Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-3945

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3945. தொழுகையில் (இடது) முன் கை மீது (வலது) முன் கையை வைத்து இரண்டையும் தொப்புளுக்குக் கீழே வைப்பது நபிவழியாகும் என அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஜுஹைஃபா (ரலி)


«مِنْ سُنَّةِ الصَّلَاةِ وَضْعُ الْأَيْدِي عَلَى الْأَيْدِي تَحْتَ السُّرَرِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12383

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12383. அதா கூறியதாவது:

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.


قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: الرَّجُلُ يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ، قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12375

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

12375. தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


فِي الرَّجُلِ يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12373

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

12373.  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


«يُتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ نِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12372

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12372. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் தான் உடலுறவு கொண்டுவிட்டேன் என்று கூறிய மனிதருக்கு, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரை தீனார் தர்மம் செய் என்று கூறினார்கள்.


«يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-12371

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

12371. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து , என் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டுவிட்டேன் அதற்கு பரிகாரம் என்ன என்று கேட்டார்.

அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரை தீனார் தர்மம் செய் என்று கூறினார்கள்.


أَتَاهُ رَجُلٌ فَقَالَ: إِنِّي وَقَعْتُ عَلَى امْرَأَتِي وَهِيَ حَائِضٌ قَالَ: «تَصَدَّقْ بِنِصْفِ دِينَارٍ»


Musannaf-Ibn-Abi-Shaybah-22963

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

22963. அலி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.

பின்பு நரகில் செல்லும் இருவரை கூறினார்கள்.

  1. (நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல்) தீர்ப்பில் அநீதி செய்த மனிதர். இவர் நரகத்தில் புகுவார்.
  2. உண்மையை நாடியவர் தான் என்றாலும், நீதியில் தவறிழைத்தவர். இவரும் நரகத்தில் புகுவார்.
  3. உண்மையை நாடி சரியாக தீர்ப்பளித்தவர். இவர் சுவர்க்கத்தில் புகுவார்.

அறிவிப்பவர் : அபுல்ஆலியா (ரஹ்)

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான கதாதா (ரஹ்) அவர்கள், அலி (ரலி) அவர்களிடமிருந்து இச்செய்தியை அறிவிக்கும் அபுல்ஆலியாவிடம் , உண்மையை நாடி, நீதியில் தவறிழைத்தவர் என்ன பாவம் செய்தார்?என்று கேட்டார். அதற்கு அபுல்ஆலியா, அவர் தீர்ப்பின் சட்டங்களை அறியாமல் தீர்ப்பளிக்கும் நீதிபதி பொறுப்பிற்கு வந்திருக்கக்கூடாது என்று கூறினார்கள்.


الْقُضَاةُ ثَلَاثَةٌ: اثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ “، فَذَكَرَ اللَّذَيْنِ فِي النَّارِ، قَالَ: «رَجُلٌ جَارَ مُتَعَمِّدًا فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ فَهُوَ فِي النَّارِ، آخَرُ أَرَادَ الْحَقَّ فَأَصَابَ فَهُوَ فِي الْجَنَّةِ» قَالَ: فَقُلْتُ لِرُفَيْعٍ: أَرَأَيْتَ هَذَا الَّذِي أَرَادَ الْحَقَّ فَأَخْطَأَ؟ قَالَ: «كَانَ حَقُّهُ إِذَا لَمْ يَعْلَمِ الْقَضَاءَ لَا يَكُونُ قَاضِيًا»


Musnad-Ahmad-15879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

15879. “என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ


قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ إِنَّكَ قَدْ «صَلَّيْتَ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ» ، وَأَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ، وَعَلِيٍّ هَاهُنَا بِالْكُوفَةِ، قَرِيبًا مِنْ خَمْسِ سِنِينَ، أَكَانُوا يَقْنُتُونَ؟ قَالَ: أَيْ بُنَيَّ، مُحْدَثٌ


Musannaf-Ibn-Abi-Shaybah-6961

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6961. “என் தந்தையே! நீங்கள் நபி (ஸல்) அவர்களையும், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரையும் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அலீ (ரலி) யை கூஃபாவில் ஏறத்தாழ ஐந்தாண்டுகள் பின்பற்றித் தொழுதுள்ளீர்கள். அவர்களெல்லாம் ஃபஜ்ரில் குனூத் ஓதுவார்களா?” என்று என் தந்தையிடம் கேட்டேன். அதற்கவர் “அருமை மகனே! அது பின்னர் உருவாக்கப்பட்ட பித்அத்தாகும்” என விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ மாலிக் அஷ்ஜயீ


قُلْتُ لِأَبِي: يَا أَبَتِ، صَلَّيْتَ خَلْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَخَلْفَ أَبِي بَكْرٍ، وَعُمَرَ، وَعُثْمَانَ فَهَلْ رَأَيْتَ أَحَدًا مِنْهُمْ يَقْنُتُ؟ فَقَالَ: «يَا بُنَيَّ هِيَ مُحْدَثَةٌ»


Next Page » « Previous Page