10805.
«مَنْ مَرِضَ أَوْ سَافَرَ كَتَبَ اللَّهُ لَهُ مَا كَانَ يَعْمَلُ صَحِيحًا مُقِيمًا»
Musannaf-Ibn-Abi-Shaybah
10805.
«مَنْ مَرِضَ أَوْ سَافَرَ كَتَبَ اللَّهُ لَهُ مَا كَانَ يَعْمَلُ صَحِيحًا مُقِيمًا»
30055.
يُقَالُ لِصَاحِبِ الْقُرْآنِ يَوْمَ الْقِيَامَةِ: اقْرَأْ وَارْقَهُ، فَإِنَّ مَنْزِلَكَ عِنْدَ آخِرِ آيَةٍ تَقْرَؤُهَا
5983. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
லுஹர் தொழுகைக்கு முன்பும், பின்பும் நான்கு ரக்அத்களை (வழமையாக) தொழுது வருபவரை அல்லாஹ் நரகத்திற்கு தடைசெய்து விடுகிறான்.
அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)
«مَنْ صَلَّى أَرْبَعًا قَبْلَ الظُّهْرِ، وَأَرْبَعًا بَعْدَهَا، حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ»
30103. ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
இப்னு மஸ்ஊத் (ரலி), அலீ (ரலி) ஆகியோரின் மாணவர்களை நான் சந்தித்துள்ளேன். அவர்களில் யாருக்கும் (குர்ஆன் விரிவுரை பற்றி) கல்வி ஞானம் இல்லை. எனவே அவர்களிடமிருந்து குர்ஆனின் விரிவுரையை (கேட்பதை) நான் வெறுக்கிறேன்.
அல்லாஹ்வின் வேதத்தில் (உள்ள ஒன்றுக்கு), நான் அறியாத ஒன்றை (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் (என்பது தான் இதற்கான காரணம்).
أَدْرَكْتُ أَصْحَابَ عَبْدِ اللَّهِ، وَأَصْحَابَ عَلِيٍّ وَلَيْسَ هُمْ لِشَيْءٍ مِنَ الْعِلْمِ أَكْرَهُ مِنْهُمْ لِتَفْسِيرِ الْقُرْآنِ، قَالَ: وَكَانَ أَبُو بَكْرٍ يَقُولُ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»
30107. இப்ராஹீம் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம். (அல்குர்ஆன் 80:31) எனும் வசனத்தின் விளக்கம் பற்றி அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹ்வின் வேதத்தில் தெரியாத ஒன்றை நான் (விளக்கமாக) கூறினால் எந்த வானம் எனக்கு நிழல் தரும்? எந்த பூமி என்னை சுமந்து கொள்ளும்? என்று பதிலளித்தார்கள்.
أَنَّ أَبَا بَكْرٍ سُئِلَ عَنْ {فَاكِهَةً وَأَبًّا} [عبس: 31]، فَقَالَ: «أَيُّ سَمَاءٍ تُظِلُّنِي، وَأَيُّ أَرْضٍ تُقِلُّنِي إِذَا قُلْتُ فِي كِتَابِ اللَّهِ مَا لَا أَعْلَمُ»
26468. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(கத்னா எனும்) விருத்தசேதனம் செய்வது ஆண்களுக்கு சுன்னதாகும். பெண்களுக்கு அது சிறந்ததாகும்.
அறிவிப்பவர்: ஷத்தாத் பின் அவ்ஸ் (ரலி)
«الْخِتَانُ سُنَّةٌ لِلرِّجَالِ مَكْرُمَةٌ لِلنِّسَاءِ»
6373. மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ அப்துல்அஷ்ஹல் குலத்தாரின் பள்ளிவாசலுக்கு வந்தார்கள். அப்போது அவர்களுக்கு ‘மஃக்ரிப்’ தொழுகை தொழவைத்தார்கள். அவர்கள், ஸலாம் கூறி தொழுகையை நிறைவு செய்தபோது, “(மஃக்ரிப் தொழுகையின்) இந்த இரண்டு ரக்அத் (பின் சுன்னத்) தொழுகையை உங்கள் வீடுகளில் தொழுங்கள்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆஸிம் பின் உமர் (ரஹ்)
ஆஸிம் பின் உமர் (ரஹ்) கூறுகிறார்:
மஹ்மூத் பின் லபீத் (ரலி) அவர்கள், தனது மக்களுக்கு மஃக்ரிப் தொழுகை நடத்தியப் பின் எழுந்துச் சென்று பள்ளிவாசலின் வராண்டா பகுதியில் உட்காருவார்கள். பிறகு, இஷாத் தொழுகை நேரம் வருவதற்கு முன் எழுந்துச் சென்று தனது வீட்டில் மஃக்ரிப் தொழுகையின் பின் சுன்னத் தொழுகையை தொழுவார்கள். இதை (நான் நேரடியாக) பார்த்துள்ளேன்.
أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَسْجِدَ بَنِي الْأَشْهَلِ فَصَلَّى بِهِمِ الْمَغْرِبَ، فَلَمَّا سَلَّمَ قَالَ: «ارْكَعُوا هَاتَيْنِ الرَّكْعَتَيْنِ فِي بُيُوتِكُمْ»
قَالَ: فَلَقَدْ «رَأَيْتُ مَحْمُودَ بْنَ لَبِيدٍ وَكَانَ إِمَامَ قَوْمِهِ يُصَلِّي بِهِمِ الْمَغْرِبَ، ثُمَّ يَخْرُجُ فَيَجْلِسُ بِفِنَاءِ الْمَسْجِدِ حَتَّى يَقُومَ قَبْلَ الْعَتَمَةِ، فَيَدْخُلَ بَيْتَهُ فَيُصَلِّيهِمَا»
29100. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை (யமன் எனும் நாட்டுக்கு) அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். (அந்தப் பிரச்சனைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தில் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ، قَالَ: «كَيْفَ تَقْضِي؟»، قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ كِتَابٌ؟» قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ تَكُنْ سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟»، قَالَ: أَجْتَهِدُ بِرَأْيِي، قَالَ: فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ»
22989. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை (யமன் எனும் நாட்டுக்கு) அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.
அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத; நபிய்யும், நல்லோர்களும் தீர்வு கூறாத பிரச்சனை ஏற்பட்டால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்து உண்மையைக் கண்டறிவேன்” என்று பதிலளித்தார்.
(உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதர் விரும்பியவாறு தீர்ப்பளிப்பதற்கு, அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஹம்மது பின் உபைதுல்லாஹ் (அபூஅவ்ன்-ரஹ்)
لَمَّا بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ: «يَا مُعَاذُ بِمَ تَقْضِي؟» قَالَ: أَقْضِي بِكِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ جَاءَكَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ، وَلَمْ يَقْضِ فِيهِ نَبِيُّهُ، وَلَمْ يَقْضِ فِيهِ الصَّالِحُونَ؟» قَالَ: أَؤُمُّ الْحَقَّ جَهْدِي، قَالَ: فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي جَعَلَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْضِي بِمَا يَرْضَى بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
பாடம்:
நீதிபதி முதலில் தீர்வை எதிலிருந்து (தேடி) பெற வேண்டும்?
22988. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை (யமன் எனும் நாட்டுக்கு) அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத பிரச்சனை ஏற்பட்டால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَهُ، قَالَ: «كَيْفَ تَقْضِي؟» قَالَ: أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ جَاءَكَ أَمْرٌ لَيْسَ فِي كِتَابِ اللَّهِ»، قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ تَكُنْ سُنَّةٌ مِنْ رَسُولِ اللَّهِ؟» قَالَ: أَجْتَهِدُ رَأْيِي، قَالَ: «الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
சமீப விமர்சனங்கள்