Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா
Musannaf-Ibn-Abi-Shaybah
Musannaf-Ibn-Abi-Shaybah-6845
6845. நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
«أَوْتِرْ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلَاثٍ، وَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»
Musannaf-Ibn-Abi-Shaybah-2829
2829. அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் தனது சகோதரர் உத்பா (ரலி) அவர்களை நலம் விசாரிக்க சென்றார்கள். அப்போது அவர் ஒரு பலகையின் மீது தொழுதுக் கொண்டிருந்தார். அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அதைத் தூக்கி எறிந்து விட்டு, இது சைத்தானின் வேலை. உன்னால் முடிந்தால் முகத்தை தரையில் வைத்து தொழு! அது முடியாவிட்டால் சைகை செய்து தொழுதுக் கொள்! என்று கூறினார்கள்.
دَخَلَ عَبْدُ اللَّهِ، عَلَى أَخِيهِ عُتْبَةَ يَعُودُهُ، فَوَجَدَهُ عَلَى عُودٍ يُصَلِّي، فَطَرَحَهُ، وَقَالَ: «إِنَّ هَذَا شَيْءٌ عَرَّضَ بِهِ الشَّيْطَانُ، ضَعْ وَجْهَكَ عَلَى الْأَرْضِ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِئْ إِيمَاءً»
Musannaf-Ibn-Abi-Shaybah-29721
29721. (மனிதர்களைப்) பாதுகாக்கும் வானவர்களைத் தவிர வேறுசில சிறப்புமிக்க வானவர்களும் அல்லாஹ்விற்காக உள்ளனர். அவர்கள் மரத்தின் இலைகள் கீழே விழுந்தாலும் அதைப் பதிவுச் செய்கின்றனர்.
எனவே பயணத்தில் உங்களில் ஒருவருக்கு திடுக்கம் ஏற்பட்டால், “அல்லாஹ்வின் அடியார்களே! உதவி செய்யுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்” என்று அழைக்கட்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஜாஹித் (ரஹ்)
إِنَّ لِلَّهِ مَلَائِكَةً فَضْلًا سِوَى الْحَفَظَةِ يَكْتُبُونَ مَا سَقَطَ مِنْ وَرَقِ الشَّجَرِ، فَإِذَا أَصَابَتْ أَحَدَكُمْ عَرْجَةٌ فِي سَفَرٍ فَلِيُنَادِ: أَعِينُوا عِبَادَ اللَّهِ رَحِمَكُمُ اللَّهُ
Musannaf-Ibn-Abi-Shaybah-29819
29819. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாரும் இல்லாத பூமியில் வெட்ட வெளியில் உங்களில் ஒருவருடைய வாகனம் அல்லது ஒட்டகம் தப்பி ஓடிவிட்டால் அவர், “அல்லாஹ்வின் அடியார்களே! எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறட்டும். அவருக்கு உதவி செய்யப்படும்.
அறிவிப்பவர்: அபான் பின் ஸாலிஹ் (ரஹ்)
إِذَا نَفَرَتْ دَابَّةُ أَحَدِكُمْ أَوْ بَعِيرُهُ بِفَلَاةٍ مِنَ الْأَرْضِ لَا يَرَى بِهَا أَحَدًا، فَلْيَقُلْ: أَعِينُونِي عِبَادَ اللَّهِ، فَإِنَّهُ سَيُعَانُ
Musannaf-Ibn-Abi-Shaybah-6660
6660. (நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் பள்ளிக்குள் நுழைந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், “யாராவது எழுந்து சென்று இவருடன் சேர்ந்து தொழுகின்றீர்களா ?” என்று கூறினார்கள்.
அப்போது, அபூபக்ர் (ரலி) அவர்கள் (தான், ஏற்கனவே நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி தொழுகையை நிறைவுசெய்திருந்தும்) எழுந்து அவருடன் தொழுதார்கள்.
அறிவிப்பவர் : ஹஸன் பஸரீ (ரஹ்)
أَنَّ رَجُلًا دَخَلَ الْمَسْجِدَ وَقَدْ صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «أَلَا رَجُلٌ يَقُومُ إِلَى هَذَا فَيُصَلِّي مَعَهُ»، فَقَامَ أَبُو بَكْرٍ فَصَلَّى مَعَهُ، وَقَدْ كَانَ صَلَّى تِلْكَ الصَّلَاةَ
Musannaf-Ibn-Abi-Shaybah-29264
29264. அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
“இரண்டு நற்செயல்களை வழமையாக கடைப்பிடித்து வரும் மனிதர் கண்டிப்பாக சுவர்க்கத்தில் நுழைவார். அவ்விரண்டு நற்செயல்களும் (கடைப்பிடித்துவர ) எளிமையானவை தான். ஆனால் அதன்படி செயல்படுபவர்கள் குறைவானவர்களே! என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! அவ்விரண்டு நற்செயல்களும் எவைகள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(முதல் நற்செயல்) ஒரு மனிதர் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்பும் ஸுப்ஹானல்லாஹ் 10-பத்து தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 10-பத்து தடவையும், அல்லாஹு அக்பர் 10-பத்து தடவையும் கூறுவதாகும்.
இவைகள் (ஐந்து நேர தொழுகையின் மொத்த எண்ணிக்கை, நாவில் மொழிவதின்படி 150-நூற்றி ஐம்பது ஆகும். (நன்மை, தீமை நிறுக்கப்படும்) தராசில் (ஒரு நன்மைக்கு பத்து என்ற கணக்கின்படி ) 1500-ஆயிரத்தி ஐநூறு நன்மைகளாகும்.
(இதை அறிவித்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரவில் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ் 33-தடவையும், அல்ஹம்துலில்லாஹ் 33-தடவையும், அல்லாஹு அக்பர் 34-தடவையும் கைவிரல்களால் எண்ணி செய்வதை பார்த்தேன் என்று கூறினார்கள்)
(இரண்டாவது நற்செயல்) ஒரு மனிதர் படுக்கையில் ஸுப்ஹானல்லாஹ்,
«خُلُقَانِ لَا يُحَافِظُ عَلَيْهِمَا رَجُلٌ إِلَّا دَخَلَ الْجَنَّةَ، هُمَا يَسِيرٌ، وَمَنْ يَفْعَلُهُمَا قَلِيلٌ»، قِيلَ: مَا هُمَا يَا رَسُولَ اللَّهِ؟، قَالَ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، يُسَبِّحُ الرَّجُلُ فِي دُبُرِ كُلِّ صَلَاتِهِ عَشْرًا، وَيَحْمَدُ عَشْرًا، وَيُكَبِّرُ عَشْرًا، فَذَلِكَ خَمْسُونَ وَمِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ وَخَمْسُمِائَةٍ فِي الْمِيزَانِ»، قَالَ: وَلَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُدُّهُنَّ فِي يَدِهِ وَيُسَبِّحُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيَحْمَدُ ثَلَاثًا وَثَلَاثِينَ، وَيُكَبِّرُ أَرْبَعًا وَثَلَاثِينَ عِنْدَ مَضْجَعِهِ مِنَ اللَّيْلِ، وَإِذَا أَوَى إِلَى فِرَاشِهِ سَبَّحَ وَحَمِدَ وَكَبَّرَ مِائَةً، فَتِلْكَ مِائَةٌ عَلَى اللِّسَانِ، وَأَلْفٌ فِي الْمِيزَانِ، فَأَيُّكُمْ يُذْنِبُ فِي اللَّيْلَةِ أَلْفَيْنِ وَخَمْسَمِائَةٍ
Musannaf-Ibn-Abi-Shaybah-3942
3942. ஹஜ்ஜாஜ் பின் ஹஸ்ஸான் கூறியதாவது:
நான் அபூமிஜ்லஸ் (ரஹ்) அவர்களிடம் தொழுகையில் கையை எவ்வாறு வைக்கவேண்டும் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், வலது கையை இடது கையின் மேல் வைத்து தொப்புளுக்கு கீழே வைக்கவேண்டும் என்று கூறினார்கள்.
قُلْتُ: كَيْفَ يَصْنَعُ؟ قَالَ: «يَضَعُ بَاطِنَ كَفِّ يَمِينِهِ عَلَى ظَاهِرِ كَفِّ شِمَالِهِ وَيَجْعَلُهَا أَسْفَلَ مِنَ السُّرَّةِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-3939
3939. இப்ராஹீம் நகயீ அவர்கள் தொழுகையில் தனது வலது கரத்தை இடது கரத்தின் மீது வைத்து தொப்புளுக்குக் கீழே கட்டினார்.
அறிவிப்பவர் : அபூ மஃஷர்
«يَضَعُ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ تَحْتَ السُّرَّةِ»
Musannaf-Ibn-Abi-Shaybah-3938
3938. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (தொழுகையில்) தமது வலது கையை இடது கையின் மேல் வைத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
«رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَضَعَ يَمِينَهُ عَلَى شِمَالِهِ فِي الصَّلَاةِ»
சமீப விமர்சனங்கள்