Category: இப்னுமாஜா

Ibn-Majah-4122

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4122.


«يَدْخُلُ فُقَرَاءُ الْمُؤْمِنِينَ الْجَنَّةَ قَبْلَ الْأَغْنِيَاءِ بِنِصْفِ يَوْمٍ، خَمْسِمِائَةِ عَامٍ»


Ibn-Majah-1278

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1278. நபி (ஸல்) அவர்கள் இருபெருநாள் தொழுகைகளிலும், (முதல் ரக்அத்தில்) ஏழு தக்பீர்களும் (இரண்டாவது ரக்அத்தில்) ஐந்து தக்பீர்களும் கூறினார்கள்.

அறிவிப்பவா்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «كَبَّرَ فِي صَلَاةِ الْعِيدَيْنِ سَبْعًا وَخَمْسًا»


Ibn-Majah-1754

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நோன்புப் பெருநாளில், பெருநாள் தொழுகைக்கு செல்லும் முன் உண்பது.

1754. நபி (ஸல்) அவர்கள், நோன்புப் பெருநாளில் சில பேரித்தம் பழங்களை உண்ணாமல் (பெருநாள் தொழுகைக்கு) புறப்படமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «لَا يَخْرُجُ يَوْمَ الْفِطْرِ حَتَّى يَطْعَمَ تَمَرَاتٍ»


Ibn-Majah-4193

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4193. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அதிகமாக சிரிக்காதீர்கள் ஏனென்றால் அதிகமாக சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَا تُكْثِرُوا الضَّحِكَ، فَإِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيتُ الْقَلْبَ»


Ibn-Majah-1852

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1852.


«لَوْ أَمَرْتُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ، لَأَمَرْتُ الْمَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا، وَلَوْ أَنَّ رَجُلًا أَمَرَ امْرَأَتَهُ أَنْ تَنْقُلَ مِنْ جَبَلٍ أَحْمَرَ إِلَى جَبَلٍ أَسْوَدَ، وَمِنْ جَبَلٍ أَسْوَدَ إِلَى جَبَلٍ أَحْمَرَ، لَكَانَ نَوْلُهَا أَنْ تَفْعَلَ»


Ibn-Majah-1413

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

பாடம்:

பெரிய பள்ளிவாசலில் தொழுவதின் சிறப்பு.

1413. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தனது வீட்டில் ஒரு தொழுகை தொழுவது, ஒரு தொழுகைக்கு நிகராகும். தனது கூட்டத்தாரின் பள்ளிவாசலில் தொழுவது, 25 தொழுகைக்கு நிகராகும். மக்கள் ஒன்றுத்திரளும் (பெரிய) பள்ளிவாசலில் தொழுவது 500 தொழுகைக்கு நிகராகும்.

மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். எனது (மஸ்ஜிதுன் நபவீ) பள்ளிவாசலில் தொழுவது 50 ஆயிரம் தொழுகைக்கு நிகராகும். மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலில் ஒரு தொழுகை தொழுவது ஒரு இலட்சம் தொழுகைக்கு நிகராகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«صَلَاةُ الرَّجُلِ فِي بَيْتِهِ بِصَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِ الْقَبَائِلِ بِخَمْسٍ وَعِشْرِينَ صَلَاةً، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الَّذِي يُجَمَّعُ فِيهِ بِخَمْسِ مِائَةِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي الْمَسْجِدِ الْأَقْصَى بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاتُهُ فِي مَسْجِدِي بِخَمْسِينَ أَلْفِ صَلَاةٍ، وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ بِمِائَةِ أَلْفِ صَلَاةٍ»


Ibn-Majah-1407

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

பைத்துல் மக்திஸ் பள்ளிவாசலில் தொழுவது.

1407. நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணாகிய மைமூனா பின்த் ஸஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதரே! பைத்துல் மக்திஸ் பள்ளிவாசல் பற்றி எங்களுக்கு மார்க்கத்தீர்ப்பு கூறுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அது ஒன்றுத்திரட்டப்படும் இடம், உயிர்பிக்கப்படும் இடம். அங்கு சென்று நீங்கள் தொழுதுக்கொள்ளுங்கள். ஏனெனில் மற்ற பள்ளிகளில் தொழுவதை விட அங்கு ஒரு தொழுகை தொழுவது 1000 தொழுகைகளை தொழுததைப் போன்றதாகும் என்று கூறினார்கள்.

அதற்கு நான் அங்கு சென்று தொழமுடியாதவர் என்ன செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அந்தப்பள்ளிவாசலில் விளக்கெரிப்பதற்காக ஆலிவ் எண்ணெயை அனுப்புங்கள். அவ்வாறு அனுப்புபவர் அங்கு சென்றவர் போன்றவராவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உஸ்மான் பின் அபூ ஸவ்தா


قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفْتِنَا فِي بَيْتِ الْمَقْدِسِ قَالَ: «أَرْضُ الْمَحْشَرِ وَالْمَنْشَرِ ائْتُوهُ فَصَلُّوا فِيهِ، فَإِنَّ صَلَاةً فِيهِ كَأَلْفِ صَلَاةٍ فِي غَيْرِهِ» قُلْتُ: أَرَأَيْتَ إِنْ لَمْ أَسْتَطِعْ أَنْ أَتَحَمَّلَ إِلَيْهِ؟ قَالَ: «فَتُهْدِي لَهُ زَيْتًا يُسْرَجُ فِيهِ، فَمَنْ فَعَلَ ذَلِكَ فَهُوَ كَمَنْ أَتَاهُ»


Ibn-Majah-1425

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1425.


قَالَ لِي أَبُو هُرَيْرَةَ: إِذَا أَتَيْتَ أَهْلَ مِصْرِكَ فَأَخْبِرْهُمْ أَنِّي سَمِعْتُ رَسُول اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” إِنَّ أَوَّلَ مَا يُحَاسَبُ بِهِ الْعَبْدُ الْمُسْلِمُ يَوْمَ الْقِيَامَةِ، الصَّلَاةُ الْمَكْتُوبَةُ، فَإِنْ أَتَمَّهَا، وَإِلَّا قِيلَ: انْظُرُوا هَلْ لَهُ مِنْ تَطَوُّعٍ؟ فَإِنْ كَانَ لَهُ تَطَوُّعٌ أُكْمِلَتِ الْفَرِيضَةُ مِنْ تَطَوُّعِهِ، ثُمَّ يُفْعَلُ بِسَائِرِ الْأَعْمَالِ الْمَفْرُوضَةِ مِثْلُ ذَلِكَ


Ibn-Majah-3785

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3785.


قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا أُعَلِّمُكَ أَعْظَمَ سُورَةٍ فِي الْقُرْآنِ قَبْلَ أَنْ أَخْرُجَ مِنَ الْمَسْجِدِ؟» قَالَ: فَذَهَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِيَخْرُجَ، فَأَذْكَرْتُهُ، فَقَالَ: «الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ، وَهِيَ السَّبْعُ الْمَثَانِي، وَالْقُرْآنُ الْعَظِيمُ الَّذِي أُوتِيتُهُ»


Ibn-Majah-3894

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3894. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رُؤْيَا الْمُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»


Next Page » « Previous Page