Category: இப்னுமாஜா

Ibn-Majah-276

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

276. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“தொழுகையின் திறவுகோல் சுத்தமாகும். (ஏனைய செயல்களை) ஹராமாக ஆக்குவது, முதல்தக்பீர் ஆகும். (ஏனைய காரியங்களை) ஹலாலாக ஆக்குவது, ஸலாம் கொடுப்பதாகும்”.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


«مِفْتَاحُ الصَّلَاةِ الطُّهُورُ، وَتَحْرِيمُهَا التَّكْبِيرُ، وَتَحْلِيلُهَا التَّسْلِيمُ»


Ibn-Majah-871

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

871. நபி (ஸல்) அவர்களிடம் வந்த தூதுக்குழுவில் அங்கம்வகித்தவரான அலீ பின் ஷைபான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் புறப்பட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தோம். நாங்கள் அவர்களிடம் உறுதிமொழி ஒப்பந்தம் செய்து, அவர்களுக்குப் பின்னால் தொழுதோம்.

அப்போது ருகூவிலும் ஸஜ்தாவிலும் தனது முதுகைச் சரியாக நிலைநிறுத்தாத ஒரு மனிதரை அவர்கள் கடைக்கண்ணால் பார்த்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்தபோது, அவர்கள், “முஸ்லிம்களே, ருகூவிலும் ஸஜ்தாவிலும் தனது முதுகை நேராக வைக்காதவருக்கு தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.


خَرَجْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ وَصَلَّيْنَا خَلْفَهُ، فَلَمَحَ بِمُؤْخِرِ عَيْنِهِ رَجُلًا، لَا يُقِيمُ صَلَاتَهُ، – يَعْنِي صُلْبَهُ – فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، فَلَمَّا قَضَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ، قَالَ: «يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ لَا صَلَاةَ لِمَنْ لَا يُقِيمُ صُلْبَهُ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ»


Ibn-Majah-1003

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஒருவர் தொழுகை வரிசைக்கு பின்னால் தனியான தொழுவது.

1003. அலீ பின் ஷைபான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் புறப்பட்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அவர்களிடம் உறுதிமொழி எடுத்தோம். அவர்களுக்குப் பின்னால் தொழுதோம்.

பின்னர் மற்றுமொரு தொழுகையை அவர்களுக்குப் பின்னால் தொழுதோம். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும், ஒரு மனிதர் வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுவதைக் கண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் தனது தொழுகையை முடித்துத் திரும்பியதும் அந்த மனிதரிடம் நின்று, “உமது தொழுகையை மீண்டும் தொழுவீராக! வரிசைக்கு பின்னால் தனித்துத் தொழுபவருக்குத் தொழுகை இல்லை” என்று கூறினார்கள்.


خَرَجْنَا حَتَّى قَدِمْنَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَايَعْنَاهُ، وَصَلَّيْنَا خَلْفَهُ، ثُمَّ صَلَّيْنَا وَرَاءَهُ صَلَاةً أُخْرَى، فَقَضَى الصَّلَاةَ، فَرَأَى رَجُلًا فَرْدًا يُصَلِّي خَلْفَ الصَّفِّ، قَالَ: فَوَقَفَ عَلَيْهِ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ انْصَرَفَ قَالَ: «اسْتَقْبِلْ صَلَاتَكَ، لَا صَلَاةَ لِلَّذِي خَلْفَ الصَّفِّ»


Ibn-Majah-1004

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1004. ஹிலால் பின் யஸாஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸியாத் பின் அபுல் ஜஃத் (ரஹ்) அவர்கள் என் கையைப் பிடித்து ரக்கா என்ற நகரத்தில் உள்ள ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்று நிற்கவைத்தார். அவரின் பெயர் வாபிஸா பின் மஅபத் ஆகும்.

அப்போது அவர், (தொழுகை) வரிசைக்குப் பின்னால் தனியாகத் தொழுது கொண்டிருந்த ஒருவரை நபி (ஸல்) அவர்கள் கண்டு அத்தொழுகையை (மறுபடியும்) மீட்டுமாறு அவருக்கு உத்தரவிட்டார்கள் என்று கூறினார்.


أَخَذَ بِيَدِي زِيَادُ بْنُ أَبِي الْجَعْدِ فَأَوْقَفَنِي عَلَى شَيْخٍ بِالرَّقَّةِ يُقَالُ لَهُ وَابِصَةُ بْنُ مَعْبَدٍ، فَقَالَ: «صَلَّى رَجُلٌ خَلْفَ الصَّفِّ وَحْدَهُ، فَأَمَرَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُعِيدَ»


Ibn-Majah-943

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

943. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தொழும் போது தனக்கு முன்னால் ஏதேனும் ஒன்றை (தடுப்பாக) வைத்துக்கொள்ளட்டும். அது இல்லாவிட்டால் ஒரு கைத்தடியை நாட்டிவைக்கட்டும். கைத்தடியும் இல்லாவிட்டால் ஒரு கோட்டை போட்டுக்கொள்ளட்டும். இதற்கு பின்பு அவருக்குமுன் எது நடந்துசென்றாலும் அது அவருக்கு எதுவும் தீங்கிழைக்காது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا صَلَّى أَحَدُكُمْ، فَلْيَجْعَلْ تِلْقَاءَ وَجْهِهِ شَيْئًا، فَإِنْ لَمْ يَجِدْ، فَلْيَنْصِبْ عَصًا، فَإِنْ لَمْ يَجِدْ، فَلْيَخُطَّ خَطًّا، ثُمَّ لَا يَضُرُّهُ مَا مَرَّ بَيْنَ يَدَيْهِ»


Ibn-Majah-1160

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1160. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை, அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)


«مَنْ صَلَّى قَبْلَ الظُّهْرِ أَرْبَعًا، وَبَعْدَهَا أَرْبَعًا، حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»


Ibn-Majah-955

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

955. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தொழும்போது, உங்களுக்கு முன்னால் யாரையும் நடக்க விடாதீர்கள்! மீறினால் அவருடன் சண்டையிடுங்கள்! (தடுங்கள்). ஏனெனில் அவருடன் ஷைத்தான் இருக்கிறான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

ஹஸன் பின் தாவூதின் அறிவிப்பில் அவருடன் உஸ்ஸா (என்ற கற்பனை ஷைத்தான்) உள்ளது என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.


«إِذَا كَانَ أَحَدُكُمْ يُصَلِّي، فَلَا يَدَعْ أَحَدًا، يَمُرُّ بَيْنَ يَدَيْهِ، فَإِنْ أَبَى، فَلْيُقَاتِلْهُ، فَإِنْ مَعَهُ الْقَرِينَ»

وَقَالَ الْمُنْكَدِرِيُّ، فَإِنَّ مَعَهُ الْعُزَّى


Ibn-Majah-1570

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1570. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடக்கத்தலங்களைச் சந்திக்க அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «رَخَّصَ فِي زِيَارَةِ الْقُبُورِ»


Ibn-Majah-3405

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3405.


«كُنْتُ نَهَيْتُكُمْ عَنِ الْأَوْعِيَةِ، فَانْتَبِذُوا فِيهِ، وَاجْتَنِبُوا كُلَّ مُسْكِرٍ»


Ibn-Majah-887

ஹதீஸின் தரம்: Pending

887. மகத்துவமிக்க உமது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 56 : 96 ஃபஸப்பிஹ் பிஸ்மி ரப்பிகல் அளீம்) என்ற வசனம் இறங்கிய போது இதை உங்கள் ருகூஃவில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்.

உயர்ந்த உனது இறைவனின் பெயரைத் துதிப்பீராக! (அல்குர்ஆன் 87 : 1 ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்அஃலா) என்ற வசனம் இறங்கியதும் இதை உங்களுடைய சுஜூதில் ஆக்கிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கூறினார்கள்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)


لَمَّا نَزَلَتْ {فَسَبِّحْ بِاسْمِ رَبِّكَ الْعَظِيمِ} [الواقعة: 74] ، قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اجْعَلُوهَا فِي رُكُوعِكُمْ» فَلَمَّا نَزَلَتْ: {سَبِّحِ اسْمَ رَبِّكَ الْأَعْلَى} [الأعلى: 1] ، قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «اجْعَلُوهَا فِي سُجُودِكُمْ»


Next Page » « Previous Page