Category: இப்னுமாஜா

Ibn-Majah-1851

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1851. …பெண்களிடம் நன்மைகளைப் போதியுங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக (இருக்கிறார்கள்). இ(ல்லறத்)தைத் தவிர வேறு எதையும் நீங்கள் உரிமையாகப் பெறவில்லை. அவர்கள் தெளிவான மானக் கேட்டைச் செய்தாலே தவிர! அவர்கள் அவ்வாறு செய்தால் படுக்கையிலிருந்து ஒதுக்குங்கள்; காயமின்றி அடியுங்கள்; அவர்கள் கட்டுப்பட்டு விட்டால் வேறு எந்த வழியிலும் அவர்களிடம் வரம்பு மீறாதீர்கள்.

நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்ய வேண்டிய கடமை உங்கள் மீது இருக்கின்றது. உங்கள் மனைவியர் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமையும் உண்டு. உங்கள் மனைவியர் உங்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமைகள், நீங்கள் வெறுக்கும் வகையில் அடுத்தவர்களுடன் உங்கள் படுக்கைகளைப் பகிர்ந்து விடக் கூடாது; உங்களுக்குப் பிடிக்காதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்கக்கூடாது.

அறிந்து கொள்ளுங்கள்! அவர்களுக்குக் கொடுக்க வேண்டிய உடைகளிலும், உணவிலும் தாராளமான முறையில் நடந்து கொள்வதே நீங்கள் உங்கள் மனைவியருக்குச் செய்யும் கடமையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜதுல் வதாவில் கூறியதை நான் செவியேற்றுள்ளேன்…

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலி)


أَنَّهُ شَهِدَ حَجَّةَ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَحَمِدَ اللَّهَ، وَأَثْنَى عَلَيْهِ، وَذَكَّرَ وَوَعَظَ، ثُمَّ قَالَ: «اسْتَوْصُوا بِالنِّسَاءِ خَيْرًا، فَإِنَّهُنَّ عِنْدَكُمْ عَوَانٍ، لَيْسَ تَمْلِكُونَ مِنْهُنَّ شَيْئًا غَيْرَ ذَلِكَ، إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ، فَإِنْ فَعَلْنَ فَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ، وَاضْرِبُوهُنَّ ضَرْبًا غَيْرَ مُبَرِّحٍ، فَإِنْ أَطَعْنَكُمْ فَلَا تَبْغُوا عَلَيْهِنَّ سَبِيلًا، إِنَّ لَكُمْ مِنْ نِسَائِكُمْ حَقًّا، وَلِنِسَائِكُمْ عَلَيْكُمْ حَقًّا، فَأَمَّا حَقُّكُمْ عَلَى نِسَائِكُمْ، فَلَا يُوَطِّئْنَّ فُرُشَكُمْ مَنْ تَكْرَهُونَ، وَلَا يَأْذَنَّ فِي بُيُوتِكُمْ لِمَنْ تَكْرَهُونَ، أَلَا وَحَقُّهُنَّ عَلَيْكُمْ أَنْ تُحْسِنُوا إِلَيْهِنَّ فِي كِسْوَتِهِنَّ وَطَعَامِهِنَّ»


Ibn-Majah-2989

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உம்ரா செய்தல்.

2989. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஹஜ் செய்வது ஜிஹாத் செய்வது போன்றதாகும். உம்ரா செய்வது உபரியான வணக்கமாகும்.

அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் (ரலி)


«الْحَجُّ جِهَادٌ، وَالْعُمْرَةُ تَطَوُّعٌ»


Ibn-Majah-1151

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1151. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டால் அந்தக் கடமையான தொழுகையைத் தவிர வேறு தொழுகையில்லை.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

-மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.


«إِذَا أُقِيمَتِ الصَّلَاةُ، فَلَا صَلَاةَ إِلَّا الْمَكْتُوبَةُ»

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Ibn-Majah-1069

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

பயணத்தில் இருத் தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்.

1069. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் ஒரே நேரத்தில் தொழுதார்கள்; அப்போது அவர்களுக்கு எந்த அவசர வேலையும் இருக்கவில்லை. (போர் அபாயம் மிகுந்த) எதிரிகளின் அச்சம் போன்ற பயமும் இருக்கவில்லை.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّهُ أَخْبَرَهُمْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَانَ «يَجْمَعُ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ فِي السَّفَرِ، مِنْ غَيْرِ أَنْ يُعْجِلَهُ شَيْءٌ، وَلَا يَطْلُبَهُ عَدُوُّ، وَلَا يَخَافَ شَيْئًا»


Ibn-Majah-974

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

974.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُصَلِّي الْمَغْرِبَ، فَجِئْتُ فَقُمْتُ عَنْ يَسَارِهِ، فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ»


Ibn-Majah-400

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

400. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை. நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறாதவருக்கு தொழுகை இல்லை. அன்ஸாரீ நபித்தோழர்களை நேசிக்காதவருக்கு ஸலவாத் இல்லை.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ، وَلَا صَلَاةَ لِمَنْ لَا يُصَلِّي عَلَى النَّبِيِّ، وَلَا صَلَاةَ لِمَنْ لَا يُحِبُّ الْأَنْصَارَ»


Ibn-Majah-398

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

398. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. அல்லாஹ்வின் பெயர் கூறி உளூச் செய்யாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Ibn-Majah-399

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

399. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உளூ இல்லாதவருக்கு தொழுகை இல்லை. உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறாதவருக்கு உளூ இல்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا صَلَاةَ لِمَنْ لَا وُضُوءَ لَهُ، وَلَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Ibn-Majah-397

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

உளூவின் போது பிஸ்மில்லாஹ் கூறுதல்.

397. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் உளூச் செய்யும் போது பிஸ்மில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் என்று) கூறவில்லையோ அவருக்கு உளூ நிறைவேறாது.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


«لَا وُضُوءَ لِمَنْ لَمْ يَذْكُرِ اسْمَ اللَّهِ عَلَيْهِ»


Ibn-Majah-3992

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3992. “யூதர்கள் 71 கூட்டமாக பிரிந்தனர். அவர்களில் 1 கூட்டம் சொர்க்கம் செல்வர். 70 கூட்டத்தினர் நரகம் செல்வர்.

கிருத்தவர்கள் 72 கூட்டமாக பிரிந்தனர். அவர்களில் 71 கூட்டத்தினர் நரகம் செல்வர். 1 கூட்டம் சொர்க்கம் செல்வர்.

இந்த முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! எனது சமுதாயத்தினர் 73 கூட்டத்தினராக பிரிவர். அவர்களில் ஒரு கூட்டம் சொர்க்கம் செல்வர். (மற்ற) 72 கூட்டத்தினர் நரகம் செல்வர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! சொர்க்கம் செல்லும் (அந்தக்) கூட்டம் யார்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “ஜமாஅத் (ஜமாஅஹ்)” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி)


«افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً، فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَسَبْعُونَ فِي النَّارِ، وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً، فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ، وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ،

وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ فِرْقَةً، وَاحِدَةٌ فِي الْجَنَّةِ، وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ» ، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ؟ قَالَ: «الْجَمَاعَةُ»


Next Page » « Previous Page