டதால் நான் சிரமத்தை அடைந்தேன். இதற்காக நான் அதிகம் குளித்தேன். இது பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இதற்காக நீ உளூச் செய்வதே போதுமானதாகும் என்று பதிலளித்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே எனது ஆடையில் மதீ பட்டுவிட்டால் என்ன செய்வது என்று கேட்டபோது, ஒரு கையளவு நீர் அள்ளி, இச்சை நீர் எங்கே பட்டுவிட்டதாக நீர் கருதுகிறாயோ அந்த இடத்தில் தண்ணீர் தெளிப்பது உனக்கு போதுமாகும் என்று பதிலளித்தார்கள்…


كُنْتُ أَلْقَى مِنَ الْمَذْيِ شِدَّةً، فَكُنْتُ أُكْثِرُ الِاغْتِسَالَ مِنْهُ، فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ: «إِنَّمَا يُجْزِئُكَ مِنْهُ الْوُضُوءُ»، فَقُلْتُ: فَكَيْفَ بِمَا يُصِيبُ ثَوْبِي مِنْهُ؟، قَالَ: «يَكْفِيكَ أَنْ تَأْخُذَ كَفًّا مِنْ مَاءٍ فَتَنْضَحَ بِهَا مِنْ ثَوْبِكَ حَيْثُ تَرَى أَنَّهُ أَصَابَهُ»


Next Page » « Previous Page