Category: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா

Musannaf-Ibn-Abi-Shaybah

Musannaf-Ibn-Abi-Shaybah-11210

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11210. நான் இறந்தவிட்டால் என் இறப்புச் செய்தியை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில் அறியாமைக்காலத்தில் இருந்த நடைமுறைகளில்  இந்த மரண அறிவிப்புச் செய்வதும் சேருமோ என்று நான் பயப்படுகிறேன் என அல்கமா பின் கைஸ்  (ரஹ்) அவர்கள் வஸிய்யத் செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்)


أَنَّهُ «أَوْصَى أَنْ لَا تُؤْذِنُوا أَحَدًا، فَإِنِّي أَخَافُ أَنْ يَكُونَ النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11205

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மரண செய்தியை அறிவிப்புச் செய்வதற்கு தடை விதித்தார்கள்.

அறிவிப்பவர் : ஹுதைஃபா (ரலி)


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّعْيِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11206

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

11206. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள், மரண அறிவிப்புச் செய்வது அறியாமைக் கால வழக்கமாகும் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அல்கமா பின் கைஸ் (ரஹ்)


«النَّعْيُ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-25540

ஹதீஸின் தரம்: More Info

25540. அவ்ன் பின் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் பற்றி புறம் பேச ஆரம்பித்தார். உடனே மற்றொரு மனிதர் அதைத் தடுத்தார்.

அப்போது உம்முத்தர்தா (ரலி) அவர்கள், (புறம் பேசுவதைத் தடுத்த மனிதரைப் பார்த்து) நீ அவரைத் தடுத்து நல்ல காரியம் செய்தாய்…

யார் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவரை நரகத்தின் அனல் காற்றை விட்டு அல்லாஹ் காப்பாற்றுகிறான் என்று கூறினார்கள்.

 

அறிவிப்பாளர் மிஸ்அர் அவர்கள், “நரகத்தின் அனல்காற்றை” விட்டு அல்லாஹ் காப்பாற்றுவான் என்று அறிவிக்கின்றார்.


وَقَعَ رَجُلٌ فِي رَجُلٍ فَرَدَّ عَلَيْهِ آخَرُ، فَقَالَتْ أُمُّ الدَّرْدَاءِ «لَقَدْ غَبَطْتُكَ، إِنَّهُ مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ، وَقَاهُ اللَّهُ

 


Musannaf-Ibn-Abi-Shaybah-25539

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

25539. எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை காக்கிறாரோ அவருக்கு, அது மறுமையில் நரக நெருப்பை விட்டு காக்கும் திரையாக இருக்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)


«مَنْ ذَبَّ عَنْ عِرْضِ أَخِيهِ كَانَ لَهُ حِجَابًا مِنَ النَّارِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-7444

ஹதீஸின் தரம்: More Info

7444. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் வசிக்கும் பகுதிகளில் பள்ளிகளை கட்ட வேண்டும் என்றும் பள்ளிகள் துப்புரவு செய்யப்பட்டு நறுமணம் நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும் என்றும் கட்டளையிட்டார்கள்…

அறிவிப்பவர் : உர்வா பின் ஸுபைர் (ரஹ்)


«أَمَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبِنَاءِ الْمَسَاجِدِ فِي الدُّورِ، وَأَمَرَ أَنْ تُطَهَّرَ وَتُطَيَّبَ»

يَعْنِي الْقَبَائِلَ


Musannaf-Ibn-Abi-Shaybah-31679

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

31679. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“ நான் உங்களிடம் எனக்கு பின் இரண்டு பிரதிநிதிகளை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்..

மற்றொன்று எனது குடும்பம் ஆகும். நிச்சயமாக இவ்விரண்டும் ஹவ்ளுல் கவுஸரிடம், என்னை வந்தடையும் வரை ஒன்றையொன்று பிரியாது.

அறிவிப்பவர் : ஸைத் பின் ஸாபித் (ரலி)


إِنِّي تَارِكٌ فِيكُمُ الْخَلِيفَتَيْنِ مِنْ بَعْدِي: كِتَابَ اللَّهِ وَعِتْرَتِي , أَهْلَ بَيْتِي , وَإِنَّهُمَا لَنْ يَتَفَرَّقَا حَتَّى يَرِدَا عَلَيَّ الْحَوْضَ


Musannaf-Ibn-Abi-Shaybah-30081

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

30081. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“நான் உங்களிடம் இரண்டு கனமான விசயத்தை விட்டுச் செல்கிறேன். அவற்றில் ஒன்று மற்றதை விட பெரியதாகும். அது தான் அல்லாஹ்வின் வேதமான குர்ஆனாகும். மேலும் அது தான் வானத்திலிருந்து பூமிவரை நீட்டப்பட்ட கயிரைப் போன்று இறைத்தொடர்புள்ளதாகும்”…

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி)


«إِنِّي تَارِكٌ فِيكُمُ الثَّقَلَيْنِ، أَحَدُهُمَا أَكْبَرُ مِنَ الْآخَرِ، كِتَابُ اللَّهِ حَبْلٌ مَمْدُودٌ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ»


Musannaf-Ibn-Abi-Shaybah-11625

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11625.


كَانَ إِذَا أَتَى الْجِنَازَةَ فَقَالَ: مَنْ مَعَهَا جَزَّأَهُمْ صُفُوفًا ثَلَاثَةً، ثُمَّ صَلَّى عَلَيْهَا وَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا صَفَّتْ صُفُوفٌ ثَلَاثَةٌ مِنَ الْمُسْلِمِينَ عَلَى مَيِّتٍ إِلَّا أَوْجَبَ»


Musannaf-Ibn-Abi-Shaybah-6859

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6859. வித்ருத் தொழுகை அவசியமாகும். அல்லது கட்டாயமாகும்….


«الْوَتْرُ حَقٌّ، أَوْ وَاجِبٌ»


Next Page » « Previous Page