Category: இப்னுமாஜா

Ibn-Majah-212

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

212. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

குர்ஆனைத் தாமும் கற்று பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்களில் சிறந்தவர்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)


«أَفْضَلُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ»


Ibn-Majah-3937

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3937.

(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)


«مَنِ انْتَهَبَ نُهْبَةً، فَلَيْسَ مِنَّا»


Ibn-Majah-199

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

199. நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

எந்த ஒரு மனித உள்ளமாயினும் அது அளவிலா அருளாளனான அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே தான் உள்ளது. அவன் நாடினால் அதை நல்வழியில் நிலைப்படுத்துகிறான். அவன் நாடினால் அதை தீயவழியில் பிறழச் செய்துவிடுகிறான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யா முஸப்பிதல் குலூப் ஸப்பித் குலூபனா அலா தீனிக் உள்ளங்களை நிலைப்படுத்துபவனே எங்கள் உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலைப்படுத்துவாயாக என்று பிரார்த்தித்து வந்தார்கள்.

தராசு அளவிலா அருளாளனாகிய அல்லாஹ்வின் கையிலே உள்ளது. மறுமை நாள் வரை அதன் மூலம் அவன் சிலரை உயர்த்திக் கொண்டும், சிலரை தாழ்த்திக் கொண்டும் இருக்கிறான் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ، إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ»

وَكانَ رَسُولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ يَقُولُ: ” يَا مُثبِّتَ الْقُلُوبِ، ثبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ. قَالَ: وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ، يَرْفَعُ أقْوَامًا وَيَخْفِضُ آخَرِينَ، إِلَى يَوْمِ الْقِيَامَةِ


Ibn-Majah-3834

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3834. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என்னுடைய உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக!” என அதிகம் பிரார்த்திப்பார்கள். எனவே ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களை நம்பிக்கை கொண்டு, நீங்கள் கொண்டுவந்ததையும் உண்மையாக ஏற்றுள்ளோம். இப்படியிருக்க எங்கள் மீது அச்சப்படுகிறீர்களா? எனக் கேட்க, அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், நிச்சயமாக உள்ளங்கள் ரஹ்மான்-அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் விரல்களில் இரு விரல்களுக்கிடையில் உள்ளன. அவன் நாடிய பிரகாரம் அதனைப் புரட்டுகின்றான்” என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ: «اللَّهُمَّ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ» ، فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللَّهِ، تَخَافُ عَلَيْنَا وَقَدْ آمَنَّا بِكَ، وَصَدَّقْنَاكَ بِمَا جِئْتَ بِهِ، فَقَالَ: «إِنَّ الْقُلُوبَ بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ يُقَلِّبُهَا» وَأَشَارَ الْأَعْمَشُ بِإِصْبَعَيْهِ


Ibn-Majah-2412

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2412.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆணவம், மோசடி, கடன் ஆகிய மூன்றும் நீங்கிய நிலையில் ஒருவரது உடலிலிருந்து உயிர் பிரிந்தால் அவர் சொர்க்கம் செல்வார்.

அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)


مَنْ فَارَقَ الرُّوحُ الْجَسَدَ وَهُوَ بَرِيءٌ مِنْ ثَلَاثٍ، دَخَلَ الْجَنَّةَ: مِنَ الْكَنْزِ، وَالْغُلُولِ، وَالدَّيْنِ


Ibn-Majah-347

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

347.


مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَبْرَيْنِ جَدِيدَيْنِ، فَقَالَ: «إِنَّهُمَا لَيُعَذَّبَانِ، وَمَا يُعَذَّبَانِ فِي كَبِيرٍ، أَمَّا أَحَدُهُمَا فَكَانَ لَا يَسْتَنْزِهُ مِنْ بَوْلِهِ، وَأَمَّا الْآخَرُ فَكَانَ يَمْشِي بِالنَّمِيمَةِ»


Ibn-Majah-2420

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2420.


أَنَّ رَجُلًا مَاتَ، فَقِيلَ لَهُ: مَا عَمِلْتَ؟ فَإِمَّا ذَكَرَ أَوْ ذُكِّرَ، قَالَ: إِنِّي كُنْتُ أَتَجَوَّزُ فِي السِّكَّةِ وَالنَّقْدِ، وَأُنْظِرُ الْمُعْسِرَ، فَغَفَرَ اللَّهُ لَهُ “، قَالَ أَبُو مَسْعُودٍ: أَنَا قَدْ سَمِعْتُ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Ibn-Majah-1344

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1344.


«مَنْ أَتَى فِرَاشَهُ، وَهُوَ يَنْوِي أَنْ يَقُومَ فَيُصَلِّيَ مِنَ اللَّيْلِ، فَغَلَبَتْهُ عَيْنُهُ حَتَّى يُصْبِحَ، كُتِبَ لَهُ مَا نَوَى، وَكَانَ نَوْمُهُ صَدَقَةً عَلَيْهِ مِنْ رَبِّهِ»


Ibn-Majah-3377

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

மது அருந்துபவரின் தொழுகை ஏற்கப்படாது.

3377. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் மதுவை அருந்துகிறாரோ அவருடைய நாற்பது நாட்கள் தொழுகை நிறைவேறாது. அவர் அதற்காக மன்னிப்பு கேட்டு திருந்துகிறார். திரும்ப அவர் மதுவை அருந்துகிறார். திரும்ப அல்லாஹ்வுடன் பாவ மன்னிப்பு கேட்கிறார். திரும்ப மூன்றாவது முறையாக மது அருந்துகிறார். திரும்ப பாவ மன்னிப்பு கேட்கிறார்.

மூன்று தடவைக்கு மேல் நான்காவது முறை மது அருந்தினால் அவருக்காக அல்லாஹ் அம்மனிதருக்கு மறுமையில் ரதஹத்தில் கபால் என்ற மதுவை கடமையாக்குகின்றான். உடனே, நபித்தோழர்கள் அல்லாஹ்வின் தூதரே! ரதஹத்தில் கபால் என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது நரகவாசிகள் சீழும், சலுமும் தான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«مَنْ شَرِبَ الْخَمْرَ وَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، وَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، فَشَرِبَ، فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ، تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، فَشَرِبَ، فَسَكِرَ، لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا، فَإِنْ مَاتَ دَخَلَ النَّارَ، فَإِنْ تَابَ تَابَ اللَّهُ عَلَيْهِ، وَإِنْ عَادَ، كَانَ حَقًّا عَلَى اللَّهِ، أَنْ يَسْقِيَهُ مِنْ رَدَغَةِ الْخَبَالِ، يَوْمَ الْقِيَامَةِ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا رَدَغَةُ الْخَبَالِ؟ قَالَ: «عُصَارَةُ أَهْلِ النَّارِ»


Next Page » « Previous Page