Category: இப்னுமாஜா

Ibn-Majah-4022

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

4022. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(பிறருக்கு) நன்மை புரிவதைத் தவிர வேறெதுவும் ஆயுளை அதிகப்படுத்தாது. பிரார்த்தனையைத் தவிர வேறெதுவும் விதியை மாற்றாது. மனிதன் செய்கின்ற பாவத்தின் காரணத்தால் அவனுக்கு பரக்கத் கிடைக்காமல் போகின்றது.

அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)


«لَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ، وَلَا يَرُدُّ الْقَدَرَ إِلَّا الدُّعَاءُ، وَإِنَّ الرَّجُلَ لَيُحْرَمُ الرِّزْقَ بِالذَّنْبِ يُصِيبُهُ»


Ibn-Majah-2956

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

கஅபாவை சுற்றுவதின் சிறப்பு.

2956. “கஅபாவை சுற்றிவந்து, இரண்டு ரக்அத்கள் தொழுபவர் ஒரு அடிமையை உரிமை விட்டவர் போன்றவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

 


«مَنْ طَافَ بِالْبَيْتِ، وَصَلَّى رَكْعَتَيْنِ، كَانَ كَعِتْقِ رَقَبَةٍ»


Ibn-Majah-2044

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2044. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

மேலும் அவர்கள் நிர்பந்திக்கப்பட்டு செய்யும் செயல்களையும் அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا تُوَسْوِسُ بِهِ صُدُورُهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ، أَوْ تَتَكَلَّمْ بِهِ، وَمَا اسْتُكْرِهُوا عَلَيْهِ»


Ibn-Majah-2040

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவர் மனதில் தலாக் கூறினால்?

2040. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை அல்லது அதை (வெளிப்படுத்திப்) பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِنَّ اللَّهَ تَجَاوَزَ لِأُمَّتِي عَمَّا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ بِهِ، أَوْ تَكَلَّمْ بِهِ»


Ibn-Majah-3090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3090.


مَرَّ بِي رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا بِالْأَبْوَاءِ، أَوْ بِوَدَّانَ، فَأَهْدَيْتُ لَهُ حِمَارَ وَحْشٍ، فَرَدَّهُ عَلَيَّ، فَلَمَّا رَأَى فِي وَجْهِيَ الْكَرَاهِيَةَ قَالَ: «إِنَّهُ لَيْسَ بِنَا رَدٌّ عَلَيْكَ، وَلَكِنَّا حُرُمٌ»


Ibn-Majah-2839

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2839.


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنْ أَهْلِ الدَّارِ مِنَ الْمُشْرِكِينَ يُبَيَّتُونَ، فَيُصَابُ النِّسَاءُ وَالصِّبْيَانُ قَالَ: «هُمْ مِنْهُمْ»


Ibn-Majah-1390

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1390. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷஃபான் மாதத்தின் 15 ம் இரவில் அல்லாஹ், அடியார்களை நெருங்கி வருகிறான். இணை வைப்பவன், விரோதம் கொள்பவன் இவ்விருவரை தவிர மற்ற எல்லோரையும் மன்னிக்கிறான்.

​​அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி) 


«إِنَّ اللَّهَ لَيَطَّلِعُ فِي لَيْلَةِ النِّصْفِ مِنْ شَعْبَانَ فَيَغْفِرُ لِجَمِيعِ خَلْقِهِ إِلَّا لِمُشْرِكٍ أَوْ مُشَاحِنٍ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ قَالَ: حَدَّثَنَا أَبُو الْأَسْوَدِ النَّضْرُ بْنُ عَبْدِ الْجَبَّارِ قَالَ: حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنِ الزُّبَيْرِ بْنِ سُلَيْمٍ، عَنِ الضَّحَّاكِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ أَبَا مُوسَى عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ


Ibn-Majah-3728

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

நல்ல பெயர்கள்.

3728. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பெயர்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது, அப்துல்லாஹ் (அல்லாஹ்வின் அடிமை) மற்றும் அப்துர் ரஹ்மான் (அருளாளனின் அடிமை) ஆகியவையாகும்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَحَبُّ الْأَسْمَاءِ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ: عَبْدُ اللَّهِ، وَعَبْدُ الرَّحْمَنِ


Ibn-Majah-4179

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4179.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்கு (உங்களில்) ஒருவர் இன்னொருவரிடத்தில் வரம்பு கடக்காமல் இன்னும் பெருமையடிக்காமல் பணிவாக நடந்துகொள்ளுங்கள் என்று வஹீ அறிவித்துள்ளான்.

அறிவிப்பவர்: இயாள் பின் ஹிமார்(ரலி)


«إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ أَوْحَى إِلَيَّ، أَنْ تَوَاضَعُوا حَتَّى لَا يَفْخَرَ أَحَدٌ عَلَى أَحَدٍ»


Next Page » « Previous Page