Category: இப்னுமாஜா

Ibn-Majah-4267

ஹதீஸின் தரம்: More Info

4267. உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள். சொர்க்கம், நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை. ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது.

அதற்கு அவர்கள், “மண்ணறை மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும். இதில் இருந்து ஒருவன் ஈடேற்றம் பெற்றுவிட்டால் இதன் பிறகு உள்ளவை இதை விட எளிதானதாகும். இதிலிருந்து அவன் ஈடேற்றம் பெறாவிட்டால் இதற்குப் பின்னுள்ளவை இதைவிடக் கடினமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேலும், “நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமாக இருந்தது” என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். (எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் என்று (உஸ்மான் (ரலி) அவர்கள்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹானிஉ (ரஹ்)


كَانَ عُثْمَانُ بْنُ عَفَّانَ إِذَا وَقَفَ عَلَى قَبْرٍ يَبْكِي حَتَّى يَبُلَّ لِحْيَتَهُ، فَقِيلَ لَهُ: تَذْكُرُ الْجَنَّةَ وَالنَّارَ، وَلَا تَبْكِي، وَتَبْكِي مِنْ هَذَا؟ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ الْقَبْرَ أَوَّلُ مَنَازِلِ الْآخِرَةِ، فَإِنْ نَجَا مِنْهُ، فَمَا بَعْدَهُ أَيْسَرُ مِنْهُ، وَإِنْ لَمْ يَنْجُ مِنْهُ، فَمَا بَعْدَهُ أَشَدُّ مِنْهُ»

قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأَيْتُ مَنْظَرًا قَطُّ إِلَّا وَالْقَبْرُ أَفْظَعُ مِنْهُ»


Ibn-Majah-3991

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

பாடம்:

சமுதாயங்களின் பிரிவினைகள்.

3991. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யூதர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி மூன்று கூட்டமாக பிரிவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«تَفَرَّقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً»


Ibn-Majah-3993

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

3993. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனீ இஸ்ரவேலர்கள் எழுபத்தி ஒரு கூட்டமாக பிரிந்தனர். என்னுடைய சமுதாயம் எழுபத்தி இரண்டு கூட்டமாக பிரிவார்கள். அனைவரும் நரகில் இருப்பர். ஒரு கூட்டத்தை தவிர. அவர்களே ஜமாஅத் ஆவர்…

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


إِنَّ بَنِي إِسْرَائِيلَ افْتَرَقَتْ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، وَإِنَّ أُمَّتِي سَتَفْتَرِقُ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، كُلُّهَا فِي النَّارِ، إِلَّا وَاحِدَةً وَهِيَ: الْجَمَاعَةُ


Ibn-Majah-3500

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3500.


قُلْتُ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بِأَرْضِنَا أَعْنَابًا نَعْتَصِرُهَا، فَنَشْرَبُ مِنْهَا؟ قَالَ: «لَا» فَرَاجَعْتُهُ، قُلْتُ: إِنَّا نَسْتَشْفِي بِهِ لِلْمَرِيضِ، قَالَ: «إِنَّ ذَلِكَ لَيْسَ بِشِفَاءٍ، وَلَكِنَّهُ دَاءٌ»


Ibn-Majah-3459

ஹதீஸின் தரம்: More Info

3459. அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், கேடுவிளைவிக்கின்றதை வைத்து நோய்க்கு மருத்துவம் பார்ப்பதை தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

 

அறிவிப்பாளர்களில் ஒருவர் ஃகபீஸ்(கேடுவிளைவிப்பது) என்ற வார்த்தைக்கு விஷம் என்று விளக்கம் கூறியுள்ளார்


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الدَّوَاءِ الْخَبِيثِ،»

يَعْنِي السُّمَّ


Ibn-Majah-837

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

837.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘திருக்குர்ஆனின் தோற்றுவாயை (அல்ஹம்து சூராவை) ஓதாதவருக்குத் தொழுகை கூடாது.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ فِيهَا بِفَاتِحَةِ الْكِتَابِ»


Ibn-Majah-1059

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1059. நபி (ஸல்) அவர்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84) என்ற அத்தியாயத்தை ஓதி சஜ்தாச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «سَجَدَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ»


Ibn-Majah-1058

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1058. நாங்கள் “இதஸ்மாஉன் ஷக்கத்” (84), “இக்ரஃ பிஸ்மி ரப்பிக்க” (96) ஆகிய அத்தியாயங்களை ஓதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சஜ்தாச் செய்தோம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«سَجَدْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِذَا السَّمَاءُ انْشَقَّتْ وَاقْرَأْ بِاسْمِ رَبِّكَ»


Ibn-Majah-839

ஹதீஸின் தரம்: Pending

839.


«لَا صَلَاةَ لِمَنْ لَمْ يَقْرَأْ فِي كُلِّ رَكْعَةٍ بِالْحَمْدُ لِلَّهِ وَسُورَةٍ، فِي فَرِيضَةٍ أَوْ غَيْرِهَا»


Next Page » « Previous Page