ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பாடம்:
தொழுகையில் பாதுகாவல் தேடுதல்.
807. (ஒரு சமயம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவதை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், அல்லாஹு அக்பர் கபீரா! அல்லாஹு அக்பர் கபீரா! (மூன்றுதடவை), அல்ஹம்துலில்லாஹி கஸீரா! அல்ஹம்துலில்லாஹி கஸீரா! (மூன்றுதடவை), ஸுப்ஹானல்லாஹி புக்ரதவ் வ அஸீலா! (மூன்றுதடவை), அல்லாஹும்ம இன்னீ அவூது பிக மினஷ்ஷைத்தானிர்ரஜீம் மின் ஹம்ஸிஹீ, வ நஃப்கிஹீ, வ நஃப்ஸிஹீ…என்று கூறினார்கள்.
(துஆவின் பொருள்: அல்லாஹ் மிகப்பெரியவன்! (மூன்றுதடவை), அதிகமதிகமான புகழ் அல்லாஹ்வுக்கே உரியது! (மூன்றுதடவை), காலையிலும் மாலையிலும் நான் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துகிறேன். (மூன்றுதடவை). விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும், அவனுடைய தீய தூண்டுதல், துப்புதல், ஊதுதல் போன்றவற்றை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகிறேன்.)
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ர் பின் முர்ரா அவர்கள் கூறினார்:
ஷைத்தானின் தீய தூண்டுதல் என்றால் பைத்தியம்; அவனுடைய ஊதுதல் என்றால் கவிதை; அவனுடைய துப்புதல் என்றால் பெருமை என்று பொருளாகும்.
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ، قَالَ: «اللَّهُ أَكْبَرُ كَبِيرًا، اللَّهُ أَكْبَرُ كَبِيرًا» ثَلَاثًا، «الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، الْحَمْدُ لِلَّهِ كَثِيرًا» ثَلَاثًا، «سُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا» ثَلَاثَ مَرَّاتِ، «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ، مِنْ هَمْزِهِ، وَنَفْخِهِ، وَنَفْثِهِ»
قَالَ عَمْرٌو: هَمْزُهُ: الْمُوتَةُ، وَنَفْثُهُ: الشِّعْرُ، وَنَفْخُهُ: الْكِبْرُ
சமீப விமர்சனங்கள்